Advertisement

வாகா:360 அடி உயரத்தில் இந்திய தேசிய கொடி ஏற்றம்

சண்டிகர்: வாகா எல்லையில் 360 அடி உயர (110 மீட்டர்)கம்பத்தில் தேசிய கொடி பறக்க விடப்பட்டது.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே உள்ள வாகா எல்லைப்பகுதியில் ரூ.3.50 கோடி செலவில் 55 டன்எடையும் , 24 மீ்ட்டர் அகலம், 110 மீட்டர்உயரமும் கொண்ட நாட்டிலேயே மிக உயரமான தேசிய கொடி கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தேசிய கொடியை ஏற்றும் நிகழ்ச்சி இன்று (ஆக.,13) நடைபெற்றது. விழாவில் பஞ்சாப் மாநிலஅமைச்சர் அனில் ஜோஷி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். வாகாவில் இருநாட்டு எல்லை பகுதியில் தினசரி கொடி இறக்கும் நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (10)

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    இந்திய அரசியல்வாதிகள் செய்யும் ஊழல் அதை விட உயரத்தில் பார்க்கிறதே...

  • Mani . V - Singapore,சிங்கப்பூர்

    தேசியக் கொடி பறக்கும் உயரம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இந்திய மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவில்லை. இதில் பெருமைப்பட ஒன்றுமே இல்லை.

  • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

    நாம் என்ன செய்கிறோமோ அதை பார்த்து அதை விட ஒரு சில அடிகள் கூடுதலாக செய்தால் அவர்கள் உயர்ந்தவர்கள் என்று சிறுபிள்ளைத்தனமாக என்னும் சில லூசுகள் அந்த பக்கம் பச்சை நிறத்தில் கொடி பறக்கவிடப் போகிறார்களாம்? சுயமாக சிந்திக்க தெரியாதவர்கள். நானொருத்தின் கூட்டுத் தொகை நான்கு. ஆக, அவர்களின் கொடியை நான்கு பேர் டூக்கி கொண்டு செல்வார்கள் போல? சரியாகத்தான் இருக்கிறது.

  • Tarunkumar -

    jai hind

  • Mohamed Ibrahim - Chennai ,இந்தியா

    பட்டொளி வீசும் என் தேசியக்கொடி... எனது பெருமை.... இந்தியனாய் இருப்பதில் பெருமை கொள்வோம்... L

  • Jaya Prakash - Medan,இந்தோனேசியா

    30 அடியாக இருந்தாலும் சரி... 300 அடியாக இருந்தாலும் சரி... 3000 அடியாக இருந்தாலும் சரி... கொடி பறக்கணும்... பறந்து கொண்டே இருக்கணும்... கொடி என்றாலே ஒரு ராணுவனுக்கு அது அவன் நாடு... அதை காப்பாத்த அவன் உயிரையே கொடுப்பான்..... என்ன கடைசி வரிதான்... " தினசரி கொடி இறக்கும் நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருவது குறிப்பிடத்தக்கது "...... எப்பா பெருமைப்படும் விஷயம் ... தயவுசெய்து இதை பார்க்க வரும் வெளிநாட்டவரரின் இருந்து இதற்க்கு அரசு காசு வாங்க கூடாது........ கொடியின் பேரில் நாம் காசு சம்பாதித்தால் அது வேறு தொழில் ஆகி விடும்.....

  • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

    பலே பலே பஹூத் அச்சா ஹை, மேரா சல்யூட் கர்ணா ஹை. (வாக்கியம் சரியா?).

    • Jaya Prakash - Medan,இந்தோனேசியா

      வாக்கியம் சரியா என்று நீங்கள் கேட்டதினால் சொல்றேன்... பலே... பலே.... என்று சொன்னது வேறு... பல்லே பல்லே என்று சொல்லிஇருந்தால் அது பஞ்சாபி வார்த்தை..... (உற்சாகத்தில் மற்றும் சந்தோஷத்தில் உபயோகிக்கும் வார்த்தை)... " அச்சா ஹை, மேரா சல்யூட் கர்ணா ஹை ".... அதை திருத்தினால்.... பஹுத் அச்சா லகா ... கர்வ் ஹுவா.... மை சல்யூட் கர்த்தகூம் ... (இது ஹிந்தி வார்த்தை). ..

    • K.Sugavanam - Salem,இந்தியா

      பட்லர் ஹிந்தி ..

  • Appu - Madurai,இந்தியா

    சூப்பர் உயி உயி...கமான் இந்தியா...ஐ லவ் மை இந்தியா..

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement