Advertisement

'டவுட்' தனபாலு

ஜெ., அண்ணன் மகள் தீபா: உண்மையான தொண்டர்களின் வீடாக, என் தலைமையில், அ.தி.மு.க., எனும் மக்கள் பேரியக்கம் செயல்பட்டு வருகிறது.

டவுட் தனபாலு: அ.தி.மு.க., மூன்று அணிகளாகப் பிரிந்து, ஆளாளுக்கு பரபரப்பா பேசிட்டு வர்றாங்க... 'இந்தக் களேபரத்துல என்னை மறந்துடாதீங்க... நானும் இருக்கேன்'னு காட்டிக்க, இப்படி ஒரு தகவலைச் சொல்றீங்களா... அ.தி.மு.க.,வின் உண்மை தொண்டர்கள் இவ்வளவு பேருதானான்னு, யாரும் கேட்டுடக் கூடாது என்ற பெருந்தன்மையால் தான் இதுவரை, பேரணி, ஆர்ப்பாட்டம், மாநாடு போன்ற முயற்சிகளில், நீங்க இறங்காமல் இருக்கீங்களோ என்ற, 'டவுட்' வருதே...!

தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின்: அ.தி.மு.க., பிளவுக்கு, பா.ஜ., காரணமா, இல்லையா என்பது குறித்து, விமர்சனம் செய்ய விரும்பவில்லை.

டவுட் தனபாலு: 'அ.தி.மு.க., பிளவுக்கு, பா.ஜ.,தான் காரணம்'னு, திஹார் வரைக்கும் போயிட்டு வந்த தினகரன் அணியே தைரியமா குற்றம் சாட்டுறாங்க... நீங்க ஏன் பம்முறீங்க... ஒருவேளை, பா.ஜ., மேல பழியை போட்டு, நாளைக்கு, 'தி.மு.க., பிளவுக்கு யார் காரணம்'கற பட்டிமன்றம் வந்துட கூடாதுன்னு தொலைநோக்கு பார்வையோட செயல்படறீங்களோ என்ற, 'டவுட்' கிளம்புதே...!

பா.ஜ., தலைவர் அமித் ஷா: பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியில் இணையும்படி, ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த, பீஹார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு அழைப்பு விடுக்கிறேன்.

டவுட் தனபாலு:
லாலு மற்றும் அவரது மகன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளால் தான், ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடனான உறவை முறித்து, பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்து, பீஹாரில் ஆட்சி அமைத்தோம்னு, ஒற்றைக் காரணத்தை தான், நிதிஷ் குமார் திரும்பத் திரும்பச் சொல்லி வர்றாரு... ஒருவேளை அவர், மத்தியிலும் உங்க கூட்டணிக்கு வந்து, அமைச்சரவையில் இடம் பெற்றால், இதெல்லாம் முன்பே திட்டமிட்டதோ என்ற, 'டவுட்'டை வலுவாக்கிடாதா...!

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement