Advertisement

கர்நாடகாவில் மீண்டும் காங்., அரசு கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது

பெங்களூரு, 'கர்நாடகாவில், மீண்டும் காங்கிரஸ் அரசு அமையும்; பா.ஜ., இரண்டாவது இடத்தைப் பிடிக்கும்' என, கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.


கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு அமைந்துள்ளது. இங்கு, 2018 துவக்கத்தில், 225 தொகுதிகள் உடைய சட்டசபைக்கு தேர்தல் நடக்க உள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் தேர்தல் நடந்தால், அங்கு யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது என்பது குறித்து, 'சி - போர்' என்ற அமைப்பு ஆய்வு நடத்தி, கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது.


ஜூலை, 19 முதல், ஆகஸ்ட், 10 வரை நடந்த இந்தக் கருத்துக்கணிப்பின் போது, 165 தொகுதிகளில், 24 ஆயிரத்து, 676 பேரிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது.கருத்துக் கணிப்பின் முடிவுகளின் படி, காங்., கட்சி, 120 முதல், 132 இடங்களில் வெற்றி பெறும். பா.ஜ., 60 - 72 தொகுதிகளில் வென்று, இரண்டாவது இடத்தைப் பிடிக்கும்.


மதச் சார்பற்ற ஜனதா தளம், 24 - 30 தொகுதிகளில் வெற்றி பெறும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரசுக்கு, 43 சதவீதம், பா.ஜ.,வுக்கு, 32 சதவீதம், மதச் சார்பற்ற ஜனதா தளத்துக்கு, 17 சதவீத ஓட்டுகள் கிடைக்கும் என, கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சமீபத்தில் கர்நாடகாவுக்கு சுற்றுப்பயணம் செய்த, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா, 150 தொகுதிகளில், பா.ஜ., வெற்றி பெறும் என கூறியுள்ள நிலையில், இந்த கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (160)

 • Sitaramen Varadarajan - chennai,இந்தியா

  திரு பாமரன் - நம்மூர்தான்,இந்தியா அவர்களே.......பகுத்தறிவை தொலைத்து விட்டு இப்படி பாவம்..........இப்படி எல்லாம் கருத்து எழுத வேண்டும் என்பது உங்கள் தலை விதி. யாரை நொந்து கொள்வது.

 • பொன் வண்ணன் - chennai,இந்தியா

  உடனே பிஜேபி ரஜினி காந்தை கர்நாடகாவிற்கு அனுப்பி பிரச்சாரம் செய்ய சொல்ல வேண்டும் ...மொத்த தொகுதிகளையும் அள்ளி விடலாம்...

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  இது பொய்யானது என்று பிஜேபி வாசகர்களும் , சூப்பர் என்று காங்கிரஸ் வாசகர்களும் எழுதுங்க பொழுது போகணுமே.

 • Somaiah Ramakrishnan - Bangalore,இந்தியா

  கர்நாடக மக்கள் எப்போதும் மத்தியில் ஆள்பவர் களை தான் ஆதரிப்பார்கள் . இந்த கருத்துக்கணிப்பு தவறு . அவர்கள் எப்போதும் சினிமா காரர்களை ஆதரிப்பது இல்லை. தங்கள் நலம் மட்டுமே பார்ப்பவர்களை தான் ஆதரிப்பார்கள்.

 • Guru - Bangalore,இந்தியா

  பி.ஜெ.பி இந்தியா முழுவதும் வெற்றி அடைய வேண்டும், சுதந்திர இந்தியாவில் இதுபோன்ற ஒரு சிறந்த தர்மமான நேர்மையான ஆட்சி நடைபெற்றதே பாஜகவினால் தான். இனி இது போன்ற ஆட்சி தான் வர வேண்டும். , இதுபோன்ற ஒரு பிரதமரும் நமக்கு நிரந்தரமான தேவை என்று அனைத்து தேசபக்தி கொண்ட இந்தியர்களும் உணர்ந்து விட்டார்கள். இதுதான் சரியான கருத்து. சீரான கருத்து. சாத்தியமான மக்கள் கருத்து. நண்பரே புரிந்து கொள்ளுங்கள்....

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  பா.ஜ.,வுக்கு, 32 சதவீதம் வாக்குகள் . இது தெற்கை நெருங்கும் மதவாத தீவிரத்தை காட்டுகிறது . பசுப்பாதுகாப்பு பசு அரசு தேடுவதை காட்டுகிறது . நாட்டில் மூன்று வருடம் இவ்வளவு தூக்கம் போட்டுருக்கு பிஜேபி , இருந்து பா.ஜ.,வுக்கு, 32 சதவீதம், என்றால் , ஆதரவு தெரிவிப்பார் யார் என்று கண்டுபிடித்து , அவர்களை காவிகளின் தீவிரவாதம் பற்றி சொல்லி மனம் மாற்றாவிட்டால் ,சீக்கிரம் தெற்கு உ பி ஆகிடும் ஆபத்து இருக்கு . வரிப்பணம் பசுவுக்கு மட்டும் போகும் அபாயம் இருக்கு . தெற்கை காத்திட , மத தீவிரவாதத்தை வெறுப்போர் ஓன்று சேரவேண்டும் .

 • Giridharan S - Kancheepuram,இந்தியா

  முன்கூட்டியே இந்த மாதிரி கருத்து தெரிவிப்பதால் அந்த அரசுக்கு தான் ஆபத்து

 • krishna - cbe,இந்தியா

  சசிகலாவை சிறையில் வைத்திருக்கும் லட்சனத்தை பார்த்தாலே தெரியும் இந்த கர்நாடக காங்கிரஸ் அரசின் செயல் பாடுகள்.

 • Karunan - udumalpet,இந்தியா

  காசு கொடுத்து congress போட்ட கருத்துக்கணிப்பு

 • ganapathy - khartoum,சூடான்

  இந்த கருத்து கணிப்பை படித்தவுடன் பா.ஜ.க. ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவு..." எப்படியாவது ராகுல் காந்தியை பிரச்சாரத்துக்கு போக சொல்லி உசுப்பி விடணும்....சுஸ்மா ஸ்வராஜ், ஸ்மிரிதி இராணி போன்றவர்கள் ராகுல் பிரச்சாரம் பண்ண தயாரா என்று உசுப்பி விடணும்.... அப்பறம் எப்படியாவது வை.கோ..வை சீத்தராமையாவை ஆதரித்து ஒரு போஸ்டர் ஏதாவது... காவிரியில் நீர் திறந்து விட்ட தலைமகனே உனக்கு நன்றி... என்று போஸ்டர் ஓட்டினா..போதும்" பாஜக...முக்கிய முடிவு..... ரகசிய ஆலோசனை கூட்டத்தில் ஒட்டுக்கேட்ட செய்தி..

 • Nakkal Nadhamuni - Chennai,இந்தியா

  காங்கிரஸ் தாங்களே ஒருத்தர வெச்சு இந்தமாதிரி பண்ணாதான் உண்டு... இதுக்குப்பேருதான் தங்க கால்ல தாங்களே விழுவதுன்னு சொல்லுவாங்க..

 • சுந்தரம் - Kuwait,குவைத்

  இந்த கருத்து திணிப்பின்படி நடக்காது. எனினும் இது பாஜகவுக்கு ஒரு முன்னெச்சரிக்கை மட்டுமே. கோவா பீஹார் பார்முலாக்களும் திருமங்கலம் பார்முலாக்களும் போதாக்குறைக்கு வாக்கு இயந்திரங்களும் நம் கைவசம் உள்ளன.

 • srini - chennai,இந்தியா

  பிஜேபி கர்நாடகாவில் தோற்றால் ...கண்டிப்பாக மத்தியில் ஆட்சிக்கு வரும்....இது கர்நாடக ராசி....

 • ganapati sb - coimbatore,இந்தியா

  உம்மன் சாண்டி போலவே சித்தராமையா அரசும் பெரிதாக வெறுப்பேதும் சம்பாதிக்காவிட்டாலும் வளர்ச்சி பணிகள் அதிகம் இல்லாத நிலையில் கேரளா போல கர்நாடக எப்போதும் ஆளும் கட்சியை மாற்றியே ஓட்டளித்து வந்துள்ளன மேலும் மத்தியில் பாஜக ஆட்சியில் இருப்பதால் மாநிலத்திலும் பாஜக வென்றால் ஈகோ ஏதுமில்லாமல் வளர்ச்சி விரைவாகும் என மாநில மக்கள் சிந்தித்தால் பாஜகவே வெல்லும்

 • karthikeyan -

  காசு கொடுத்தால் என்ன வேண்டுமானாலும் போடுவார்கள்

 • சுந்தரம் - Kuwait,குவைத்

  கிடைக்க இருக்கும் 72 இடங்களை 115 ஆக மாற்றுவதற்கு உடனடியாக தமிழக இம்சை அரசியை கர்நாடகா தேர்தலில் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி தேர்தலை சந்திக்க வேண்டும். கட் அவுட் கடவுளின் அருளாசியை சிந்தாமல் சிதறாமல் மொத்த குத்தகை எடுத்துவிடுவார்.

 • PRABHU - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  என்ன கருத்து கணிப்பு நடத்தினாலும், ஓட்டு மிஷின் நம்ம கைலதான்.... மத்திய பிஜேபி அரசு....

 • Srikanth Tamizanda.. - Bangalore,இந்தியா

  காங்கிரஸ் தேர்தலில் தோற்றால் வசதியாக EVM மீது பழி போட வேண்டும் அல்லவா? அதற்கு தான் இந்த ஒத்திகை.. காங்கிரஸ் சொம்புகள் என்று தோல்வியை ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள்? கருத்து கணிப்பு வெறும் கண் துடைப்பு..

 • Cheran - Kongu seemai,இந்தியா

  பிஜேபி அன்பர்களே இது வரை பிஜேபி ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகின்றன. என்ன சாதனை செய்தார்கள்.? மக்களிடம், அதுவும் பாமர மக்களிடம் இருப்பதையும் பிடுங்கி கொண்டுஇருக்கிறார்கள்.சாதனை என்று சொல்ல என்ன இருக்கிறது. இது பகட்டு ஆட்சி.

 • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

  துரோகிகள் தங்களை தாங்களாகவே அடையாளப்படுத்தி விட்டார்கள் 2019க்கு பின் நாடு முழுவதும் உளவுத்துறையால் கண்காணிக்கப்பட்டுள்ள ஒரு பட்டியலில் 21,013 துரோகிகள் அனைவரும் திருத்தப்படுவார்களாம்

 • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

  இந்த போலி தேசபக்தாஸ் இப்போ பதட்டப்பட்டு அலறுவது எதிர்பார்த்ததுதான். என்னைப்போல எவ்வளவோபேர் சொல்லியிருக்கிறோம்... காங்கிரஸ் கம்முன்னு இருந்தாலே போதும்.. பாஜக உயிர் குடுக்கும்ன்னு... இப்போ அதான் நடக்குது.. என்னை மூர்க்கன்னு திட்டி. கடமையை கழிக்காமல்.. புலம்பலை நிறுத்திட்டு கொஞ்சம் நாட்டு நிலவரத்தை பாருங்கப்பா...

 • Vasanth Saminathan - Trivandrum,இந்தியா

  இனிமேலாவது பிஜேபி கர்நாடக ஆதரவு நிலைப்பாட்டிலிருந்து தன்னை மாற்றிக்கொள்ளுமா?

 • Murugan - Mumbai

  தமிழர்களை வஞ்சிப்பதில் காங்கிரசின் பங்கு எப்பொழுதுமே மிக அதிகம் ஈழ போராட்டத்தில் துரோகம் செய்து பல இலட்சம் தமிழர்களின் சாவுக்கு காரணமான துரோகிகள் அவர்களைவிட பாஜக கொஞ்சம் பரவையில்லை ரகம் தான்

 • Muruganandam - karaikal,இந்தியா

  கர்நாடகத்தில் காங்கிரஸ் வெல்லும், காங்கிரஸ் முஸ்லிம்களின் ஓட்டுக்காக போலி மதவாதம் பேசுகிறது என்றால் பி ஜே பி முத்தலாக் பிரச்சினையை வைத்து முஸ்லீம் பெண்களின் ஓட்டுக்களை குறிவைப்பதற்கு பெயர் என்ன, ஆனால் அவர்களுக்கு உங்களது நாடகம் நன்றாக புரியும் அதனால் அவர்கள் ஒருக்காலும் உங்களுக்கு வாக்களிக்க போவதில்லை, ஆணவத்தை முதலில் கர்நாடக மக்கள் அடக்க போகிறார்கள்,

 • ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா

  கர்நாடகாவில் ஒரு நேர்மையான தலைவர் இருந்தால் , கண்டிப்பாக கான்+ கிராஸ் க்கு சாவு மணி அடிக்கலாம் . எதியூரப்பாவிடம் நேர்மை இல்லை . தவிரவும் உட்கட்சி பூசல்கள் பலமாக உள்ளன . அதை இப்போதே ஆராய்ந்து , அடித்தள இடத்தில் கட்சியை வலுப்படுத்த வேண்டும் . மேலும் , தகுந்த முறையில் சுற்றுப்பயணம் பிரச்சாரம் செய்து இப்போதே வலிமை ஊட்டினால் , நாசகார கான்+க்ராஸ் ஐ விரட்டலாம்

 • Dynamo - Den Haag,நெதர்லாந்து

  பாஜக தான் வெற்றிபெறும், வோட்டிங் மெஷின் இருக்க பயம் ஏன்?

 • Cheran Perumal - Radhapuram,இந்தியா

  உடனே ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தல் அறிவியுங்கள். மக்களின் மூடு மாறிவிடப்போகிறது.

 • THENDRAL HAMEED, DUBAI - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

  திரு. Swaminathan Nath - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள், ஊழல் என்பது தேசிய சொத்து எல்லாரும் பண்ணுதாங்க

 • Rajan - chennai,இந்தியா

  நான் சில பெங்களூரு நண்பர்களிடம் பேசினேன் (இந்த கருத்து கணிப்பு முன்பாகவே)...அவர்களும் காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்று சொல்கிறார்கள்....ஆனால் உள்ளாட்சி தேர்தலில் கூட கணிசமான பா.ஜ. வெற்றி பெற்றது...எடியூரப்பா முதல்வர் வேட்பாளர் என்பதால் தான் இந்த கருத்து கணிப்பு முடிவு... அமித் சா ஆனந்த் குமாரை முதல்வர் வேட்பாளர் என்று முடிவு செய்வார்கள் என்று நினைக்கிறேன்...ஆனால் அப்படி செய்தால் ஷிமோகா போன்ற வடக்கு கர்நாடகாவில் பா ஜ. தோல்வி அடையும்...அமித் சாவிற்கு இது ஒரு சவால் தான்...நாம் இது வரை பார்த்ததைவிட பலமடங்கு வேகம் காட்டுவார் பாருங்கள்...

 • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

  இன்று தலாக் தலாக் தலாக் வருகிறது. இதுவே பிஜேபி கட்சியை கர்நாடகாவில், கேரளாவில் வெற்றி பெற வைக்க போகிறது. முஸ்லீம் பெண்கள் மூர்க்கன்களின் தளைகளை தகர்த்து உத்தர பிரதேஷில் செய்தது போல கர்நாடகாவிலும் பிஜேபி அமோகமாக வெற்றி பெற வைக்க போகிறார்கள். அடிமைப்பட்டு கிடைக்கும் முஸ்லீம் பெண்களுக்காக குரல் கொடுக்கும் ஒரே கட்சி இந்தியாவிலே பிஜேபி மட்டுமே. அவர்களின் ஒரே ஆதாரமாக அடையாளமாக இருப்பது பிஜேபி கட்சி ஓன்று தான். ஆகவே பிஜேபி இந்த கணிப்பை பற்றி கவலையே பட போவதில்லை.

 • Appu - Madurai,இந்தியா

  கருத்து கணிப்புக்கள் எல்லா சமயமும் சரியாக அமைவதில்லை.குறிப்பாக பல சமயம் வேறுபட்டு தான் இருக்கும்..நான் சொல்வது வெற்றி தோல்வி மட்டும் அல்ல குறிப்பாக வெற்றி சீட்டுகள் எண்ணிக்கையை சொல்கிறேன் (காங்கிரஸ், பாஜக இரண்டுக்கும் பொருந்தும்)

 • Renga - Chennai,இந்தியா

  BJP will definitely win in KA. Modi is the best PM and he will be elected again as PM.

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  "~ .....நாட்டை காக்கும் "கை", வீட்டை காக்கும் "கை"....... இந்த "கை"(தான்) எப்போவும் இந்தியாவோட "நம்பிக்கை" ~"

 • CJS - cbe,இந்தியா

  நம்புகிறமாதிரி தெரியவில்லை.

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  It is not good for Tamil nadu to have a Bjp rule in the neighbour state.. Also it is very bad to have Bjp rule in T.Nadu

 • balakrishnan - coimbatore,இந்தியா

  கருத்து கணிப்புகள் நம்புவதற்கில்லை, ஆனால் பி.ஜெ.பி இந்தியா முழுவதும் தோற்கடிக்கப்பட வேண்டும், சுதந்திர இந்தியாவில் இதுபோன்ற ஒரு மோசமான பொய் ஆட்சி நடைபெற்றதே இல்லை, இனி இது போன்ற ஆட்சி வரக்கூடாது, இதுபோன்ற ஒரு பிரதமரும் நமக்கு தேவையில்லை

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  காங்கிரஸே ஏற்பாடு செய்த கருத்துக்கணிப்பு .....

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  தாமரையில் வாக்கிட்டு பிரி செட்டிங் வாக்கு இயந்திரத்ததில் வைத்தால் கட்டாயம் பி ஜெ பி ஜெயிக்கும்...

 • srisubram - Chrompet,இந்தியா

  கர்நாடகாவை பொறுத்தவரை , காங்கிரஸ் கட்சியானது , கர்நாடக திமுக கிளை போன்று செயல் பட ஆரம்பித்துவிட்டதால் , காங்கிரஸ் தான் இம்முறை வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் .. ஒரு வேளை இம்முறை காங்கிரஸ் வர தவறிவிட்டால் , இனி எப்போதும் இவர்கள் வருவதற்கு வாய்ப்பு குறைவு ..

 • அப்பாவி -

  அதான் சித்தராமயா ஓசி சோறு திட்டத்தை போனவாரம் ராகுல் தலைமையில் ஆரம்பிச்சு வெச்சுட்டாரே....இனிமே என்ன அம்மா ஸ்டைலில் ஓட்டுக்களை அள்ள வேண்டியதுதானே... அதுக்குப் பொறவு இந்திரா கேண்டீனெல்லாம் எக்கேடோ கெட்டுப் போகும்.

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  BJP NOW STARTS TO BELIEVE EVM LIKE UP.. OPPOSITE PARTIES N PEOPLE SHOULD BE ALERT

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  I TOLD THIS ONE MONTH BACK... SURE, NOT ONLY IN KARNATAKA, IN GUJARAT TOO CONG WILL WIN. ... MY OPINION NEVER FAILS.... BJP BECOMES PEDAL LESS CYCLE OR PETAL LESS FLOWER.....

 • grg - chennai,இந்தியா

  we need a congress without the gandhi family. all those congress ppl who looted should be behind bars. we need a truly secular congress. if the present congress is coming back -then even God cannot save karnataka or india.

 • Mohamed Ibrahim - Chennai ,இந்தியா

  அடிவருடிகளுக்கு அடிவயிறு கலங்குமே...

 • K.Sugavanam - Salem,இந்தியா

  ஷா ஏன் நேத்து வாரத்தை ஒத்தி வைத்தார்?

 • Devaraju -

  BJP

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  நாளையே இந்தியா டுடே மூலம் பாஜக அமோக வெற்றி பெறும் என்ற கருத்து திணிப்பை வரவைப்பார்கள். கர்நாடகாவில் காங்கிரஸ் வெல்வது காலத்தின் கட்டாயம். இந்திய தேச நலனுக்கு மிக அவசியமானது.

 • thiru - Chennai,இந்தியா

  பாெய்யான கருத்துகணிப்பு.. திரு...ஷா அவர்கள் இருக்கும் வரை கர்நாடகம் பாஜகவிற்கே சாெந்தம்...

 • Renga Naayagi - Delhi,இந்தியா

  அங்கேயும் லயோலா கல்லூரிக்கு கான்டிராக்ட்டா

 • Bala - Chennai,இந்தியா

  இந்த கருத்து கணிப்புக்களை இப்பொழுதெல்லாம் நம்ப முடிவதில்லை. மக்கள் ஓரளவுக்கு தெளிவடைந்திருக்கிறார்கள் என்றே நொனைக்கிறேன். திரு சித்தராமய்யா ஆட்சி சிறப்பாக இருந்தது என்றால் மீண்டும் அவரேதான் வருவார். தமிழ்நாட்டில் கூட திமுகதான் ஆட்சிக்கு வரும் என்றார்கள். கடைசியில் காங்கிரஸ் கூட்டால் சீட்டுக்களை இழந்து அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்து விட்டது. தேர்தல் நடக்கட்டும். முடிவுகள் வரட்டும். இறுதியில் மக்களே எஜமானர்கள் என்பது நிரூபணமாகும்

 • என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா

  வரட்டும் வரட்டும், இன்னமும் வறட்சியின் பிடியில் சிக்கி தவிக்கட்டும், அணையா கட்டுறீங்க அணை

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  தமிழன் தி. திராவிடர்களை ஆதரிப்பது போல கன்னடர்கள் காங்கிரசை ஆதரித்து நாட்டை நாசம் செய்பவர்கள்...

 • Mahesh - New Jersey,யூ.எஸ்.ஏ

  இந்த கருத்து கணிப்புகள் பெரும்பாலும் தவறாகவே இருந்துள்ளன...

 • Ray - Chennai,இந்தியா

  இடையூறப்பா..

 • தமிழன் - Chennai,இந்தியா

  காவிரியில் தண்ணீர் திறந்து விடாமல் ஏமாற்றிய காங்கிரஸ் கட்சிக்கு அங்க ஓட்டு போடுறாங்க. ஆனால் பிஜேபி தண்ணிய வாங்கி கொடுக்கலைன்னு இங்க பிரசாரம் பண்றாங்க. ஆனால் காங்கிரெஸ் மக்கள் விரோத கட்சின்னு எல்லாருக்கும் தெரியும்

 • Cheran - Kongu seemai,இந்தியா

  தற்போது மக்கள் பிஜேபியின் மீது செம வெறுப்பில் உள்ளார்கள். பிஜேபி இந்த கருத்துக்கணிப்பைவிடவே மோசமான தோல்வியை தழுவும்.

 • Dol Tappi Maa - NRI,இந்தியா

  தென் இந்தியாவின் வரலாற்றிலேயே கேவலமான ஆட்சி எடியூரப்பா ரெட்டி சகோதரர்களின் பிஜேபி ஊழல் ஆட்சிதான். இவர்கள் சுரங்க ஊழலில் 1 லட்சம் கோடி அடித்து விட்டனர் . இதில் ஜெகநாத ரெட்டி வீட்டு திருமண 500 கோடி செலவில் பணத்தடையின் போது நடந்தது . இன்று வரை ஒரு ரெய்டு கூட நடக்க வில்லை .

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement