Advertisement

தி.மலை:கமண்டலநாகநதியில் வெள்ளப்பெருக்கு: போலீசார் எச்சரிக்கை

தி.மலை : திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள கமண்டல நாகநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் குளிக்க வேண்டாம் என போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். தமிழகத்தி்ல வெப்ப சலனம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தி.மலை மாவட்டத்தில் இன்று (ஆக.,13) பெய்த மழை காரணமாக ஆரணியில் உள்ள கமண்டல நாகநதி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடியது. இதனையடுத்து பொது மக்கள் ஆற்றில் இறங்க மற்றும் குளிக்க கூடாது என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • பாலா -

    கரைபுரண்டோடிய வெள்ள நீரை ஏரிகள் கண்மாய்கள் குளம் குட்டைகள் சேமிக்கபட்டு நிரம்பியிருக்குமா..? என்பது..????... தான் இல்லை ஒரு வேளை அங்கே தண்ணீர் தேவை குறைவு என்றால் இந்நேரம் மாநில ஆறுகள் இணைக்கப்பட்டிருந்தால் வேறுசில மாவட்டங்களுக்கும் தண்ணீர் கிடைத்திருக்கலாம்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement