Advertisement

நிர்மலா சீதாராமன் ராஜினாமா ஏன்? தமிழக பா.ஜ., தலைவர் மாறுகிறார்

சென்னை: தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட தமிழ்ப் பெண், மத்திய அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன். கடந்த மூன்று ஆண்டுகளாக மத்திய வர்த்தகத் துறை அமைச்சராக இருந்து, இந்திய வர்த்தகத்தை உலக அளவில் பேச வைத்தவர்.
நிர்மலா சீதாராமன், மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். பா.ஜ.,வில் மூத்த தலைவர்களாக இருக்கும் பலருக்கும் இது, அதிர்ச்சிகரமான தகவலாகத்தான் இருக்கிறது. ஆனால், பிரதமர் மோடியும், பா.ஜ., தேசியத் தலைவர் அமித் ஷாவும் இவரை வைத்து நிறைவேற்ற போட்டிருக்கும் திட்டங்கள் பெரிசு.

என்ன திட்டம்:தமிழக பா.ஜ., தலைவராக இருக்கும் தமிழிசையின் பதவிக் காலம், இன்னும் இரண்டு மாதங்களில் முடிவுற இருக்கிறது. இந்த சூழ்நிலையில், தமிழக பா.ஜ.,வுக்கு இன்னொரு தமிழ் பெண்ணான நிர்மலா சீதாராமனைப் நியமிப்பதன் மூலம், தமிழகத்தில் கட்டாயம் பா.ஜ., படு வேகமாக வளரும் என கணக்குப் போட்டிருக்கின்றனர் மோடியும், அமித் ஷாவும்.
அதனாலேயே, அமைச்சர் பொறுப்பை நிர்மலா, ராஜினாமா செய்துள்ளார். நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டால், தமிழக பா.ஜ., கட்டாயம் எழுச்சி பெறும் என்று சொல்லும், தமிழக பா.ஜ.,வினர், ஒருவேளை, தமிழக பா.ஜ., தலைவராக்காவிட்டால், தமிழக நிரந்தர கவர்னராக நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட வாய்ப்பிருக்கிறது.
தமிழக பா.ஜ., தலைவராக நியமிக்கப்பட்டால், தேர்தல் நெருக்கத்தில் நிர்மலா சீதாராமனையே, பா.ஜ., முதல்வர் வேட்பாளராகவும் நிறுத்தக் கூடும். இப்படி பல்வேறு சிந்தனைகளோடு, மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ராஜினாமா செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக பா.ஜ.,வின் மேலிடப் பார்வையாளராக நிர்மலா சீதாராமனை நியமித்து, அவர் வழிகாட்டலில், தமிழக பா.ஜ., இயங்குவது போல செய்யவும் மத்திய பா.ஜ., திட்டமிட்டுள்ளது.
எப்படி இருந்தாலும், நிர்மலாவை, தமிழத்தை நோக்கி திருப்பி விட அதிக வாய்ப்பு இருக்கிறது.
Advertisement
 

வாசகர் கருத்து (173)

 • Ramg - bangalore,இந்தியா

  நிர்மலா சீதாராமன் பாதுகாப்பு அமைச்சர் என்ற உயரிய பதவியை பெற்று விட்டார்

 • எப்போதும் வென்றான் - chennai,இந்தியா

  செவ்வாய் கிரகத்திற்கு அனுப்புங்க..ஒரு வேளை பிஜேபி அங்கே வளர்ந்தாலும் வளரும்.........

 • A R J U N - ,இந்தியா

  ..கூடவே 'வாய்ச்சொல்லில் வீர' இளைஞர்-பொன் ரா வையும் கூட்டிக்கொண்டு வருவது தானே...எதையும் சாதித்ததில்லை..எல்லாவற்றிலும் பொய்..false promise ..இந்த மானம் கெட்ட பொழப்பு தேவையா.

 • Ray - Chennai,இந்தியா

  தமிழர்களை நசுக்குவதில் இவர்கள் வல்லவர்கள் NEET ஒன்றே உதாரணம் அதே நேரம் தேவைப் பட்டால் தன்னை தமிழர் என்று நா கூசாமல் சொல்லிக் கொள்வார்கள்

 • Cheran - Kongu seemai,இந்தியா

  "நீட்" புகழ் நிர்மலா தமிழக்தில் ஒரு ஆணியையும் பிடுங்க முடியாது.

 • Nakkal Nadhamuni - Chennai,இந்தியா

  அவர் இங்க தலைவரா வரப்போறார் என்பது ஊகம்தான்... அதுக்கே இப்படி அதுறுதே...

 • vbs manian - hyderabad,இந்தியா

  Most of the comments here show how much hatred people have against brahmins,how much bias people have against a woman. It will take ages for people to change their mindset.EVR & his disciples will be very happy.Long live Tamil nadu.If at all brahmins have contributed to the progress & development of TN.

 • Prabaharan - nagercoil,இந்தியா

  முதலமைச்சர் ரெடி . வோட்டு போட மக்கள் ரெடியா?

 • S K NEELAKANTAN - chennai 24,இந்தியா

  தமிழன் திராவிட மாயை இல் இருந்து விடுபட வேண்டும். ஐம்பது ஆண்டுகள் அவர்கள் ஆட்சியில் மிஞ்சியது ஊழல் ஒண்டர் தான். ப ஜெ க விற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுப்பதில் தப்பில்லை. ஊழலற்ற நேர்மையான நிர்வாகம் கிடைக்கும். மத்தியில் அவர்கள் ஆள்வது சாதகமாக அமையும். நல்ல முன்னேற்றத்தை எதிர் பார்க்கலாம். இன்னும் இரண்டு வாரங்களில் ப ஜெ க ஆளும் மாநிலங்களில் உள்ள நதிகள் இணைப்பிற்கு ஒப்புதல் கிடைத்து ஆரம்பிக்கப்படும் என்று செய்திகள் வந்திருக்கின்றன. மீண்டும் ஊழல் தி மு க வை வரவைப்பதில் பிரயோஜனம் இருக்காது. தமிழன் யோசிப்பது

 • GREEN INDIA - COIBATORE,இந்தியா

  தற்போதய GDP வளர்ச்சி 5 .7 %....... சிறந்த மைய அரசு.... வெறும் வார்த்தை ஜாலங்களால் வரலாறு படைக்க முடியும் போல் தெரிகிறது.

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  நீட் தேர்வை கட்டாயமாக்கியதால் மருத்துவராகும் கனவு சிதைந்து தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் தற்கொலைக்கு ஒரு காரணமான இருக்கும் இந்த அமைச்சர் அதற்கான விளைவுகளை நிச்சயம் சந்திப்பார். மத்திய அமைச்சர் பதவி போய்விட்டது. இனி தமிழ்நாட்டில் இவரெல்லாம் யுகம் பல ஆனாலும் கால் பதிக்கமுடியாது. சமூக ஆர்வலர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் கேவலமான புத்தியுள்ள தமிழக பாஜக அமைச்சர்களும், தலைவர்களும் இனி எந்நாளும் தலை காட்ட முடியாது.

 • Sundar - Puducherry,இந்தியா

  இந்திய வர்த்தகத்தை உலக அளவில் பேச வைத்தவர். நிர்மலா சீதாராமன். படித்தவுடன் சிரித்து விடவும்

 • Dynamo - Den Haag,நெதர்லாந்து

  இந்த அம்மாவுக்கு ஒடம்பு பூராவும் திமிரு...

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  கருத்துக் கிறுக்கன், விசு அய்யர், பாலகிருஷ்ணன், ஜெயஹிந்த்புரம், பாமரன், டோல் டப்பி மா இவங்கள்லாம் ரொம்ப பதட்டமா இருக்காய்ங்களே .... கருத்துக்கள்ல தெரியுது படபடப்பு ..... நிர்மலா ஜீ தமிழக முதல்வராகவே ஆயிட்டா என்ன ஆவாய்ங்க ????

 • Subramanian Sundararaman - Chennai,இந்தியா

  The move if true, India will not only lose an abled minister but also politically BJP will lose grounds in TN. Politicians from northern belt have to understand TN politics. It is highly e oriented and e prejudiced. Popularity triumphs over capability. Even talents like P. Chidambam ( not withstanding his political leaning ) are not recognised. The Dravidian rule over 5 decades is carefully designed to satisfy the majority. Reservation has benefitted the already well of sections.Freebies have benefitted the larger sections. By offt repeated propaganda people are made to believe that only certain parties are secular and the minorities support them. Farmers feel happy for free electricity and that their loans are waived whether or not they are in distress. Govt employees feel secured since they get reasonable pay hikes periodically and their efficiency not evaluated. Even punctuality is not insisted. No strong action against bribery. So they also support Dravian rule. No one is bothered about the real progress. How BJP is going to make inroads in TN ? Nirmala's potential could be better utilised for the benefit of India.

 • Vijay D Ratnam - Chennai,இந்தியா

  ஜெயலலிதாவுக்கு பிறகு தமிழ்நாட்டு அரசியலில் இப்போது ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை நிரப்ப யாருமில்லை. நிர்மலா சீதாராமன் மாதிரி சிறந்த படிப்பாளிகள், அறிவாளிகள், திறமைசாலிகள், முக்கியமாக நேர்மையாளர்கள் தமிழகத்தை ஆளும் பேச்சுக்கே இடமில்லை. மக்களுக்கு இருந்தது ரெண்டே சாய்ஸ். மன்னார்குடி மாஃபியா, திருக்குவளை மாஃபியா. இதில் மன்னார்குடி மாஃபியாவின் ஆட்டம் க்ளோஸ். இனி மிச்சம் இருப்பது அதைவிட ஆயிரம் மடங்கு தீமைகளை விளைவிக்கும் திருக்குவளை மாஃபியா கூட்டம். அதன் ஆட்டத்தை முடித்து வைத்தால் தான் தமிழ்நாட்டுக்கு விடிவுகாலம். அதுவும் ஆறு வருடங்களாக பதவியில்லாமல் பயங்கர பசியோடு காத்து கிடக்கும் ஓநாய். இப்போது அவற்றின் ஜென்மவிரோதி ஜெயலலிதாவும் இல்லை. தமிழ்நாடு திருக்குவளை மாஃபியா கையில் சிக்கினால் அதன்பிறகு தமிழ்நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது. ஒரு லட்சத்து எண்பத்தாறாயிரம் கோடியை சர்வாதாரணமாக ஆட்டயப்போட்ட திருக்குவளை மாஃபியாவும் ஒழிந்தால் தான் தமிழகம் பிழைக்கும். விழிப்போடு இருக்க வேண்டும்.

 • மணிமேகலை - paris ,பிரான்ஸ்

  தமிழ்நாட்டில் பிஜேபி தலைகீழாக நின்றாலும் 3 % ஓட்டுக்குமேல் வாங்கமுடியாது .

 • vns - Delhi,இந்தியா

  இல்லாத செய்திக்கு இத்தனை கருத்துக்களா? நிர்மலா சீதாராமன் தமிழகத்திற்கு வரமாட்டார். அவர் ராணுவ அமைச்சர் ஆக வாய்ப்புள்ளது .

 • Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா

  அடங்காத பசு ஒண்ணு அடிமாடா போகுதடி கண்மணி? கண்மணி?

 • Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  Thiramayanavar. nirmala..valthukal.

 • Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  Nirma good choice. Silar jathi solli Neely kaneer vadika vendam

 • dselva -

  எந்த கட்சியும் பதவியில் இருக்கும்போது அடி மட்டத்தில் இருக்கின்ற தொண்டர்களுக்கும் ஏதாவது செய்தால் தான் மறுபடியும் ஆடசிகட்டிலில் உட்கார வைப்பார்கள் அம்பானி அதானி அவர்களுக்கும் அவங்க அடிவருடி சிவா மாரி ஆட்களுக்கு செஞ்சா சங்கு தான்டி, ஆனானப்பட்ட கர்மவீரர் காமராஜரே தோற்கடிச்ச மாநிலம் தமிழ்நாடு இந்த இணயத்துல ஒருசில கிருக்கர்களும்கருத்து முட்டள்தனமா பதிவிடுறாங்க

 • R R - Trichy,இந்தியா

  மோடியில் இருந்து தமிழிசை வரை எல்லாம் புளுகு மூட்டைகள்.....ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் சொல்லி உண்மை ஆக்கி உலா வரும் உதவாகரைகள். அட்டக்கத்தி வீரர்கள்.

 • Kaliyan Pillai - Chennai,இந்தியா

  நிச்சயமாக தமிழ்நாட்டு சாக்கடை அரசியலில் கால்வைக்க மாட்டார். கவர்னராக வேண்டுமானால் இருப்பார்

 • ILANGOVAN - SINGAPORE,சிங்கப்பூர்

  தேசிய கட்சிகள் தமிழகத்தில் வளர்வது மிக கடினம். டெல்லியின் இரண்டாம்பச்ச அணுகுமுறை நன்கு அறிந்ததே .

 • krishna - chennai,இந்தியா

  மாவட்ட தலைவர்களை அனுசரித்து போக தெரியாதவர் தொண்டர்கள் உணர்வுகளை புரியாதவர் மாநில தலைவராம் தமிழ் நாட்டுக்கு அமைச்சராக இருந்து தமிழக சாதனை என்ன ஆந்திர மருமகள் கன்னட செல்ல பிள்ளை

 • uss_ mag - Chennai,இந்தியா

  வீட்டில் சமைத்து சாப்பிட்டால் GST வரி கிடையாது என்று சொன்னவர் தானே இவர் 😡

 • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

  இவரை தமிழக கவர்னராக நியமிக்கும் வாய்ப்பு இல்லை. தமிழக பிஜேபி தலைவராக நியமிக்கும் வாய்ப்பே அதிகம். தனது துறையில் அபாரமான திறமையை காட்டியவர். லண்டனில் மிகப்பெரும் பொறுப்பில் வேலை செய்து கொண்டு வந்தவர். பாரம்பரிய கான் கிராஸ் அரசியல் குடும்பத்தில் இருந்து வந்திருந்தாலும் பிஜேபி கட்சியின் கொள்கை ஈடுபாட்டினால் ஈர்க்கப்பட்டு வந்திருக்கிறார். அப்பழுக்கற்ற அரசியல்வாதி. கொள்ளைகளுக்கும் லஞ்சங்களுக்கும் பெயர் பெற்ற தமிழ்நாட்டில் இவர் இறங்குவது, சிறந்த ஊழலில்லாத திறமையான தமிழகத்தை நினைக்கும் தமிழர்களுக்கு காணாமல் போன முத்தை கண்டெடுத்த சந்தோசம் வரும். முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள் அன்பு சகோதரி.

 • சூரிய புத்திரன் - வெள்ளைக்காரன் பட்டி , கிர்கிஸ்தான் , ,கிரிகிஸ்தான்

  ஒருவேளை தமிழக பா.ஜ.க தலைவரானால் ..... சந்தோசமாக வரவேற்கலாம்.... மிக திறமையான, தெளிவான, உறுதியான, நேர்மையான, எளிமையான பெண்மணி. திராவிட பீடைகளும், திராவிட அடிமைகளும் இவரை நக்கலடித்து பொங்குவார்கள் ..பொங்குவோர் பொங்கட்டும்..... திராவிடம் என்று சொல்லி மக்களை அரை நூற்றாண்டாய் ஏமாற்றிய திருட்டு திராவிட கழகங்கள் காலப்போக்கில் மங்கி அழிந்தொழியும், 2024 தமிழக சட்டசபை தேர்தலில் பா.ஜ.க குறிப்பிட தக்க கட்சியாக தமிழகத்தில் வளர்ந்து நிற்கும் .... இது உறுதி..... ஜெய் ஹிந்த்

 • Kalyani S - Ranipet,இந்தியா

  "இந்திய வர்த்தகத்தை உலக அளவில் பேச வைத்ததைவிட" மோடியும், பா.ஜ., தேசியத் தலைவர் அமித் ஷாவும் இவரை வைத்து நிறைவேற்ற போட்டிருக்கும் திட்டங்கள் பெரிசு.............

 • Sivagiri - chennai,இந்தியா

  ஹெச் ராஜா - நிர்மலா கூட்டணி பாஜக படுதோல்வி - இருவருக்கும் அவாளைத்தவிர அனைவரும் அலர்ஜிதான் - இருவரையும் அமிட்ஷா-மோடி நம்புவார்கள் ஆனால் தமிழ்நாடு நம்பாது . . . ஆனால் குடும்பத்தில் ஆளுக்கு ஒருவர் ஆளுக்கு ஒரு கட்சியில் இருந்து கொண்டு ரம்மி ஆடும் தெக்கத்தி குடும்பம் / கொங்கு குடும்பம் / போன்ற குடும்பங்களின் கட்டுப்பாட்டிலிருந்து கட்சியை காப்பாற்றினால் நல்லது . . .

 • Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா

  இந்த புண்ணியவதி தான் ஏன் ஹோட்டல் போறீங்க போனா TAX கட்டுங்க என்றவர் கடலை மிட்டாய் வரியை நியாயப் படுத்தியும் பேசிய தெய்வ மங்கை யார் வந்தாலும் காவிகளுக்கு வேலை இங்கு இல்லை

 • Visu Iyer - chennai,இந்தியா

  தமிழக மக்களை அவர்கள் சரியாக புரிந்து கொள்ள வில்லை.. மோடியே தமிழகத்தில் முதல்வர் வேட்பாளராக வந்தாலும் மக்கள் ஏற்க மாட்டார்கள். குமரி ஆனந்தன் அவர்களுக்காக தான் அந்த அம்மாவுக்கு மதிப்பு..

 • sakthi - chennai,இந்தியா

  இவரின் தமிழ்நாடு ஆதரவு நடவடிக்கையை தான் கடந்த ஆண்டு பார்த்தோமே.. காவேரி பிரச்சினையில்... நடுவர்மன்றம் அமைப்பில். இருக்கும் ஒன்னு இரண்டு ஓட்டும் இல்லாமல் போகிடும்.

 • Karuthukirukkan - Chennai,இந்தியா

  நல்ல காமெடி .. சிறந்த அமைச்சராக இருந்தார் , உலக அளவில் இந்தியாவை பற்றி பேச வச்சார், திறமையான பெண் , தமிழ் பெண் வேற ?? இதெல்லாம் யாரு சொன்னா ?? நாங்களே சொல்லிகிட்டோம் ..

 • Sanny - sydney,ஆஸ்திரேலியா

  தமிழிசைக்கு பேரிடியாக போகுதே, இதுக்கும் மாற்று கருத்து சொல்லுவாங்களா? அல்லது சேர்ந்து பணியாற்றுவாங்களா?

 • MANI DELHI - Delhi,இந்தியா

  பல காலம் தேசிய அளவில் அரசியல் களத்தில் இருந்த இவர் இன்று மாநில அரசியலுக்கு வரக்கூடிய வாய்ப்பு இருக்குமேயானால் மாநில அரசியலின் சச்சரவுகளை அவர்கள் எளிதாக கடக்கக்கூடியவர் தான். மேலும் இங்கு கருத்து சொன்ன வாசகர்கள் ஆதரவாகவும் எதிராகவும் பதிவு செய்து இருந்தாலும் ஒரு மாற்றம் வருவதற்கான பிரதிபலிப்பை உள்வாங்கி இருக்கிறார்கள் என்றே தெரிகிறது. காலத்திற்கு ஏற்ப மாற்றங்களை நாம் சந்திக்க வேண்டும் என்பதை உணர்த்துவதே மாற்றம் ஒன்றே மாறாதது என்ற வாசகம். அந்த அளவில் நிறைவுள்ளதாக உள்ளது. மாற்றம் வரவேண்டும் நாமும் நம் சிந்தனைகளால் மாற வேண்டும் என்பதே காலத்தின் கட்டாயம்

 • Dol Tappi Maa - NRI,இந்தியா

  கொள்ளையடித்தாலும் ஜெயா அறிவாளி நல்லவர் இரும்பு பெண்மணி , சசி கொள்ளைக்காரி அப்பாவி ஜெயாவை ஏமாற்றிவிட்டார் . அது எப்படி அறிவாளி இரும்பு பெண்மணி சசியிடம் மட்டும் அப்பாவி ஆனார் என்று ஒருத்தனும் கேட்க மாட்டான் .ஜெயவுக்கு பதிலாக இன்னொரு தெலுங்கு பிராமணரை பிஜேபி போடுகிறது .பிராமணரை போட்டால் எவ்வளவு ஊழல் செய்தாலும் பெரிய ஆதரவு இருக்கும் . கார்கில் விதவைகளின் வீடுகளை அபகரித்த மத்திய ரயில்வே அமைச்சருக்கு என்ன புகழ் மாலை என்கிறீர்கள் . இன்னும் மனுதர்ம ஆட்சிதான் நடக்கிறது இந்தியாவில் .

 • Krishna Prasad - Chennai,இந்தியா

  எனக்கு தெரிந்து ஒரு state இல் இருப்பவர் அதே state க்கு ஆளுநகராக வரமுடியாது வேறு state இல் இருந்து தான் வர வேண்டும். நான் சொல்லுவது சரியா கொஞ்சம் தெளிவு படுத்துங்கள் நம் GK வை கொஞ்சம் வளர்ப்போம்

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டால், தமிழக பா.ஜ., கட்டாயம் எழுச்சி பெறும் என்று சொல்லும், தமிழக பா.ஜ.,வினர் எத்தனை பேர்?

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  கடந்த தேர்தலில் முன் நிறுத்தி இருந்தால் ஓரளவு வெற்றி பெற்று இருக்கலாம் , துணிச்சலானவர் வாழ்த்துக்கள்

 • balakrishnan - coimbatore,இந்தியா

  இந்திய வர்த்தகத்தை உலக அளவில் பேசவைத்தாராம், இல்லாவிடில் இந்திய வர்த்தகம் உலகத்துக்கு தெரியாமல் போயிருக்கும், 2000 வருஷத்துக்கு முன்னாலேயே தமிழர்கள் ரோமாபுரி பேரரசுடனும், எகிப்திய பேரரசுடனும், சீன பேரரசுடனும் வியாபாரம் செய்து வந்தவர்கள், அது கிடக்கட்டும் இவர் வந்து என்ன செய்யப்போகிறார், ஒன்றும் இல்லை, கத்தி போயி வாளு வந்ததது டும் டும் டும்

 • வெங்கட்ராமன் ஜி - Chennai,இந்தியா

  நான் நிர்மலா சீதாராமன் அவர்கள் தமிழக பா ஜ க தலைவராக வருவதை வரவேற்கிறேன். திறமைசாலி மேலும் நாணயமானவர் . அவருடைய நிதானம் மற்றும் அறிவு கூர்மை அவரது பேட்டிகளில் தெரியும். அதற்க்காக தமிழிசை திறமையானவர் இல்லை என்று பொருள் இல்லை .

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  @ Sriram : அடுப்பை பத்தவைடா முதல்ல .. அப்புறம் பாரு வேகுதா இல்லையான்னு..." - சிவசங்கரி கதைல வர்றமாரி அடுப்பு முன்னால ஒக்காந்து பத்தவச்சு காமிச்சா அடுப்பே கடுப்புல அணஞ்சுடும்....... கதைய படிச்சிருந்தா புரியும்.....

 • பாரதி - Chennai ,இந்தியா

  நிர்மலா சீதாராமன் நேர்மையானவர் . அவர் பிறப்பால் தமிழர் . ஆனால் ஆந்திரகாரரை திருமணம் செய்து கொண்டவர் . நல்ல நிர்வாகி . ஆனால் தமிழ் நாட்டிற்கு சரி பட்டு வரமாட்டார். ஏனெனில் இங்கு ஒன்று குடும்ப ஆட்சி அல்லது ஊழல் ஆட்சி செய்ய வேண்டும் . அப்போது தான் மக்கள் ஓட்டு போடுவார்கள் . அதுதான் வரலாறு . ஆதலால் இவரை மக்கள் தெரிந்து எடுக்க வாய்ப்பு இல்லை

 • Mal - Madurai,இந்தியா

  Ponnar.... Good person, talks with sense and smile and sometimes gives it back if asked irrelevant questions... H.Raja talks out things every Hindu has in mind but pseudo seculars /minorities don't like him because they have their eyes closed... I like his views... Tamilesai talks with a mocking smile but her connection with Congress father (Chris, I suppose) and relatives is a little suspicious... Raghavan talks well too with good points and good memory... But has to learn to smile...a little bit serious person.... I have always wanted to see how it will be if he talks with a smile... Vanathy is good, talks good but her voice is a little minus ... Sweet girl... Looking forward to more leaders in Tamil nadu bjp

 • ரபேல் ஊழல் நாயகன் மோடி: - Ariyalur,இந்தியா

  நீட் தேர்வு புளுகுமூட்டை நிர்மலா.

 • ரபேல் ஊழல் நாயகன் மோடி: - Ariyalur,இந்தியா

  நீட் தேர்வு விலக்கு என்று சொல்லி தமிழக மாணவர்கள் முதுகிலும் தமிழக பெற்றோர்கள் நெஞ்சிலும் குத்திய நிர்மலா தமிழக பிஜேபி தலைவராக நியமிக்கப்பட்டால் பிஜேபி வேரில் வெந்நீர் ஊற்றியது போல ஆகிவிடும். பிஜேபியை வேரோடும் வேரடி மண்ணோடும் சாய்க்க இவர் நியமிக்கப்பட வேண்டும்.

 • dselva -

  ஏம்பா உன்னை நம்ப வைத்து கழுத்தறுக்க போறாங்க, பொதுவா நார்த் இந்தியன் லீடர்ஸ் வந்து சவுத் இந்தியன் லீடர்ஸ் நம்பமாட்டார்கள் ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம உங்க கொள்ளு பாட்டி இல்ல மோடீஜியோட கொள்ளு தாத்தா வந்தா கூட தமிழ்நாட்டுல கால் ல ஊனமட்டீங்க

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  "வூட்ல சமச்சு சாப்ட்டா GST கெட்ட வேணாம்" னு சொல்லி World famous ஆனது தான் நிம்மியோட சாதன....

 • Mal - Madurai,இந்தியா

  Good choice.... It was first in a debate I saw her... May be in thanthi TV.... That was before bjp government in centre.... I was really amazed by the way she talked firmly and with good points.... And with a cool head too... She is also simple like ponnar..... Wish she brings good governance in Tamil nadu bjp and also for tamilnadu in future.... She has to be duty conscious and ignore all people who keep shouting for silly things.. and turn a deaf ear to those....

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  தமிழிம்சைக்கும், எச். ராஜாவுக்கும் வாய்ப்பு தரவில்லையா? காது கிழியிற மாதிரி கத்திண்டு கெடந்தாளே பாவம்..

 • Prince - Chennai,இந்தியா

  யாரும் இல்லாத கடைல யாருக்கு டீ ஆத்த போறாங்க..

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  சீன பட்டாசு, ஜல்லிக்கட்டு, ஹைட்ரொ கார்பன், கதிராமங்கலம், நீட் தேர்வுன்னு வரிசையா இந்தம்மா புழுகின பொய்களை பட்டியல் போட்டால் அடேங்கப்பா.. இந்தம்மாவை தமிழகத்தில் பாஜகவை வளர்க்க கொண்டாங்க.. பாஜகவில் இருக்கிற கொஞ்ச நஞ்சமும் சீக்கிரமே கருகி சாம்பலாகட்டும் ..

 • nation first - MUMBAI,இந்தியா

  தமிழ் நாட்டு அரசியலை இவர்கள் புரிந்துகொள்ளவில்லை. நண்பர் " தமிழர் நீதி" கருத்துதான் சரி .

 • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

  ///...மத்திய அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன். கடந்த மூன்று ஆண்டுகளாக மத்திய வர்த்தகத் துறை அமைச்சராக இருந்து, இந்திய வர்த்தகத்தை உலக அளவில் பேச வைத்தவர்....// இந்த வாக்கியத்தை படிச்சப்போ சிரிச்சவங்க எனக்கு லைக் போடுங்க...

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  நல்லா கூசாமல் பொய் சொல்லும் இந்தம்மா.. புளூ வேல் எப்படி பள்ளி மாணவர்கள், இளைஞர்களுக்கு ஆபத்தோ, அதை விட பல மடங்கு ஆபத்து இந்த புளுகுணி வேலால் தமிழகத்துக்கு ஏற்படும்.

 • kuthubdeen - thiruvarur,இந்தியா

  முதல்வர் பதவிக்கெல்லாம் ஆசை வந்துருச்சா ?நல்ல வேடிக்கையான செய்தி .

 • Muruganandam - karaikal,இந்தியா

  ஸ்ரீராம் தமிழிசை சார்ந்த சமூகம் தான் இன்று பி ஜே பி யை தாங்கி பிடிக்கிறது, அனால் அந்த சமூகத்தை உங்களுக்கு பிடிக்காது, இனி அந்த சமூக ஆதரவும் உங்களுக்கு சங்குதான்,

 • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

  நிர்மலா அவர்களை ஒன்று மாநில தலைவர் ஆக்குங்கள், இல்லை ராணுவ மந்திரி ஆக்குங்கள்....

 • Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா

  இந்த நிர்மலா அல்ல, மற்ற யார் தமிழ் நாடு பிஜேபி தலைவராக வந்தாலும் பிஜேபிக்கு தமிழ் நாட்டில் பட்ட நாமம்தான் பிஜேபியிலிருந்து தமிழ் நாட்டுக்கு முதல்வர் வேட்பாளரா? நல்ல காமடி ஹா ஹா............................... ஹா

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  எனக்கென்னவோ இது சரியாக படவில்லை. திறமையான அமைச்சர் , அதே துறையில் அவருக்கு பதவி உயர்த்தி இருக்கலாம். தமிழக திராவிட சாக்கடையை சமாளிப்பது கடினம் , இங்கே மூளைக்கு வேலை கிடையாது. மூர்க்கம் மட்டுமே.

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  EVEN IF YOU NOMINATE MODI AS TN CM CANDIDATE, HE TOO WILL LOSS THE ELECTION... NIRMALA ? REALLY PITY ABOUT BJP.. I THINK BJP IS CLUE LESS . TRIED WITH OPS NOW EPS NEXT RAJINI... N NIRMALA.....BJP HAS TO CHANGE ITS COLOR ...THEN ONLY ATLEAST IT WILL RETAIN ITS DEPOSIT

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  இவராலும் பலன் இருக்காது ......

 • G kumar - Chennai,இந்தியா

  Super advance congratulation madam

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  நாடார்கள்தான் பிஜேபி ஐயை தூக்கிப்பிடித்தார்கள் , போனமுறை பொன்னாரை MP ஆக்கினார்கள் . அவர்களில் பெரும்பான்மையினர் AIADMK வில் தேவர்கள் சங்கமித்துப்பதுபோல பிஜேபி இல் உள்ளார்கள் . இந்த பிறப்பால் பிராமணர் இடத்தால் தமிழர் ஆன திருமதி .சீதாராமன் NEET இல் தமிழகத்தை வாரிவிட்டது அனைவருக்கும் தெரியும் . இப்போதைக்கு வானதி ஸ்ரீனிவாசன் தான் காதல் கடிதம் பெருமளவுக்கு பாப்புலர் . என்ன தமிழிசை பதவி முடிந்ததும் , அவரை நீக்கும் பட்சத்தில் பிஜேபி தமிழகத்தை ஒன்றும் இல்லாமல் ஆகும்,அதை வானதி ஸ்ரீனிவாசன் கவுண்டர் காப்பாற்றலாம் . மற்றபடி மொத்தம் ஐந்து பேர் மட்டும் தான் ஜாதியில் உள்ள நிர்மலா மாமிக்கு பல்லக்கு தூக்க இங்குள்ள நாடார்களும் ,கவுண்டர்களும் விரும்ப மாட்டார்கள் . ஒரே ஜொய்ஸ் எங்கும் மதிப்பில்லாத பன்னீரை தலைவர் ஆக்கிடலாம் தமிழக பிஜேபி க்கு . இப்போது மறைமுகமாக AIADMK போர்வையில் பிஜேபி கட்சிலிருக்கும் பன்னீர் நன்கு கவனிக்கப்பட்டால் பிஜேபி கு நல்ல எதிர்காலம் இருக்கு . அவருதான் கையில் கயிறு , நெற்றியில் குங்குமம் ,திருநீர் தேவைப்பட்டால் காவி உடுத்தி வருகிறர் . என்ன கொஞ்சம் அமைதியானவர் , அதை வெட்டு குத்து ,தீ வைப்பு என்று வடக்கில் பிஜேபி ஸ்டைல் சொல்லிக்கொடுத்தால் , குனிந்த முதுகு ,டயர் நக்குதல் நீங்கி பிஜேபி கு தகுதியானவர் ஆவார் . சம்ஸ்கிருதமும் ஐயரும் இங்கு எடுபடாது . பெரியார் நிறைய செய்துட்டு போயிட்டார் , ஜெயா கூட திரவிட கட்சி பேரில்தான் ஆட்சி பிடித்து ஆட்டம் போட முடிந்தது . இதனால் இந்த நிர்மலாவை தமிழகம் அனுப்புவது சரிப்பட்டு வராது . அதுக்கு இது ஒத்துவராது .

 • sethuram - kuwait,குவைத்

  இது அருமையான திட்டம். தமிழகத்திற்கு ஒரு தகுதியான இரும்பு பெண்மணி முதல்வராக வருவது மிகவும் நல்லது. முதலில் இந்த காமெடி OPS மற்றும் EPS தூக்கி அந்தப்புரம் வைத்து விட்டு பிஜேபி இந்த தகுதியான தலைவியை தமிழ் நாட்டு முதல்வர் பதவிக்கு இப்பொழுதே வேட்பாளராக அறிவிக்க வேண்டும். நல்ல ஆரம்பம்

 • Muruganandam - karaikal,இந்தியா

  ஆஹா, அருமை, ஹோட்டல் ல சாப்பிடறவங்களுக்கு GST வரியால பாதிப்பு அதிகமா இருக்குனு சொன்னதுக்கு நாங்க வீட்டுல சமைச்சு சாப்பிடறவங்களுக்கு வரி போடலைனு sonna ஆணவ. அறிவுக்கொழுந்து அம்மாவாச்சே, வாங்க, வந்து பாருங்க தமிழ்நாட்டுக்கு, ஒரு முனிசிபல் கவுன்சிலர் கூட தனியா நின்னு ஜெயிக்க மாட்டிங்க,

 • பலராமன் - Cuttack-Bhubaneshwar Twin City,இந்தியா

  அப்படி நடந்தால் அது மிகவும் நல்ல முயற்சி.....

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  ".......இந்திய வர்த்தகத்தை உலக அளவில் பேச வைத்தவர்" - Sooooooppppper அப்பு.... ஆம்ம்மா......, யாரு இப்படியெல்லாம் எழுத சொன்னா....?

 • Ashokkumar -

  மற்றுமொரு ஜெ. போதும், ஏற்கனவே பட்டது.

 • S.ANANDARAJ - tirupur, udumalpet,இந்தியா

  வாழ்க நல்லது நடக்கட்டும்

 • Ravi K - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  நல்ல முயற்சி, உறுதியான, திறமையான ஒருவர், தமிழ்நாட்டுக்கு இப்போது தேவை. வாருங்கள் தமிழகத்தை முன்னேற்ற. க.இரவி

 • ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா

  கனவு காண எல்லாருக்கும் உரிமை உண்டு . நிச்சயமாக டுமீலிசையை விட இவர் நல்ல தேர்வு தான். ஆனால் இவர் செய்த மிகப் பெரிய தவறு ஒன்று உள்ளது . WTO நிறுவனம் குடுத்த அழுத்தத்தினால் , உணவு மானியத்தை குறைப்போம் என்று ஒப்புக் கொண்டுள்ளார் .அது மானிய விலையில் அரிசி உணவு உட்கொள்ளும் ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் செயல். திறம்பட செயல் புரிபவர் என்றாலும் கூட ஆட்சி பிடிக்கும் அளவுக்கு தமிழ் நாட்டில் பா ஜ க இல்லை என்பதே உண்மை. தவிரவும் இப்போது பல பா ஜ க தலைவர்கள் சுய நலத்தோடும் , உட் கட்சி பூசலிலும் ஈடுபட்டு கான் + க்ராஸ் போல் செயல் படுகிறார்கள் . உதாரணம் இல. கணேசன் நடத்தும் தனி ஆவர்த்தனம் .ஒரு பக்கம் H ராஜா ஒரு பக்கம் டுமீலிசை என்று சுயபாரணம் பாடுவதற்கும் கோஷ்டி கானம் நடத்துவதற்கும் , பணம் சம்பாதிக்கவும் ஈடுபட்டுள்ளார்கள் . RSS இயக்கத்தில் உள்ள ஒழுக்கம் , சுய கட்டுப்பாடு எல்லாம் இங்கு வந்தவுடன் காணாமல் போகிறது .அதனால் இந்த கனவு பகல் கனவு என்று தான் நினைக்கிறேன்

 • Pandiyan - Chennai,இந்தியா

  திறமையான...தைரியமான ...பெண்மணிதான் ...ஆனால் H ராஜா.. போன்றவர்கள் தமிழக பிரச்சனைகளில் கொஞ்சம் வாயை அடக்கிவாசித்தால் ..பிஜேபி வளர்ச்சியை எதிர்பார்க்கலாம்

 • Giridharan S - Kancheepuram,இந்தியா

  நம்பிட்டோம்யா. டாக்டர் அம்மா நல்லாத்தானே தலைமை தாங்கிட்டு இருக்காங்க. அப்புறம் இவரை நியமிச்சாங்கன்னா தமிழக மக்கள் ஏத்துக்க மாட்டாங்க. ஏன் தெரியுமா நீட்டலே இருந்து அவங்க சொன்ன மாதிரி ஒரு வருடம் விலக்கு வாங்கித்தர பொய்யான வாக்குறுதி கொடுத்ததால்

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  Let the BJP do all gimmicks,magics and dramas by bringing this BJP leader Mrs.Nirmala Sita Raman into our state Politics in order to strengthen their party in Tamil nadu will not yield any fruit and it will only as dream.The people of Tamil nadu won't accept any leader as their CM from DMK,AIADMK,Congress or BJP in future.They can accept any one as their CM from any other political parties other than the above.The BJP is under estimating and miscalculating about the people of Tamil nadu in this regards.The people won't ,ever and never need this BJP in our state in coming days.

 • Kailash - Chennai,இந்தியா

  நல்லவர் ஆனால் அராஜகமாக பேசுபவர். GST மற்றும் பல விவகாரங்களில் துச்சமாக பேசியவர். இவர் தமிழக பாஜ முதல்வர் வேட்பாளரா?

 • tamilan -

  பருப்பு வேகாது என்றே தெரிகிறது

 • MANI DELHI - Delhi,இந்தியா

  ஹிந்தி ஆங்கிலம் தமிழ் மேலும் சில மொழிகளில் நல்ல திறம்பட பேசும் ஆளுமை உள்ளவர். மேலும் ஆணித்தரமாக பேசக்கூடிய வல்லமை பெற்றவர். எனக்கு தெரிந்த வரை இன்றுவரை அரசியல் ஆளுமைகள் மக்களுடன் மன ஓட்டத்தை அறிந்து பேசுபவர் தான் மக்களின் ஆதரவை பெற்று இருக்கிறார்கள். மேலும் தமிழ் நாட்டில் அதிமாக அவர் மக்களை சந்திக்காவிடினும் அவர்க்கு மக்களின் நியாயமான எதிர்பார்ப்புகளை பிரதி பலிக்கக்கூடியவர் என்பதால் இந்த நகர்வு இருக்கலாம். மற்ற படி கவர்னர் ஆக்குவதற்கு வாய்ப்பு இல்லை. மேலும் அதிகாரிகள் என்றுமே நல்ல படித்த திறமையான தலைமகளுடன் பணியாற்ற விரும்புவார்கள். அந்த முறையில் அவர்க்கு தமிழ் நாட்டில் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக அது நன்மையில் முடியும். இன்றைய பிஜேபி தமிழக தலைவரை போல் பொது விமர்சனங்களை யோசித்தே மக்களிடையே வைப்பார். அரசியல் பேசியே மக்களின் வளர்ச்சிக்கு வித்திடாத அணுகுமுறை கொண்டுள்ள திமுக, வி சி, கம்யூனிஸ்டுகள் போன்ற கட்சிகளுக் சிறந்த எதிர் முனையாக இருப்பார் என்பதில் எந்த ஐயமும் இல்லை. கண்டிப்பாக தேசிய அரசியல் தான் செய்வார். சுயலாப அரசியல் செய்யமாட்டார்.

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  டீசெண்டான நிர்மலா போன்றவர்களுக்கு தமீழகம் போன்ற சாக்கடை அரசியல் ஒத்துவராது. கலப்பு மணம் புரிந்தவர் என்பதையறிந்தாலும் ஆரியர் எனக்கூறி நோகடிப்பர்.(இந்திரா  நேரு ராஜீவ் போன்ற காஷ்மீர் ஆரியர் மட்டும் பரவாயிலையாம் போலி திராவிடர்க்கு ஓகே யாம்).ஆபாச அர்ச்சனை பொல்லாங்கு அயோக்கிய மீம்ஸ் போன்றவற்றால் மனோதிடம் மிகுந்தவர்களையும் தடுமாறவைப்பர். நிர்மலாஜி இந்த படித்த முட்டாள் சமூகம் உங்களுக்கு ஒத்துவராது.புகுந்தவீடான   ஆந்திராவே தேவலாம்.

 • JyranGopi -

  wow super...inimel Tamizhaga B.J.P valarchi perum..vazhthukkal

 • HSR - Chennai,இந்தியா

  சூப்பர் ஐடியா . நான் நினைத்தேன் இவரை முதல்வர் வேட்பாளராக போடுவார்களா என்று ,,,, நல்லது, தமிழிசை மிகவும் டைர்ட் ஆகியிருப்பார்,, இவரே சிறந்த தேர்வு,, மூடர்களே மூடர்களே .. ரொம்ப வருடம் கழித்து ஒரு நல்ல முதல்வர் வேட்பாளர் வந்தா ஆதரிப்பீர்களா ? அல்லது வழக்கம் போல் சொதப்புவீர்களா? முடிவு உங்கள் கையில், , அல்ல விறல் நுனியில்

 • Mohan Ramachandran - chennai,இந்தியா

  இந்திய வர்த்தகத்தை உலக அளவில் பேச வைத்தவர். நிர்மலா சீதாராமன்-125 கோடி மக்கள் வாழும் நாடு .அந்த மக்கள் தொகை பேச வைத்திருக்கும் .

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement