Advertisement

குடகு, 'ரிசார்ட்'டில் போலீஸ் ஆய்வு: தினகரன் ஆதரவு, 'மாஜி' ஓட்டம்

குடகு: முன்னாள் அமைச்சர் பழனியப்பனை தேடி, குடகு ரிசார்ட்டுக்கு, தமிழக போலீசார் வருவதையறிந்த அவர், தப்பியோடி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினகரன் அணி, எம்.எல்.ஏ.,க்கள், கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள, 'பேடிங்க்டன்' ரிசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பங்கேற்கவில்லை :சென்னையில், நேற்று நடந்த அ.தி.மு.க., பொது குழு, செயற்குழுவில் இவர்கள் பங்கேற்க வில்லை. நேற்று பகல், 1 மணியளவில், கோவை பதிவெண் உடைய வாகனத்தில், தமிழக போலீசார், ரிசார்ட்டுக்கு வந்தனர். கோவை ரூரல், டி.எஸ்.பி., வேல்முருகன் தலைமையில், 25 போலீசார், ரிசார்ட்டுக்கு
உள்ளே சென்றனர். இதில் ஐந்து பேர்,சாதாரண உடையிலும், மற்றவர்கள், போலீஸ் உடையிலும் இருந்தனர். இரண்டரை மணி நேரத்துக்கு பின், ரிசார்ட்டிலிருந்து வெளியே வந்தனர். எதற்காக வந்தனர், என்பது குறித்து, செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்க, போலீசார் மறுத்து விட்டனர்.

இந்நிலையில், நாமக்கல் ஒப்பந்ததாரர் சுப்பிரமணி, சில மாதங்களுக்கு முன், அவரது தோட்டத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். முன்னாள் அமைச்சரும், பாப்பிரெட்டிபட்டி, எம்.எல்.ஏ.,வுமான, தினகரன் ஆதரவாளர் பழனியப்பன் கொடுத்த தொல்லை தான், இவரது இறப்புக்கு காரணமாக கூறப்பட்டது. இந்த வழக்கு குறித்த விசாரணைக்காக நேரில் ஆஜராகும்படி, அவருக்கு இரண்டு முறை, நீதிமன்றம் சம்மன் அனுப்பியது; ஆனால் அவர் ஆஜராகவில்லை.

கைது செய்ய :இது தொடர்பாக, கர்நாடக
போலீசார் அனுமதியுடன், அவரை கைது செய்வதற்கு, குடகு வந்ததாகவும், போலீசார் வருவதை அறிந்திருந்த பழனியப்பன், ரிசார்ட்டிலிருந்து தப்பியோடி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. பழனியப்பன், எங்காவது ஒழிந்துள்ளாரா என, ரிசார்ட்டின் ஒவ்வொரு அறையிலும், போலீசார் முழுமையாக சோதனை நடத்தி உள்ளனர்.

தினகரன் அணி, எம்.எல்.ஏ.,க்கள் கட்டாய படுத்தி, அடைத்து வைக்கப்பட்டு உள்ளனரா என்பது குறித்தும் விசாரிக்க பட்டதாக தெரிகிறது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (16)

 • Indhuindian - Chennai,இந்தியா

  கொள்கையா அப்படி என்றால் என்ன? தமிழ் அகராதியிலிருந்து அந்த சொல்லை எடுத்து பல மாமாங்கம் ஆகிவிட்டது

 • senthilkumar - tamilnadu,இந்தியா

  வேலைய ஆரம்பிச்சுட்டானுங்க .இனி சங்குதான் தினகரன் அணிக்கு

 • rama - johor,மலேஷியா

  OPS &EPS இடம் பேரிய ஊழல் கூட்டமே உள்ளது அவர்கள் பாஜக அடிமைகள் எந்த நடவடிக்கையும் இலலையா

 • Krishna Prasad - Chennai,இந்தியா

  இவனை சும்மா விடக்கூடாது புடிச்சு நொங்கு நொங்குன்னு நொங்கனும்

 • ravi - chennai,இந்தியா

  கடமையை செய்யாமல் மறைமுகமாக மக்கள் கொள்ளை அடித்தபணத்தில் சுகம் காணும் இவர்களை சிறையில் அடையுங்கள் - ஒரே அறையில் பத்துக்கு பத்து அறையில் அடையிங்கள் -

 • R Sanjay - Chennai,இந்தியா

  உங்களையெல்லாம் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த மக்களை சொல்லவேண்டும். 136 ஊர் மக்கள் செய்த பாவம் இன்று தமிழகம் முழுவதும் எள்ளி நகையாடப்படுகிறது

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  திராவிடர்கள் பதவி இருந்தால் ஆடாத ஆட்டம் போடுவார்கள்.. அவர்கள் செய்யும் அளப்பறைக்கு அளவே இருக்காது...காய்ந்து போனவனுக்கு அந்தஸ்த்து வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பார்கள்...

 • Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா

  இனிமே காலம் பூரா இப்படிதான் வேற வழி இல்ல? என்ன பண்றது? அளவுக்கு மீறுனா இப்படிதான்? பாவம் அவருக்கு மூல நோய் வேற இருக்குன்னாங்க ?

 • Amirthalingam Sinniah - toronto,கனடா

  கொலைசெய்து புதைப்பதற்குகூட தயங்கமாட்டார்கள் . காவல் துறையினரின் கடுமையான நடவடிக்கை தேவை.

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் களவாணிகள் தான். தினகரன் ஆதரவு உறுப்பினர்களின் மீது மட்டும் போலீஸ் நடவடிக்கை எடுப்பது, அரசியல் பழிவாங்கல் என்று தெளிவாக புலப்படுகிறது. ஆட்சியை தக்கவைத்து கொள்ள, பழனி எந்த நிலைக்கும் இறங்குவார் என்பதில் சந்தேகம் இல்லை.

 • கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா

  அன்னப்பறவை தண்ணி கலந்த பால்ல தண்ணியவிட்டு பால மட்டும் குடிக்கிற மாதிரி எம் ஜி யார் அ தி மு க ஆரம்பிச்ச போது கொள்கை பிடிப்பு உள்ளவங்க தி மு க லையே இருந்துட்டாங்க பணம் சம்பாதிக்க அரசியலுக்கு வந்தவங்கெல்லாம் ஒன்னு விடாம எம்ஜியாரோட அ தி மு க வுக்கு போயிட்டாங்க இதைத்தான் இப்போ கொலை கொள்ளை கண்டைனர்ல பணம் ரெய்டுன்னு வரிசையா நாம பாத்துகிட்டு இருக்கோம்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement