Advertisement

பயங்கரவாத அமைப்பில் சேரும் காஷ்மீர் இளைஞர்கள்

ஜம்மு: காஷ்மீரில் பயங்கரவாத அமைப்புகளில் சேரும் இளைஞர்கள் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருவதாக போலீசார் கூறியுள்ளனர்.இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது: கடந்த 7 மாதத்தில் 77 இளைஞர்கள் பயங்கரவாத அமைப்புகளில் சேர்ந்துள்ளனர். பயங்கரவாத அமைப்பிற்கு புல்வாமா, சோபியான், குல்கம் மாவட்டங்களில் தான் அதிகளவில் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். கடந்த வருடம் 88 இளைஞர்கள் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்தனர். கடந்த 2014 முதல் பயங்கரவாத அமைப்புகளில் இளைஞர்கள் சேர்வது அதிகரித்துள்ளது. 2015ல் 66, 2014ல் 53 இளைஞர்கள் பயங்கரவாத அமைப்புகளில் இணைந்துள்ளனர்.அதேநேரத்தில், 2010ல் 54, 2011ல் 23, 2012ல் 21, 2013ல் 16 இளைஞர்கள் பயங்கரவாத அமைப்பில் இணைந்துள்ளனர். புல்வாமா, குல்கம், சோபியன் பகுதிகள் பயங்கரவாதிகளுக்கு முக்கிய இடமாக உள்ளது. புல்வாமா அவர்களுக்கு மையப்புள்ளியாக உள்ளது. இந்த பகுதி ஸ்ரீநகர், ஆனந்த்நாக், குல்கம், சோபியான், புட்கம் பகுதிகளை இணைக்கும் பகுதியாக உள்ளது. இங்கு தான் அதிகளவில் பயங்கரவாத தாக்குதல் மற்றும் என்கவுன்டர் நடந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement
 

வாசகர் கருத்து (25)

 • Renga Naayagi - Delhi,இந்தியா

  காஷ்மீர் இயற்கை அழகு நிறைந்த இடம் ...அமர்சிங் இந்து மன்னர் ஆண்ட காலத்தில் பண்டித் என்று அழைக்கப்படும் பிராமணர்களுக்கு வேலை வழங்க உத்தரவிட்டார் ...எல்லா வகுப்பு இந்துக்களையும் மன்னருக்கு பிராமணராக அறிமுகப்படுத்தி வேலை பெற்றுக்கொண்டார்கள் ...இந்த காரணத்தாலேயே எல்லா இந்துக்களும் பண்டித் என அழைக்கப்பட்டனர் ...

 • YesJay - Chennai,இந்தியா

  Few years ago we had Kerala muslims join LeT in Kashmir. Now with ISIS offering more bounty, they went to Syria. SoLeT has to recruit loclly. Hope our Army dispatches them all to hell.

 • Mohamed Ibrahim - Chennai ,இந்தியா

  Giridharan S - Kancheepuram,இந்தியா 13-ஆக்-2017 20:02 பணத்திற்காக எதையும் செய்ய துணிந்த இளைஞர்கள். ஒரு வேலை இவர்கள் சேருவதற்கு காரணம் இவர்களின் வாழ்க்கையில் பாதிப்புகள் ஏதாவது ஏற்பட்டிருக்கலாம். நம்ம ஊரிலே வீரப்பனை தேடறேன்னுட்டு என்னனா பண்ணாங்க. விசாரித்தால் நல்லது..... நன்றி mr கிரிதரன் அவர்களே.... சரியான கருத்தை முன்வைத்தீர்கள்.... வாழ்த்துக்கள்....

 • Giridharan S - Kancheepuram,இந்தியா

  பணத்திற்காக எதையும் செய்ய துணிந்த இளைஞர்கள். ஒரு வேலை இவர்கள் சேருவதற்கு காரணம் இவர்களின் வாழ்க்கையில் பாதிப்புகள் ஏதாவது ஏற்பட்டிருக்கலாம். நம்ம ஊரிலே வீரப்பனை தேடறேன்னுட்டு என்னனா பண்ணாங்க. விசாரித்தால் நல்லது

 • rajan - kerala,இந்தியா

  SCREEN OUT PULWAAMA AREA AND GO FOR A DRASTIC REMOVAL OF ALL THE SUSPECTS TO THE REAL LAUNCHERS.

 • ravichandran - avudayarkoil,இந்தியா

  எதற்கெடுத்தாலும் மோடி தானா

 • Mohamed Ibrahim - Chennai ,இந்தியா

  2014 முதல் அதிகரித்துள்ளது....

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  DON'T OPPOSE THEIR RELIGIOUS BELIEFS.THEY ARE ORDERED TO ALL INFEDALS AND MUSHRIQS BY THEIR MESSENGER. AFTER ALL THEY ARE FOOLS

 • Mohamed Ibrahim - Chennai ,இந்தியா

  மோடி 500,1000 நோட்டுகளை தடை செய்த்ததும் கல்லெறிவது நின்றது மாதிரி..... 2000 நோட்டு வெளிவந்த பிறகு பயங்கரவாத அமைப்பில் இளைஞர்கள் சேருகிறார்களோ..... எல்லாத்துக்கும் மோடி வித்தைதான் காரணமோ.....

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  தலைப்பை மாற்றிப்போடுங்கள் கட்சிக்காரர்கள்.பயங்கர வாதிகள் வேறு யாருமே இல்லை, ஆளும் கட்சியில் இல்லாதவர்கள் தங்களின் குடும்பத்திற்கு வருமானம் மற்றும் ஆளுமை இல்லாததால் எந்த எல்லைக்கும் செய்கிறார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம், இவர்கள்தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது, உங்களுக்கு தெரியம் இல்லை ஆகவே பொத்தாம் பொதுவில் செய்தியை வெளியிடுகிறீர்கள், ஜாதி மற்றும் மத வெறி சார்ந்த காட்சிகள் செயல்பாடு மற்றும் பேச்சுக்கள் இதற்க்கு சாட்சி.. இவர்களுக்கு ஆளும் நாற்காலி கிடைக்காததால் என்னவெல்லாம் பேசுகிறார்கள், என்னே என்ன கீழ்த்தரமான செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர் ? என்றைக்காவது இவர்கள் மீது ஏதாவது நடவடிக்கை எடுத்துருந்தால் இதுபோன்ற செயல்பாடுகள் நடைபெறாது, ஆனால் இங்கு இதுபோன்ற செயல்பாடுகள் மட்டுமே ஊக்குவிக்கப்படுகின்றனர் . வந்தே மாதரம்

 • NatarajanIyer -

  கஷ்மீரில் உள்ள அனைத்து இஸ்லாமிய இளைஞர்களுக்கும் உடலின் உள்ளே GPS கருவியை பொருத்தினால்தான் இந்த பிரச்சினை தீரும்.

 • thiru - Chennai,இந்தியா

  இதன் மூலமாக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது... இதன் பெருமை பாஜக அரசை சேறும்.. வாழ்க மாேடி.. வளர்க உன் தாெண்டு...

 • Ramesh Sundram - Muscat,ஓமன்

  இந்த துரோகிகளை இந்தியா அரசாங்கம் எவ்வளவு சலுகைகளை வழங்கி உள்ளது

 • K.Sugavanam - Salem,இந்தியா

  பிஜேபி அங்கு பார்ட்னர் தானே..இதை தடுக்க PDP க்கு அழுத்தம் தரமுடியவில்லையா?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement