Advertisement

அகிலேஷ், ஸ்டாலின் இல்லையா? வாாிசு அரசியல் குறித்து ராகுல் கேள்வி

வாஷிங்டன்: ''வாரிசுகள் பதவிக்கு வருவது, ஒரு பிரச்னைதான். அதே நேரத்தில், அதை தவிர்க்க முடியாது; பல்வேறு நாடுகளில் இதுதான் நடக்கிறது,'' என, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் கூறியுள்ளார்.
அமெரிக்கா சென்றுள்ள, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல், கலிபோர்னியா பல்கலையில் நடந்த நிகழ்ச்சியில், பல்வேறு பிரச்னைகள் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்தார்; அவர் கூறியதாவது: அரசியல் மட்டுமல்ல, பல்வேறு துறைகளிலும் வாரிசுகள் பதவிக்கு வருவது, ஒரு பிரச்னையாகவே உள்ளது. அதே நேரத்தில், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இதுதான் நடக்கிறது.
நடிகர் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனும் வாரிசு தான்; பிரபல தொழிலதிபர்கள் அம்பானிகளும் வாரிசு தான்.அரசியலில், சமாஜ்வாதி யின் அகிலேஷ் யாதவ், தி.மு.க., வின், ஸ்டாலின், பா.ஜ.,வில் பிரேம்குமார் துமாலின் மகன் அனுராக் தாக்குர் ஆகியோரும் வாரிசு தான். வாரிசுகள் பதவிக்கு வருவது, இந்தியாவில் சகஜமான ஒன்றுதான்.
ஆனால், என்னை மட்டும் ஏன் வாரிசுத் தலைவர் என குறிவைக்கின்றனர் என தெரியவில்லை.காங்., தலைமையை ஏற்பீர்களா என்றால்,அதற்கு தயாராக உள்ளேன். ஆனால், முறைப்படி, உள்கட்சி தேர்தல் மூலம் முடிவெடுக்கப்பட வேண்டும்.
மக்களால் ஏற்றுக் கொள்ளப்படாத அரசியல்வாதி என்றும், முட்டாள் என்றும் என்னை விமர்சிக்கின்றனர்; இது, அவதுாறை பரப்பும் மிஷினான, பா.ஜ.,வின் வேலை தான். அந்த அவதுாறு பரப்பும் வேலையை செய்பவர், நாட்டை நடத்துபவராகவும் உள்ளார்.

இந்த பொய் பிரசார மிஷினில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், என்னைப் பற்றிய பொய் செய்திகளை பரப்புவதை மட்டுமே வேலையாக செய்து வருகின்றனர். தான் சொல்ல வரும் செய்திகளை சிறந்த முறையில் சொல்ல கூடியவர் பிரதமர் நரேந்திர மோடி. அதில் என்னை விட அவர் மிகச் சிறந்தவர். ஆனால், மிகப் பெரிய கூட்டத்தில், குறிப்பிட்ட ஒரு சிலருக்கானதாக மட்டுமே அவரது செய்தி இருக்கும்.

எந்த முடிவையும் தன்னிச்சையாக எடுக்கக்
தொண்டர்களின் கருத்துக்களை கேட்டு செயல்படக் கூடியதாக, காங்., உள்ளது.

கடந்த, 2014 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கான காரணம், கட்சியினர் இடையே
ஏற்பட்ட ஆணவம் தான். தொடர்ந்து இரு முறை ஆட்சி அமைத்ததால், 2012ல், கட்சியின்மூத்த தலைவர்களிடம் ஏற்பட்ட ஆணவத்தால், மக்களை சந்திக்க மறந்து விட்டோம்.இவ்வாறு அவர் கூறினார்.

தோல்வியடைந்த வாரிசு தலைவர்அமெரிக்க பல்கலையில், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் பேசியது குறித்து, மத்திய ஜவுளித் துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, ஸ்மிருதி இரானி கூறியதாவது:அரசியலில் தோல்வியடைந்த வாரிசுத் தலைவர் ராகுல், வாரிசு அரசியல் குறித்து பேசியுள்ளார்.
நம் நாட்டில் தகுதியின் அடிப்படையில் வந்தவர்களே, அரசியலிலும் முன்னேறி உள்ளனர். இதற்கு, மோடி உள்ளிட்டோர், சிறந்த உதாரணங்களாக உள்ளனர். அரசியல் குடும்பத்தில் இருந்து அவர்கள் வரவில்லை; சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அரசியலில் தோல்வியடைந்த ஒருவர், பிரதமரை சிறுமைப்படுத்தும் வகையில், வெளிநாட்டில் பேசியுள்ளது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (36)

 • anand - Chennai,இந்தியா

  ராகுல் அறிவு வளரவே இல்லை..தொழிலும், சினிமாவும், அரசியலும் ஒன்றா? எது கூட எதை ஒப்பிட வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்..உங்களுக்கு இனி அறிவு வளர வாய்ப்பு இல்லை..

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  என்ன முக்கி மோதினாலும் ராஹுலால் அரசில் அங்கம் வகிக்க முடியவில்லையே இது வரை, வெறும் வெத்து வெட்டு, புஷ்வானம்? இதிலிருந்தே அவர் பல வருடமாக 4 ஆம் வகுப்பு கூட தாண்டமுடியாத ஒரு மடச்சாம்பிராணி என்று தெரிகின்றதே வெட்ட வெளிச்சமாக.

 • Karuthukirukkan - Chennai,இந்தியா

  வாரிசாக இருந்தாலும் மக்கள் ஏற்று கொண்டால் தான் வர முடியும் .. தகுதி இருந்தால் தான் நிலைக்க முடியும் என்றும் சொன்னார் .. அதை பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை .. சரி வாரிசாக இருந்தாலும் .. அனைவரும் ஏற்றுக்கொள்ள கூடிவராக இருந்தாலும் 10 வருடங்கள் பிரதமராக வாய்ப்பு இருந்தும் ஆகவில்லையே ?? இந்த ஆளை கலாய்த்து கொண்டு இருக்கீங்க ?? பிரதமர் ஆக முடியாதவர் என்று .. மன்மோஹனுக்கு பதில் இவர் பிரதமர் ஆகி இருக்க எவ்வளவு நேரம் ஆகி இருக்கும் ??

 • s t rajan - chennai,இந்தியா

  சேர்மன் மகனை சேர்மனாக்குங்க. மேனேஜர் மகனை மேனேஜர் ஆக்குங்க. கலெக்டர் மகனை கலெக்டர் ஆக்குங்க. டீ எஸ் பி மகனை டீ எஸ் பி ஆக்குங்க. அ அப்புறம் மேடை ஏறி பிற்படுத்தோருக்கே போராடுவோம்ன்னு கோஷம் போட்டு ஊரை ஏமாத்துங்க.

 • siriyaar - avinashi,இந்தியா

  At least 1 crore brilliant and talented indians in india than raghul, even some childrens are more matured tha raghul. He is good to be the leader of congress

 • Aarkay - Pondy,இந்தியா

  உனக்கும் ஸ்டாலின் கதிதான் பப்பு வயது ஏறிக்கொண்டே இருக்கிறது.... வடிவேலு, நானும் ரௌடிதான் என சொல்லிக்கொண்டு போலீஸ் ஜீப்பில் ஏறியது போல, நீயும், நானும் ஒரு அரசியல் வியாதிதான் என கூறிக்கொள்ளலாம் உங்கள் frustration எங்களுக்கு புரிகிறது.... ஐயோ பாவம்

 • Solvathellam Unmai - Chennai,இந்தியா

  வெளி நாட்டு சென்று பொய் சொல்லும் ஒருத்தருக்கு, வெளிநாடு போயி ...படி கொடுத்ததற்கு நன்றி...

 • Shriram - Chennai,இந்தியா

  இந்தியாவில் பேசத்தெரியாதவைகள் அமெரிக்காவில் போய் ...கின்றன..

 • Shriram - Chennai,இந்தியா

  காங்கிரஸ் கட்சி என்பது நேருவுக்கு முன்னரே தோன்றிய கட்சி,, சுதந்திரப் போராட்ட வீரர்கள் உருவாக்கிய கட்சி,, அதில் நேரு சேர்ந்து கொண்டு காந்தியின் மூலம் ஆட்டைய போட்டு பிரதமரானார்,, அதிலிருந்து அது என்னமோ உங்க குடும்ப சொத்தாட்டம் ஆகிப்போச்சு,, இதெல்லாம் இங்கே சொன்னால் நான் பிஜேபி சொம்பு. இருந்து விட்டுப்போகிறேன்,, இந்தக்கட்சிக்கு சப்போர்ட் பண்ணி எனக்கு புனிதர் பட்டம் கொடுத்தாலும் தூசிக்கு சமானம்,, இதை என் சொல்றேன்னா இந்த மடையன் இத்தகைய வீரர்களின் தியாகத்தால் உருவான இந்தக்கட்சியை எப்படி அவமானப்படுத்தி அசிங்கப்படுத்துகிறான் என்று நீங்களே பாருங்கள் ,,

 • Mohamed Ilyas - Karaikal,இந்தியா

  ராகுல் ஜி நீங்க மறந்த ஒன்றை நினைவு ஊட்டுகிறேன் ஜார்ஜ் புஷ் அண்ட் ஜூனியர் புஷ் ,கிளின்டன் அண்ட் ஹிலாரி , ஜுலேபிக்ர் பூட்டோ அண்ட் பென்சீர் பூட்டோ , பண்டார நாயகி அண்ட் ஸ்ரீமதி பண்டாரநாயகே , இப்படி பல பேர் உள்ளனர்

 • mindum vasantham - madurai,இந்தியா

  rahul gandhi should be the permanent opposition candidate

 • mindum vasantham - madurai,இந்தியா

  படம் இவரது கருத்தை அடித்து சொல்வது போல் உள்ளது

 • Kalaiselvan Periasamy - kuala lumpur,மலேஷியா

  வாரிசு அரசியல்வாதிகளை குறை சொல்வதை விட நம் முட்டாள் இந்திய மக்களையே குறை சொல்ல வேண்டும். நேர்மையை காற்றில் பறக்க விட்டு எங்கு எது இலவசமாக கிடைக்கும் என்று அலைபவர்கள் தான் இந்திய மக்கள். அதை இந்திய அரசியல்வாதிகள் நன்கு உணர்ந்து இந்த முட்டாள் மக்களை மேலும் முட்டாளாக்கி இந்தியாவையே ஒரு அற்ப நாடாக்கி விட்டனர். மோடி உலகம் சுற்றுவதை விடுத்து நாட்டிற்குள் சுற்றி வந்து சிரமத்தால் இந்தியா மிளிரும். அதை விடுத்து இந்தியா மக்கள் பிரச்சனைகளை தேனீர் பருகுவது போல் கையாண்டால் அவரும் வாய் பேச்சு அரசியல்வாதி தான். இந்தியா மக்களே, காமராஜரை போன்ற ஒரு தலைவரை காண முயற்சி செய்யுங்கள். நேர்மை இல்லாத எந்த அரசியல் வாதியையும் புறக்கணியுங்கள். முடியுமா உங்களால்? அல்லது இலவசம் கிடைத்தால் சரி கும்பிடு போடுவீர்களா?

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  குலக்கல்வி தான் வேண்டும் என்ற ராஜாஜியே காலம் ஆகிவிட்டார்... அவரது கொள்கையும் காலாவதி ஆகிவிட்டது.. நீங்கள் மட்டும் என் அதை பிடித்து கொண்டு அலைகிறீர்கள்.... எனவே வாரிசு அரசியல் மட்டும் வேண்டுமா.. அரசியல் பணம் காய்ச்சி மரங்கள் எனவே வேண்டும் என்கிறீர்கள்...

 • Srikanth Tamizanda.. - Bangalore,இந்தியா

  அகிலேஷம், ஸ்டாலினும் எப்படி பட்ட முன்னுதாரணங்கள் அப்பப்பா இவர் பப்பு தான் என்பதை இவர் பேசிய விஷயம் உறுதி செய்கிறது..

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  அடுத்ததாக விபச்சாரம் உலகின் தொன்மையான தொழில் பல நாடுளிலும் இருக்கிறது அதனை ஒழிக்கவே கூடாது எனக்கூட கூறுவார்

 • Darmavan - Chennai,இந்தியா

  கருத்துக்கள் தெரியவில்லை

 • s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா

  வாரிசுகளாக இருந்தாலும் திறமை கொஞ்சமாவது வேண்டும்.. அகிலேஷ்.. ஸ்டாலின்.. போன்றோர் அதை நிரூபித்துள்ளனர்... ராகுல் ஏன் நிரூபிக்கவில்லை?

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  காங்கிரசுக்கு மங்களம் பாடும் வேலையை தயங்காமல் இராகுலிடம் கொடுக்கலாம்...

 • Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ

  டாக்டர் சுப்ரமணிய சுவாமி, பல ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் பாஸ்டன் நகர் விமானநிலையத்தில் ராகுல் காந்தி சுங்க நிர்வாகிகளால் பிரயாணம் செய்வதற்க்கு தடை செய்ததாகவும், அந்த குற்றம் காரணமாக அமெரிக்கா செல்வதாக ராகுல் காந்தி இருந்தால், அவர் அமெரிக்க விமான நிலையங்களில் தடை செய்யக்கூடும் என்றார். பின் எவ்வாறு, ராகுல் காந்தி கலிபோர்னியா செல்லமுடிந்தது? டாக்டர் சுவாமி இதனை விளக்குவாரா? ராகுல் காந்தி, வம்சாவளி அரசியல் தவிர்க்க முடியாதது என்று கூறினாலும், வம்சாவளி அரசியலுக்கும், கையூட்டிற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கக்கூடும் என்பதால், வம்சாவளியை தொடர்பவர்கள், முழு நேர அரசியல் வாதிகளாய் இருந்து, வெகு எந்த வேலையும் செய்யாதிருந்து, சொத்துக்கள் சேர்த்த கதைதனை விளக்குவார்களா? உச்சநீதி மன்றம், இந்த தொடர்பினை உற்று நோக்கக்கூடும் என்ற நிலைமை உருவாவதை வம்சாவளி அரசியல் தொடர நினைப்பவர்கள் கவனத்தில் கொள்வது அவசியமாகும்.

 • Indhiyan - Chennai,இந்தியா

  உண்மை தான். ஆனால் , நேரு, இந்திரா,ராஜிவ் காந்தி என ஆரம்பித்து ராகுல் வரை வாரிசு அரசியலை அறிமுக படுத்தியது காங்கிரெஸ் தான், என்பதை காங்கிரஸின் இளவரசர் ராகுல் உணரவேண்டும்.

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  அரசியலில் ஸ்டாலின், ராகுல், அகிலேஷ், அன்புமணி ராமதாஸ் மற்றும் லாலு மகன் என்று அனைத்து வாரிசுகளும் தோல்வியை தான் தழுவுகிறார்கள். அரசியலில் வாரிசுகளுக்கு தலைமை இடம் கொடுக்க கூடாது. அப்படி கொடுத்தால், கட்சி அழிந்து விடும்.

 • Ratan K - Chennai,இந்தியா

  அம்பானி நடத்துவது ஒரு வியாபார நிறுவனம்.. காங்கிரஸ் என்பது ஒரு கட்சி.. இரண்டும் ஒன்றுதான் என்று கூறுகிறீர்களா ?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement