Advertisement

கவர்னர் மீது மரியாதை குறைகிறது: தினகரன் கடுப்பு

மதுரை: ''கவர்னர் மீதான மரியாதை குறைந்து கொண்டே வருகிறது,''என, தினகரன் தெரிவித்தார்.
மதுரையில், நேற்று அவர் அளித்த பேட்டி: அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தை கூட்டும் அதிகாரம் எனக்கும், சசிகலாவுக்கும் மட்டுமே உள்ளது. இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ்., நிறைவேற்றிய தீர்மானங்கள் செல்லுமா என்பது, நீதிமன்ற உத்தரவுக்கு பிறகே தெரிய வரும்.இருக்கிற
வரை, கட்சி பதவி மற்றும் ஆட்சியில் இருக்க வேண்டும் என, நினைக்கின்றனர். ஆட்சி தொடர்ந்தால், கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படும் என்பதாலேயே, முதல்வரை மாற்ற முயற்சிக்கிறோம். இந்தஆட்சியை வீட்டிற்கு அனுப்பும் வேலையை துவங்கி விட்டேன்.

ஜெயலலிதா இருந்த பொதுச் செயலர் பதவியை, யாரும் வகிக்கக் கூடாது என்றால், அவர் வகித்த முதல்வர் பதவியில், பழனிசாமி இருப்பது ஏன்... பிப்., 15ல்,சசிகலா சிறைக்கு சென்ற சமயத்தில், பழனிசாமியை முதல்வராக தேர்வு செய்தோம். இதற்கு, 12 எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி,வீரமணி, பெஞ்சமின் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து, வெளியேற முயன்றனர்; நாங்கள் தடுத்தோம்.

செம்மலை எதிர்ப்பு தெரிவித்து,ஓ.பி.எஸ்., அணிக்கு சென்றார். அதனால், எங்கள் மீது அவர்களுக்கு வருத்தமில்லை.பெரும்பான்மை இல்லாத, முதல்வர் பழனிசாமி ராஜினாமா செய்து, மீண்டும், எம்.எல்.ஏ.,க்களை கூட்டி பதவி ஏற்கட்டும்.இன்னும் இரு நாட்களில், கவர்னர் நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும். கவர்னர் மீதான மரியாதை குறைந்து கொண்டே வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (44)

 • Sundeli Siththar - North Carolina,யூ.எஸ்.ஏ

  கட்சிப் பதவிக்கும், அரசுப் பதவிக்கும் வித்தியாசம் தெரியாத ஒருவரை நம்பியா அதிமுகவில் ஒரு சிலர் இருக்கிறார்கள்?

 • kurinjikilan - Madurai,இந்தியா

  மரியாதை கெட்டவரெல்லாம் மரியாதையை பற்றி பேசுவது ஆகாது..

 • Indhuindian - Chennai,இந்தியா

  கவர்னரின் நிலையை நினைத்தால் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது. அவர் எப்படியாவது பாடு பட்டு திருவாளர் தினகரனின் மரியாதையை சம்பாதிக்க பெரு முயற்சி செய்ய வேண்டும் - இப்படிக்கு தமிழக மக்கள்

 • s t rajan - chennai,இந்தியா

  இவனெல்லாம் மானம் மரியாதையைப் பற்றி பேசுற நிலை வந்திடுச்சே ? ஜெயா அடித்துத் துரத்திய பைய்யன்... என்னம்மா பேசுரான்... மக்கள் இன்னும் இவரைப் பேசவிடறாங்களே....

 • RAVICHANDRAN.M - Trichy,இந்தியா

  யாருமே இல்லாத கடையில் யாருக்காக டீ ஆத்தறீங்க... தலைவரே ................ ஃஃஃ

 • narayanan iyer - chennai,இந்தியா

  தினகரன் AIADMK சட்டப்படி ஒருவர் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் உறுப்பினராக இருந்தால் மட்டுமே பதவி வகிக்க முடியும் . நீயோ, சசிகலாவோ அப்படி இல்லை . நீங்களே உருவாக்கி உட்கார்ந்து கொண்டு சப்தம் போடுகிறீர்கள் . வெறுமே காலத்தை போக்கி நடக்கின்ற ஆட்சியை கெடுக்காதே . அவர்களை வேலை செய்யவிடு .

 • Devanatha Jagannathan - puducherry,இந்தியா

  உங்களுக்கு பதவியில் இருக்கும் கவர்னர் மேல மரியாதைக் குறையுது ஜெயிலில் இருக்கும் சசி மேல பாசம் அதிகமாகுது.

 • tamilselvan - chennai,இந்தியா

  டேய் தினகரன் இன்னம் கொஞ்ச நாள் உன் வாழ்க்கை அப் போறும் நிரந்தரம் திகார் ஜெயில்

 • Aarkay - Pondy,இந்தியா

  இங்கு பதிவு செய்யப்பட்டுள்ள கருத்துக்களை ஒரு முறையாவது படித்துப்பார் உன் மேலும், உன் வகையறாக்கள் மேலும் மக்கள் கொண்டுள்ள வெறுப்பை உணர்வாய் கொள்ளையடித்தது போதாதா? ஏன் இந்த வெறி? அடங்கு

 • Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா

  Governor of Tamilnadu is not working as per the democratic laws.After all the opposition is asking Edappadi to prove his majority and also Edappadi is saying that he has got majority then why Governor is not ordering for proving of majority. Only reason for this seems to be that the Governor wants to support Edappadi with the fear of Edappadi loosing his majority.The Governor possibly may be acting as per the advise of BJP (MODIJI) and they do not want DMK in power for Tamilnadu at any cost. How people will have faith in democracy. Democracy seems to have been buried. Edappadi can comfortably be the chief Minister once he proves his majority- Why the Governor is reluctant for a long time and hence all these doubts arise.

 • Chandra prabu - Ang Mo Kio,சிங்கப்பூர்

  இந்த தினகரன் ஒரு வெத்து வேட்டு என்பது எடுபுடிக்கும், ஒட்டடைக்கும், சுடலையனுக்கும் நன்றாகவே தெரியும். ஆட்சிக்கு ஆதரவு, ஆனால் முதல்வரை மட்டுமே மாற்ற வேண்டும் என்று இவரின் எம் எல் ஏ-க்கள் கடிதம் கொடுத்த பொழுதே, அவர்கள் யாருக்கும் ஆட்சியை கவிழ்க்க விருப்பமில்லை என்பதும், நான்கு வருட கொள்ளையடிக்கும் வாய்ப்பை இழக்க விரும்பவில்லை என்பதும் தெளிவு. அதனால்தான் எடுபுடி, தைரியமாக இவர்களை கட்சியை விட்டு தூக்கி விட்டார். சுடலையன் இவரை நம்பி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர மாட்டேன்கிறார். சும்மா ஆளுனரை மிரட்ட கூடாது. அவர் வெளிப்படையாக பேட்டி கொடுத்தால் இவர் ஓடி ஒளிய கூட இடம் கிடையாது. இவரின் எம் எல் ஏ-க்கள் உண்மையிலேயே விசுவாசி என்றால், இப்பொழுது கூட, ஆளுநரிடம் ஆட்சிக்கு ஆதரவில்லை என்று கடிதம் கொடுக்கட்டும். பிறகு, நடவடிக்கை எடுப்பதை விட ஆளுநருக்கு வேறு வழி இல்லை. நான் எதிர்பார்ப்பது என்னவென்றால் அனைத்து அல்லக்கை எம் எல் ஏ-க்களும் இன்னும் இரண்டொரு நாளில் இவரின் முதுகில் குத்தி விட்டு எடுபுடியின் காலில் விழுந்து விடுவார்கள். பெரா வழக்கில் இவரை உள்ளே போட்டு பா ஜ க இவரின் கதையை முடித்து விடும். இதை நாம் எல்லோரும் பார்ப்போம் என நம்புகிறேன்.

 • Cheran Perumal - Radhapuram,இந்தியா

  இன்னும் இரண்டு நாட்கள் பொறுத்து பார்த்துவிட்டு பின்னர் வாடா போடா என்று அழைக்கப்போகிறீர்களா?

 • kowsik Rishi - Chennai,இந்தியா

  கோட்டை விட்டியே ராஜா டீ டீ வி இது அரசியல் அன்றே உன் சித்தி முதல்வர் பதவியில் நீ துணை முதல்வர் பதவி என்று சொல்லி இருக்கவேண்டும் அன்று கொஞ்சம் அசந்தால் வந்த பலன் இது எவ்வளவு சூப்பராக மோடி ஷா ஒட்டப்பட்டு பன்னீர்செல்வத்தை வைத்து கட்சியை ஆட்சியை கைப்பற்றி விட்டார்கள் பாருங்கள். அரசியல் இங்கே மு.கருணாநிதிக்கு மட்டும் தான் இடம் காமராஜருக்கும் இல்லை, அண்ணாத்துரைக்கும் இல்லை எம்.ஜி.ஆர் க்கும் இல்லை செல்வி ஜெ ஜெயலலிதா விற்கும் இல்லை ஸ்டாலினுக்கும் இல்லை ஒன்லி மு. கருணாநிதி கற்றுக்கொள்ளுங்கள் சார்

 • bal - chennai,இந்தியா

  இந்த ஆளையெல்லாம் மதித்து ஒரு பேட்டி எடுக்கும் இந்த பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சியை சொல்லணும்.

 • ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா

  ஒரு வேலை திகார் சிறையை நினைத்து இப்போதே புத்தி பேதலித்து விட்டதோ ?

 • Kasiniventhan Muthuramalingam - Bangalore,இந்தியா

  மத்திய அரசின் ஏஜென்ட் தானே கவர்னெர் ...காவி மருந்து தமிழகத்தின் ரத்த நாளங்களில் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றப்படும்

 • Panneer - Puduchery,இந்தியா

  "பொதுக்குழு கூட்டத்தை கூட்டும் அதிகாரம் எனக்கும், சசிகலாவுக்கும் மட்டுமே உள்ளது:" என்றால் சசிகலா பொது குழுவை கூட்ட வேண்டியது தானே? 4 வருடம் சிறையில் இருக்கவேண்டிய கைதி சசிகலா ஜெயிலுக்கு போகுமுன் சசிகலா தன பொதுச்செயலாளர் அடிகாரத்தை பயன்படுத்தி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரை நியமித்திருக்கலாமே அப்படி இல்லாமல் யாரோ கட்சி உறுப்பினர்கூட இல்லாத பொறம்போக்கை நியமித்தால் அவன் அதிகாரத்தை பிரயோகிக்க முடியுமா? முதல்வராகும் ஆசையில் மண் விழுந்ததும் எவனோ ஒருத்தனை துணை பொதுச்செயலாளனாக நியமித்ததை 122 சட்டமன்ற உறுப்பினர்களும் அறிவு இல்லாமல் ஆதரித்ததன் விளைவு இன்று ஆட்சியையே இழக்கும் அளவுக்கு வந்துவிட்டது..எப்படியோ, பொதுச்செயலாளரும் துணை பொதுச்செயலாளரும் ,தமிழ் நாட்டில் அம்மா ஆட்சியின் நூறாண்டு கனவுக்கு வெகு சீக்கிரம் நிரந்தர முடிவு கட்டுவார்கள் என மக்கள்( ஒன்றரை கோடி தொண்டன் நீங்கலாக) மிக ஆவலோடு காத்திருக்கிறார்கள் வெற்றியும்,புகழும் ,தங்கத்தமிழும் கூடி விரைவில் ஆளுநர் ஆட்சி மலர மகத்தான பணியாற்றி வருகின்றனர்.நல்லதே நடக்கும் தினகரனின் தயவில் ?

 • Krishna Prasad - Chennai,இந்தியா

  நீங்க CM மீது தான் நம்பிக்கை இல்லை என்று சொன்னீர்கள் ஆட்சி மீது இல்லை என்று சொல்லவில்லையே ஆளுநர் என்ன நடவடிக்கை எடுக்க முடியும் தைரியம் இருந்தால் ஆட்சி மீது நம்பிக்கை இல்லை என்று கொடுங்கள் நீங்கள் செய்ய மாடீர்கள் சும்மா பூச்சாண்டி தான் காட்ட முடியும்

 • Sekar - Chennai,இந்தியா

  சொல் பேச்சு கேட்காத கவர்னரை பதவியில் உடனடியாக இருந்து நீக்குகிறேன். கவர்னராக புகழேந்தியையும் துணை கவர்னராக நாஞ்சில் சம்பத்தையும் நியமித்து உத்தரவிடுகிறேன்

 • Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

  யார்ரா நீங்கெல்லாம்??

 • நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா

  அன்று கூவத்தூரில் நீங்கள் எம்எல்ஏக்களை வைத்து ஆட்டம் போடும்போது குஷியாக இருந்தது, இன்று வலிக்கிறதா? தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்பார்கள். இப்போது தெரிகிறதா?

 • Balaji - Bangalore,இந்தியா

  தினகரனுக்கு மரியாதையே கிடையாது. கவர்னர் என்ன உங்க சின்னமாவா?

 • USHA.DEVAN -

  மீண்டும் ஆட்சி வீட்டிற்கு அனுப்ப போகிறீர்களா? உங்கள் வீட்டிற்கு போக கூடாது என்பதற்காக தான் மக்களுடன் இணைந்து ஒரு வழி பண்ணி இருக்காங்க.

 • Venki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  தமிழகத்தை கொள்ளை அடித்தது போதாது என்று கொல்லைப்புறமாக ஆட்சியையும் பிடிக்க விரித்த வலையில் உங்கள் குடும்பம் தற்போது சிக்கியுள்ளது அது சின்னாபின்னமாகி சீரழியும் நாள் தொலைவில் இல்லை அதனால் தான் இன்னும் நல்லவனை போலவே நடிக்கின்றீர்கள்

 • ravi - chennai,இந்தியா

  லூசாடா நீ - இன்னும் உறைக்கிலே - தமிழ்நாட்டு மக்கள் கேட்கிறவரை இவர் அடங்கமாட்டார் - சும்மா கொள்ளை அடிச்ச பணத்த வச்சிக்கிட்டு என்ன பண்றதுன்னே தெரியிலே - இப்படியும் அப்படியும் ஓடுது - ஜெய் ஹிந்த்

 • krishna - cbe,இந்தியா

  இவன் திமுகவிற்கு கை கூலியாக செயல்படுகிறானோ?

 • R Sanjay - Chennai,இந்தியா

  தினகரா உன்மீது எவன் மரியாதை வைத்தான் நீ சொல்வதையெல்லாம் இங்கு கேட்க, கவர்னருக்கு மரியாதையா? அதெல்லாம் சுத்தமாக உங்கள் இருவரிடமும் கிடையாது.

 • krishna - cbe,இந்தியா

  ஆட்சியை கலைத்தால் கவர்னர் நல்லவர் ஆகிவிடுவாரோ ???

 • krishna - cbe,இந்தியா

  ஆட்சியை கலைத்து விட்டால் கவர்னர் மீது மதிப்பு அதிகரிக்குமா தினகரா? பேசாம கவர்னர் பதவியை பறித்து விட வேண்டியதுதானே தினகரா ???

 • naankabali - kovai,இந்தியா

  இவன் ஸ்டாலினை விட ஒரு காமெடிபீஸு ....தமிழனுக்கு வந்த சோதனை.

 • Kailash - Chennai,இந்தியா

  ஆட்சி கலைய அதிமுக விரும்பினாலும் பாஜ ஏற்றுக்கொள்ளாது இங்கு பாஜ வருவது கடினம் ஆட்சி கலைந்தால் அடுத்து அதிக வாக்கு திமுக பக்கம் உள்ளதால் எளிதாக வந்துவிடும் அதனால் அடிமைகள் திராவிட முன்னேற்ற கழகம் மூலம் கொல்லைப்புற ஆட்சி பாஜ நிகழ்த்தும். இதில் ஆயிரம் தினகரன் வந்தாலும் IT ரெய்டு, லஞ்சம் கொடுத்த வழக்கு மூலம் மிரட்டும் ஆனால் நடவடிக்கை எடுக்காது ஊழல், லஞ்சம் இல்லாத மத்தியஅரசு அல்லவா அதனால் லஞ்சம் கொடுத்த வழக்கு என்று பெயரை வைத்து உள்ளே தள்ளும்.

 • Srikanth Tamizanda.. - Bangalore,இந்தியா

  ஆபரேஷன் பண்ணப்போகிறேன்னு சொன்ன உனக்கு ஆப்பு ரேஷன் பண்ணிட்டாங்க.. எல்லாரும் கூட்டமா சேர்ந்து உனக்கு கும்மி அடிச்சாச்சு.. ஆனாலும் வலிக்காத மாதிரியே பேட்டி குடுக்கறியே தினகரா? வேணும்னா வடிவேலு வண்டுமுருகன் மீட்டிங் மாதிரி நீயும் போடு, கூடவே பிரச்சார பீரங்கி சுடாலினையும் சேர்த்துக்க..

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  உங்களுக்கு ஆதரவாக பேசினால் மரியாதை கூடுமோ...

 • Darmavan - Chennai,இந்தியா

  இதை பற்றியெல்லாம் பேச இவனுக்கு என்ன அருகதை இருக்கிறது ...ஜெயாவால் விரட்டியடிக்கப்பட்டவன் கிரிமினல் குற்றவாளி மானம் இல்லாமல் கவர்னரை பற்றி இப்படி பேசுவது கண்டிக்கத்தக்கது

 • rajan - kerala,இந்தியா

  என்னடா வடிவேலா அங்கே என்ன முணுமுணுப்பு. அண்ணே அது ஒண்ணுமில்ல இவனுங்க என்ன மானம் மருவாத பாத்தா அரசியல் பண்ணினானுங்கன்னு கேட்டு புட்டேன் அம்புட்டு தான். தொப்பியை வீசி வீசில்ல மீன் புடிச்சானுங்க. ஆஹா ரொம்ப தெளிவா தாண்டா கேட்டிருக்கே

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  அதற்காக கவர்னர் மோடி போல ஒவ்வொருவரும் இணைத்து விடவா முடியும்? SINனம்மா கூட்டத்தை கட்சியை விட்டு வெளியே தூக்கிப்போட்டால் ஒரு வேள திமுகவை விட அதிமுகவை மக்கள் நம்புவார்கள்...

 • ravi - chennai,இந்தியா

  அதிமுக கவிழ்ந்தால் திமுக அதிமுக நிச்சயம் மீண்டும் வராது - அன்புமணி பாஜகவிற்கு தான் வாய்ப்பு- திருட்டு திராவிடங்கள் ஒழியட்டும் - ஜாதி அரசியல்செய்யும் திருமா குருமா எல்லாம் ஒழியட்டும்

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  இவருக்குள்ள மரியாதைக்கு பாரத ரத்னாவோ நோபெலோ இதுவரை கொடுக்கப்படாதது அநியாயம்

 • rajan - kerala,இந்தியா

  துரோகம், தற்குறித்தனம், ஊழல், லஞ்சம், மாபியா வேலை எனவும் காசு பணத்துக்காக எதையும் செய்ய துணியும் பன்முக அரசியல் களத்தை கட்டி காத்த சின்னத்தாயி, ஆயாம்மா, கட்டுமரத்தார், சுடலை, கனி, இந்த சிட்டிசன் எல்லோரும் நாட்டையும் மக்களையும் பல வகையில் சூறையாடிய கூட்டம். எத்தனை கெடுபிடி ரைடு பண்ணி அடக்க படவேண்டிய சட்டத்துக்கு புறம்பான குதிரை கழுதை பேரம் அரங்கேற்றும் இவனுங்களை மொத்தமா ஆப்பு அடிச்சு நடமாட முடியாத படி பண்ணி நாடுகடத்த வேண்டும்.

 • Amma_Priyan - Bangalore,இந்தியா

  ஆனால் கவர்னர் உன்னை 'மிக மரியாதை'யாகவே நடத்துவார்.

 • Amirthalingam Sinniah - toronto,கனடா

  கவிட்டு கொட்டுவதைத்தான் நினைக்கிறீர்கள் ,ஆக்க பூர்வமாக சிந்தியுங்கள் .

 • Paran Nathan - Edmonton,கனடா

  கவர்னருக்கு எப்போது மரியாதை இருந்தது? இப்போது குறைவதற்கு. மானம், மரியாதையெல்லாம் பார்த்தால் கவர்னராக முடியாது

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement