Advertisement

நம்பிக்கை ஓட்டெடுப்பு கோரி ஸ்டாலின் வழக்கு

சென்னை: பெரும்பான்மையை நிரூபிக்க, ஆளும் கட்சிக்கு அழைப்பு விடுக்க,கவர்னருக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதி மன்றத்தில், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர், ஸ்டாலின் மனு தாக்கல் செய்துள்ளார்.
உயர் நீதிமன்றத்தில், ஸ்டாலின் தாக்கல் செய்த மனு: தமிழக சட்டசபையில், தற்போது, 233 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசுக்கு, 117 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு இருக்க வேண்டும்.

தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு, 98 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள்,21பேர், அரசின் மீது நம்பிக்கை இழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.அதனால், சபாநாயகர் தவிர்த்து, முதல்வர் பழனிசாமிக்கு,113 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு தான் உள்ளது. அரசு மீது நம்பிக்கை இழந்த, எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை, 117 ஆளும் கட்சியை சேர்ந்த, 19 எம்.எல்.ஏ.,க்கள், முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என, ஆக., 22ல், கவர்னரிடம் தனித்தனியாக கடிதம் கொடுத்து உள்ளனர்.

எதிர் கட்சி தலைவர் என்ற முறையில், பெரும்பான்மை நிரூபிக்க கோரினேன். தற்போது, 21 அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், அரசின் மீது நம்பிக்கை இழந்து விட்டதாக கூறியுள்ளனர். எனவே, இந்த அரசு, பெரும்பான்மையை இழந்து விட்டது.தமிழக கவர்னர், அரசியலமைப்பு சட்ட கடமையை நிறைவேற்றதவறுகிறார்.

வேண்டும் என்றே, நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு தாமதம் செய்கிறார். அவ்வாறு தாமதம் செய்வது, குதிரை பேரத்தை ஊக்குவிப்பது போல் உள்ளது. இதற்கிடையில், நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு எதிரானவர்களை நீக்கி, பெரும்பான்மையை நிரூபிக்க, ஆளும் அரசு பல்வேறு தந்திரங்களை கையாள்கிறது.எனவே, சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க, ஆளும் கட்சிக்கு அழைப்பு விடுக்கும்படி, கவர்னருக்கு உத்தரவிட வேண்டும்.

உயர் நீதிமன்றம் நியமிக்கும் மேற்பார்வையாளரின் கீழ், நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த, உத்தர விட வேண்டும். வழக்கு விசாரணை முடியும் வரை, கொள்கை முடிவு எதுவும் எடுக்க, முதல்வர் பழனிசாமிக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இம்மனு, விரைவில்
விசாரணைக்கு வருகிறது.'பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டும்' : ''சட்டசபையை கூட்டினால், நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவோம்,'' என, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் கூறினார்.

சென்னையில், அவரது பேட்டி:

என் தலைமையில், தி.மு.க., - காங்., - முஸ்லிம் லீக், எம்.எல்.ஏ.,க்கள், 10ம் தேதி,கவர்னர் வித்யாசாகர்ராவை சந்தித்தோம்.'முதல்வர் பழனிசாமி அரசுக்கு, சட்டசபையை கூட்டி, பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும்' என, வலியுறுத்தினோம்; ஆனால், கவர்னர், எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.எனவே, கவர்னர் உத்தரவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளோம்.

கவர்னர், தன் ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும் என்பதற்காகவே, நீதிமன்றத்தை நாடியுள்ளோம்.சட்டசபையை கூட்டும் அதிகாரம், கவர்னருக்கு மட்டுமே உள்ளது. சபையை கூட்டினால், நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்படும். பெரும்பான்மை இருந்தால், முதல்வர் பழனிசாமி நிரூபிக்கட்டும்.
பெரும்பான்மையை நிரூபித்த பின், முதல்வர் பழனிசாமி, என்னை விமர்சிக்கட்டும். அ.தி. மு.க., பொதுக்குழு தீர்மானத்தில் தலையிட விரும்பவில்லை. தினகரனுக்கு, எந்த விளம்பரமும் தேடிதர விரும்பவில்லை. எனஸ்டாலின் கூறினார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (22)

  • Snake Babu - Salem,இந்தியா

    தமிழகத்தில் ஆட்சி நடைபெறவில்லை, ஆட்சி நடக்கிறபோல ஒரு மாயை உண்டு பண்ணி பிஜேபி கூத்து நடத்திக்கொண்டிருக்கிறது. பழைய கொள்ளைக் கூட்டம் எல்லாம் இனிமேல் ஆட்டம் போட முடியாது. சுடலை வந்தாலும் முன்புபோல தைரியமாக கொள்ளை அடிக்க முடியாது, அராஜகம் செய்ய முடியாது. ஆகையால் சுடலை ஆட்சியை கட்டாயம் வரவேற்கலாம்.

  • narayanan iyer - chennai,இந்தியா

    சரி ஸ்டாலின் அவர்கள் மீண்டும் நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றிபெற்றால் தாங்கள் தங்களது எதிர் கட்சி பதவியில் இருந்தும் , எம் எல் ஏ பதவியில் இருந்தும் வெளியேறி விடவேண்டும் .செய்வீர்களா?ஏன் இந்த ஆட்டம் ?

    • Vimal Kumar - Chennai,இந்தியா

      எங்களுக்கு தான் வெ.மா.சூ.சொ எதுவுமே கிடையாதே...

  • Chandra prabu - Ang Mo Kio,சிங்கப்பூர்

    என்னை பொறுத்தவரை சுடலையன் வழக்கு போட்டதுதான் சரி. அவசியமானதும் கூட. தமிழ் மக்கள் நம்மை கேனையர்களாக நினைக்கும் தினகரனுக்கும் அவர்களின் அல்லக்கை எம் எல் ஏ-க்களின் முகத்திரை இதனால் கிழிபடும்.

  • Krishna Prasad - Chennai,இந்தியா

    "தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள்,21பேர், அரசின் மீது நம்பிக்கை இழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்" அவர்கள் அரசின் மீது நம்பிக்கை இல்லை என்று சொல்லவில்லை CM மீது தான் நம்பிக்கை இல்லை என்று சொன்னார்கள். கேஸ் நிலைக்குமா

  • mindum vasantham - madurai,இந்தியா

    செப்டம்பர் 20 திமுகவில் குண்டு வெடிக்கும் நாள்

    • சூரிய புத்திரன் - Mannai,இந்தியா

      ஹாஹாஹா.... 2G ஸ்பெக்ட்ரம் ஊழல்..... தீர்ப்பு..... கனிமொழி.... திஹார் சிறை ..... கொசுக்கடி..... லக லக லக லக லக......

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    கடல் அலை கூட ஓய்ந்து விடும் போல உள்ளது... இவரது அளப்பரிய ஆசை ஓயாது போல உள்ளது...

    • Sanny - sydney,ஆஸ்திரேலியா

      ஆசையே அலைபோல, நாம் எல்லாம் அதுக்கு மேலே என்று ஒருவர் பாடிட்டு போய்விட்டார். தெரியுமா?

  • mindum vasantham - madurai,இந்தியா

    Stalin is too late

  • Patriot - Chennai,இந்தியா

    ஆளுநர் முடிவில் தலையிட நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை... யோசனை சொல்லவும் அதிகாரம் இல்லை.

  • Patriot - Chennai,இந்தியா

    கருத்துக்கள் தெரியவில்லை

  • தேச நேசன் - Chennai,இந்தியா

    ரொம்ப ஆட்சிக்கனவு காண்கிறார் தேர்தலே வந்தாலும் ஆர் கே நகர்போல பணவினியோகம் தாராளமாக நடக்கும் தேர்தல் கமிஷன் அதே வழியில் தேர்தலை ரத்து செய்துவிடும் ஆண்டுக்கணக்கில் ஜனாதிபதி ஆட்சிதான்

  • rajan - kerala,இந்தியா

    ஆஹா என்னே ஒரு டபுள் ஜீ லுக் போட்டோ போட்டு சுடலையை இப்படி அசத்துறீங்கய்யா. ஆனாலும் ஒரு குறை நம்ம குல கொழுந்து கவிக்குயில் படத்தையும் சேர்த்து போட்டிருந்தால் நம்ம ஊரு ஜல்லிக்கட்டு களை கட்டி இருக்குமில்ல. அதுசரி சுடலை கோர்ட்டு கேஸுன்னு போறீங்க இவுகளை எல்லாம் கோர்ட்டுன்னு வந்தாலே ஒரு 18 வருஷம் இழுத்தடிப்பாக அப்புறமா நீங்க எப்போ மு. அமைச்சராகி கஞ்சி காய்ச்ச போறீயளோ. ஒரு பரிதாபம் தான் போ.

  • Vilathur Nandhiyar - THANJAVUR ,இந்தியா

    இன்னொரு முறை சட்டையை கிழித்துக்கொண்டு திரிய போகிறார்... நம் கைப்பிள்ளை

  • Kunjumani - Chennai.,இந்தியா

    குதிரை பேரம் எப்படி திருமங்கலம் ஸ்டைலா இல்லை சிவகங்கை ஸ்டைலா? தேர்தலில் தோல்வியை தழுவிய சிவகங்கை சீமான் மதிய அமைச்சர் ஆகலாம் ஆனால் குதிரை பேரம் பேசி அதிமுக ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளக்கூடாதா? திருடன், பக்கா திருடன் எவன் ஆண்டால் என்ன தெருவில் பாலாறும், தேனாறுமா ஓடப்போகிறது? உங்கள் கல்லா நிரம்பும், ஏழை மக்களின் வயிறு நிரம்புமா? திமுக கட்சியின் தலைமையின் பேச்சில் கட்டுண்டு கல்லூரி நாட்களில் ரவுடித்தனம் செய்து, குடித்து பொறியியல் படிப்பை தொலைத்து, பெற்றோர்களின் மனதை நோகடித்து வாழ்க்கையில் தோற்ற என் நிலையை எண்ணி நான் வருந்தாத நாள் இல்லை. தயவுசெய்து அரசியல் வியாதிகள் பின்னால் சென்று உங்கள் வாழ்க்கையை தொலைக்காதீர்கள்.

  • ManiS -

    Ivarukku paiythiyam pidichu pochununu ninaikaren...

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    ஒருவாரம் வாய்தா கொடுத்தார் - ஆனால் வாய்தா முடிவதற்குள் நீதிமன்றம் சென்று தனது அவசரத்தை உணர்த்தி இருக்கிறார்...

  • அன்பு - தஞ்சை,இந்தியா

    பூனைக்கு மணி கட்ட போவது யார்? கவர்னருக்கு உத்தரவு போடும் அளவிற்கு, வாழைப்பழ இந்திய ஜனநாயக நீதிபதிக்கு அதிகாரம் உண்டு என்று எண்ணுவதற்கு நீதிபதிக்கே மனஉறுதி கிடையாது.

  • Baskar - Paris,பிரான்ஸ்

    சுடாலினுக்கு இது தெரியாமல் இவர் எல்லாவற்றிலும் முடங்கி விடுகிறார். எல்லாவற்றிலும் அவசரம். இவரை சுற்றி ஏழரை சனியன்கள் இருக்கின்றனர். அவர்கள் யார் தெரியுமா ஒன்று எ.வா.வேலு இரண்டு பொன்முடி மூன்று ஆ.ராசா. நான்கு மா.சுப்பிரமணியன் ஐந்து சேகர்பாபு ஆறு கே.ஆர் ராமசாமி ஏழு முகமது அந்த அரை சனி துரைமுருகன். இவர்களின் சகவாசம் தான் உனக்கு இடைஞ்சலாக உள்ளது.

    • Sanny - sydney,ஆஸ்திரேலியா

      அந்த இரண்டு பாம்புகளும் இருக்கா? வாலையும், தலையையும் மாறி, மாறி காட்டுமே.

  • கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா

    ஈ பி ஸ் அணி ஓ பி ஸ் அணி மாதிரி அ தி மு க ல நீதிபதிகள் அணின்னு ஒன்னு இருக்கு அந்த குமாரசாமி கூட்டம் இந்த வழக்க ஒன்னும் இல்லாம பண்ணீரும்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement