Advertisement

போலீஸ் உதவி மையம் அமையுமா?

திருப்பூர் : திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில், போலீஸ் உதவி மையம் அமைக்க வேண்டும் என்று, பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு, தினமும், 4,000த்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். சென்னை, திருப்பதி, ஆந்திரா, மும்பை, கொச்சுவேலி, கேரளா என தொலை தூர ரயில்கள் இரவு நேரத்தில் அதிகம் திருப்பூரை கடந்து செல்கின்றன. ரயில்வே பாதுகாப்பு படையினர், ஸ்டேஷன் பாதுகாப்பில் இருந்த போதும், இரவு நேரத்தில் அசம்பாவிதங்கள் நடக்கும் போது புகார் தெரிவிக்க வழியில்லை. ரயில்வே ஸ்டேஷனுக்கு வெளியே, பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகே, ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் உள்ளது. சரக்கு ரயில் யார்டு அருகில், ஆர்.பி.எப்., ஸ்டேஷன் உள்ளது.அவசர காலங்களில், போலீசாரை, பிளாட்பார்மில் சந்தித்து புகார் அளிக்க, ஸ்டேஷனில் எவ்வித வசதியும் இல்லை. ரயில்வே பாதுகாப்பு படை அல்லது ரயில்வே போலீசாரிடம் புகார் தெரிவிக்க, குறைந்தபட்சம், 200 மீட்டர் வரை, வெளியே வர வேண்டியுள்ளது.தவறுகளை தடுக்கும் வகையில், பயணிகளுக்கு உரிய பாதுகாப்பை ஏற்படுத்தித்தர வேண்டியது போலீசாரின் கடமையாகும். ஈரோடு, கோவை, சேலம் ரயில்வே ஸ்டேஷன்களில் உள்ளது போல், திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில், போலீஸ்- ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் இணைந்து, 24 மணி நேர, உதவி மையத்தை ஏற்படுத்த வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement