Advertisement

நீட் தேர்வுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய அரியலூர் மாணவி தற்கொலை

அரியலூர்: நீட் தேர்வை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட் வரை போராடிய மாணவி அனிதா தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வாய்ப்பு இல்லை:அரியலூர் மாவட்டம், குழுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர், அனிதா, 17. இவர், மூட்டைத் தூக்கும் தொழிலாளி, சண்முகம் என்பவரின் மகள். பிளஸ் 2 தேர்வில், 1,176 மதிப்பெண்கள் பெற்ற மாணவி அனிதாவின் மருத்துவ, 'கட் ஆப்' 196.75. எஸ்.சி., பிரிவைச் சேர்ந்த அனிதா, நீட் தேர்வில், 700க்கு 86 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றார். பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடந்தால், அனிதாவிற்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்திருக்கும். ஆனால், 'நீட்' தேர்வு அடிப்படையில் நடந்தால், அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

வழக்கு:நீட் தேர்வில் விலக்கு பெறுவதற்காக, தமிழக அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்தை எதிர்த்து, நளினி சிதம்பரம் உள்ளிட்டோர், சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், எதிர்மனுதாரராக தன்னைச் சேர்க்க, மாணவி அனிதா, மனு தாக்கல் செய்தார். ஆனால், நீட் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது.
இந்நிலையில், இன்று அவர் தற்கொலை செய்து கொண்டார். மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காததால் தான் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது.

உறவினர்கள் கூறுகையில், சிறு வயது முதல் டாக்டர் கனவுடன் அனிதா படித்து வந்தார். அதிக மதிப்பெண் எடுத்தும் சீட் கிடைக்காததால் தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்தது வீட்டில் இருந்தவர்களுக்கு தெரியவில்லை. இது தெரிந்திருந்தால் தடுத்திருப்போம். கடந்த சில நாட்களாக அவர் மன அழுத்தத்தில் இருந்தார். அனிதாவின் வாழ்க்கை பாழாக நீட் தேர்வே காரணம் எனக்கூறினார்.

Advertisement
 

வாசகர் கருத்து (312)

 • K.Palanivelu - Toronto,கனடா

  ஒவ்வொரு மாணவ,மாணவிக்கும் ஒவ்வொரு கனவிருக்கும்.ஆனால் தகுதிக்கும்,திறமைக்கும் ஏற்றார் போல எதிர்காலம் அமையும்.இதுதான் வாழ்க்கையின் தத்துவம்.சில இடங்களில் அது சருக்கும்போது உறுதியுடன் மனம் தளராமல், தன்னம்பிக்கை இழக்காமலிருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.ஐ.ஏ.எஸ் தேர்வை பத்துதடவை தொடர்ந்து எழுதி வெற்றி வாகை சூடிய ஒடுக்கப்பட்டவர் இனத்தை சேர்ந்தவர் இருக்கும்போது, இந்தப்பெண் அடுத்தவருடம் நீட் தேர்வு விடாமுயற்சியுடன் எழுதியிருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம்.அவசரப்பட்டு தனது வாழ்க்கையை முடித்துக்கொண்டது துர்பாக்கியவசமானது. இந்தப் பெண்ணின் முடிவுக்கு இந்தப்பெண்ணே பொறுப்பு.இதற்காக அரசை குற்றம் சாட்டிப்பேசுவது சரியல்ல.

 • K.Palanivelu - Toronto,கனடா

  இது ஒரு கேவலமான கோழைத்தனம்.வருடாவருடம் எத்தனையோ மாணவ,மாணவிகள் அவர்கள் எழுதிய பரிட்சையில் பெயிலாகி தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ளுகிறார்கள்.அதற்காக பள்ளிகளில் பரிட்சையே வேண்டாம் என ரத்து செய்யமுடியுமா?அனிதாவின் தன்னிச்சையான தற்கொலைக்கு நீட் தேர்வை குற்றம்சாட்டி கொந்தளிக்கும் அரசியல்தலைவர்கள் இதற்கு பதில் சொல்லட்டும்.அவலை நினைத்து உரலை இடிக்கவேண்டாம்.

 • Prakash JP - Chennai,இந்தியா

  //காங்கிரஸ் தான் நீட் தேர்வை கொண்டு வந்தது... நளினி சிதம்பரம் வாதாடினார்.. // நீட் விவகாரத்தில் தமிழகத்தை நம்பவைத்து கழுத்தை அறுத்தது மத்திய பிஜேபி மோடி அரசு தான்.. ஆம், காங் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வு முறையில், மாநிலங்கள் விரும்பினால் விலக்கு அளிக்கப்பட்டது.. ஆனால், மோடி பிஜேபி ஆட்சியில் அதை திருத்தி கட்டாயம் என மாற்றினார்கள்.. அப்படி இருந்தும், மத்திய மெடிகல் கவுன்சிலில் சேரவில்லையெனில், இப்போதும் நீட் கட்டாயம் கிடையாது.. ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இப்போதும் நீட் தேர்வு கிடையாது.. இங்கே தமிழ்நாட்டில், திமுக ஆட்சி இருந்தவரை, பின்பு ஜெயா இருந்தவரை, கட்டாய நீட் முறைக்கு கையெழுத்து போடவில்லை.. அவர் அப்பலோவில் அட்மிட் ஆகியவுடன், பிஜேபியின் பினாமி ஓபிஎஸ் & அப்போது அமைச்சராக இருந்த பிஜேபியின் ஒற்றன் மாபா பாண்டியராஜன் இருவரும் சேர்ந்து தமிழ் நாட்டை மத்திய பிஜேபி அரசிடம் அடகு வைத்து கையெழுத்து போட்டார்கள்.. மேலும், நளினி சிதம்பரம் ஒரு தரப்புக்கு ஆஜரான வக்கீல்.. அவ்வளவுத்தான்.. ஆனால், கடைசிவரை நீட்டுக்கு விலக்கு என சொல்லிவிட்டு, தமிழகத்துக்கு வந்த நிர்மலா சீதாராமன் போன்ற பல மத்திய அமைச்சர்களும் ஆமாம் சாமி போட்டார்கள்... தமிழக சட்டமன்றம் இயற்றிய தீர்மானத்தை குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பாமால், மாதக்கணக்கில் கிடப்பில் போட்டது மத்திய பிஜேபி மோடி அரசு.. பின்னர், மீண்டும் அவசர சட்டம் கொண்டு வாருங்கள், ஒப்புதல் கிடைக்கும் என சொல்லிவிட்டு, அப்படி இயற்றப்பட்ட அவசர சட்டத்துக்கு, செல்லும் என மத்திய அமைச்சகத்துக்கு லீகல் ஒப்பினியன் கொடுத்த மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால், அப்படியே பல்டி அடித்து, சுப்ரீம் கோர்ட்டில், தமிழகத்துக்கு தனியே சலுகை அளிக்கமுடியாது என குட்டிக்கரணம் அடித்தார்... இப்படி நீட் விவகாரத்தில் தமிழகத்தை நம்பவைத்து கழுத்தை அறுத்தது மத்திய பிஜேபி மோடி அரசு தான்.. சும்மா, ஒன்னும் தெரியாமல் அரசியல் பேசக்கூடாது..

 • Cheran - Kongu seemai,இந்தியா

  Tamil Nadu is one of the very few states more medical colleges with its own Tax money(Central government is not funding even a single penny). Losing out TAMIL NADU medical college seats to students from other states has been one of the biggest concerns for the state. Moreover Tamil Nadu is producing best Doctors among the world and Chennai is one of the very best medical Tourist centre in the world. Nobody have rights to say that Tamil Nadu has worst syllabus. NEET has been brought up to spoil the state Autonomy. Honourable Supreme Court and Central Government is really spoiling our state rights. And it finally took a innocent live "Anita".

 • Narayan - Zurich,சுவிட்சர்லாந்து

  இன்று நேற்றல்ல, திமுகவின் அரசியல் என்றுமே ஒருத்தரை கொன்றே அந்த பிணம் மீதே நடக்கும். உங்க அரசியலுக்கு அந்த ஏழை பொண்ண ஏன் கொன்னீங்க?

 • JAYARAMAN - CHENNAI,இந்தியா

  Conducting NEET exam common to all States is fair only if syllabus is also common in all states. What is the problem in making the syllabus common to all for classes from sixth to twelfth in all States, atleast in maths, physics, chemistry and biology.

 • seelan - madurai,இந்தியா

  சவப்பெட்டியில் இருப்பது அனிதாவின் உடல் இல்லை, இது சவப்பெட்டியில் இருக்கும் தமிழ்நாடு அரசு

 • Jeyaseelan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

 • Bneutral - Chandigarh,இந்தியா

  So the people who all appeared / waited for serveral years for the same reason of e for the past 50 years and in DIFFERENT FIELD 'are fool' and who all commiting suicide can come into lime light.. who gave money to appear in supreme court will be killer.. Exam across the country means more oppurtunity across the country..if anyone against are deaf.. SIMPLY.. & to understand any game [bluewhale] everyone need at least basic knowledge to understand english.. in Tamil nadu kind of place the deaths can be manipulated becoz of games as well..

 • Bneutral - Chandigarh,இந்தியா

  So the people who all appeared / waited for serveral years for the same reason of e for the past 50 years and in DIFFERENT FIELD 'are fool' and who all commiting suicide can come into lime light.. who gave money to appear in supreme court will be killer.. Exam across the country means more oppurtunity across the country..if anyone against are deaf.. SIMPLY.. & to understand any game [bluewhale] everyone need at least basic knowledge to understand english.. in Tamil nadu kind of place the deaths can be manipulated becoz of games as well..

 • kuthubdeen - thiruvarur,இந்தியா

  மாணவி தற்கொலை செய்து கொண்டு விட்டார் ..வருத்தமான நிகழ்வு ..அதற்காக இதான் சாக்கு என்று பிண அரசியலை கையில் எடுக்காமல் மாணவர்களுக்கு எந்த விதத்தில் உதவலாம் என்று ஆளும் கட்சி எதிர்க்கட்சி அனைத்தும் உருப்படியா சிந்தித்தால் தலை முறை நல்லா இருக்கும் .இப்ப எதிர் கட்சியாக இருப்பவர்கள் மட்டும் மக்களுக்கு எதிரான எத்தனையோ காரியங்களை செய்தவர்கள்தான்,,,,ஒட்டு வேட்டையாட இதை பயன் படுத்திக்க வேணாம்,,,வரிசையா போயி மாலை வைத்து போலி கண்ணீரும் வடிக்க வேண்டாம் ....மக்கள் உசாராதான் இருக்கிறார்கள்

 • G Mahalingam - Delhi,இந்தியா

  உசுபேத்தி உசுபேத்தி அரசியல்வாதிகள் இந்த பெண்ணை கொன்றுவிட்டார்கள். இதைவைத்து ஒரு வாரம் அரசியல் செய்வார்கள்.

 • rajarajan - bangalore,இந்தியா

  அனிதாவின் படுகொலைக்கு காரணம் அரக்ககுணம் படைத்த மோடி அரசு மட்டுமல்ல கையாலாகாத்தனம் கொண்ட மாநில அரசு மட்டுமல்ல சமூகநீதியை மறந்து உயரிய இனத்தவர்களுக்காக மட்டும் குரல் கொடுக்கும் உச்சநீதிமன்ற நீதிபதிகளும்தான் காரணம். குற்றவாளி என்று தீர்ப்பை எழுதி மூட்டையில் கட்டி வைத்துவிட்டு அவர் இறந்த பிறகு வாசித்தவர்கள்தான் இந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள். மதுரை உயர்நீதிமன்றம் கேட்ட 10 கேள்விகளுக்கும் பதில் அளிக்காமல் சமூக நீதிக்கு எதிராக பொதுவான கல்வி முறை இல்லாதபோது ஒருசாராருக்கான தேர்வை எல்லோரும் எழுத வேண்டும் என்று கூறிய உச்சநீதிமன்றமும் குற்றவாளிதான்.

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  இந்த பகுதியில் ரத்தத்துக்கு பதிலாக கொடிய அமிலம் ஓடும் அக்கினியை கக்கும் ஜந்து ஓன்று நடமாடுகிறது, கவனம்.

 • Bhoopalan Srinivasan - Mumbai,இந்தியா

  தற்கொலை என்பதை ஏற்று கொள்ள முடியாது அனிதா அவர்களின் முடிவை கேட்டு பரிதாப்படலாமே அன்றியும் பாராட்ட முடியாது போராட்டம் என்பது தனிப்பட்டவர் சம்பந்தபட்டதல்லவே இந்த முடிவினை எடுக்கும் முன்னர் பிறரை கலந்து ஆலோசித்து இருக்கலாம் இதைகூட செய்யாதவர் எப்படி போராட துணிந்தாரோ

 • Sanny - sydney,ஆஸ்திரேலியா

  இனிமேல் மக்களால் தெரிவு செய்யப்படும் MLA, MP கள், இனிமேல் NEET தேர்வு எழுதியபின் சட்டசபை, பாராளுமன்றம் போகணும் என்று சட்டம் கொண்டுவந்தால் அரசியல் வாதிகளுக்கு புத்திவரும்.

 • prabha - chennai,இந்தியா

  தமிழ்நாடு மருத்துவ உலகில் முன்னணி மாநிலம்.. இதை அழிக்கவே நீட் தேர்வு கொண்டு வந்துள்ளனர்.

 • naankabali - kovai,இந்தியா

  அனிதாவின் மரணத்திற்கு ஊடகங்களும் அரசியல் கட்சிகள் அனைத்துமே முழுப்பொறுப்பு. தினமும் அந்த பெண்ணின் மதிப்பெண்ணெயும் cutoff மதிப்பெண்ணையும் போட்டு அந்தப்பெண்ணின் மனசில் ஆறாத வலியை ஏற்படுத்தி இன்று தற்கொலைவரை சென்றுவிட்டது. இதை தினமும் சொல்லாதிருந்தால் குறைந்தபட்சம் அவர் அதனை மறந்து தனக்கு கிடைக்கும் வாய்ப்பை ஏற்றுக்கொண்டு குறைந்தபட்சம் உயிரோடு இருந்திருப்பார்.

 • RamMylapore -

  பாடத்தில் மாற்றம் கொண்டு வந்து மாணவர்களை தயார் செய்ய ஆறு ஆண்டுகள் தேவை. ஏன் இந்த அவசர கோலம்? யார் பொறுப்பு?

 • Saai sundaramurthy. A.V.K - chennai,இந்தியா

  போன வருடம் +2 வில் 192 கட்ஆப் எடுத்தும், நீட் தேர்வில் 150 க்கும் குறைவாக மார்க் வாங்கிய மாணவி ஒருவர், வேறு எந்த படிப்பையும் படிக்காமல், வேறு எந்த கல்லூரியிலும் சேராமல், கடந்த ஒரு வருடமாக, இந்த வருடம் நீட் தேர்வுக்கான முறையான பயிற்சி எடுத்து விடாப்பிடியாக தேர்வு எழுதி 500 க்கும் அதிகமான மார்க்குகளை வாங்கி மருத்துவ கல்லூரியில் சேர்ந்து விட்டார். இந்த மாதிரியான மாணவியின் மனோதைரியத்தை எண்ணி பாராட்டுவதா அல்லது தற்கொலை செய்து கொண்ட மாணவியின் முடிவை எண்ணி பரிதாபப்படுவதா என்று தெரியவில்லை. உச்ச நீதிமன்றம் வரை சென்று வழக்கு தொடுத்து, அவ்வழக்கில் உதவியும் செய்த ஒரு கூட்டம், "நீட் தேர்வு என்பது 2 அல்லது 3 முறை கூட எழுதி அதிக மதிப்பெண்களை எடுத்து மருத்துவத்தில் இடம் பிடிக்க முடியும்" என்பதை சொல்லி கொடுத்து தற்கொலை செய்து கொண்ட மாணவிக்கு ஆலோசனை வழங்கி தைரியம் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் இப்போது ஒப்பாரி வைக்க மட்டும் அக்கூட்டம் வருகிறது.

 • Sourashtra Samachar - california,யூ.எஸ்.ஏ

  தூண்டி விட்ட அரசியல்களுக்கு மனசாட்சி இருக்குமா ?

 • Rukmangathan - chennai,இந்தியா

  நான் தற்கொலைக்கு எதிரானவன். நீங்கள் சொல்வது எனக்கு கேட்கிறது. அவங்க அவங்களுக்கு வந்தாதான் தெரியும்... அதுதானே...? அப்பொழுதும் தற்கொலை தவறு தான். அது தீர்வாகாது. தற்கொலை தான் தீர்வென்றால், இந்தியாவில் பாதிக்கும் மேல் இறந்து போயிருக்க வேண்டும். நம்மில் சிலரும் கூட.... அனிதா மருத்துவ கல்வி படிக்க முடியவில்லை என்ற மனவிரக்தியில் இருந்தாளா அல்லது நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக தற்கொலை செய்து கொண்டாளா.. என்பது தெரியவில்லை. எப்படி இருந்தாலும் இரண்டுமே தவறு தான். நிரந்தரமாக மருத்துவ படிப்பு படிக்க முடியாது என்று இதை எடுத்து கொள்ளக்கூடாது. ஒரு பாதை அடைத்தால் இன்னொரு பாதை உண்டு.... இன்னொரு பாதை இல்லை என்றால், அந்த பாதையை உருவாக்கி கொள்ளவேண்டும். காலம் மாறும், செயலாற்ற அரசு வீழும். வேறு வழி பிறக்கும். இந்த வருடம் இல்லையேல் அடுத்த வருடம், அல்லது அதற்கடுத்தவருடம். வெற்றிக்கான வழியை தேடிக்கொண்டிருந்தால் கட்டாயம் வழி கிடைக்கும். நீ சிறிது அவசரப்பட்டுவிட்டாய் என்றுதான் சொல்வேன். நீ இறப்பதற்கு முன், உன் கனவு இறந்துவிட கூடாது என்று யோசித்திருக்கலாம். உன் பெற்றோரின் கனவு இறந்துவிடக்கூடாது என்று யோசித்திருக்கலாம், உன்னை வளர்த்து ஆளாக்க அவர்கள் பட்ட கஷ்டங்களும், உழைப்பும் வீணாய் போய்விடக்கூடாது என்று யோசித்திருக்கலாம். அல்லது இறப்பதற்கு பதில், ஒரு போராளியாக வாழ்ந்திருக்கலாம்.... மருத்துவ படிப்பு உனக்கு கிடைக்காவிடினும், உன் போராட்டம் மூலமாக வருங்கால மாணவர்களுக்கு கிடைக்க செய்திருக்கலாம். ஏனெனில், பத்திரிக்கைகளும், டிவி சேனல்களும், அரசியல்வாதிகளும் சில நாட்களுக்கு கத்திவிட்டு மறந்துவிடுவார்கள். ஆனால் உன் கனவு....? உன் பெற்றோரின் கனவு....?

 • ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா

  NEET முறை வந்து விட்டால் இங்கே ஒரு ஒரு இடத்திற்கும் கோடிக்கணக்கில் வாங்கும் கொள்ளைக்காசு நின்று போகும் என்ற பயத்தால் , நமது கல்வித் தந்தைகள் சேர்ந்து செய்த சூழ்ச்சியாக இருக்கலாம் ? தீவிர விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொணர வேண்டும் .தற்போதைய மருத்துவ இடத்தின் விலை ஒரு கோடி மற்றும் அதற்கு மேல் செல்கிறது .இறந்த உயிரின் மதிப்பு விலை இட முடியாதது . யார் சூழ்ச்சி செய்து அவரின் தற்கொலை அல்லது வேறு வகையான இறப்பிற்கு காரணம் என்று விசாரிக்க வேண்டும். இது போன்ற காரணங்கள் வேறு இவரின் உயிரையும் பறிக்கும் செயலாய் அமைய கூடாது . அரசாங்கம் உடனே விரைந்து செயல் பட வேண்டும்

 • மணிமேகலை - paris ,பிரான்ஸ்

  ஏழை மக்களுக்கு இந்த நாட்டில் நீதி கிடைக்காது என்பதற்கு இது ஒன்றே போதும் சாட்சியாக ,நீதியும் நீதிமன்றமும் பணம்படைத்தவர்களுக்கு மட்டுமே வளைந்து கொடுக்கும் என்பது இதிலிருந்து வெளிப்படையாக தெரிகின்றது ,இதற்க்கு முடிவுக்கட்டும் காலம் வந்துவிட்டது .

 • ராம் -

  பிரியார் 2.0 தோன்ற வேண்டிய நேரம் வந்தாகிவிட்டது போல் தெரிகிறது

 • Bharatha Nesan - Chennai,இந்தியா

  நளினி சிதம்பரமும் ஒரு காரணமாகி விட்டார், அதை எவருமே சொல்லவில்லை.

 • Ramesh Kumar - coimbatore,இந்தியா

  இனி மருத்துவ படிப்பு ஏழைகளுக்கு எட்டா கனியாக போகிறது......நீட் போன்ற தகுதி தேர்வுகள் தேவை தான்... ஆனால் அதை அவசர கோலத்தில் அமுல் படுத்தி ஒரு உயிரை காவு வாங்கி விட்டார்கள்......

 • Dol Tappi Maa - NRI,இந்தியா

  உங்கள் நேரம் பணம் வீணாக்கி மதங்கள் பின்னால் சென்று அடிமையாக வாழாதீர்கள் .

 • Krishna - Dindigul,இந்தியா

  இந்த பெண்ணுக்கு ஆழ்ந்த அனுதாபம் மற்றும் இரங்கல்கள்.... ஒரு சாதாரண பெண் கோர்ட் படி ஏற யோசிப்பாள்...அவ்ளோ தைரியம் இருக்காது....ஆனா இந்த பொண்ணுக்கு மிகுந்த தைரியம் இருந்ததுனால தான் கோர்ட் ல கேஸ் லாம் போட்ருக்கா....இந்த பெண் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு அவ்ளோ கோழையா இருக்க வாய்ப்பில்லை... இந்த திராவிட எச்ச களை நாய்ங்க தான் இந்த பொண்ண எதாவது தூண்டி ஏதாச்சும் பண்ணிருக்க வாய்ப்பிருக்கு.... முதல்ல CBI விசாரணை செய்யுங்க.... இங்க நீட் நீட் வேண்டாம்னு கூப்பாடு போடுற நாய்ங்க.... நாங்க கத்தி கம்பு சண்டை தெரு சண்டை போட்டு தான் பழக்கம் ....அதுனால நீங்க துப்பாக்கி லாம் எடுத்துட்டு வராதீங்க.... நாங்க இன்னும் அதுக்கு ரெடி ஆகல ன்னு சொன்னா எப்படி இருக்குமோ அதும் மாதிரி இருக்கு.... நாடு பூரா பாட திட்டம் உயர்த்தியாச்சு...இங்க 12 வருசமா ஒரு __ ம்ம் பிடுங்கள... ஒரு வருஷம் விலக்கு கொடுத்தாச்சு....NEET அறிவிச்சு பல வருஷம் ஆச்சு....அப்போ இத்தனை வருஷம் என்னத்த புடுங்கிட்டு இருந்திங்க....சீப் பாலிடிக்ஸ்

 • dandy - vienna,ஆஸ்திரியா

  பல ஆசிய நாடுகளில் பரீட்ச்சை புள்ளி ஆக கூடியது 100 ..ஐரோப்பிய நாடுகளில் 10 அல்லது 6 இங்கோ அள்ளி கொடுக்கின்றார்கள் உலகில் கல்வி தரத்தில் இந்திய மிக கீழ் நிலையில் உள்ளது ..எந்த தமிழ் நாட்டு அரசியல் வியாதியும் ..தரமான கல்வி பற்றி யோசிக்க வில்லை ..டாஸ்மாக் கொடுத்து ..பணம் பெருகுவதையே இந்த கேவல பிறவிகள் நினைக்கின்றன. மேற்கு நாடுகளில் இந்திய படட படிப்பு ..பல்கலை கழக அனுமதிக்கு ஏற்று கொள்ள படுவதில்லை ..

 • G.Prabakaran - Chennai,இந்தியா

  நீட் தேர்வை அனுமதித்ததது முதல் தவறு. நீட் தேர்வை அனுமதித்ததால் மாணவர்கள் இடையே பிரித்தாளும் சூழ்ச்சியை செய்தது இந்த அரசு. மாணவர்கள் முன்பே ஜல்லிக்கட்டு போராட்டம் போல் போராடி இருந்தால் ஒருவேளை நீட் தேர்வு தமிழகத்தில் கொண்டு வர பட்டிருக்காது.

 • ராம் -

  அரசாங்கமும் கோர்ட்டும் சேர்ந்து செய்த கொலை. ஏன் இந்த அவசர கோலம்SC full bench விசாரணை தேவை.

 • senthil - chennai,இந்தியா

  மோடியும் நளினி சிதம்பரமும் தான் முதல் குற்றவாளி .....தமிழக அரசு அணைத்து போராட்டங்களையும் நடத்தியது பலன் இல்லை ...... அம்மா இர்ருந்துயிருந்தால் இந்த சோகம் நடந்திருக்காது ....... திராவிட காட்சிகள் காங்கிரஸ் மற்றும் பிஜேபி உடன் கூட்டணி வைக்க கூடாது ... அவரின் ஆன்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன் ....

 • பொதிகை மு.செல்வராசன் - Chennai,இந்தியா

  மாணவர்கள் சரியான முறையில் திட்டமிட்டு தங்களைத் தயார் படுத்துவதற்கு ஏற்ப மாற்றங்களைக் கொண்டு வராமல், தான்தோன்றித்தனமாகச் செயல்படும் அரசுகளால் இத்தகைய விளைகள்தான் ஏற்படும் என்பதனை இனியாவது உணர்ந்து கொண்டு செயல்படுவார்களா ?

 • suresh - chennai,இந்தியா

  வாழ்க பாஜக வாழ்க பாஜக....பாஜக தான் இனி தலைமைலகத்தில் ஆட்சி.....மோடி தான் தல

 • Guru Ashok - Madurai,இந்தியா

  திராவிடம் என்ற ஒரு வார்த்தையே தமிழ் அகராதியில் இல்லை. நவமணி, நவபாஷை. பால் காவடி என்று அறிந்தால் சம அளவில் கலக்கப்பட்ட ஸ்கிருதம் பாஷை. மொழி என்பதே பிரச்சினையை இத்துடன் நாம் தீர்த்துக் கொள்வோம் என்ற வார்த்தையை "திராவிடம்" என்று சொல்லப்பட்டது. நவபாஷாணம் என்பது ஒன்பது மொழிகள். மூடர் கூடமே திருக்குறைளை படித்தல் உலகம் புரியும். நல்ல குரு இல்லை. கள் சாப்பிடும் நூல் அறிந்தவன் பாடம் நடத்தினால் அவன் பிள்ளைகளுக்கே தவிர உழைப்பவனுக்கு அல்ல. நான் வந்து உரைப்பேன். பலர் மனதில் ரத்தம் கசியும் நம் இனம் கேவலமா என்று. தமிழே என் மதம். குறளே என் நீதி. இன்னும் விளங்கா குறளை விளக்கினால் பலர் முகத்திரை கிழியும். கிழிக்கும் காலம் விரைவில். மனதில் தமிழ் அறியும் துணிவு வேண்டும். உணர்வு மிக அவசியம். தமிழை மனப்பாடம் செய்தல் ஆகாது. மொழி உணர்ந்து படிக்க வேண்டும். இந்த பெண்மணிக்காக நான் உண்மை தமிழ் உண்மை ஆங்கிலம் என்ன என்று உணர்த்தினால் பலர் மனம் பயம் கொள்ளும். அவர்களுக்கும் தெளிவினை சொல்வேன். உண்மை என்பதே கடவுள். மறைத்தல் என்பதே பூதம். நன்றியுள்ள நாய்களை வார்த்தைகளில் எழுப்புவதை விட வேறு ஒரு விலங்கினத்தை தேட வேண்டும். மனம் சற்று வலி கொடுக்க கூடிய விஷயம். எல்லாம் மந்திரம் ஓதியவன் காதில் ஊதினால் பலரின் ஈனம் அசிங்கம் வெளிப்படும். நானறிவேன் உலக சரித்திரம். உரைப்பேன் 1330 சரியாகா. திருடியவன் நம்பிக்கை அற்றவன் யார் என்று முகத்தில் உமிழாது தமிழால் உமிழ்வேன்

 • mrsethuraman - Bangalore,இந்தியா

  மாணவியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள் Operation success .Patient died ?

 • krishnan - Chennai,இந்தியா

  எதுக்கு பிளஸ் டூ எக்ஸாம் வெக்கிறாங்க

 • Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா

  மக்களுக்கு தொண்டு செய்வதற்கும், வாழ்க்கையில் சாதிக்க துடிப்பவர்களுக்கும் எத்தனையோ வழிகள் உண்டு. அவர்தம் குடும்பத்திற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆத்மாசாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்.

 • venkatesh - coimbatore,இந்தியா

  ஏழு லட்சம்குடுக்காரம் எடப்பாடி ஊழலில் மூழ்கியவர்களுக்கு பணம் கொடுத்தால் எல்லாம் சரி செய்துவிடலாம் என்ற நினைப்பு.எதனை லட்சம் கொடுத்தாலும் திரும்புமா இந்த இன்னுயிர்.

 • s.k.manoharan - kulithalai,இந்தியா

  மிகுந்த வருத்தப்படுகிறேன்.பெண்ணின் ஆன்மா கடவுளுடன். எஸ்.கே.மனோகரன்,குளித்தலை.

 • ஆனந்த் - நாகர்கோவில் ,இந்தியா

  நீட்டால் பாதிக்கப்பட்ட(?) எத்தனை பேர் தற்கொலை செய்து கொண்டனர்?

 • Ganesan M - covai,இந்தியா

  ஒலிம்பிக்கில் அனைத்து தங்கப்பதக்கங்களையும் அமெரிக்காவே பெற்று விடுகிறது .இந்தியாவுக்கு ஒன்றுமே கிடைக்க வில்லை .இது அநியாயம் .நமக்கு இட ஒதிக்கீடு தேவை ...நாம் போராட வேண்டும் .இல்லையேல் இந்தியாவுக்கு விலக்கு வேண்டும் ..

 • இந்து தமிழன்.. - Chennai,இந்தியா

  இங்கே கருத்து சொல்வோரில் இந்துக்கள் பெயரில் ஒளிந்துகொண்டு இனவெறி மற்றும் ஜாதிவெறியை கிளப்பும் மூர்க்கங்கள்.. கேரளா கர்நாடக மற்றும் ஆந்திர ஆரியர்களும் இல்லை.. இந்தி பேசுவோரும் கிடையாது.. இதை கொண்டுவந்த காங்கிரஸ் மற்றும் திமுக இப்போது பல்டி அடிக்கிறது.. திராவிட ஓநாய்கள் பிரித்தாளும் சூழ்ச்சியுடன் மாணவர்களின் பிணத்தின்மேல் கேவலமான அரசியல் நடத்துகிறது.. Neet தமிழிலும் எழுதலாம்.. பிகாரி எழுதும்போது நம்மால் முடியும்.. கேவல திராவிட அரசியல் வியாதிகளை ஒதுக்கி தள்ளும் நேரம் இது.. காங்கிரஸ் கொண்டுவந்து உச்ச நீதிமன்றம் உறுதிசெய்தது மற்றும் தமிழ்நாட்டை தவிர்த்து அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொண்டுள்ளது.. இதில் பிஜேபி பங்கு ஒன்றும் கிடையாது.. மானங்கெட்ட திராவிட கொள்ளைக்கூட்டம் மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடிவிட்டது..

 • நாகூரான் -

  ஒரே மாதிரியான பொது தேர்வுக்கு முன் ஒரே மாதிரியான பாடங்களை அமல் செய்யாத கேடு கெட்டவர்களின் மத்திய அரசும், அதற்கு ஒத்து உதிய மதியில்லா நீதிதுறையுமே இதற்கு பொறுப்பு. சம்பந்தப்பட்டவர்களுக்கு கூலி கிடைக்க கடவுளை வேண்டுவதை தவிர வேறு வழியில்லை. அனிதாவும் இப்படிபட்ட முட்டாள்களின் தூண்டுதலில் உயிரை மாய்த்துக் கொள்ளாமல் வேறு வழியில் சமூகத்தில் உள்ள இப்படிப்பட்ட கேவலமான பிறவிகளை அகற்ற பொறுமையுடன் போராடியிருக்கலாம். அல்லது சம்பந்தபட்ட ஒருவரை கொன்றிருக்கலாம்...

 • rama - johor,மலேஷியா

  Exam should be prepared relevant to what they have studied yes men from state government and ego from central government put Tamil Nadu students in trouble this is purerly government problem

 • Mal - Madurai,இந்தியா

  Sorry to say this in this difficult situation... Just imagine, if this girl gets into medical college when she is unable to cope up with the standard and syllabus... Would she not commit suicide.. Finally if after becoming a doctor, if she couldn't save a patient will she not commit suicide... Many have written that neet is to favour high e groups... But the truth is that no high e wants this business of blood n surgery.... They prefer auditing or engineering... How can a person so weak in mental strength sustain the five plus years ... One of my college fri a brother was a medical student...but he has many arrears and one day finally he committed suicide ... Suicide is an offence... Please don't support this kinda thoughts... She would not even go to hell or heaven for her wrong decision... Society should make students strong... Not give them examples like this girl ... We should not support her , instead condemn her to set an example for the future generation..

 • Nagan Srinivasan - Houston,யூ.எஸ்.ஏ

  சட்டத்திற்கும் அப்பாற்பட்டதல்லவா இந்த மண்ணின் உரிமை. எனது உறவினர் பெண் ஒருத்தி அமெரிக்க வந்தாள். அவள் H 1 B விசா தான். கல்யாணம் நடந்தது. பின் அமெரிக்காவில் குழைந்தை பிறந்தது. அதன் மண்ணின் உரிமை கொண்டு அதற்கு அமெரிக்கன் பாஸ் போர்ட் உடனே கிடைத்தது. இந்து மண்ணின் உரிமை என்று மேலை நாடுகள் மதிக்கும் பொது இந்தியா என் இன்னமும் பின் தங்கி இருக்கின்றது? அந்த மண் வாசனை பிறந்த குழந்தை எங்கு பிறக்கின்றதோ அதற்குத்தான் தெரியும். இனம் வேறு மண் வேறு.

 • Guru Ashok - Madurai,இந்தியா

  Choose the answer (Neet question) Attrcatants and awards are required for 1)animophily 2)entomophily 3)hyhily 4)cliestogamy இந்த கேள்வி மனம் சார்ந்த விஷயம். உளவியல் ரீதியில் மருத்துவம் படித்தவர் பதில் சொல்ல வேண்டிய விஷயம். இல்லை மருத்துவம் படிக்காமல் உலக மொழியின்ஞானம் அறிந்தவன் அறியக்கூடிய விஷயம். சிறு பிள்ளைகள் மனதில் பதிவது கடினம். அசிங்கம் கேள்வியில் உண்டு. உலகில் எந்த முகத்தில் காரி உமிழ்வது என்று யோசிக்க வேண்டும். அனைவரும் குழம்பி தான் உள்ளனர். கேவலத்தை புரிய வேண்டும் எனில் முதலில் தமிழ் வந்த கதை, குறளின் செழுமை அறிந்தால் தமிழன் எளிதில் ஆங்கிலம் சிறிது தெரிந்தாலே மருத்துவத்தில் உள்ள அனைத்தும் படிக்காமலேயே உணர முடியும். நான் மருத்துவ மடித்த அதி மேதாவிகளுக்கு சொல்ல முடியும். பலரின் மன நலம் குன்ற நான் விரும்பவில்லை. கேள்வியின் பதில் இரண்டு. பழனி ஆண்டவன் அறிந்தால் ஆங்கிலம் முழுதும் அறிவான். ஆனால் தமிழ் படிக்க வேண்டும். பால் காவடி எடுக்காது.

 • Ragavendran Ragav - salalah,ஓமன்

  இவரை போல் பலபேர் உண்டு 12வில் அதிக மதிப்பெண் எடுத்து நீட் தேர்ச்சி பெறவில்லை என்றால் யோசிக்க வேண்டிய விஷயம் 12 வகுப்பில் மனப்பாடம் செய்து தேறியவர்கள் என்று

 • Nagan Srinivasan - Houston,யூ.எஸ்.ஏ

  நீதிபதியா ? மோடியா ? ஒன்றை படிப்படியாக கொண்டுவரவேண்டும்? ஒரு மாநிலத்துக்கு அந்த மக்களுக்கு என்ற ஒரு உரிமை எங்கேயோ யாராலோ பறிக்க படுகின்றது? மண்ணின் மக்கள் தங்கள் மண்ணின் உரிமையை இழக்கும்போது நீதிபதியும் மற்றும் மோடியும் தான் பொறுப்பு ஏற்க வேண்டும். தமிழகம் இந்தியாவிற்குள் இருக்கலாம் , ஆனால் தமிழகத்திற்குள் இந்தியாவை கொண்டு வர முடியாது. மொழி காலாட்சாரம் மண்பற்று எல்லாம் அந்த பிறந்த இடத்துக்கே சொந்தம். நீதிபதிக்கும் மோடிக்கும் இது தெரியாமல் எப்படி நாற்காலியில் இன்னமும் அமர்ந்திருக்கின்றார்கள். பாவம் தமிழகம், பாவம் தமிழக மக்கள்

 • Karuthukirukkan - Chennai,இந்தியா

  இங்கே தேச நேசன் , இடவை கண்ணன் , அக்கினி போன்ற ஜென்மங்கள் கருத்துக்களை படிக்கும்பிது குமட்டி கொண்டு வருவதை தடுக்க முடியல .. 1176 மதிப்பெண் எடுப்பது என்ன சாதாரண விஷயமா ?? அதுவும் இந்த அப்பெண்ணின் வாழ்வியல் சூழ்நிலை என்ன ?? இவர்கள் தான் கோட்டாவில் வந்து உங்கள் வாழ்க்கையை நாசமாகுறாங்களா பக்தா ?? பன்னிரெண்டாம் வகுப்பை வெச்சு சிறந்த முறையில் கட் ஆப் மதிப்பெண் மூலம் கலந்தாய்வு நடத்தி , அனைத்து மருத்துவ இடங்களும் மாணவர்களுக்கு தமிழகத்தில் சமூக நீதியுடன் வழங்கப்பட்டு வந்தது ,, இந்த நீட் சாத்தான் வந்து யாருக்கு பிரயோஜனம்?? இந்த மாதிரி பாவப்பட்ட ஏழை குழந்தைகளுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு , கோச்சிங் சென்டர் போனவன் மட்டுமே வெற்றி பெற முடியும் இந்த நீட் சாத்தானில் .. முன்னரேனும் ஏழை குழந்தைகளுக்கும் ஒரு சமமான வாய்ப்பு இருந்தது .. பள்ளி பாடத்தை நன்றாக படித்தால் மருத்துவர் ஆக முடியும் என்று .. இனி முடியுமா ?? கோச்சிங் சென்டர் போகாம சிபிஎஸ்சி மாணவர்களால் நீட் தேர்வு பெற முடியுமா ?? பிறகு என்ன கல்வி தகுதி இருக்கு சிபிஎஸ்சி திட்டத்தில் ?? பாவம் டா டேய் , இந்த ரெண்டு அரசும் நாசமா போகும் .. அதுவும் அந்த விஜய பாஸ்கர் , நிர்மலா சீதாராமன் எல்லாம் என்ன சொல்வது என்றே தெரியல ...

 • udanpirappu3 - chennai ,இந்தியா

  கையால் ஆகாதத்தனம் , சர்வாதிகாரத்தின் விளைவால் ஏற்பட்டதே , இந்த தற்கொலை முடிவு , சமூகநீதியை குழிதோண்டி புதைக்கும் இவர்களுக்கு சரியான பாடம் புகட்டவேண்டும் .

 • Matha, Jathi Saarpattra Thesapakthan - Ariyalur,இந்தியா

  நம்பவைத்து கழுத்தறுத்து (தற்)கொலை செய்த மத்திய மாநில அரக்கர்கள்.

 • Matha, Jathi Saarpattra Thesapakthan - Ariyalur,இந்தியா

  அநியாயமாக செத்துப் போன குக்கிராமத்து தேவதை.. அனிதா

 • Matha, Jathi Saarpattra Thesapakthan - Ariyalur,இந்தியா

  நம்ப வைத்து ஏமாற்றிய நிர்மலா சீதாராமன்

 • Matha, Jathi Saarpattra Thesapakthan - Ariyalur,இந்தியா

  அனிதாவின் தற்கொலையில் முதல் குற்றவாளி மத்திய அரசுதான்

 • Matha, Jathi Saarpattra Thesapakthan - Ariyalur,இந்தியா

  நீட் எனும் பெருங் கொடுங்கரம் போராளி அனிதாவின் வாழ்க்கையையே பலி கொண்டுவிட்டது.

 • Makkal Enn pakam - Riffa,பஹ்ரைன்

  அரசியல் வியாதிகள் தமிழ்நாட்டை கொன்று புதைத்து விடுவார்கள்....புழுக்களை விட கேவலமானவர்கள்.....

 • Matha, Jathi Saarpattra Thesapakthan - Ariyalur,இந்தியா

  இது தற்கொலை அல்ல... மத்திய மோடி - மாநில பிஜேபி அரசுகளால் செய்யப்பட்ட படுகொலை.

 • Matha, Jathi Saarpattra Thesapakthan - Ariyalur,இந்தியா

  ஒரு அப்பாவியின் உயிர் பறிக்கப்பட்டது பாவிகளால்

 • Guru Ashok - Madurai,இந்தியா

  மனம் சற்று கடினமாக இருக்கிறது. இந்த பெண்மணிக்காக என்ன கேள்விகள் அப்படி நீட் தேர்வில் இருக்கிறது என்று பார்த்தேன். நான் 25 வருடத்திற்கு முன்னர் தமிழில் உயிரியல் படித்தேன். எனக்கு ஆங்கிலம் தெரியும். என்னால் ௰இல் 8 கேள்விகளுக்கு சரியான பதில் தர முடிந்தது. கேளிவியினை உன்னிப்பாக கவனித்தல் கேவலம் கேள்வியிலேயே உள்ளது. என் குறையினை சொன்னால் சிலர் முகங்களில் கரியினை பூச வேண்டும். மாணவர்கள் பாவம். 50 வயதில் நான் நீட் எழுத முடியுமா? மருத்துவ வார்த்தைகள் தெரியாத எனக்கு படிக்கத்தெரியும் உள்ளிருக்கும் அவயங்களை. பலரின் பாவச் செயல்களை. அசிங்கப்படுத்தும் செயல்களை. என்னால் திருப்பிக் கொடுக்க முடியும். வினை இருபுறம் உண்டு. மொழிதான் பிரச்சனை. காத்திருக்கிறேன் மேல் முறையீடு பற்றி தருணத்தில் பள்ளி மாணவரின் நலம் கருதி பேசுவேன். என்னை படிப்பது சற்று கடினம். சிலருக்கு புரிய வாய்ப்பு உண்டு. மதம் எனும் பெயரில் வெறி பிடித்தவன் அறிவான் மொழியின் அருமை சிறுமை பெருமை. ஆங்கிலத்தில் எழுத முடியும். அதுவும் சாக்கடையே.

 • மு. செந்தமிழன் - மதுரை ,இந்தியா

  மருத்துவம் படிக்க நீட் தேர்வுதான் தகுதினா பிறகு எதற்கு வீணாக ஒரு வருடம் 12 வகுப்பு படிக்க வைக்க வேண்டும். நேரடியாக நீட் தேர்வுக்கு ஒரு வருடம் படித்து தகுதி ஆகலாமே. தாய் மொழியில் படிப்பவர்கள் மட்டுமே சிறந்த நிபுணராக வரமுடியும் இந்த உண்மையை உலகத்திற்கு ஜப்பானும், சீனாவும் இன்றும் உணர்த்துகின்றன. நீட் இந்தியாவில் ஒரு அரசியல் விளையாட்டு. நீயா நானா.

 • siriyaar - avinashi,இந்தியா

  How many OBC candidate cry every year , even though they het more marks and not get seat. Some who score half mark and get same seat. Must make tem based talents remove all quota tem. Must give opportunity to talents. all blame governments, tamilnadu says jobless rate so high, but industry brings in workers from other state. since in tamilnadu more engineer than workers naturally industry will collapse. now government is doing correct job, shut 90% colleges and make telented people lead state. Else entire state will loose one day.

 • Karunan - udumalpet,இந்தியா

  வெறும் மார்க் எடுக்க சொல்லி தருகிறவர்கள் சூழ்நிலையை எதிர்கொள்ள சொல்லித்தரவில்லை ..இந்த அரசியல் வியாதிகள் தங்கள் ஊடகங்களின் மூலம் இனி வாழ்க்கை இல்லை என்கிறவிதமாய் பேசி பேசி பலவீனமான இளம் பிஞ்சுகளை தற்கொலைக்கு தூண்டுகிறார்கள்.

 • தனசேகர் - சென்னை ,இந்தியா

  பணம் இருந்தால் மட்டுமே கல்வி என்று, படிப்பையும் வியாபாரமாக்கிவிட்ட இந்த கேடு கெட்ட தேசத்தில் இது போன்ற ஆயிரக்கணக்கான அனிதாக்கள் ஆண்டு தோறும் உருவாக்கப்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றார்கள் . தலையெழுத்து என்று முடங்கிடுவோர் பலர் . முடிந்தவரை போராடி பார்த்த இந்த பெண் விரக்தியில் தன உயிரை மாய்த்துக்கொண்டது ஒட்டுமொத்த தேசத்திற்குமான தலைகுனிவு . கல்வி வியாபாரத்தை கைவிட்டு எதிர்கால அனிதாக்களை கரைசேர்க்க இனியாவது இந்த தேசம் முயலுமா ???,......

 • Srikanth Tamizanda.. - Bangalore,இந்தியா

  இறந்த மாணவியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்..NEET மீது பழி போட்டு ஆசுவாசப் படுத்திக் கொள்ளும் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று, மாணவர்களை NEET தேர்வுக்கு தங்களை தயார் செய்யவில்லை என்று ஏன் ஏற்க மறுக்கிறீர்கள்? இந்த மரணம் நிகழ அது ஒரு முக்கிய காரணம் (என்று தோன்றுகிறது).. coaching class சேர பணம் இல்லை, உச்ச நீதிமன்றம் செல்ல பணம் இருக்கிறது.. கடந்த ஆண்டு, ஒரு வருடம் மட்டுமே விலக்கு அளிக்க முடியும் என்ற நிலையில் இந்த ஆண்டு மாணவர்களை தயார் படுத்தாமல் அரசியல் செய்தது யார் குற்றம்? பிற மாநிலங்கள் NEET பின்பற்றும் நிலையில் தமிழகம் மட்டுமே விலக்கு கேட்பது எந்த வகையில் நியாயம்? சமச்சீர் கல்வி என்று ஊரை ஏமாற்றி தரமற்ற கல்வி கொடுத்தது யார் குற்றம்? இன்னும் சில வருடங்களில் மதிப்பெண் முறையே தவறு என்று அதையும் விலக்கு கேட்கும் அரசியல் கட்சிகள்.உடனே அதற்கு சொம்பு தூக்கும் ஒரு கூட்டம், பின் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டால் அதற்கும் பழி..1176 மதிப்பெண் வாங்க முடிந்த ஒருவருக்கு NEET தேர்வில் தேர்ச்சி பெற முடியாதா? மாணவர்களை சரியாக வழிநடத்தாமல் அரசியல் புகுத்துவது, NEET மீது பழி போடுவது வீணர்களின் செயல்

 • hasan - tamilnadu,இந்தியா

  இதற்கு முழு காரணம் மத்திய அரசு தான். மோடி அரசு திட்டமிட்டு தமிழ்நாட்டின் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் கனவுகளை அழிக்க நினைக்கிறது, கடவுளே இவர்களை சீக்கிரம் அழித்து விடு அழித்து விடு .இந்த சகோதரியின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்தித்தவனாக .மத்திய அரசு கொஞ்சம் காலம் தமிழ் நாட்டிற்கு விளக்கு அளித்து தமிழ் நாட்டு மாணவர்கள் நீட் தேர்வு எழுத தகுதியான பாட திட்டங்களை மாநில அரசு மூலம் கற்பித்து பிறகு நீட் தேர்வை கொண்டு வந்து இருக்கலாம் , அநியாயமாக ஒரு உயிரை பழி வாங்கிவிட்டார்கள் பாவிகள் .

 • gmk1959 - chennai,இந்தியா

  இளவரசன் மரணம்போல இதுவும் மர்மம்தான்

 • Appu - Madurai,இந்தியா

  ஒரு மாணவியின் சாவில் கழிசடை அரசியலை தவறான கோணத்தில் பேசும் சந்தர்ப்பவாத பாஜக ...நீட் தேர்வு விலக்கில் தமிழகத்திற்கு முதலில் இருந்தே முட்டுக்கட்டை போட்டு அரசியல் செய்த உங்கள் கட்சியின் தந்திரம் இங்கே எல்லோருக்கும் தெரியும்...

 • Bala - Nagercoil,இந்தியா

  இவனுகளுடைய பண அரசியல் விளையாட்டினால் தமிழ்நாடு வருங்கால ஒரு நல்ல மருத்துவரை இன்று இழந்துள்ளது.

 • Nisaar -

  அரசாங்கத்தின் அலட்சியம் மாணவியின் மரணத்திற்கு காரணம்

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  நம் இந்தியாவில், அனைத்து மாணவர்களுக்கும், சம நிலை கொண்ட பாட திட்டங்களை உருவாக்கி அதில் பயிற்சியும் பல முறை கொடுத்து இந்த நீட் தேர்வு முறையை கொண்டு வந்திருக்கனும். அப்படி சரியாக முறையாக கல்விதுறைகள் செயல்படாததினால்தான் இப்படிப்பட்ட சோக நிகழ்வுகள் ஏற்படுகின்றன.

 • Raman - Lemuria,இந்தியா

  அவ்வளவு மதிப்பெண் எடுத்த இவரால் ஏன் நீட் தேர்வில் மதிப்பெண் எடுக்க முடியவில்லை ? என்று யாரவது சிந்தித்தார்களா ?

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  எல்லா பிரச்சினைக்கு தற்கொலை தீர்வாகாது.. நீட் எக்ஸாம் முடிவுகள் : மொத்தம் இடங்கள் - 4546 ஸ்டேட் போர்டு மாணவர்கள் - 3112 CBSE மாணவர்கள் - 1434 . இதில் எது பிரச்சினை?

 • ந.செல்வசேகரன்.தேனி -

  சுப்ரீம் கோர்ட்வரை சென்ற அனிதா ஏன் கோழையானார்?அவர்களுடைய பெற்றோர்க்கள் என்னபாடுபட்டு வளர்த்து ஆளாக்கியிருப்பார்கள்!இவரும் தம்முடைய குடும்பநிலை அறிந்து தெளிந்து படித்த அறிவார்ந்த பெண் அனிதா எடுத்தமுடிவு மிக மிக தவறானது! இது இனி அரசியலாக்கமட்டும் பயன்படும்!

 • Swaminathan -

  மகளே உனக்கு இந்த ஆண்டு மருத்துவ படிப்பிற்கு வாய்ப்பு இல்லையென்றால் அடுத்த ஆண்டுக்கு முயற்சி செய்து அடைந்திருக்க வேண்டாமா அதை விடுத்து கோழைத்தனமாக தற்கொலை செய்து கொள்வது தவறு, அல்லது வேறு மருத்துவம் சார்ந்த படிப்பில் சேர்ந்திருக்கலாம். இப்படி மன உறுதியில்லாத நீ மருத்துவவம் படிக்க வந்தால் என்ன செய்வாய், பிணத்தோடு சிலகாலம், கடும்பிணி உள்ள நோயாளிகளோடு சிலகாலம் இப்படி படிக்கும் போதும், படித்த பிறகும். எதையும் யோசிக்க வேண்டும். சட்டம் என்பது அனைவருக்கும் சமம். உச்ச நீதிமன்றம் வரை சென்ற உனக்கு இதை சிந்திக்கவேண்டாமா. உம் மரணம் பல விடைதெரியாத கேள்விக்குறி.

 • vbs manian - hyderabad,இந்தியா

  A tragic loss, but to blame it on NEET may not be correct. NEET is not the only thing in life, probably Anita did not get proper conselling. Still being a bright person she could have cleared the exam next time & become a doctor.

 • Subramanian Marappan - erode,இந்தியா

  எனது அனுதாபங்கள் இந்த மாணவிக்கு. இத்தனை வருடங்கள் மருத்துவ இடங்களை பெற்றவர்கள் யார் யார்? இரண்டு ஆண்டுகள் +2 பாடத்தை மனனம் செய்து அதிக மதிப்பெண் பெற்றவர்கள் தான். இதில் சிபிஎஸ்சி பாடம் படித்தவர்கள் எத்துணை பேர் என்ற கணக்கீடு உள்ளதா என்று தெரியவில்லை. படிப்புக்காக ஒவ்வொரு பெற்றோரும் செலவிடும் தொகை அவர்கள் வருவாயை கணக்கிடும்போது மிக அதிகம். இந்த அரசியல்வாதி முட்டாள்கள் தலையீட்டால் படிப்பு என்பதே என்ன என்று அறிய முடியவில்லை. வெகுஜன கணக்கெடுப்புக்கு கல்வி பற்றிய அறிவை முன்வைத்து பின்பு முடிவெடுக்க வேண்டும்.

 • Veeraputhiran Balasubramoniam - Chennai,இந்தியா

  இது போன்ற குழந்தைகளின் செயல்களுக்கு நீட்டோ, ஜி ஆர் இ யோ, ஃபிட்ஜி யோ அரசோ காரணம் அல்ல. முழுக்க முழுக்க பெற்றோரே காரணம். சிறு வயது முதலே பெற்றோர்கள் அவர்களின் கனவு தோல்விகளை அவர்களது குழந்தைகள் மீது திணிக்கும் முயற்சி ஆரம்பம் ஆகின்றது. சிறுவயது முதலே டாக்டர் ஆவாள் /ஆவான் என் ஊர் முழுதும் தம்பட்டம் அடித்து அதனை குழந்தையின் ஈகோ வாக வளர்த்து அவர்களும் கடின உழப்பினை போட்டு மாமா, சித்தப்பா, பெரியப்பா, சித்தி அத்த தாத்தா பாட்டி என் அனைவரும் தேர்தல் முடிவு வந்தவுடன் அதிக மாக்கை பெற்ற குழந்தையின் ஈகோவை மேலும் ஊடகங்கள், பத்திரிகைகள் மூலம் உலகுக்கும் ஒலி பரப்பச்செய்து டாக்டர் ஒன்றே உயிர் மூச்சு என் தம்பட்டம் பண்ணி கடைசியில் டாக்டர் சீட் (கிடைக்கா விட்டால்) வாங்க பணம் இல்லாமல் உயிர் மூச்சு உனக்கு கிடைக்காது என அந்த பிஞ்சுமனதிடம் தெரிவித்தால் அந்த பிஞ்சு வெளி உலக சமூகத்தை பார்க்க கூசி தன் மூச்சினை நிறுத்தும் வழி தேடித்தான் இது போன்ற முடிவுக்கு வருகின்றனர்............

 • Vensuslaus Jesudason - Nagercoil,இந்தியா

  பொறுத்திருந்து இன்னொருமுறை நீட் தேர்வு எழுதியிருக்கலாம். ஏன் இந்த விபரீத முடிவை எடுத்துவிட்டார்? வீட்டார், நண்பர்கள் போன்றோர் அவரை தேற்றி, அறிவுரைகள் சொல்லி இந்த அரியலூர் மாணவியின் சோக முடிவை தவிர்த்திருக்கலாம்.

 • GiridharanPandurangan -

  சகோதரி தற்கொலைக்கு அனைத்து கட்சி அரசியல்வாதிகள் தான் காரணம் இனி யாரும் வெள்ளை சட்டை அணியாதீர்

 • VOICE - CHENNAI,இந்தியா

  தங்கள் கொள்ளையடித்த பணத்தை காப்பாற்ற தரம்கெட்ட அரசியல்வாதிகள் தமிழகம் தவிர வேறு எங்கும் காணமுடியாது. மானம் கெட்ட தமிழ்நாடு மக்கள் இன்னும் கூத்தாடிகளை கொண்டாடுவது அதை விட கொடுமை. தமிழக மக்களுக்கு துரோகம் நல்ல இருக்கும் என்று நினைக்கிறீர்களா ? கண்டிப்பாக நாசமாய் போகணும்.

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  ஒரு சில அல்லக்கைகளின் கருத்துக்களை தவிர்த்து, பிற கருத்துக்களை , இந்தி மற்றும் குஜராத்தியில் மொழி பெயர்த்து , மோடி அவர்களுக்கும், அமித்சா அவர்களுக்கும் அனுப்பி வைக்குமாறு தினமலரை பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்... [ நம்ம EPS OPS க்கு எந்த மொழியும் இப்போது புரியப்போவதில்லை... பதவி மொழி தவிர....ஆகையால், பிரதமர் மற்றும் பாஜக தலைவருக்கு , இந்த கருத்துக்களை இந்தி மற்றும் குஜராத்தியில் மொழி பெயர்த்து தயவு செய்து அனுப்புங்கள்... இனியாவது தமிழர்கள் வாழ்வுடன் இவர்கள் விளையாடாமல் இருக்கட்டும்...ஏழ்மை குடும்பத்தில் பிறந்து, ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்து, அப்பனும் ஆத்தாளும் கூலி வேலை செய்து கஞ்சி ஊற்றி, அரசு பள்ளியில் படிக்கவைத்தும், 1176 மார்க் எடுப்பது எவ்வ்வளவு கஷ்டம் என்று அவர்களுக்கு புரியட்டும்,...

 • ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா

  இந்த பெண்ணைப் போல பல பெண்களும் ஆண்களும் சாகாமல் தினமும் செத்துக் கொண்டிருக்கிறார்கள் . 1197 மதிப்பெண்கள் வரை எடுத்தும் , மேல் படிப்பு இடம் கிடைக்காமல் பல நூறு பேர் உள்ளே குமுறி வெளியே சொல்ல முடியாமல் வாய்பொத்தி வேதனையுடன் வாழ்கிறார்கள் . இவர்கள் எல்லாருக்கும் நீதி கிடைக்க வேண்டும் , நீட் தேர்வு வருவதற்கு முன் தமிழகத்தில் கடந்த 10 வருட விவரங்களை எடுத்தால் , கிராமப்புற , மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர் சேர்க்கை மிகவும் குறைவாக உள்ளது. கடந்த 10 வருடங்களில் 400 மாண்வர்கள் கூட வாய்ய்பு பெறவில்லை . எனவே NEET மட்டும் தான் காரணம் என்று சொல்ல முடியாது .இப்போது நீலிக் கண்ணீர் வடிக்கும் கல்வி தந்தைகள் எத்துணை பேர் தாங்கள் பினாமியாக நடத்தும் மருத்துவ நிறுவனங்களில் கிராமப்புற மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இடம் அல்லது சலுகை அளித்துள்ளார்கள் . அரசியல் வியாதிகளின் தூண்டுதலே இது போன்ற தவறான முடிவுக்கு காரணம். மாணவர்களே தயவு செய்து தற்கொலை முடிவு வேண்டாம் . எவ்வளவோ நல்ல வழிகள் உள்ளன

 • MUTHU - chennai,இந்தியா

  இதற்கு மோடி கரணம் இல்லை தமிழகத்தை சரியான நேரத்தில் தயார் செய்யாத இந்த ஊழல் அரசியல் வாதிகளும் டெல்லி கு போவதக கூறி அங்கு மக்கள் பணத்தில் கும்மி அடித்த அவர்கள் தான் காரணம்

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  மத்திய மாநில பாசிச அரசுகளை தூக்கியெறிவோம்... எத்தனை கனவுகளுடன் படித்து, தாழ்த்தப்பட்ட இனத்தில் பிறந்தும் 197 கட் ஆப் மார்க் வாங்கி, மருத்துவ கனவுகளுடன் பலவருடம் வாழ்ந்த நங்கையின் வாழ்வை சூறையாடி விட்டது, அதிகார போதை மற்றும் ஆணவ திமிர்... தமிழகம் வடஇந்தியா அல்ல... குட்டக்குட்ட குனிய.... இங்கு ஏழை கிராமப்புற மாணவர்களும் இதுகாறும் மருத்துவர்களாகி, மிக பெரிய சாதனை புரிந்துள்ளனர்....அவர்கள் குடும்பம் மேலோங்கி உள்ளது... ஆனால் வடஇந்தியாவில் அப்படியெல்லாம் கிடையாது.. கிட்டத்தட்ட்ட குலத்தொழில் முறை இருப்பதால், அங்குள்ளவர்களுக்கு சமூக நீதி என்றால் என்னவென்று தெரியவில்லை... ஆதலால் தான் நீட் க்கு அங்கு எதிர்ப்பு இல்லை... திராவிட கட்சிகளின் முயற்சியால் தான் தமிழகம் இன்று இந்தியாவிலேயே சமூக நீதி காத்த மாநிலமாக உள்ளது.... அண்ணா, MGR , கருணாநிதி, ஜெ ஆகியோர் மீது ஆயிரம் விமர்சனம் இருக்கலாம்... ஆனால், கிராமங்களை படிப்பறிவில் சிறக்க வைத்தவர்கள் இவர்கள் தான்... ஜெ ஒரு பிராமண பெண்ணாக இருந்தாலும், திராவிட கொள்கையில் தீரா பற்றுடன் இருந்ததால், தான், அவரால், மீண்டும் மீண்டும் ஜெயிக்க முடிந்தது...ஊழல் ஒரு பிரச்சினையே அல்ல... சமூக நீதி அதனைவிட முக்கியம் ... அடிமைகளாக இங்கு யாரும் இருக்க விரும்பவில்லை... அனிதாவின் சாவுக்கு பொறுப்பேற்று , நிர்மலா சீதாராமன், மோடி, EPS OPS ஆகியோர் ராஜினாமா பண்ணவேண்டும்... இது ஒன்றே தமிழகத்தின் சமூகநீதியை பாதுகாக்க வழி....

 • இந்து தமிழன்.. - Chennai,இந்தியா

  திராவிட அரசியல் வியாதிகளின் குறுகிய மனப்பாபான்மைக்கு ஒரு உயிர் பலியாகிவிட்டது.. கல்வி சீர்திருத்த முறையில் அரசியலை நுழைத்த ஸ்டாலின் சிதம்பர இதற்கான பலனை அனுபவிப்பார்கள்.. மாணவியின் பிணத்தின்மேல் அரசியல் செய்ய கம்யூனிஸ்ட் மற்றும் குருமா சீமான் கிளம்பிவிடும்.. RIP அனிதா..

 • MUTHU - chennai,இந்தியா

  ஒன்றும் சொல்லுவதற்கு இல்லை குறைந்தது இந்த முறை நீட் தேர்வுடன் அவர்கள் +2 மதிப்பெண் அடிப்படையிழும் சேர்க்கை செய்து இருக்கலாம்

 • PALANISWAMY - COIMBATORE ,இந்தியா

  மாணவர்களின் கல்வியில் அரசியல்வாதிகள் நுழைந்து இது போன்ற அப்பாவி மாணவிகளை காவு வாங்கிக்கொண்டு இருக்கின்றனர். நீட் தேர்வு இருக்கு இல்லை எனவும் பின் தமிழகத்திற்கு ஒரு வருடத்திற்கு விலக்கு எனவும் இதற்கு மத்திய அரசும் செவி சாய்ப்பது போல் சொல்லிவிட்டு கடைசியில் மாணவர்களின் ஆசைகளையும் கனவுகளையும் தூண்டி விட்டு இது போன்ற தற்கொலையை (இதற்கு பெயர் தற்கொலை அல்ல அரசியல் வியாதிகளால் செய்யப்பட்ட கொலை) தூண்டி விட்டுவிட்டனர். நீட் வராது என்றார்கள். வந்த பிறகு தமிழத்திற்கு விலக்கு என்றார்கள். பொய் சொன்ன முதல்வர், விஜயபாஸ்கர், நிர்மலா சீதாராமன் போன்றவர்கள் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும். நீட் என்ற முடிவு வரும்வரை தினம்தோறும் டெல்லி சென்றார்கள். இப்போது எதற்கு செல்கிறார்கள் நமது மந்திரிகள் என்று தெரியவில்லை. இந்த அரசு இருக்கும் வரை ஒரு ஒரு நாளும் மக்களுக்கு துயரமாகத்தான் இருக்கும்.

 • Mano - Madurai,இந்தியா

  இப்பாேது புரிகிறது. இந்தியாவில் ஏழ்மையை எப்படி ஒழிப்பதென்று. அதற்க்கு ஒரே வழி, ஏழைகளை ஒழிப்பது தான். மூன்றாண்டாக மாேடி இதைதான் செய்கிறார். விரைவில் நிறைவேற்றுவார்.

 • Indhuindian - Chennai,இந்தியா

  A brilliant and precious life lost due to irresponsible politicians totally misleading the students and parents on NEET knowing fully well they don't stand a ghost of a chance to get exemption from NEET. The politicians for their own narrow minded gains mislead the students that ultimately resulted in a loss of an otherwise a brilliant girl RIP

 • chockalingam - Thenmappathu Thirupputhur,இந்தியா

  எதிர்கால மருத்துவரை இழந்துவிட்டோம்

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  இலங்கைக்கு ஆயுதமும் பணமும் கொடுத்து லட்சம் தமிழர்களைக் கொன்று பல்லாயிரம் தமிழ்ப்பெண்களைக் கற்பழிக்கக் காரணமாயியிருத்த காங்கிரஸ் திமுக கபட வேடதாரி தலைகள் இந்த  ஒரே ஒரு பெண்ணின் உயிருக்காகப் போராடத் தகுதியற்ற நடைபிணங்கள். 

 • R Sanjay - Chennai,இந்தியா

  மாநில அரசுகளை பணியவைத்து நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டத்தை கொண்டுவராமல் நாடு முழுவதும் அவர்கள் மாநிலத்துக்கு தக்கபடி நீட் தேர்வை கொண்டு வந்ததன் விளைவு இது. நீட் தேர்வில் எத்தனை கெடுபிடிகள் இருந்தன ஆளும் மத்திய அரசு அதிகாரிகள் சொல்லாமலா இத்தனை கெடுபிடிகளை செய்தார்கள். காரணம் நம் மாணவர்களை எல்லாம் முற்றாக ஒழிக்க பிஜேபி கொண்டு வந்த கேவலமான ஒரு நுழைவு தேர்வு இது. இனி எந்த ஒரு தேர்தல் வந்தாலும் பிஜேபிக்கு சங்குதான்.

 • suresh - chennai,இந்தியா

  அனிதா போன்ற திறமையற்ற மாணவர்கள் மருத்துவ கல்லூரிக்குள் நுழைய கூடாது என்பதற்காகவும் நிர்மலா சீதாராமன் போன்ற அதி மேதாவிகள் மட்டுமே மருத்துவ கல்லூரிக்குள் செல்ல வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் கொண்டு வர பட்டதே நீட் தேர்வு, அந்த தேர்விற்கு எதிராக பேசுபவர்கள், தேச விரோதிகள் , திராவிட ஜாதிகள், மொழி வெறியர்கள்..நாங்கள் ஹிந்தி பேசும் மாநிலங்களுக்கு ஒரு விதமான கேள்வி தாளும், தமிழகத்திற்கு ஒரு கேள்வி தாளும் தயார் செய்வோம், அதை எதிர் கொள்வது தமிழக மாணவ மாணவியரின் தலையெழுத்து, காரணம் நாங்கள் உயர்ந்த ஜாதி ஹிந்தி பேசும் வட இந்தியர்கள். (சந்தோஷமா தமிழக பாஜகவினரே)

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  சமீபத்தில் ப்ளூவேல் விளையாட்டைக் கண்டித்தவர் "நான் உன் குடும்பத்தைக் காப்பாத்துறேம்மா .... நீ போய்ச்சேரு" என்று சொல்லிவிட்டாரோ ????

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  மத்திய மாநில அரசுகளை எதிர்த்து அரசியல் செய்யும் ஒரு கட்சி, அதுவும் ஆட்சி அமைக்க முடியாத தவிப்பில் இருக்கும் ஒரு கட்சி, தற்கொலையின் பின்னணியில் இருக்கலாம் .....

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  எத்தனையோ நடுத்தரவகுப்பு மாணவர்கள்  மாநில பாடத்திட்டத்தில்  சற்று குறைவாக மார்க் எடுத்துவிட்டு நீட்டில் நல்ல மார்க் எடுத்தவர்கள் உள்ளனர். மார்க் அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வு நடந்திருந்தது  அவர்கள் தற்கொலை செய்து கொண்டிருந்தால் அவர்களுக்காக இதுபோல போராடுவார்களா? (நீட்டில் வெற்றி பெற்றவர்களில் 65  % மாநில பாடத்திட்ட மாணவர்களே). நீட்டைக் கட்டாயமாக்கியது சுப்ரீம்கோர்ட் தான். அதன்முன் போராடிப்பாருங்களேன். தமிழகம் உருப்படாமல் போனது எங்கும் அரசியல் எதிலும் அரசியல் எனும் லூஸுத்தனத்தால் தான் . நீட்டை  எதிர்க்காமல் ஏற்றுக்கொண்ட அனைத்து மாநில  மாணவர்களும் நம்மை முட்டாள்களாகவே பார்க்கின்றனர். சே சே..

 • sivan - Palani,இந்தியா

  இன்னும் கூட பத்து நாட்கள் உங்களுக்கு அனிதா பற்றி பேச விஷயம் கிடைத்து விட்டது கடைசியாக வர என்ன பேசினார், என்ன சாப்பிட்டார்? எப்படி இருந்தார் என்றெல்லாம் பேட்டி எடுத்து விவாதம் செய்து .... அதுவும் திருமாவளவன் , திமுக எல்.எல் ஏக்கள், சீமான் போன்ற கல்வியுடன் சம்பந்தமில்லாத நபர்களை வைத்து விவாதம் செய்தீர்களே?? ஒரு முறையாவது சம்பந்தம் உள்ள சிறந்த கல்வியாளர்களை வைத்து பேசினீர்களா? சமசீர் புத்தகம் எந்த வகையில் சி.பி.எஸ் .சி பாடத்திட்டத்தில் இருந்து வேறு பட்டது என்று மாணவர்களை வைத்து / ஆசிரியர்களை வைத்து ஒரூ முறையாவது ஆரோக்கியமான விவாதம் நடந்திருக்குமா உங்கள் சேனலில்?? நீட் தேர்வு பற்றி பேச வேண்டியது ஆசிரியர்களும் கல்வியாளர்களும் விஜய பாஸ்கரும் வீர மணியும் , ஸ்டாலினும் அல்ல இதை இப்போதாவது புரிந்து கொண்டு , அனிதா கடைசியாக எத்தனை இட்டிலி சாப்பிட்டார்? சட்னி தொட்டு சாப்பிட்டாரா சாம்பார் தொட்டு சாப்பிட்டாரா ? கடையாக அவர் வாயில் இருந்து வந்த வார்த்தை என்ன? என்று உங்கள் அறிவார்ந்த நிருபர்களை வைத்து பேட்டி எடுக்காமல் , நீட் தேர்வு குறித்து ஆரோக்கியமான அலசலை செய்யும் அளவுக்கு , தமிழக டி.விக்கு விஷய ஞானம் உண்டா? இருந்தால் அதை செய்யுங்கள். நீட் அலசல் கல்வியாளர்களுடன் ஸ்டாலினுடன் அல்ல

 • N Sankar - Tirunelveli,இந்தியா

  ஆன்மா சாந்தியடையட்டும். சுயநல அரசியல்வாதிகளே இந்த பெண்ணின் மரணத்திற்கு காரணம்.

 • subramaniansingarukeezhathenoor -

  மத்திய,மாநில அரசே சண்முகம் என்ற கூலி தொழிலாளிக்கு இதுபோன்ற ஒரு அனிதா கிடைப்பாரா?

 • Matha, Jathi Saarpattra Thesapakthan - Ariyalur,இந்தியா

  அரக்கர்கள் மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும்போது அப்பாவி மாணவர்களின் வாழ்க்கை பறிபோகிறது. இப்போது ஒரு பெண்ணின் உயிரே போய்விட்டது. இதற்க்கு மத்திய மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும்.

 • JohnK - Tirunelveli,இந்தியா

  கண்ணீர் சிந்துகிறேன் மிகப் பெரிய சோகம். அரசு, நீதிமன்றம், எல்லோரும் பொறுப்பேற்க வேண்டும். சரியான தலைவர்கள் /நீதியரசர்கள் இல்லாத தேசத்தில் பிறந்துவிட்டடாய் மகளாய்.

 • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

  மிகவும் வருத்தம் தரும் நிகழ்வு.... ஈழம், தமிழ், என ரத்தம் குடித்த காட்டேரிகளின் தாகத்துக்கு இப்போது நீட் மூலம் பலி கொண்டுள்ளது... இந்த பெண்ணின் சாவுக்கு முழுக்க முழுக்க அந்த பெண்ணை சுற்றி இருந்தது தவறாக வழி நடத்திய அரசியல்வியாதிகளே காரணம்... உசுப்பேத்தி உசிரை குடிச்சிட்டானுங்க... நீட் தேர்வு எழுத மூன்று வாய்ப்பு இருக்கு, அடுத்த வருடம் தேர்வுக்கு நாங்க பயிற்சி அளிக்கிறோம், பயிற்சிக்கான செலவை ஏற்கிறோம் என்று நேர்மறையாக இந்த பெண்ணை ஒருத்தனும் வழி நடத்தலை...இன்னும் தமிழகத்தில் இந்த உணர்ச்சி வேகத்தில் செய்யப்படும் துன்பியல் சம்பவங்கள் நடக்கணுமோ?...இறைவா, தமிழகத்தை உணர்ச்சி அரசியல் கபடதாரிகளிடம் இருந்து காப்பாற்று...

 • Kannan KR - Coimbatore,இந்தியா

  எத்தனையோ உயிர்களை காப்பாற்றி இருக்க வேண்டிய மகள். தன் உயிரை மாய்த்துக் கொண்டது அவலம். அரசியல் விளையாட்டில் ஒரு உயிரை இழந்து விட்டோம்.

 • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

  பிண அரசியல் துவங்கி விட்டது. விழுந்த பிணத்திற்கு ஆட்டு தாடி இருக்கிறதா என்று முதலில் பார்ப்பார்கள் அல்லது தோல் கருப்பாக இருக்கிறதா என்று அடுத்து தேடுவார்கள் இந்த இரண்டில் ஒன்று இருந்து விட்டால் தொடங்கும் பிண அரசியல் என்று முன்பு குறிப்பிட்டு இருந்திருக்கேன். அதற்கேற்ற படி இப்போது பிண அரசியல் துவங்கி விட்டது. இதே நீட் தேர்வு முறை வேண்டும் என்று ஆயிரக்கணக்கான தமிழக மாணவர்களும் மாணவிகளும் ஆட்சியாளர்களை சந்தித்து மனு கொடுத்தது இதே தினமலரில் படத்தோடு வந்த செய்தி. அவர்களை யார் இயக்கினார்கள்? ஆக எந்த அரசியல் சதியாளர்களோ தங்கள் வாழ, இந்த அப்பாவி பெண்ணை தற்கொலைக்கு தூண்டி இருக்கிறார்கள். அந்த பெண் தற்கொலை செய்தவுடன் அதை வைத்து தங்களை ஆதாயப்படுத்தி கொள்கிறார்கள். டெல்லிக்கு சென்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யும் அளவிற்கு இவருக்கு பண உதவி செய்தது யார் என்பதை அரசு கண்டறிய வேண்டும். இதன் பின்னணியில் யார் இருந்தார் என்ற உண்மை வெளியாக வேண்டும். தமிழக மாணவர்களின் தேர்விற்கான தகுதியை உயர்த்திக்கொள்ள வழிசெய்து கொள்ளாமல் தனக்கு மட்டும் விதிவிலக்கு வேண்டும் என்று பிச்சைகாரத்தனமாக வேண்டி ஒட்டுமொத்த உலக தமிழர்களையும் அவமானப்படுத்த முயலும் தமிழக அரசியல்வாதிகளையும் இங்கு கருத்து கூறுபவர்களையும் வன்மையாக கண்டிக்க வேண்டும்.

 • Gopalvenkatesh Sai - Chennai,இந்தியா

  ஏழையின் குரல் அம்பலத்தில் ஏறாது நளினி சிதம்பரம் செய்த பாவத்திற்கு அவர் மகன் ஜெயிலில் அடைக்கப்படுவான் பணக்கார திமிர்

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  மோடி இப்போதாவது நிம்மதியா . ஒரு மாணவி தான் 12 வருடம் படித்தது அதுவும் 1,176 மதிப்பெண் 1200 க்கு எடுத்தாலும் விரும்பிய மேல் கல்வி படிக்க முடியாது என்று NEET கொண்டுவந்து கல்வி தடை சட்டம் கொண்டுவந்து -பாவம் சும்மா விடுமா ? இது என்ன நாடா காடா? கடவுள் இருக்காரா ? இருந்தால் மோடிக்கு உணர்த்தட்டும் . பழனிக்கு புரியவைக்கட்டும் .நாடகமாடிய ராதாகிருஷ்ணனுக்கு அறிவிக்கட்டும்.

 • Gautham Tholkapiyan - Madurai,இந்தியா

  இவ்வளவு மதிப்பெண் எடுத்த இந்த மாணவிக்கு இப்படி ஒரு முடிவு மத்திய அரசின் திடீர் திருப்பம் இந்த NEET விவகாரத்தில் அதுவே இந்த பெண்ணின் மரணத்திற்கு காரணம் சிலபேர் வெக்கம் கெட்டு இன்னும் மோடி மற்றும் பா.ஜ.கவிற்கு சொம்பு தூக்குவார்... அந்த ஆண்டவன் பார்த்து கூலியை கொடுக்கட்டும்..

 • Giridharan S - Kancheepuram,இந்தியா

  வேதனை தரும் செயலாக உள்ளது. அந்த மாணவி தோற்கவில்லை ஜெயித்து விட்டார் தனிமனிதனாக கூலி தொழிலாளி ஒருவர் உச்ச நீதிமன்றம் வரை சென்று மற்றவர்களுக்காக வாதாடி தான் தோற்றுப் போயுள்ளார். இந்த பெண் கொஞ்சம் பொறுத்திருக்கலாம் அந்த பெண்ணின் பாவம் பதவிக்காக போராடும் நமது அரசியல்வாதிக்கும் மத்தியில் ஆளும் ஆட்சியாளர்களையும் சும்மா விடாது. அவசரப்பட்டு விட்டாய் பெண்ணே உனக்கு வயது இருக்கு அறிவு இருக்கு படிக்க வேண்டும் என்ற வெறி இருக்கு நீட் தேர்விற்கு பயிற்சி பெற்று அடுத்த முறை எழுதியிருக்கலாம். தோல்வி என்பது வெற்றிக்கு முதல் படி என்று நீ படிக்கவில்லையா. உன்போன்று எல்லோரும் இதைபோல் செயல்பட தீர்மானித்து விட்டால் நாங்கள் எல்லாம் என்ன பண்ண முடியும். உன் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன். உன் பெற்றோர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்த்து கொள்கிறேன்

 • Ram -

  காசுக்காக ஓட்டுப் போட்ட மாணங் கெட்டவங்களும் இதற்கு ஒரு காரணம். இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போவுதோ கடவுளே.

 • SsreedharRamamoorthy -

  தவறில்லை

 • kuthubdeen - thiruvarur,இந்தியா

  அம்மா நீ போயி சேர்ந்துட்டே ,,,இரண்டொரு நாள் உன்ன பத்தி பேசிட்டு நாங்களும் மறந்துடுவோம் ....இதே போல் எத்தனை பேரு மன புழுக்கத்தில் இருக்கிறீர்களோ ....தகுதிக்கு மேலே யாரும் ஆசப்பட்டுராதீங்க விடமாட்டாங்க நம்ம நாட்டிலே .,,,

 • Dol Tappi Maa - NRI,இந்தியா

  1,176 /1200 சிறந்த மார்க்கு தான் . ஆனால் உன் ஜாதியானால் என்றுமே திறமை சாலி என்று ஏற்று கொள்ள மாட்டார்கள் .அது தான் இந்து மதம் .ஆனால் 10 வது படித்து போலி செர்டிபிகேட் கொடுத்த உயர் ஜாதியினருக்கு மத்திய கல்வி அமைச்சர் பதவியே கொடுப்பார்கள் .

 • ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா

  மறைந்த சகோதரியின் உயிர் இழப்பு ஈடு செய்ய இயலாதது . வாழ்க்கையில் ஒன்று கிடைக்காவிடில் தற்கொலை தான் முடிவு என்றால் ஒருவர் கூட வாழ முடியாது. இது எல்லா வயது எல்லா தரப்பினருக்கும் பொருந்தும் . நீட் வருவதற்கு முன்னால் கிராமப்புற மாணவர் சேர்க்கை எந்த வகையிலும் பெரிதாக இல்லை. ஆகவே இதற்கு முன்னாலும் இவர்கள் நிலைமை மோசம் தான். அப்படிப் பார்த்தால் 1197 எடுத்தாலும் மருத்துவ படிப்பு கை கூடாமல் பல ஆயிரம் மாணவ மாணவிகள் உள்ளனர். அவர்கட்கு இது வரை என்ன நீதி கிடைத்தது ? அவர்கள் எல்லாம் தற்கொலை செய்தார்களா ? வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை புரிந்து கொண்டால் சிறப்பாக வாழலாம் . இந்த பெண்ணின் மரணம் , அவரது பெற்றோருக்கு தாங்கவொன்னா துயர் கொடுக்கும் . அவர்கள் மன திடம் பெறவும் , இறந்தவரின் ஆனம சாந்தி பெறவும் இறைவனை வேண்டுகிறேன். மாணவர்களே தயவு செய்து தற்கொலை முடிவுக்கு போகாதீர்கள் . உங்கள் பெற்றோரை சிந்தியுங்கள் . அரசியல்வாதிகள் பிணம் திண்ணி அரசியல் நடத்துவார்கள். அதற்கு பலியாக வேண்டாம்

 • Vaishnavi.Ne - Chennai,இந்தியா

  இந்தியாவில் ஆடிட்டர்கள் மிகவும் குறைவாக உள்ளார்கள். மிக அதிகமதிப்பெண் வாங்கிய இந்த பெண் பிகாம் போன்ற படிப்புகளை படித்து ICWI போன்ற படிப்புகளை படித்திருந்தால் ஒரு மருத்துவராய் சம்பாதிப்பதை விட அதிகமாக சம்பாதிக்கலாம் அவருக்கு சரியான வழிகாட்டும் நபர்கள் இல்லாததால் அவர் தற்கொலை முடிவை எடுத்திருப்பாரோ?

 • எப்போதும் வென்றான் - chennai,இந்தியா

  நீட் தேர்வினால் விரைவில் தமிழ் நாடும் இன்னொரு உபி ஆகி விடும்... மருத்துவ துறையில்.. அதுதான் பிஜேபியின் விருப்பமும்...

 • Prakash JP - Chennai,இந்தியா

  சிலர், +2வில் இவ்வளவு மார்க் எடுத்த அனித்தாவால் (1176/1200), நீட் தேர்வில் பாஸ் செய்யமுடியாதது ஏன்? என பெரிய இதாட்டம் கேள்வி கேட்ப்பார்கள், அட லூசுகளே, ஸ்டேட் போர்டு, சிபிஎஸ்சி, ஐசிஎஸ் என எந்த சிலபஸ்ஸில் +2 படித்திருந்தாலும், லட்சகணக்கான ரூபாய் செலவு செய்து, தனியார் கோச்சிங் இன்ஸ்டிட்யூட்டில் நீட் நுழைவு தேர்வுக்கு ஓராண்டு சிறப்பு பயிற்சி படிக்காமல், யாராலும் நீட் பாஸ் செய்யமுடியாது.. இது ஈபிஎஸ் ஓபிஎஸ் & மோடி கும்பல் செய்த படுகொலை.

 • sara - Chennai,இந்தியா

  எவ்வளவு முட்டாள்தனமாக இந்த விஷயத்தை கையாள முடியுமோ அவ்வளவு முட்டாள்தனமாக தமிழக அரசு கையாண்டிருக்கிறது. மாணவர்களுக்கு ஆரம்பத்திலிருந்தே விலக்கு கிடைக்கும் என்ற தவறான நம்பிக்கையை ஏற்படுத்திருக்க கூடாது. விலக்கு இல்லையென்றால் என்ன செய்யவேண்டும் என்று எதையும் யோசிக்கவில்லை. மாணவர்களை குழப்பி திண்டாடவிட்டதுதான் மிச்சம்.

 • Rpalnivelu - Bangalorw,இந்தியா

  அனிதா அவர்களே, மருத்துவத்தில் எத்தனையோ பிரிவுகள் உள்ளன. ஒன்றிலே கிடைக்காவிட்டாலும் இன்னொன்றில் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நிற்க, விடாமுயற்சியுடன் நீட் தேர்வுக்கு படித்திருந்தால் அடுத்த வருடம் மருத்துவ சீட் கிடைத்திருக்கும். நீங்கள் உங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொண்டதினால் யாருக்கும் எந்தவித வருத்தமும் கிடையாது, உங்கள் குடும்பத்தினர் தவிர. உங்கள் சாவுக்கு காரணம் கேடுகெட்ட கழகங்கள் தான். தங்களின் சுயநலத்துக்காக உங்கள் இன்னுயிரை பலி கொடுத்துவிட்டனர். உங்கள் ஆன்மாவுக்காக பிராத்திக்கிறேன். ஆமென்.

 • kuthubdeen - thiruvarur,இந்தியா

  கொடுமை ...கொடுமை ...ஒரு மூட்டை தூக்கும் தொழிலாளியின் மகளின் கனவை தவிடு பொடியாக்கி விட்டார்கள் ....படிக்கும் போதே மனது கலங்குது ... ஏன் இந்த குழப்பம் எல்லாம் .அம்மா அவர்கள் இதனால் தான் இந்த திட்டத்திற்கு கடைசிவரை எதிர்ப்பு தெரிவித்தார்களா ?பாவிகளா ஒரு ஏழையின் உயிருக்கு பதில் சொல்லியே ஆகணும் ..பணக்காரனுக்கு ஆயிரம் படிப்பு வழிகள் இந்த நாட்டில் இருக்கு ..மூட்டை தூக்கும் கூலியின் மகள் எல்லாம் மேலே வரக்கூடாது என்பது தானே முன்னேறிய சமூகத்தின் ஒரே குறிக்கோள் .நடத்துங்கள் .... இப்படி எல்லாம் ஒடுக்கிவிட்டுதான் இந்தியாவை முன்னேற்ற போகிறீர்களா ?

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  இதற்கு யார் காரணம்.. நீட் தேர்வு கட்டாயம் என்ற மத்திய அரசா?? இல்லை.. விலக்கு பெறுவோம் என்று சொன்ன மாநில அரசா?? ஆட்சியாளர்களை மக்கள் நம்பக்கூடாது என்பதற்கு இது உதாரணம்... மக்கள் விரோத ஆட்சி நீடிக்கலாமா ??

 • தலைவா - chennai,இந்தியா

  வாழ்க ஜனநாயகம் வாழ்க நீதி மன்றங்கள்.. வாழ்க திறமையான நளினி சிதம்பரம்... வாழ்க உயர்குடிமக்கள் வாழ்க நீட் மேதாவிகள். கனவு கண்டோம் ஐயா கலாம் சொன்னபடி அது நிஜமாகவில்லை.. உழைப்பில் குறைவில்லை ஆனால் உந்துதல் கிடைக்கவில்லை குடும்ப சூழ்நிலை அப்படி. கேவலமான வைத்தியரை விட திறமையான பொறியாளர், ஆசிரியர், சமூகசேவகர்கள், எழுத்தாளர்கள், நீதிபதிகள், எவ்வளவோ மேல் .. சகோதரி உங்களுக்கு ஒருவர் கூடவா எடுத்து சொல்லவில்லை மருத்துவம் பயின்றவர் மட்டுமே திறைமையானவர்கள் இல்லை என்று.

 • sivan - Palani,இந்தியா

  கல்வி சார்ந்த ஒரு விஷயத்திற்கு கல்வியாளர்கள், பெரிய பல்கலைக் கழகங்களில் பல ஆண்டுகள் வேலை செய்து கல்வி பற்றிய பொதுவான விஷய ஞானம் உடையவர்கள் மட்டும் இந்த விஷயத்தை கையாண்டிருக்கலாம். அதை விட்டு தெருவில் நடந்து போகும் சராசரி நபர் கூட, மருத்துவம் பற்றிய எந்த அறிவும் இல்லாத , நபர்கள் மற்றும் அரசியல் வாதிகள் சாதிக் கட்சி தலைவர்கள் இதை பற்றி விவாதித்து விவாதித்து, ... இதை ஒரு அரசியலாக்கி விட்டனர். தமிழக பாடத்திட்டத்தில் தான் கோளாறு என்றால் எப்படி 3420 சமச்சீர் மாணவர்கள் கல்லூரியில் இடம் பெற்றனர்? .. நீட் தேர்வுக்கு போன வருடமே ஒரு வருடம் மட்டுமே விலக்கு அளிக்கப் பட்டது. இது தெரியாதா/ .. பல முறை ஆர்ப் பாட்டம் செய்த சுடாலின் , வைகோ திருமாவளவன் , வீரமணி , சீமான் போன்ற இன்ன பிற கல்வி சாராத ... கல்வி என்றால் என்ன என்று தெரியாத அரசியல் வியாதிகள் இந்த இரண்டு வருடங்களில் பள்ளிகளில் / பொது நூலகங்களில் நீட் தேர்வுக்கு தேவையான புத்தகங்களை , அன்பளிப்பு செய்திருக்கலாமே?? போன பத்து வருடத்திய நீட் தேர்வு வினாத்தாள்களை ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்து அதை ஒரு பள்ளிக்கு ஐந்து காப்பிகள் என்று கொடுத்து இருக்கலாமே?? தமிழக மீடியாக்கள் வெட்டி விவாதம் செய்த இந்த நேரத்தில் இதை செய்திருக்கலாமே?? ஏன் செய்யவில்லை?? சமச்சீர் பாடத்திட்டத்தில் தேர்வான அந்த மாணவர்கள் யார்?? இந்த பத்து வருடங்களில் வருடத்திற்கு 25 மாணவர் மட்டுமே கிராமங்களில் இருந்து மருத்துவம் படிக்க சென்றனர் : மொத்தமாகவே 325 மாணவர்கள் மட்டுமே தமிழில் படித்து மருத்துவம் சேர்ந்தனர் என்பது உண்மையா? அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஏன் இதை மீடியாக்கள் இத்தனை வருடங்களாக பேசவில்லை?

 • Bharathkumar - Tiruvannamakai,இந்தியா

  இந்த நளினி சிதம்பரத்திற்கு வேறு வேலையே இல்லையா?

 • மணிமேகலை - paris ,பிரான்ஸ்

  இந்த நாசமாய்ப்போன அரசியல் வியாதிகளால் ஒரு பொன்னான உயிரை இழந்துவிட்டோம் ,பிணம் தின்னி அரசியல் வியாதிகளுக்கு இன்னும் எத்தனை உயிரை தேவையோ ?

 • Pudiyavan India - chennai,இந்தியா

  சென்ற ஆண்டு cutoff சுமார் 196 மதிப்பெண் . இந்த முறை நீட் மூலம் சுமார் 90 சதம் பேர் சீட் பெற்றிருக்க கூடும் . மீதம் 10 சதம் ஏழை மாணவர்கள் மட்டும் கோச்சிங் செல்லாததால் சீட் கிடைத்திருக்காது. அவர்களை கணக்கெடுத்தால் சுமார் 300 முதல் 400 பேர் 196 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்திருப்பார்கள். அவர்களுக்கு சீட் அதிக படுத்தி இடம் கொடுக்கலாம். . அரசு செய்யுமா ...

 • kuthubdeen - thiruvarur,இந்தியா

  மிகவும் வருந்தத்தக்க செய்தி .. அந்த மாணவியின் குடும்பத்திற்கு அனுதாபங்கள் ...இந்த மரணத்துக்கு இரு அரசுகளும் பொறுப்பேற்கணும் .மாணவி எப்படியும் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்து இருப்பார் ..அரசுகளின் விளையாட்டால் ஒரு மாணவியின் உயிர் போய் உள்ளது .... ஆரம்பத்திலேயே இதன்படிதான் தேர்வு என்பதை மாணவர்களிடம் சொல்லி அதற்க்கு தயார் படுத்தி இருக்கணும் ...நம் நாட்டில் அப்பாவிகளின் உயிருக்கு எங்கே விலை இருக்கு .இதே பணக்காரர்களாக அரசியல் வாதிகளாக இருந்து இருந்தால் சட்டம் நீதி எல்லாமே வளைக்க பட்டு இருக்கும் ...மாணவர்களே இனியாவது எச்சரிக்கையாக இருங்கள் எது தேவையோ அதை தேர்ந்து எடுத்து படியுங்கள் ...

 • Rajan. - singapore,சிங்கப்பூர்

  நளினி சிதம்பரம் , காசுக்காக , எதைவேண்டுமானாலும் செய்வார் , தமிழ்நாட்டிலிருந்து துரத்தியடிக்க வேண்டும்

 • Bala - Chennai,இந்தியா

  என்ன பைத்தியக்காரத்தனமான கோழைத்தனமான முடிவு. மனம் வெம்புகிறது. இம்முறை இல்லாவிட்டால் என்ன? ஒரு வருடம் தன்னை தயார் செய்து கொண்டு மீண்டும் முயற்சித்திருக்கலாமே? மருத்துவம் படிக்க முடியாவிட்டால் வேறு கதியே இல்லையா என்ன? இந்த மாதிரி செய்திகளை பார்க்கும்போது நெஞ்சு கனக்கிறது

 • jayvee - chennai,இந்தியா

  நீட் தேர்வில் மீண்டும் பங்குபெறலாம் என்பது theriyaatha.. allathu, நீட் தேர்வை ozhikka, எதிர்க்கட்சிகள் இந்த பெண்ணை தற்கொலை செய்ய தூண்டிவிட்டதா ..

 • Iniyan - chennai,இந்தியா

  ஒரு கூலி தொழிலாளியின் மகள் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடருவது என்பது சாத்தியமாக முடியாது.. இவருக்கு பின்னால் இருந்து ஆட்டியவர்கள் யார்? .. தி முக மற்றும் கம்யூனிஸ்ட்கள் இவரை கொலை செய்து இருக்கலாம் என்பது என் யூகம்...

 • A R J U N - ,இந்தியா

  இது தீர்வு ஆகாது..எனக்கு தெரிந்து சில மருத்துவ கல்லூரிகள் நன்கு படிக்கும் மாணவர்களுக்கு சலுகை/ இலவசமாக கூட..இடம் ஒதுக்கி படிக்க வைக்கின்றனர்..

 • Bharathkumar - Tiruvannamakai,இந்தியா

  Pongayya... இன்னும் எத்தனை உயிர்களை பறிக்கப் போறிங்களோ..

 • Cheran Perumal - Radhapuram,இந்தியா

  வாழ்க்கையில் போராடி ஜெயிக்க வேண்டும் என்ற மனத்துணிவை நமது கல்விமுறையும் சமுதாயமும் இளைஞர்களுக்கு கற்றுக்கொடுக்கவில்லை. இந்த பிஞ்சுக்கு என்னென்ன கனவுகள் இருந்ததோ அவைகளை அடையாமலே கருகிவிட்டது. அவருடைய பெற்றோருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

 • rama - johor,மலேஷியா

  அம்மா ஆட்சி என்று கூறும் பாஜக அடிமைகள் இவர்களின் கையாலாகா தனத்தால் இன்று ஒரு உயிர் பறிபோயுள்ளது. அம்மா இருந்திருந்தால் இந்நிலை உருவாயிருக்காது

 • Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  தவறான மற்றும் தேவை அற்ற முடிவு, இப்பொழுது ஒரு கூட்டம் வரும் இதை வைத்து அரசியல் மற்றும் விளம்பரம் தேட, அவர்களும் ஒரு வகையில் காரணம் தான் ,இந்த குரூப் ஒரு வேளை முன்கூட்டிய இது போல் மாணவர்களை கண்டு கொண்டு கவுன்செல்லிங் மற்றும் இலவச ட்ரைனிங் கொடுத்து இருக்கலாம், அதன் மூலம் அவர்கள் அட்லீஸ்ட் அடுத்த தேர்வை எதிர் கொள்ள தைரியம் வந்து இருக்கும்

 • Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  Very sad

 • Ramamoorthy P - Chennai,இந்தியா

  நீட்டுக்கு ஆதரவாக வாதாடி ஜெயித்தவர் பொறுப்பாக மாட்டாரா/

 • sivan - Palani,இந்தியா

  பாவம் பெரிய மன உளைச்சலில் இருந்திருக்கும் அவரை ஓடி ஓடி பேட்டி எடுத்து , அவருக்கு இடம் கிடைக்காத சோகத்தை பேசி பேசி, ,, அவரின் படத்தை எல்லா புத்தகங்களிலும் வெளியிட்டு, அவர் மன உறுதியை குறைத்த அனைத்து மீடியாக்களுக்கு , நீட் விலக்குக்கு ஆதரவாக பேசுகிறோம்... என்ற இந்தியாவிலேயே இல்லாத கோரிக்கைக்கு , மற்ற மாநிலங்கள் அனைத்தும் ஒத்துக்க கொண்ட ஒரு போட்டித் தேர்வுக்கு, நாங்கள் மட்டும் ஒத்து வரமாட்டோம் , என்று அழிச்சாட்டியம் செய்த எதிர்க் கட்சிகளின் விஷமத்தனமான போராட்டத்திற்கு இந்த பெண் பலியானது பரிதாபம். .. ஒரு தேர்வில் தோல்வி அடைந்தவுடன் ... இடம் கிடைக்கா விட்டால் உடனே விரக்தி என்ற முடிவு எடுக்கும் அளவுக்கு மன திடம் இல்லாதவர்கள் வாழ்வில் எதை எதிர் நோக்குவார்கள்.?

 • Jai Sankar Natarajan - Thiruvarur,இந்தியா

  மாணவி அனிதாவுக்கு ஆழ்ந்த இரங்கல், மருத்துவம் படிக்க வாய்ப்பு இல்லை என்றால் என்ன வேறு ஏதாவது துறையில் சாதித்திருக்கலாமே.. உன் ஆன்மா சாந்தி அடையட்டும்..

 • Karuthukirukkan - Chennai,இந்தியா

  12 வருடம் படித்து 1176 வாங்குறது என்ன பெரிய கஷ்டம் .. பல லட்சம் கட்டி கோச்சிங் சென்டரில் படித்து தேர்வு பெறும் நீட் தான் தகுதி .. 1176 எல்லாம் ஒரு தகுதியா ?? நீட் எழுதி போட்டி போட பயப்படும் தமிழக மாணவர்களில் இந்த பெண்ணும் ஒருவர் .. மத்திய அரசு நன்னா செயல்படுது.. தமிழகத்தில் கல்வி தகுதியே இல்லை .. அதில் தான் இந்த மாணவி 1176 எடுத்து இருக்கிறார் .. இது தான் பிஜேபி அடிமைகளின் வாதத்தில் இருந்து நீட்டுக்கு கற்பிக்க படும் காரணங்கள் .. அதை இந்த அப்பாவி குழந்தை விஷயத்தில் சேர்த்து பார்த்தால் மேல சொன்ன கேவலமான காரணங்கள் தான் வரும் .. ஒரு அருமையான கல்வி தரத்துடன் , இந்தியாவிலேயே அதிக மருத்துவ கல்லூரிகளையும் வெச்சிட்டு , இந்த மத்திய அரசிடம் மண்டியிட்ட இந்த அதிமுக அடிமைகளுக்கு என்ன தண்டனை ?? 1176 மதிப்பெண் எடுப்பது என்ன சாதாரண விஷயமா ?? அதுவும் இந்த அப்பெண்ணின் வாழ்வியல் சூழ்நிலை என்ன ?? இவர்கள் தான் கோட்டாவில் வந்து உங்கள் வாழ்க்கையை நாசமாகுறாங்களா பக்தா ?? பன்னிரெண்டாம் வகுப்பை வெச்சு சிறந்த முறையில் கட் ஆப் மதிப்பெண் மூலம் கலந்தாய்வு நடத்தி , அனைத்து மருத்துவ இடங்களும் மாணவர்களுக்கு தமிழகத்தில் சமூக நீதியுடன் வழங்கப்பட்டு வந்தது ,, இந்த நீட் சாத்தான் வந்து யாருக்கு பிரயோஜனம்?? இந்த மாதிரி பாவப்பட்ட ஏழை குழந்தைகளுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு , கோச்சிங் சென்டர் போனவன் மட்டுமே வெற்றி பெற முடியும் இந்த நீட் சாத்தானில் .. முன்னரேனும் ஏழை குழந்தைகளுக்கும் ஒரு சமமான வாய்ப்பு இருந்தது .. பள்ளி பாடத்தை நன்றாக படித்தால் மருத்துவர் ஆக முடியும் என்று .. இனி முடியுமா ?? கோச்சிங் சென்டர் போகாம சிபிஎஸ்சி மாணவர்களால் நீட் தேர்வு பெற முடியுமா ?? பிறகு என்ன கல்வி தகுதி இருக்கு சிபிஎஸ்சி திட்டத்தில் ?? பாவம் டா டேய் , இந்த ரெண்டு அரசும் நாசமா போகும் .. அதுவும் அந்த விஜய பாஸ்கர் , நிர்மலா சீதாராமன் எல்லாம் என்ன சொல்வது என்றே தெரியல ...

 • nanum appavi kudimagan dhan - Tamilnadu,இந்தியா

  அட பாவிங்களா.... எங்களை ஏன்டா இப்புடி கொல்றிங்க... எங்களை கொன்னு யாருக்காக தாண்டா அரசியல் பண்ணி ஆட்சி நடத்துறீங்க... நீங்கல்லாம் நல்லாவே சாக மாட்டிங்கடா...

 • S.Aruna - Trichy,இந்தியா

  அன்பான மாணவர்களே - கனவுகளை நனவாக்க பாடுபட வேண்டுமேயன்றி வாழ்க்கையை முடித்துக் கொள்வது மிக தவறான முடிவு. மருத்துவர் என்பது மட்டுமே உயர்தொழில் அல்ல. பல உயர்பதவிகளும் தொழில்களும் உள்ளன என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். மருத்துவக்கனவை நனவாக்க இவர் நீட் தேர்வுக்கு அடுத்த ஆண்டில் முயன்றிருந்தால் வெற்றிபெற்றிருப்பர்.

 • Muruganandam - karaikal,இந்தியா

  இந்த பெண்ணின் மரணத்திற்கு யார் காரணம், நீட் தேர்வில் விலக்கு பெற்று விடுவோம் என்று பொய் சொல்லி ஏமாற்றிய வீணாப்போன விஜயபாஸ்கர் பொறுப்பு ஏற்க வேண்டும்,

 • Vasanth Saminathan - Trivandrum,இந்தியா

  பதவி வெறி கொண்ட நாட்டிலே தவறுதலாக பிறந்துவிட்டாய். ஆன்மா சாந்தியடையட்டும்.

 • TechT - Bangalore,இந்தியா

  என்ன பிஜேபி அல்லக்கைகள் என்ன சொல்லப் போகிறார்கள் இப்போது? இந்த பெண் எஸ்சி அதனால் தான் அப்படீன்னா? புத்தியில்லேனா அப்ப 1176 மதிப்பெண் எப்படி கிடைத்தது, ஸ்டேட் போர்டு சிலபஸில் இருந்து கேள்வி கேளுங்கள் 700 க்கு 690 எடுத்திருப்பார் இந்த பெண். CBSE மாணவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு. ஸ்டேட் போர்டுக்கு நாமம்.

 • SatheeshKannan -

  அய்யோ பாவம். இந்த அரசியல்வாதிகளை யார் தான் தண்டிப்பது. மீண்டும் ஒரு உயிர் கூட பலி ஆகிவிட்டது . தமிழர்களை வாழ விடமாட்டீங்களா".

 • Nancy - London,யுனைடெட் கிங்டம்

  நீதிபதியை ஏன் கைது செய்ய கூடாது தற்கொலைக்கு தூண்டிய குற்றத்துக்காக

 • Sundar - Puducherry,இந்தியா

  அவரசப்பட்டுவிட்டாயே சகோதரி. துன்பத்திலும் மனஉறுதி வேண்டும். உன் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

 • Pandiyan - Chennai,இந்தியா

  இந்த ஏழை மாணவியின் கண்ணீரும் ஆன்மாவும் சுயநல அரசியல்வாதிகளை சும்மா விடாது ...இந்த அரசாங்கம் திரு வைகோ சொல்லியது போல இனியாவது தமிழக கல்விமுறைபடி படித்து மருத்துவ படிப்பு கிடைக்காமல் போன மாணவ ..மாணவிகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கான உதவித்தொகை வழங்கி ..அடுத்த வருடத்திற்கான "நீட் " தேர்வுக்கான " FREE கோச்சிங்" கொடுக்க முன்வரவேண்டும் .

 • Nancy - London,யுனைடெட் கிங்டம்

  நமது கல்வி தரத்தை பற்றி நாம் தான் பீத்திக்கணும்

 • siriyaar - avinashi,இந்தியா

  Committing suicide itself indicate she is incable. Score 86 out of 700 indicate she is a muck up party. Problem is society .

 • Green Man - Coimbatore,இந்தியா

  கஷ்டப்பட்டு பனிரெண்டு வருஷம் padicha கூலி தொழிலாளி பொண்ணு கனவு கருகி இறந்து போச்சு, நாம தேர்ந்து எடுத்த மேதாவிகள் எல்லாருக்கும் பத்தோடு ஒன்னா தான் தெரியும் இந்த மரணம், எதுக்கு பனிரெண்டு வருஷம் படிக்கணும், நேரா நீட் எழுத சொல்ல வேண்டியது தானே

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  நேற்று தான் மாணவி அனிதாவை பற்றி எனது மனைவியுடன் பேசிக்கொண்டிருந்தேன். அடுத்த வருடம் இவரை நீட் தேர்வுக்கு தயார் செய்யமுடிந்தால் இது போன்ற மாணவ மாணவிகளுக்கு அடுத்த வருடம் மருத்துவ படிப்பில் சேர வாய்ப்புள்ளதா என்பது பற்றி. இந்த மானங்கெட்ட அடிமை அரசும், அமைச்சர்களும், தங்களின் பதவியை தக்கவைத்துக் கொள்ள டெல்லிக்கு காவடி தூக்கிக் கொண்டு இருக்கும் கேவலம். ஊழல் செஞ்சு சிக்கிக் கொண்ட பிறகும் பிரதமருடன் குலாவும் விஜயபாஸ்கர். மற்றும் கேவலமான மந்திரிகள். ஏழைகளின் கனவை சிதைத்து விட்டார்கள் இன்றைய ஆட்சியாளர்கள்..

 • jaikrish - LONDON,யுனைடெட் கிங்டம்

  மத்தியில் ஹிட்லர் ஆட்சி, மாநிலத்தில் மங்குனி ஆட்சி. அனிதா வின் ஆன்மா மன்னிக்காது.

 • Global Citizen - Globe,இந்தியா

  நம்ம அரசியல்வாதிகள் இப்போ நிம்மதியா இருப்பார்கள். ஒரு முடிவையும் உருப்படியா எடுக்கத் தெரியாதவனுங்க அரசியல் செஞ்சா இப்படித்தான் இருக்கும். பார்த்துடா இதையும் "ப்ளூ வேல்" சாவோடு சேர்த்துவிட்டு நீங்க தப்பிக்க நினைக்காதீங்க...

 • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

  அவரது வாழ்வு பாழாக நீட் தேர்வு அல்ல காரணம். ஒருவர் இறப்பிற்கு காரணம் தேர்வு முறை என்று சொன்னால் நாம் கற்காலத்திலா வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்று எண்ண தோன்றுகிறது. ஒருவருக்கு இன்டெர்வியூ முறையில் வேலை கிடைக்கவில்லை என்றால் இன்டெர்வியூ முறையை குற்றம் சொல்வோமா? அந்த அளவிற்கு தன்னை தகுதிப்படுத்தவில்லை என்று தானே கூறுவோம்? ஆனால் நீட் தேர்வில் தோல்வியடைந்தார் என்றால் குற்றம் நீட் தேர்விலா அல்லது இந்த அளவிற்கு தமிழக மாணவர்கள் தங்களை தயார்படுத்தி கொள்ளவில்லை அதற்க்கு காரணம் தமிழக அரசியல்வாதிகள் என்ற உண்மையா?

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  நாடே சி பி எஸ் ஸி க்கு மாறிக்கொண்டிருந்த போது கேவலமான சமசசீரை திணித்து மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழடித்த சண்டாளர்கள் தான் இந்த கோர மரணங்களுக்குக் காரணம். ஆனால் ? என் காலத்தில் படித்த பலர் மருத்துவம் பொறியியல் இடம்  கிடைக்காததால் வேறு படிப்புக்கள் மூலம் முன்னேறி கோடீசுவரர்களாக வலம் வருகிறார்கள். எப்படிப் பார்த்தாலும்  தற்கொலை தவறான முடிவு. இதனை வைத்து அரசியல் என்பது மெகா மோசடி.

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  இந்த கொலைக்கு காரணமான சமூக விரோத அரசு நிர்வாகத்தை, அமைச்சர்களை, மத்திய அரசை, நீதித்துறையை தூக்கில் போடவேண்டும்.

 • Susil - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  திருமதி நளினி சிதம்பரம் , உங்க புகைப்படம் இருந்தா குடுங்க , காரி உமிழ்கிறோம் , கேடுகெட்ட குடும்பம் என்பதை நிரூபித்து விட்டர்கள்.

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  கொடுமையிலும் கொடுமையான சோகம். சம்பந்தபட்ட கொலைகாரர்களே உங்களுக்கு சந்தோசம் தானே. ஆத்திரமும், கண்ணீரும் கட்டுப்படுத்த முடியவில்லையடா.. கோழை என்று சொல்லி என் கண்ணை இன்னும் கேவலப்படுத்தாதீர்கள் காவி கயவர்களே. கை பதறுகிறது. இந்த படுகொலை செய்த மாநில அடிமை அரக்கர்களும், விஜயபாஸ்கர், நிர்மலா சீத்தாராமன், மோசடி ஆட்சி, சென்னை உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் இனி என்ன செய்வார்கள். நாளைக்கு பால் ஊற்ற வருவார்களா கொலைகாரர்கள்.

 • பாரதி - Chennai ,இந்தியா

  நீட் தேர்வுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய அரியலூர் மாணவி தற்கொலை - மிகவும் வருத்தமாக இருக்கிறது . பல மாணவ மாணவிகள் பிளஸ் டு முடித்து ஓராண்டு நீட் தேர்வுக்கு படித்து நல்ல மார்க் எடுத்து mbbs சேர்க்கிறார்கள் . அப்படி கூட இந்த மாணவி முயற்சி எடுத்து இருக்கலாம். ஆனால் இவருக்கு இந்த அறிவுரை வழங்க யாரும் இல்லை . இனி சென்ற உயிர் திரும்பி வரப்போவதில்லை . ஆன்மா சாந்தி அடைவதாக

 • Puranaanuru Tamilan - Chennai,இந்தியா

  முதலில் ஆன்மா சாந்தியடட்டும். இதுக்கு எல்லாம் இந்த மோசடி இன் கையாலாகாத அரசு தான் காரணம், இதில் இங்கு உள்ள மூளை இல்லாத கொத்தடிமைகள் மோசடிக்கு பயந்து அடிமை ஆகி தமிழனின் அடி மடியில் கை வைக்கும் அளவுக்கு போய் விட்டது. இங்குள்ள பிஜேபி காவிகள் கருத்து பதிய வேண்டாம். பாவம் ஒரு அப்பாவி கூலி செய்வோன் உண்மை தமிழனனின் பாவம் சும்மா விடாது.

 • Green Man - Coimbatore,இந்தியா

  sad

 • jaikrish - LONDON,யுனைடெட் கிங்டம்

  அடிமை மங்குனிகளே.. மார் தட்டிக் கொள்ளுங்கள்... இதுவும் எங்களின் சாதனை என்று. நியாயமாக தற்கொலை செய்து கொள்ள வேண்டியது இந்த அப்பாவி மாணவி அல்ல.... ம் இனியென்ன சட்டென்று அனுதாபத்தையும், இரண்டு லட்சம் நிவாரணத்தையும் அறிவித்துவிடுங்கள்.

 • kundalakesi - VANCOUVER,கனடா

  அதே நேரத்தில் சப்பாணி பிளஸ் 2 தேர்வை மட்டுமே வைத்திருந்தால், திறமையுள்ள OC மக்கள் ஒதுக்கப்பட்டே வருவதை இத்தனை நாள் பார்த்திருந்த வயிற்றெரிச்சல் தீராதே.

 • GobalakichenaneSouppourayane -

  கடைசில சாக வச்சிட்டாங்க இந்த அரசியல் வாதிகள்

 • Appu - Madurai,இந்தியா

  எனது ஆழ்ந்த வருத்தங்களையும் இரங்கலையும் தெரிவித்து கொள்கிறேன்... மத்திய அரசின் விடாப்பிடி நீட் கொள்கையால் தற்கொலை செய்து கொண்ட இவரை போன்றோர்(ஏழை எளியோர்) இனி மருத்துவ படிப்பு படிப்பது என்பது எட்டாக்கனியே... நீட்டிற்கென்று தனி படிப்பு பரீட்சை எழுதி பழக வேண்டிய சூழ்நிலையில் இவரை போன்றோர் கட்டாயப்படுத்தப்பட்டு விட்டார்கள்... சி பி எஸ் சி யில் படித்தால் தான் நீட் தேர்வை நல்ல படி அட்டண்ட் பண்ண முடியும் என்ற நிலைமை இப்போது... இதனால் ஒரு உயிர் சென்றுவிட்டது... நீட்டை ஆதரிப்போர் இதையும் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்... அவர்கள் கச்சி போல வெட்டி வியாக்கியானம் பேசி நாட்டையே சீரழிக்க உதவி செய்வார்கள்... இந்தியா அழிவின் பாதையை நோக்கி பயணிப்பது மனதை மிகுந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது... நீட் இல்லாத சமயம் உருவாகிய மருத்துவர்கள் என்ன முட்டாள்களா? ஏன் காங்கிரசும் பாஜகவும் மக்கள் உயிரை இப்படி வாங்குகிறது? பாஜக காங்கிரசை ஒரு படி பீட் செய்து மக்களை மிக மோசமாக வதைக்கிறது....

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  பொழுது போகாத அரசியல்வாதிகள், திண்ணை அரசியல்வாதிகள், லெட்டர் பெட் கட்சிகள் இனி பிணத்தை வைத்து அரசியல் செய்யலாம் ....

 • krishna - chennai,இந்தியா

  கேட்கவே மனசுக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது. கண்ணீர் மல்க ஒரு தந்தை வயது உள்ள நான் இதை போஸ்ட் செய்கிறேன். இந்த காலத்து இளைஞர்களுக்கு மனோ தைர்யம் அவசியம். மெடிசின் இல்லை என்றால் எது படித்தாலும் இவ்வளவு மார்க் வாங்கிய இந்த பெண்ணிற்கு SC கோட்டாவில் நிச்சயம் வேலை கிடைத்திருக்கும். சொல்லி புரிய வைக்க யாரும் இல்லை என நினைக்கிறேன். நெஞ்சார்ந்த ANUDHABANGAL

 • baskeran - london,யுனைடெட் கிங்டம்

  Who's responsible for this? tem or government or courts? How can we victimised them

 • ராம் -

  what the hell is happening. The Government must resign immediately for its poor handling.

 • SENTHIL - dammam,சவுதி அரேபியா

  வெட்கம் கெட்ட அரசியல்வாதிகள் இவரின் மரணத்திற்கு இவர்களே பொறுப்பு

 • Palanisamy T - Kuala Lumpur,மலேஷியா

  பாவம் எடப்பாடி அரசு இப்போது இதற்க்கு என்ன பதில்கள் சொல்லப் போகின்றார்கள் இவர்களையும் நம்பி மக்கள் வாக்களித்துள்ளார்களே இதுதான் பெரிய வேதனை

 • JOKER - chennai,இந்தியா

  விளங்கா மட்டைகள் .ஒரு மாணவியின் வாழ்க்கையில் விளையாடி விட்டார்கள்

 • Sekar KR - Chennai,இந்தியா

  இதயத்தை நொறுக்கி விட்டாள் அனிதா , மத்திய அரசு நீட் தேர்வுதான் என்று வலியுறுத்திய பிறகு மாநில அரசு தமிழக மாணவர்களை நீட் விலக்கு வாங்கி விடுவோம் என்ற தவறான நம்பிக்கையை கொடுத்து அரசியல் சுயநலத்திற்காக நாடகம் ஆடிவிட்டு இன்று ஒரு அப்பாவியின் உயிரை பறித்துவிட்டனர்.

 • MANI DELHI - Delhi,இந்தியா

  மிகவும் வருத்தத்திற்கு உரியது. மாணவர்கள் மனதளவில் இத்தனை வலுவிழந்து வாழ்க்கையை முடித்துக் கொள்வது என்பது மிகவும் துரதிருஷ்ட வசமானது. மிகுந்த வேதனை அளிக்கிறது. பெற்றோர்களின் நிலையை எண்ணிப்பார்க்காமல் இப்படி செய்வதெல்லாம் பெரிய வேதனை

 • Murugesan - Jalakantapuram

  Feeling very Sad. May her soul rest in peace. Om shanthi

 • Shankar - Bangalore,இந்தியா

  இப்ப சில கூமுட்டைகள் வந்து கமெண்ட் போடும் பாரு. இதற்கு மோடி அரசு தான் காரணம் என்று. ஆனால் உண்மையான காரணம் திருட்டு திராவிட அரசியல் வியாதிகளும் பொறுப்பற்ற தமிழக அரசும் தான். கல்வியின் தரத்தை கடந்த 10 வருஷமா உயர்த்தாதது, கற்ப்பிக்கும் முறையை மாற்றாதது. கடைசி வரையில் மாணவர்களை குழப்பியது.

 • தம்பி - பொள்ளாச்சி ,இந்தியா

  மாட்டிற்கும் சாமியாருக்கு பாதுகாப்பு தரும் அரசு இதற்க்கு என்ன பதில் வைத்துள்ளது

 • Mahesh -

  பாஜக வுக்கும் மோடி க்கும் ஓட்டு போட்ட மக்கள் செத்துமடிவதை தவிர வேறு வழியில்லை. உயர் சாதி மக்களுக்கும் Corporateகளுக்கும் மட்டுமே சேவை செய்வதை கொள்கையாக வைத்துக் கொண்டு இருக்கும் மோடி என்ன கூறப்போகிறார்

 • seelan - madurai,இந்தியா

  பிரதமருக்கும் முதுகெலும்புயில்லா தமிழக அரசிற்கும் ஓர் உயிர் சமர்ப்பணம்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement