Load Image
Advertisement

ஊரக பகுதிகளில் தனிநபர் கழிப்பறை கட்ட கொத்தனார்களுக்கு அழைப்பு

கிருஷ்ணகிரி: 'கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கழிப்பறைகள் கட்ட விருப்பம் உள்ள கொத்தனார்கள், வட்டார வளர்ச்சி அலுவலரை தொடர்பு கொள்ளலாம்' என, கலெக்டர் கதிரவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஊரக பகுதிகளில், டிச., 2017க்குள், அனைத்து வீடுகளிலும் தனிநபர் கழிப்பறைகள் அமைக்கப்பட்டு, இம்மாவட்டத்தை திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத மாவட்டமாக அறிவிக்க, தமிழக அரசால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், அனைத்து கிராம ஊராட்சிகளிலும், தனிநபர் கழிப்பறை இல்லாத வீடுகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு, கழிப்பறை கட்ட, 12 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு, தற்போது கழிவறைகள் கட்டும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.
எனவே, ஊரக பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தங்கள் வீடுகளில் கழிப்பறை கட்டி சுகாதாரமாக வாழ வேண்டும். தற்போது கழிவறை இல்லாத வீடுகளில், கழிப்பறை கட்டும் பணிகளுக்கு, பெருமளவில் கொத்தனார்கள் தேவைப்படுகின்றனர். இப்பணிகளில் தங்களை
ஈடுபடுத்திக்கொள்ள விரும்பும் கொத்தனார்கள், சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்களையும், 04343-233009 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். அவர்களுக்க, உரிய ஊதியம் வழங்கப்படும் எனவும் உறுதியளிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement