Advertisement

பள்ளி குழந்தைகள் பாதுகாப்பு : 15ல் உச்ச நீதிமன்றம் விசாரணை

புதுடில்லி: பள்ளி செல்லும் குழந்தை களின் பாதுகாப்பு குறித்த விதிமுறைகளை, முழு வீச்சில் அமல்படுத்தக் கோரி, உச்ச நீதிமன்றத்தில், பெண் வழக்கறிஞர்கள் இருவர் தாக்கல் செய்த பொதுநல மனு, 15ல் விசாரணைக்கு வருகிறது.

அதிர்ச்சி : ஹரியானாவில் உள்ள தனியார் பள்ளியில், இரண்டாம் வகுப்பு படித்த மாணவன், கொலை செய்யப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலை வழக்கு தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, மாணவனின் தந்தை, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.இந்நிலையில், பள்ளி செல்லும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த விதிமுறை களை, முழு வீச்சில் அமல்படுத்தக் கோரியும்.
மேலும் சில புதிய விதிமுறைகளை கடைப்பிடிக்கும்படி, பள்ளிகளுக்கு உத்தரவிடக் கோரியும், பெண் வழக்கறிஞர்கள், அபா சர்மா, சங்கீதா பாரதி ஆகியோர், உச்ச நீதிமன்றத்தில், பொது
நல மனு தாக்கல் செய்துஉள்ளனர்.'மாணவன் அல்லது மாணவி, வீட்டிலிருந்து, பள்ளி வாகனத்தில் ஏறியது முதல், மீண்டும் வீடு திரும்பும் வரை, அவர்களின் பாதுகாப்புக்கு, பள்ளி நிர்வாகம் முழு பொறுப்பேற்க வேண்டும்' என, அவர்கள், தங்கள் மனுவில் தெரிவித்து உள்ளனர்.

மனு ஏற்பு : இந்த மனுவை ஏற்ற, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா, நீதிபதிகள், அமிதவ ராய், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு, 15ல், இந்த மனு மீதான விசாரணை நடக்கும் என, தெரிவித்து உள்ளனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement