Advertisement

குளத்தில் கொட்டப்படும் சாய கழிவு- இயற்கை ஆர்வலர்கள் கண்டனம்

திருப்பூர் : ஊத்துக்குளி ரோடு, மூளிக்குளத்தில், சாயங்கள், ரசாயனங்கள் கொட்டப்படுகின்றன. இயற்கையை மாசுபடுத்துவோரை கண்டறிந்து, நடவடிக்கை எடுப்பது அவசியம்.
சாய ஆலைகள், பிரின்டிங் நிறுவனங்கள், சிவப்பு நிற வகைப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிறுவனங்கள், எத்தகைய கழிவுகளையும் வெளியேற்ற கூடாது என்ற விதிமுறைகள் உள்ளன. திருப்பூரில், பின்னலாடை துறைக்கு பக்கபலமாக, சாய ஆலை, பிரின்டிங் நிறுவனங்கள், இயங்கு கின்றன. சாய ஆலைகள், 18 பொது சுத்திகரிப்பு மையம் அமைத்து, கழிவுநீரை சுத்திகரிக்கின்றன; பிரின்டிங் நிறுவனங்களும், சிறிய அளவிலான சுத்திகரிப்பு கட்டமைப்புகளை வைத்து இயக்குகின்றன.இதுதவிர, விதிமுறைகளை மீறி, சாய ஆலை, பிரின்டிங் நிறுவனங்கள் இயங்குகின்றன; இதுபோன்ற நிறுவனங்களை கண்டறிந்து, மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கின்றனர். எனினும், முறைகேடு நிறுவனங்களை முழுமையாக ஒழிப்பது சவாலானதாக உள்ளது.நொய்யலாறு மற்றும் இதர நீர் நிலைகளில் அவ்வப்போது, சாய கழிவுநீர் ஓடுகிறது.திருப்பூர்-ஊத்துக்குளி ரோட்டில், மூளிக்குளம் உள்ளது. குளத்தின் உட்பகுதியில், பிரின்டிங் கழிவுகள், துணிக்கு சாயமேற்று வதற்கு பயன்படுத்தப்படும் ரசாயனம், சாயங்களை மர்ம நபர்கள் கொண்டுவந்து கொட்டிச்சென்றுள்ளனர்.நீலம், இளஞ்சிவப்பு நிறங்களில், சாயங்கள் ஆங்காங்கே தேங்கி கிடக்கின்றன. சாயங்களோடு, ஊசி, ரசாயனங்கள் பொதியப்பட்ட பிளாஸ்டிக் கவர்களும் வீசப்பட்டுள்ளன. திறந்த வெளியில், குளத்தில் கொண்டு வந்து சாயம், ரசாயன கழிவுகளை கொட்டுவது, சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.முறைகேடு சாய ஆலை, பிரின்டிங் நிறுவனங்கள், இரவு நேரங்களில், வாகனங்களில் கொண்டுவந்து சாய கழிவுகளும், ஆய்வக கழிவுகளும் கொட்டப்படுவ தாக, அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரி கள் ஆய்வு நடத்தி, நீர் நிலையில், கழிவுகளை கொட்டுவோரை கண்டறிந்து, கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும், என இயற்கை ஆர்வலர்கள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement