Advertisement

மின்சார வாகனங்கள் தயாரிக்க நிறுவனங்கள் சுறுசுறு!

புதுடில்லி: 'வரும், 2030க்குள் நாடு முழுவதும், மின்சார வாகனங்களை மட்டுமே இயக்க வேண்டும்' என்ற மத்திய அரசின் திட்டத்துக்கு, வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தயாராகி வருகின்றன. இது தொடர்பாக, புதிய ஆட்டோமொபைல் கொள்கையை மத்திய அரசு உருவாக்கி வருகிறது.
பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களின் இறக்குமதியை குறைக்கும் வகையிலும், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையிலும், மின்சாரத்தால் இயங்கும் பேட்டரி வாகனங்களை இயக்குவதற்கு, மத்திய அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

வரும், 2030ம் ஆண்டுக்குள், மின்சாரத்தை பயன்படுத்தும் வாகனங்களை மட்டுமே இயக்குவதற்கு இலக்குநிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான நிதின் கட்கரி, அனைத்து வாகனத் தயாரிப்பாளர்களும், மின்சாரம் அல்லது மாற்று எரிசக்தியில் இயங்கும் வாகனத் தயாரிப்புக்கு தயாராக வேண்டும்.

இதில் எந்த சமரசமும் கிடையாது அல்லது அரசின் கொள்கை உங்களை கட்டுப் படுத்துவதாக அமைந்து விடும் என, சமீபத்தில் எச்சரித்திருந்தார். இதைஅடுத்து, இதுவரை மந்த கதியில் இருந்த மின்சார வாகன தயாரிப்பு
நிறுவனங்கள் இடையே, தற்போது சுறுசுறுப்பு ஏற்பட்டுள்ளது. மின் வாகனங்களை தயாரிப்பது குறித்த தீவிர ஆலோசனைகளில் அவை ஈடுபட்டுள்ளன.

இதற்கிடையே, மின்சார வாகனம் உள்ளிட்டவை அடங்கிய புதிய ஆட்டோமொபைல் கொள்கையை மத்திய அரசு உருவாக்கி வருகிறது. இந்தாண்டு இறுதிக்குள் அது வெளியிடப்படலாம் என,எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து, வாகனத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சில நிறுவனங்களின் உயரதிகாரிகள் கூறியதாவது: மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கான உயர் தர பேட்டரிகளை தயாரிக்கும் பணி, நம் நாட்டில் இதுவரை துவங்கவில்லை. வெளிநாட்டில் இருந்தே வாங்க வேண்டியுள்ளதால், மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் விலை, சற்று அதிகமாகவே இருக்கும். இந்த பேட்டரிகளை சார்ஜ் செய்வதற்கான வசதிகளை உருவாக்க வேண்டும்.

மத்திய அரசின் புதிய ஆட்டோமொபைல் கொள்கை வந்த பின், இதில் ஒரு தெளிவு ஏற்படும். மின்சார வாகனங்களை இயக்குவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.அதனால்,தற்போது,'ஹைபிரிட்' எனப்படும், இரண்டு வகை எரிபொருள்களில் இயங்கும் இன்ஜின்கள் உடைய வாகனத் தயாரிப்புகளுக்கு பதிலாக, மின்சாரத்தில் இயங்கக் கூடிய இன்ஜின்களை தயாரிப்பது குறித்தும், ஏற்கனவே உள்ள இன்ஜின்களை, மின்சாரத்திலும் பயன்படுத்தும் வகையில் மாற்றுவது குறித்தும் ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன.

மத்திய அமைச்சர் கட்கரியின் எச்சரிக்கை, ஆட்டோமொபைல் துறையில் புதிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் பல மாற்றங்களை சந்திக்கலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

இ - ஆட்டோ தயாரிப்பு!:மஹாராஷ்டிராவின் புனேயை தலைமையிடமாக வைத்து செயல்படும் கைனடிக் குழுமத்தின், 'கைனடிக் கிரீன்' நிறுவனம், 'ஸ்மார்ட் - இ' என்ற நிறுவனத்துடன் இணைந்து, மின்சாரத்தில் இயங்கும் மூன்று சக்கர ஆட்டோக்களை தயாரித்து வருகிறது. அடுத்த, 18 மாதங்களுக் குள், 10 ஆயிரம் இ - ஆட்டோக்களை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதைக்கு, 500 ஆட்டோக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

படையெடுக்கும் மின் கார்கள்மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் தான், மின்சாரத்தில் இயங்கும் முதல் காரை
அறிமுகம் செய்தது. பல்வேறு நிறுவனங்களும், மின்சாரத்தில் இயங்கும் கார்களை, வரும், 2018ல் இருந்து அடுத்தடுத்து அறிமுகம் செய்ய உள்ளன.டாடா நிறுவனம், 'டியாகோ' என்ற காரை அறிமுகம் செய்ய உள்ளது. மஹிந்திரா நிறுவனமும் புதிய ரக மின்சார கார்களை அறிமுகம் செய்ய உள்ளது.

தென் கொரிய நிறுவனமான ஹூண்டாய், 2019ல், தன் முதல் மின்சார காரை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. மாருதி சுசுகி நிறுவனம், ஜப்பானின் டொயட்டோ, சுசுகி ஆகியவையும், மத்திய அரசின் திட்டத்துக்கு துணையிருப்பதாக கூறியுள்ளன.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (40)

 • g.s,rajan - chennai ,இந்தியா

  Now Reva Electric cars Bangalore been acquired by Mahindra motors.

 • பஞ்ச்மணி - கோவை,இந்தியா

  நம்ப மக்களுக்கு நல்ல விஷயங்கள் புலப்படாது இல்லாவிட்டால் அதை பிரபல படுத்த மாட்டார்கள் 1 கோடி குடுத்து ஆடம்பர கார்களை வாங்கும் நம் மக்கள் toyatoவின் prius hybrid கண்டுகொள்ளவே இல்லை. இந்த மாடல் அமேரிக்காவில் மிக பிரபலமான மாடல் ஆனால் இது நான் சென்னையில் 1 முறை மாத்திரமே பார்த்துள்ளேன் விலையும் 1 கோடி குடுத்து வாகனம் வாங்குபவர்களுக்கு பாதி தான் இதன் விலை இதன் சிறப்பம்சங்கள் பல விலை உயர்ந்த கார்களில் இல்லை என்றே கூறலாம் என்ன செய்வது இந்திய மக்களுக்கு எதையும் விளம்பரம் செய்தால் தான் புலப்படும்

 • vel - tiruvannamalai,இந்தியா

  nalla

 • g.s,rajan - chennai ,இந்தியா

  மாற்று எரிபொருளை பயன்படுத்தினால் வரி சலுகை, உற்பத்தி வரி ,கலால் வரி சலுகை என வாகனத் தயாரிப்பாளர்களுக்கு அரசாங்கம் அறிவிக்க வேண்டும். பிறகு என்ன, கச்சா எண்ணெய் விலை சர்வதேச அளவில் குறைந்தால் என்ன?? ஏறினால் நமக்கு என்ன பெட்ரோல் மற்றும் டீசல் பற்றி சாதாரண மக்கள் ஏன் நித்தம் கவலைப்பட வேண்டும் . ஜி.எஸ்.ராஜன் சென்னை

 • N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா

  பிஜேபி யின் திட்டங்கள் கண்கட்டு வித்தை போல் இருக்கும்....அதாவது நம்பவைத்து கழுத்தை அறுப்பது போல...

 • N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா

  இது நல்ல திட்டம் தான்..... ஆனால் இதையே சாக்காக வைத்துக்கொண்டு டிஜிட்டல் பரிவர்த்தனை போல் மின்சாரம் மூலம் மக்களை கொள்ளையடிக்காமல் இருந்தால் சரி...

 • Venkataraghavan Venkataraman - Hyderabad,இந்தியா

  மின்சார மகிழுந்துகளை முதலில் அறிமுகம் செய்தது மஹிந்திரா அல்ல. பெங்களூருவை தலைமையிடமாக கொண்ட ரேவா என்னும் நிறுவனம்.

 • senthilkumar - tamilnadu,இந்தியா

  தலைப்பை பற்றி பேசுய்யா. தேச நேசன். உடனே அரபு நாடு பற்றி பேச போய்ட்டான்

 • bal - chennai,இந்தியா

  முதலில் மின்சார தன்னிறைவு பெறட்டும். வீட்டில் விளக்கு எரியவில்லை பல ஊர்களில். இங்கு கார்கள் பற்றி பேச வந்து விட்டார்கள்.

 • Shriram - Chennai,இந்தியா

  கூரை மேலே சோலார் தகடு போட்டு பகல் நேரத்தில் சார்ஜ் செய்வது ஒருபுறம் இருக்கட்டும், எனக்கு ஒரு ஐடியா இந்த நாலு டயர் சுத்துதே ? அதில டைனமோ மாதிரி செட் பண்ணி அதிலேயே சார்ஜ் ஆவது மாதிரி ஓட்டினால் என்ன ? அந்த வீல்களின் சுழற்சியின் திறன் வேகம் இவை வீணாய் போவது தடுக்கப்படும் அல்லவா ? இரவிலும் வண்டி ஓடினால் சார்ஜும் ஆகுமே? ஆனால் பவர் சக்தியும் சமம் எனபதை நான் அறிவேன்,, ஆனால் இங்கு டைனமோவாக அந்த டயரை சுற்ற வைக்கும் ராடையே மாற்ற முடியுமா ?

 • hasan - tamilnadu,இந்தியா

  தேச நேசா, எப்ப பாத்தாலும் அராபியன் காலையே நக்கிட்டு இருக்கியே, உலகத்திலேயே அரபு நாட்டைவிட ரஷ்யா வெனிஸுலா போன்ற நாடுகள் தான் எண்ணெய் வளம் அதிகம் உள்ள நாடுகள், உன்னை போன்றோர்கள் வாயை பொத்திக் கொண்டு இருந்தாலே போதும் நாட்டில் அமைதி நிலவும்

 • Dynamo - Den Haag,நெதர்லாந்து

  மின்சார வாகனங்கள் குறித்து புராணங்களில் ஏதாவது குறிப்பு உள்ளதா என்று ஐஐடி மாணவர்களை கொண்டு ஆராய்ச்சி செய்ய அமைச்சர் கட்கரி ஆவண செய்யவேண்டும்.

 • R Sanjay - Chennai,இந்தியா

  மாற்று எரிபொருள் பற்றி எப்பொழுதோ தொடங்கி இருக்கவேண்டிய ஆய்வுகள் விஷயங்கள் இன்று ஆமை வேகத்தை விட மிக மோசமாக தற்போது தான் விடை போட்டு உள்ளனர் இந்த ஆட்சியாளர்கள்.

 • Manithan - Tirupur,இந்தியா

  அருமை...வாழ்க பாரதம்...

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  அது வந்த பிறகு... எண்ணெய் நிறுவனங்களுக்கு பெரிய திரு ஓடு ஒன்று கொடுங்கள்...

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  சீக்கிரம் வரட்டும்...புவி வெப்பமடைவதை பெருவாரியாக குறைக்கலாம்...

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  மிகப்பெரிய ஆபத்தே பெட்ரோல் இறக்குமதியைக் குறைத்தால் அரபு நாடுகள் ஆத்திரத்தில் ஜிஹாதிகளை தூண்டிவிடும் அதற்கும் தயாராவோம்

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  நம் போக்குவரத்துக்கழகங்களுக்கு இது ஒத்துவருமா ?? டீசல் திருட்டுக்கு உதவாது என்பதால் CNGவாயுவில் ஓடும் பஸ்களை இன்றுவரை தவிர்க்கும் கழகங்கள் மின்சாரவண்டிக்கு மட்டும் எப்படி ஒத்துழைக்கும்? ஏற்கனவே அசோக் லேலண்ட் கொடுத்த மின்சார பஸ்களை ஓரிரு நாளில் ஓரம்கட்டிவிட்டு விலையைக் காரணம் சொல்லிவிட்டார்கள் டாட்டா மோட்டார்ஸ் ஏற்கனவே குப்பையிலிடுந்து தயாரிக்கப்படும் எரிபொருளான பயோ சி என் ஜி பஸ்களை அறிமுகப்படுத்திவிட்டது அதில் கூட நாம் ஆர்வம் காட்டவில்லை என்னயிருந்தாலும் 2030 இல் மக்கள்தொகைப் பெருக்கத்தால் எல்லா தனியார் சொந்த வண்டிகள் ஓட்ட சாலைகளில் இடமிருக்காது அதற்கு முன் அரசு விழித்துக் கொள்ளாவிட்டால்?

 • தாமரை - பழநி,இந்தியா

  மின்சாரக் கார்களின் மேல் கூரைகளில் சோலார் தகடுகளை பொருத்தி உடன் இன்னொரு பேட்டரியையும் சார்ஜ் செய்துகொண்டே போனால் வாகன இயக்குனர்களுக்கு நிறைய நேரம் பொருள் மிச்சமாகும்.மின் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இதையும் கருத்தில் வைத்தே தங்களது உற்பத்தியைச் செய்ய வேண்டும்.

 • Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா

  முந்து முந்து... உலகளவான மார்க்கட்டை பிடிக்க முந்து... தொழில் நுட்பத்தை உள்நாட்டில் வளர்க்க முந்து முந்து... முடிந்தால் நேர்வழியில்... இல்லாவிட்டால் சீனாப்போல் எவ்வழியிலாவது...

 • Amma_Priyan - Bangalore,இந்தியா

  ஆக இனிமேல் புகை டெஸ்ட் எடுத்து மாறடிக்கவேண்டாம்

 • Suresh - Nagercoil,இந்தியா

  இந்த திட்டம் கரை ஏறினால் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு இங்குள்ள ஏற்றுமதி குறையவும் வாய்ப்புள்ளது.. பெரிய வாகனங்களை பாட்டரி மூலம் இயக்குவதற்கு சாத்தியக்கூறுகள் குறைவு.. மழை பெய்தால் ஒழுகும் அரசு பஸ்களை சரி செய்வதற்கே வழிகளை காணவில்லை இதுல பாட்டரி மூலம் இயக்குவது இவர்களுக்கு முடியுமா என்பது சந்தேகமே.. காரின் விலை, பாட்டெரியின் பராமரிப்பு, இவைகளை எல்லாம் கூட்டி கழித்து பார்த்தால் மிச்சம் வருமா என்பது சந்தேகமே ஏதுவாக இருந்தாலும் மத்திய அரசு புது முயற்சி செய்கிறது, முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார் என்பது பலிக்கட்டும், பாலைவனத்திற்கு அடிமைகளாக அனுப்பப்படுவதும் குறையட்டும்...

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  நிறைய முதலீடுகள் செய்து ஐந்தாண்டுகளுக்கு கடுமையாக உழைத்தால் ஒருவேளை ஓரிரு மாடல்கள் நிர்மாணிக்கலாம்...

 • B.s. Pillai - MUMBAI,இந்தியா

  Tesla is the electric car manufacturer in foreign countries. He has given the technology FREE to all manufacturers with the larger interest of environment improvement to help reduce global warming. Our Hon. Minister d this two years back. The automobile industries did not take him seriously ,thinking they can " influence " him. It si already late. We have to switch over to Electric vehicles at the earliest. The GST on hybrid cars are now high. It should be reduced by Govt . Not only that, the govt can give incentives for such hybrid models initially. These hybrid cars are fuel efficient and uses electricity more. The petrol consumption comes only when the battery is not charged. For local as well as long distance running, hybrid cars are cheaper in the sense they use minimum petrol. It is very funny that such hybrid cars ended up paying more GST .Actually it should be very minimum and govt should give more incentives for hybrid car buyers, till the electric cars replace fuel run cars. The metro pumps can also act like charging stations. Even where electric connections to these petrol pumps are not steady, these petrol pumps can use diesel generators to charge these electric cars, as they already have uninterrupted supply of diesel in their pumps.Minister can foresee and plan now only to install electric charging stations along the NEW HIGHWAYS UNDER CONSTRUCTION at every 50 KMs foe E cars.

 • Chitra - Madurai,இந்தியா

  டெஸ்லாவ பத்தி சொல்லல்ல. அது தான் நம்பகமான பேட்டரி வண்டி. விலை அதிகம் தான். போக போக குறையும்.

 • Renga Naayagi - Delhi,இந்தியா

  காரின் மேற்கூரையில் சோலார் பேனல்களை பொருத்தி சூரிய சக்தியை சேகரித்து அந்த சக்தியை மொபைல் சார்ஜ் மின்விசிறி மற்றும் சில பல்புகள் இயங்கும் வகையில் வடிவமைத்தால் கார் ஓடாத போது கார் பேட்டரி சார்ஜ் செய்யவும் பயன் படுத்தலாம் ...கலிபோர்னியா நகரில் பள்ளிக்கூட கூரைகள் மற்றும் கார் ஷெட் கூரைகளை சூரிய மின்சாரம் தயாரிக்க பயன் படுத்துகிறார்கள்

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  இந்தியாவில் போதுமான போக்குவரத்து கட்டமைப்புகள் இல்லை. மேலும் பெட்ரோல் மற்றும் டீசல் வண்டிகளால் காற்றும் மாசுபடுகிறது. உடனடியாக தீர்வு காணப்படவேண்டிய தருணம் இது.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement