Advertisement

பாபநாசம் அணையில் மூழ்கி சென்னை இன்ஜி.,மாணவர் பலி

திருநெல்வேலி:பாபநாசம் தலையணையில் மூழ்கி சென்னை இன்ஜினியரிங் மாணவர் பரிதாபமாக இறந்தார்.சென்னை, கிண்டி, நரசிங்கபுரம் 7வது தெருவை சேர்ந்தவர் பரசுராமன். ஆயில் நிறுவன டீலர்.இவரது மகன் தினேஷ் 19. ஊட்டியில் "மெக்கன்ஸ் ஸ்கூப் ஆப் ஆர்கிடெக்சசர்'கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பி.டெக்.,பயின்றுவந்தார்.அவருடன் தென்காசியை சேர்ந்த மாணவர் முகம்மது ரியாஸ் உடன் பயில்கிறார்.இவர்கள் நான்கு நண்பர்களுடன் சுதந்திர தின விடுமுறையில் தென்காசி வந்தனர். நேற்று மாலை 3 மணியளவில் பாபநாசத்தில் தாமிரபரணி ஆற்றின் தலையணையில் குளிக்கச்சென்றனர். இதில் நீச்சல் தெரியாமல் தினேஷ் ஆழத்தில் மூழ்கி பலியானார். தீயணைப்பு படையினர் உடலை மீட்டனர். விக்கிரமசிங்கபுரம் போலீசார் விசாரித்தனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • Giridharan S - Kancheepuram,இந்தியா

    நீச்சல் தெரியாதவரை இதுபோன்று அவர்களின் நண்பர்கள் அழைத்து சென்று குளிக்க வைப்பது தவறு .

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement