Advertisement

அன்றாட நிகழ்விலும் கமல் சுறுசுறுப்பு: அரசியலுக்கு அச்சாரமா?

சென்னை: தமிழக அரசியலில் அவ்வப்போது புதுப்புது டுவிட்டுகளை பதியவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வரும் கமல் தற்போது தமிழக மக்கள் மீது முழுக்கவனம் செலுத்த துவங்கியுள்ளார். நடிகர் கமலஹாசன் முதன்முதலாக தமிழகத்தில் ஊழல் மலிந்து விட்டது, எந்த துறையில்தான் ஊழல் இல்லை என தெரிவித்தார். இதற்கு ஆளும் அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கருத்து சுதந்திரத்தை முடக்குவதா என பல்வேறு தரப்பினரும் ஆளும்கட்சிக்கு கேள்வி எழுப்பினர். இந்நிலையில் கமல் அவ்வப்போது தனது டுவிட்டர் பக்கத்தில், சில முக்கிய விஷயங்களை பேசி வருகிறார்.

நீட் தேர்வு விவகாரம்தற்காலிகமாக ஓராண்டுக்கு நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க தயார் என மத்திய அமைச்சர் நிர்மலா அறிவித்தார். உடனே, நீட் தேர்வு தொடர்பாக இன்று அவசரசட்ட முன்வடிவு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். தமிழக பிரதிநிதிகள் டில்லியில் மத்திய அமைச்சர்களுடன் நாளை ஆலோசனை நடத்தவுள்ளனர்.

பிற்பாடும் பேரம் பேசலாம்இந்நிலையி்ல கமல் இன்று ( 13 ம் தேதி ) அவர் பதிவிட்ட முதல் டுவிட்டில் " உபி.,யில் மருத்துவமனையில் பலர் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் இறந்துள்ளனர். இது போல் இனியும் நடக்க கூடாது " என்று தெரிவித்திருந்தார். அடுத்த சில நிமிடங்களிலேயே " நீட்தேர்வை ஒத்திப்போட மத்திய அரசு ஒத்துழைக்குமாம்.குதிரைகளை பிற்பாடும் பேரம் பேசலாம். மாணவர் எதிர்காலம் பற்றியது. தயைகூர்ந்து உடனே பேசுங்கள் " என்று கூறியுள்ளார். ஊழல் உள்ளிட்ட பொதுவான விஷயங்கள் குறித்து பேசி வந்த கமல் தற்போது தமிழக அரசியல் நிலவரங்களிலும் , அன்றாட நிகழ்வுகளிலும் குரல் கொடுக்க துவங்கியிருக்கிறார். குறிப்பாக எதிர்கட்சியினர் மற்றும் பிற அரசியல் கட்சியினரை விட சற்று வேகமாவே அவரது உணர்வு வெளிப்படுவதை காண முடிகிறது. இது அவரது அரசியல் அச்சாரமாக இருக்கக்கூடுமோ என்றும் அறிய முடியவில்லை.மேலும் சில விஷயங்களை கவிதை நயத்துடனும், இலைமறை காயாகவும், சிலேடையாகவும் அவரது டுவிட் இருப்பதால் அரசியல்வாதிகள் , கமல் என்ன சொல்ல போகிறார் என்று விழித்து போய்தான் உள்ளனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (71)

 • J.Isaac - bangalore,இந்தியா

  வேறு யாராவுது பேசி இருந்தால் .........

 • Rajasekaran - Vizg,இந்தியா

  ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரைக்கும் இவர் மவுனமாக இருந்து விட்டு இப்பொழுது ஏன் இப்பொழுது வாய் திறக்கிறார் ஏன் என்றால் இவருக்கு இப்பொழுது மார்க்கெட் இல்லை அது மட்டுமல்ல அனைத்து அரசியல்வாதிகள் மற்றும் சில திரை உலகினர் வாய்திறக்கினர் உங்களுக்கு இப்பொழுதுதான் மக்கள் மீது ஞானம் பிறந்ததா எல்லாம் நடிப்பே ஏமாறுவார்கள் இருக்கும் வரைக்கும் ஏமாற்றுக்கொண்டே இருப்பார்கள்

 • adalarasan - chennai,இந்தியா

  சினிமாவில் இனிமேல் வாய்ப்புக்கள் குறைந்துவிட்டது வேறு தொழில் அரசியல்தான் மிச்சம்? ஏற்கனவே திராவிட இயக்கத்தில் நாட்டம் உள்ளவர், நாத்திக வாதி என்று காண்பித்துக்கொண்டுஇருக்கிறார் பல வருடங்கள்> ஆகையால் இப்பொழுது, அம்மாவும் இல்லை . அய்யாவும் இல்லை? ஒரு சான்ஸ் பார்க்கலாமே? ஆனால் தமிழக மக்கள் இனியும் சினிமாக்காரர்களை நாட்டை ஆள விரும்பமாட்டார்கள் என்று நம்புகிறேன் பார்க்கலாம்?

 • PrasannaKrishnan -

  ShouldhavegutslikeKamaljitotweet.

 • PrasannaKrishnan -

  ShouldhavegutslikeKamaljitotweet.

 • PrasannaKrishnan -

  ShouldhavegutslikeKamaljitotweet.

 • Aheshram Jagan - Chennai,இந்தியா

  திராவிட காட்சிகளை ஒழிந்து கட்ட கமலஹாசன் விஸ்வரூபம் எடுத்து சூப்பர். திமுக உடையும்.

 • SANKAR - calgary,கனடா

  கமலஹாசன் அவரது ரசிகர் மன்றத்தை விழிப்புணர்வு இயக்கமாக மாற்றி இருப்பது வரவேற்கத்தகுந்தது... ஒவ்வொரு ஊரிலும் ஊழல் ஒழிப்பு இயக்கம் புகார்களை பெற்று லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளை அணுகி தவறு செய்யும் அரசு அதிகாரிகளை பிடிக்க உதவலாம்... அதே போல் டெண்டர் ஊழல்களை பிடிக்க டெண்டர் இல்லாமல்விடும் கான்ட்ராக்ட்டுக்கள் பற்றிய பட்டியலையம் வேலை ஒழுங்காக நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்கவும் ஒரு குழுவை ஈடுபடுத்தலாம்...

 • kumbesvaran -

  kudirai tweet சூப்பர் கமல் சார் சூப்பர் இதுதான் ஹைக்கூ சார் .சுருதி இப்ப சரியாய் இருக்கு சார்

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  இந்த சுறு சுறுவை விட, கரு கருன்னு ஒருத்தரு இருக்காரே அவருக்குத்தான் மவுசு அதிகம். சிவாஜிக்கு ஆதரவு இல்லை என்றாலும் மக்கள் மரியாதை கொடுத்தார்கள். இவருக்கு அது கூட கிடையாது.

  • vinu - frankfurt,ஜெர்மனி

   கரு கருன்னு இருப்பவர் அரசியல் வந்தால் கரியை பூசுவதற்கு நாங்கள் ஆயத்தமாக இருக்கிறோம். பாவம் உனக்கு ஒன்றும் தெரியாது. ஒதுங்கி நின்னு வேடிக்கே பாரு.

 • kumbesvaran -

  inru tweet super o super kudirai tweet Mr.kamal long live kamal

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  நம்ம கேப்டன் சில வருடங்களுக்கு முன் உளூந்தூர் பேட்டையில் ஊழல் ஒழிப்பு மாநாடு நடத்தும்போது திமுக விற்கே அதுக்கு அழைப்பிதழ் அனுப்பினார். கூடிய விரைவில், இவர் ஊழலை ஒழிப்போம்னு திமுக கூட்டத்திலேயே இவர் நடையிலே பேசி கைதட்டலை வாங்க போறார். நல்ல காமெடிதான் போங்கோ.

  • vinu - frankfurt,ஜெர்மனி

   ரஜினிக்கு அரசியலில் இடமில்லை.

 • திராவிட எதிரி - tamilnadu,இந்தியா

  திராவிடம் என்னும் திருட்டு ஓய்ந்தால் தான் ஜனநாயகம் என்னும் தாமரை பூக்கும்

 • திராவிட எதிரி - tamilnadu,இந்தியா

  சும்மா இருந்த சங்கை ஓதி கேடுதான் ஆண்டி என்பதுபோல் இந்த தினமலர் இவரை கெடுத்துவிட்டது .

 • திராவிட எதிரி - tamilnadu,இந்தியா

  இவருக்கு என்ன ஆனது என்று தெரியல கவ்தமி போனதில் இருந்து தலைவருக்கு பித்து பிடித்துவிட்டது

 • Bala Subramanian - Bangalore,இந்தியா

  கமல் மாதிரி தைர்யமாக பேசுபவர்கள் தமிழ்நாட்டுல ரொம்ப குறைவு அவர் மனசுல பட்டதை ஒப்பான சொல்ரார் ஹாட்ஸ் ஆப் டு யு கமல் சார்

  • Sitaramen Varadarajan - chennai,இந்தியா

   தூ தூ இந்த ஹிந்து மத துரோகிகளை இனி ஏற்றுக்கொள்ள தமிழகம் தயாராக இல்லை. சினிமாக்காரன் என்றால் என்னய்யா இத்தனை வழிசல். ... என்னத்தை கண்டு விட்டீர்கள். இதுவரை இல்லாத புரட்சியா......சுயநலம் பிடித்த புரட்டு மட்டுமே......

 • திராவிட எதிரி - tamilnadu,இந்தியா

  சரி இருக்கட்டும் நீங்கள் சுடலினிடம் 2 ஜி பங்கு கேட்டு வாங்கு ஏமாந்திராத கமல்

 • திராவிட எதிரி - tamilnadu,இந்தியா

  விலை போகாத கத்திரிக்கா கடைசில் அரசியல் இடம்

 • ?????????????????????????? - chennai,இந்தியா

  அதிமுக வை பழிதீர்க்க பார்க்கும் கமலின் உண்மை முகம் மக்களுக்கு விரைவில் தெரியும்

  • Kadaparai Mani - chennai,இந்தியா

   அதிமுக என்பது மிகப்பெரிய இயக்கம் . அதை கமல் மாதிரி மூன்றாம் தர ஆட்களால் ஒன்றும் செய்ய முடியாது.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  கொஞ்சம் கொஞ்சமாகத்தான் மக்கள் மனதை கொள்ளைகொள்ளமுடியும்... அப்பொழுதுதான் அவர்கள் மகுடி ஊதிய பாம்பாக நடந்து கொள்ளுவார்கள்...

 • Rajamani Ksheeravarneswaran - bangalore,இந்தியா

  என்னாயிற்று என்று மயங்கிவிழுந்த ஒருவரை கேட்டேன் அவர் தமிழ் அறிஞராம் தெரியாமல் கமல் ஹசன் ட்விட்டர் பக்கத்தில் இருப்பதை படித்துவிட்டாராம் .அதன் பின் வெட்டி சட்டையை கிழித்துக்கொண்டாராம் .

 • Rajamani Ksheeravarneswaran - bangalore,இந்தியா

  கமல்ஹாசனுக்கு என்ன சுறுசுறுப்போ ? கவுதமியை பாருங்கள் .இரண்டு முறை ஜெயலலிதா மர்ம மரணம் பற்றி விசாரணை கேட்டு பிரதமருக்கு கடிதம் எழுதினார் .இப்போது திரைப்பட தணிக்கை குழுவில் முக்கிய பதவி பெற்றிருக்கிறார் .கமல் போன்று அவருக்கும் புரியாமல் மக்களுக்கும் புரியாமல் தமிழை கொலை செய்யவில்லை . எழுந்து நின்றால் விழுந்து விடுவாய் விழுந்துவிட்டாலும் எழுந்துவிடு ஓடினால் துரத்திவிடு துரத்தினால் ஓடிவிடு ஓடாமல் ஆடாமல் ஒருவரியில் சென்றுவிடு பம்மாமல்,விம்மாமல் , அப்பால் ஓடிவிடு வாரீர் தாரீர் பொடிநடையாய் போய்விடுவோம் என்னை நீ தாண்டாதே வெண்ணிலவை தீண்டாதே ஆடியது போதும் ஆட்டத்தை நிறுத்துவோம் கூடியது போதும் கூட்டத்தை விரட்டுவோம் படியாது என் மனம் விடியாது உன் வாழ்வு புரிந்தவர் புரியாதோர்க்குப் புகட்டுக. நாட்டிற்கு ஊழியம் செய்வோரை கேலி செய்யாதே.மூப்பெய்தி மாளும் முன். சுதந்திரம் பழகு . தேசியமும் தான். விம்மாமல் பம்மாமல், ஆவன செ்ய். புரட்சியின் வித்து தனிச் சிந்தனயே.ஓடி எனைப்பின்தள்ளாதே களைத்தெனைத்தாமதிக்காதே. கூடி நட, வெல்வது நானில்லை நாம் இப்படி கமல் ரசிகர்களே புரியாமல் தலையை பிய்த்துக்கொண்டு ஓடும் வண்ணம் 'குணா 'கமல் ஒரு நாள் கீழ்ப்பாக்கத்தில் அடைக்கப்பட வாய்ப்புண்டு

 • K.Sugavanam - Salem,இந்தியா

  ஒரே சுறுசுறுப்புதான் போங்கோ..

 • vinu - frankfurt,ஜெர்மனி

  இந்தியாவில் பிஜேபி அரசை கண்டிக்க மீசை வாய்த்த ஆம்பிளை ( கமல் ) இருப்பது சந்தோசம். இன்னோருத்தர் பஞ்ச் டயலாக் விட்டுக்கொண்டே இருப்பாரே. அவர் கோரக்பூர் குழந்தைகள் இறந்ததை பற்றி வாயை திறக்கவில்லை. தற்காப்பு இல்லை தன்மானமை முக்கியம் என்பது பஞ்ச் மன்னனிற்கு தெரியாதா.

 • G Mahalingam - Delhi,இந்தியா

  புரியற மதிரி நடைமுறை தமிழில் சொல்லவும்.

  • Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா

   எப்படி இருந்த மனுக்ஷ்ன் இப்படி ஆயிட்டாரே?எப்படியோ யார் மூலமாவது நாட்டு மக்களுக்கு நல்லது நடந்தாசரிதான்?

 • Thiii - Chennai,இந்தியா

  இவரை விட ஓவியாக்கு தான் எனது ஆதரவு.. இருவரும் நடிகர்கள்.. இவரை விட ஓவியா சொல்லுவது எங்களுக்கு நன்றாக புரிகிறது.. கமல் திமுகவின் பிரசார பீரங்கி.. உண்டவிட்டு கடன் இருக்கு ஜெயலலிதாவிடம் இருந்து பாதுகாத்ததிற்கு.. கமலின் நிலைமை கொலைகாரனிடம் இருந்து தப்பிக்க கொள்ளைகாரனை ஆதரித்த கதைதான்..

 • Amma_Priyan - Bangalore,இந்தியா

  எதற்காக அப்போது அம்மாவை கோட்டையில் கூனி குறுகி போய் பார்க்கவேண்டும்?...ரஜினி கிட்டே உள்ள மனித பண்பை இதுவரை இந்த மீசைக்காரனிடம் ஒருமுறையேனும் ஒரு துளியேனும் மில்லியளவாவது பார்த்தது உண்டா? மேடையில் இல்லாவிட்டாலும் கீழேயே உட்கார்ந்து ரஜினி சாதித்தது கை தட்டி வரவேற்கப்படவேண்டிய ஒன்று...ஊழல் கட்சியிலே இணைந்து ஊழலைபார்த்து இளித்ததாம் பித்தளை...மேக்கப் இல்லாமல் தைரியமாக மக்கள் முன்னாலே தோன்றமுடியாத damukku டப்பா...பெங்களூர் போய் வாணி எப்படி வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்று பார்த்தவர்களுக்கு நிச்சயம் இது புரியும்...

  • Dol Tappi Maa - NRI,இந்தியா

   ஒன்னு விழாவுக்கு போகணும் அல்ல சீமான் வைகோ தமிழிசை போல போகக்கூடாது . அது என்ன போவது பின்பு ஒன்றும் பேசாமல் பிஜேபி இக்கு பம்முவது ? என்ன ஒரு பணவெறி பிடித்த சுயநலவாதி . அவர் சேர்த்த சொத்துக்கு யாருக்கும் பயப்பட தேவையில்லை ஆனால் இன்னும் பணவெறி இருப்பதால் தான் எல்லாரையும் சொம்படித்து காரியம் சாதித்து கொள்கிறார் . இது தலைவனுக்கு அழகு இல்லை .

  • K.Sugavanam - Salem,இந்தியா

   விழாவுல என்ன வைரமான கருத்தை பேசினார் எனவே தெரியவில்லை.. இதற்க்கு கீழே அமர்ந்து இருந்த ரசினியே பரவாயில்லை.

  • vinu - frankfurt,ஜெர்மனி

   ரஜினிகிட்ட உள்ள மனித பணப்பை கொஞ்சம் சொல்லு பார்ப்போம். தண்ணி அடிப்பது , புகை பிடிப்பது , மற்றும் ...... இது எல்லாம் ரஜினியின் மனித பண்பு. இந்த பண்பு எங்களுக்கு தேவை இல்லை.

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  "அன்றாட நிகழ்விலும் கமல் சுறுசுறுப்பு" அப்போ அடுத்த கௌதமி ரெடி என்று அர்த்தமா?

  • K.Sugavanam - Salem,இந்தியா

   அது ஒண்ணுதானா சுறுசுறுப்பிற்கு?

  • Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா

   அப்படி இருந்தாதான் நீங்க எல்லாம் ஆம்பிள்ளையாவே இருப்பீங்களா?இல்லன்னா...........?

 • vns - Delhi,இந்தியா

  நான்கைந்து மாதம் முன்பு வரை தினமும் கெஜ்ரிவாலின் புகைப்படம் மற்றும் செய்திகளை போட்டு தினமலர் வலயத்தளத்தை திறக்க வேண்டாம் என்று முடிவு செய்ய வைத்தீர்கள் இப்போது இந்த ஊழல் வாதியின் புகைப்படம் மற்றும் கருத்துக்களை தினமும் பதிவு செய்து, வாசகர்களை கட்டாயப்படுத்துகிறீர்கள் ?

  • Dol Tappi Maa - NRI,இந்தியா

   63 பேரை சாக அடித்து விட்டு வராத கோபம் இவர் போட்டோவை பார்த்து தான் வருகிறது என்றால் மதவெறி முற்றி விட்டது என்று அர்த்தம் .

  • Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா

   தங்கள் கூற்றிற்கு என்னுடைய ஆதரவை அளிக்கிறேன்?

 • VishwanathanSrn -

  கமலால் கமலாலயம் மட்டும் அல்ல மத்ய அரசெ செயலாக்கம் பெற்றுள்ளது. Vishwanathan.SRN. New York .

 • Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  கமல் அரசியலுக்கு சரி பட்டு வர மாட்டார், வரவேண்டும் என்றல் விஸ்வருபம் பிரச்னை போது வந்திருக்க வேண்டும்,

 • முக்கண் மைந்தன் - Seodaemun, Seoul,தென் கொரியா

  ஓஹோ...., கொத்து கொத்தா குழந்தைங்க சாவறது "அன்றாட நிகழ்வா"டிச்சா.....? India SHINING, AGAIN....

 • பலராமன் - Cuttack-Bhubaneshwar Twin City,இந்தியா

  சினிமாவில் வேலை இல்லை....அடுத்த தொழிலுக்கு அச்சாரம்

 • Janarthanan - Al Khor,கத்தார்

  செரியங்க ட்வீட் ஆபிசர்

 • Thiii - Chennai,இந்தியா

  கமல் சொல்வதை தமிழகமே சொல்கிறது.. அவர் அப்படியென்ன புதுமையை சொல்லிவிட்டார்.. கமல் ஒரு நடிகன்.. போனவாரம் தான் ஸ்டாலினின் நிகழ்ச்சியில் கருணாநிதியை வானளாவ புகழ்ந்தார். இவரொரு சந்தர்ப்பவாதி.. பத்தோடு பதினொன்று.. அதிமுக திமுக மற்றும் கவர்ச்சி அரசியல் செய்ய வரும் இதுபோன்ற அரசியல் வியாதிகளை மக்கள் ஒதுக்கி தள்ளவேண்டும்.

  • Sitaramen Varadarajan - chennai,இந்தியா

   தீ அவர்களே.......அருமை அருமை அருமையோ அருமை. அட்டகாசமான கருத்து. ஒதுக்கி தள்ள வேண்டும். இதை அனைவரும் செய்ய வேண்டும்.

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  [ கமல் அரசியலுக்கு வந்தால் ஓவியாவை கொள்கை பரப்பு செயலாராக்கி விடுவாரோ ?..] . ஆனாலும் பாஜகவை இன்றய தேதியில் துணிந்து எதிர்ப்பவர் , இந்தியாவிலேயே கமல் ஒருவர் தான்.. மற்றவர்கள் பெட்டி பாம்பு ..அல்லது செத்த பாம்பு... ஆக கமலுக்கு வாழ்த்துக்கள்... ரஜினியை விட, கமல் தெளிவானவர் ... பேச்சு தான் புரியாது...ஆனால் கருத்து இருக்கும் ...ரஜினியின் பேச்சில் கருத்துக்களே இருக்காது... ஆக, ரஜினியா, கமலா என்ற ஒரு விவாதம் வந்தால், எனது சாய்ஸ் கமலுக்கு தான்... ஆனால் கமலை எனக்கு பிடிக்காது... மாறாக, ரஜினியை தான் எனக்கு பிடிக்கும் என்றாலும், ரஜினி பயந்தாங்கோழி என்பதால் அரசியலுக்கு லாயக்கற்றவர் .கமல் அந்த விதத்தில் பரவாயில்லை...ஜெ உயிருடன் இருக்கும்போதே , ஓரளவுக்கு எதிர்த்து குரல் கொடுத்தவர் , நடிகர்களில் கமல் ஒருவரே என்றால் மிகையல்ல...

  • Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா

   உங்கள் கருத்துபடி, மக்களின் சாய்சும் அவருக்குதான்? சரியா?

  • Kadaparai Mani - chennai,இந்தியா

   இரண்டு பேரும் அரசியலுக்கு லாயக்கு அற்றவர்கள்.

 • BMV - kallai,இந்தியா

  இந்த கருத்து தன்மானத்திற்காகவும் இல்ல, தற்காப்புக்காகவும் இல்லயே... ஆண்டவர் elimination மூடுல இருக்காரோ..?

  • K.Sugavanam - Salem,இந்தியா

   அவர்தான் சொன்னாரே,தான் ஒரு பூணூலில்லா திராவிடன் என..யாருக்கு புரிஞ்சுதோ?.

 • தம்பி - பொள்ளாச்சி ,இந்தியா

  மக்கள் பேசினால் குண்டர் சட்டம் இவரை போல யாராவது பேசினால் அரசியலுக்கு வருகிறார் என சொல்கிறார்கள் அப்போது மத்திய manila அரசை யார் விமர்சிக்கலாம் ஒரு அரசாணை வெளியிடுங்கள்

  • K.Sugavanam - Salem,இந்தியா

   யார் வேணா விமரிசிக்கலாம்,,ஆனா பின்னால முட்டு குடுக்க ஸ்ட்ராங் பார்ட்டீ இருக்கோணும்..

 • NRK Theesan - chennai,இந்தியா

  கமல், அம்மண அய்யாக்கண்ணுவை பார்த்துவிட்டு சொல்லுங்க ? அப்போ தெரியும் உன்னைவிட அவன் எவ்வளவு பெரிய நடிகன் என்று .திரைக்கு வராத கவர்ச்சி நடிகன் எங்கள் அய்யாக்கண்ணு .

  • Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா

   ஓ ........இப்படி வேற இருக்காய்யா?

 • SaiBaba - Chennai,இந்தியா

  அய்யா, உட்கார்ந்த இடத்திலேயே காரியங்களை நகர்த்த முடியாது. களத்தில் இறங்கி வியர்வையம் ரத்தமும் சிந்த தயாராகுங்கள். நாலு பேருக்கு நல்லது நடக்கணும்னா எதுவுமே தப்பில்லை.

 • Dol Tappi Maa - NRI,இந்தியா

  ரஜினியை விட இவர் பரவாயில்லை .

 • sundaram - Kuwait,குவைத்

  அதெல்லாம் ஒன்னும் இல்லீங்க, செயல்தலைவர் ஹாங்காங் துபாய் இலண்டன் பயணம் போயிட்டு திரும்ப வரும் வரைக்கும் கமல் அய்யா அவர்களை செயல்தலைவரா செயலாற்ற செயலற்ற தலைவர் நியமனம் பண்ணியிருக்காராம். அதனாலதான் ஊழல் அப்படீன்னா திமுகவுக்கும் அதுக்கும் தொடர்பு இல்லேன்னு இவரு பேசிகிட்டு இருக்காரு.

  • kandhan. - chennai,இந்தியா

   சுந்தரம் போன்ற ஆட்களால்தான் அ தி மு க இந்த அளவுக்கு ஊழல் செய்ய துணை போயினர் எனவே இனியாவது உங்களை போன்றவர்கள் தமிழக மக்கள் நலன் சார்ந்த கருத்துக்களை யார் சொன்னாலும் அதில் உள்ள சாராம்சம்தான் முக்கியமே தவிர யார்ப சொன்னார்கள் என்பது முக்கியமில்லை ,தமிழத்தில் உள்ள ஒவ்வொரு தமிழனுக்கும் நாட்டின் மீது அக்கறை உண்டு அவ்வாறு சொல்லும் நல்ல கருத்துக்களை சிதைக்காதீர்கள் அதை அப்படியே பதிவிடுங்கள் இல்லயேல் இந்த நாட்டை ஆளும் கட்சியினர் நமது நாகரீகத்தை இருந்த இடம் இல்லாமல் செய்துவிடுவார்கள் காரணம் மத்திய பி ஜே பி அரசு எந்த விலை கொடுத்தாவது தமிழகத்தை பாலைவனமாக்காமல் விடமாட்டார்கள் போலிருக்கிறது எனவே அலட்சியம் வேண்டாம் பாகுபாடு வேண்டாம் மக்கள் நலனே முக்கியம் எனவே கருத்து சொல்லுமுன் நல்ல விஷயங்களை தினமலருக்கு அடித்து சொன்னால்தான் பதிவிடுவார்கள். எனவே ஜாக்கிரதையாக சரியாக நல்ல கருத்துக்களை பதிவிடுங்கள் அது நிச்சியம் மக்களை போய்சேரும் கந்தன் சென்னை

  • sundaram - Kuwait,குவைத்

   திரு கந்தன் அவர்களே, என்னால் தான் அதிமுக ஊழல் செய்ய துவங்கியதா? நல்ல நகைச்சுவை. ஆமாம், கோதுமை பேர ஊழல் வீராணம் ஊழல் ஆயிரம் தொலை பேசி இணைப்பு ஊழல் சென்னை மாநகராட்சி மஸ்டர் ரோல் ஊழல், பூச்சி மருந்து ஊழல் சமயநல்லூர் அனல் மின் நிலைய விற்பனை ஊழல் பிச்சைக்கார மறுவாழ்வு மைய ஊழல் சென்னை அண்ணா மேம்பாலம் கட்டிய ஊழல், லாரிகளுக்கு மஞ்சள்பச்சை மஞ்சள் வண்ணம் பூசியத்தில் ஊழல் இரண்டுஜி அலைக்கற்றை ஊழல் கலைஞர் தொலை காட்சி ஊழல் சன்ரைஸ் விமான கம்பெனி ஊழல் என தமிழகம் சீர் பெற்று முன்னேறிய போதெல்லாம் இந்த கமலஹாசன் எங்கிருந்தார். இன்றுவரை ஊழல்களை தேர்வு செய்து பேசும் இவர் ஊழல் எதிர்ப்பு என்பது கொள்கையானால் அனைத்து ஊழல்களையும் எதிர்க்கவேண்டும். தான் பயன் அடைந்த ஊழல்களை விலக்குவது நாகரீகமாகாது. என் கருத்துக்களில் தவறு யார் செய்தாலும் அதனை எதிர்த்து குரல் கொடுப்பதில் முதலிடம் எனக்கு வரவேண்டும் என்று நினைப்பவன் நான். அந்த தவறு யார் செய்தாலும், எந்த அரசியல் கட்சி செய்தாலும் குரல் கொடுக்கிறேன்,

  • sundaram - Kuwait,குவைத்

   தினமலர் தவறு செய்தாலும் தான் அதிலும் செய்வது தவறு என்று தெரிந்துகொண்டே தினமலர் செய்யும் தவறுகளை விடவே மாட்டேன்.

  • Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா

   புலவர்களே சற்று அமைதியாக உரையாடலாமே? உங்கள் இருவரது கருத்துமே ஏற்று கொள்ள கூடியவைதான் ? வாழ்த்துகள்?ஆனாலும் சுந்தரம் கருத்து மேலோட்டமாதான் இருக்கு?

  • sundaram - Kuwait,குவைத்

   தலைமைப்புலவரே, என் கருத்தில் ஆழம் இல்லை என்கிறீர்களா? நான் ஆழமாக பதிந்தால் ஓட்டை விழுந்துவிட வாய்ப்புள்ளதே. அந்த அளவு ஆழமாக பதிய நான் தயார்.

  • shankarvelu - watford,யுனைடெட் கிங்டம்

   super

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  புரியாம குழப்பு குழப்புன்னு குழப்பற கவிதை போட்டு உயிரையெடுக்காதே. எல்லாத்துக்கும் கோனார் நோட்ஸ் போடுறவங்க உங்க கருத்து கவிதைக்கு Notes போடவரமாட்டாங்க.

  • SaiBaba - Chennai,இந்தியா

   லியோனியின் பட்டிமண்டபத்தில் இனியன் என்று ஒருவர் பொழிப்புரை எழுதுவாரே, அவரை வேண்டுமானால் நோட்ஸ் போட சொல்லலாம்.

  • K.Sugavanam - Salem,இந்தியா

   இன்னும் கோனார் notes தானா?அய்யம்பெருமாள் கோனார் பெயர்ல பலர் இப்போ "கோனாரா" ஆயிட்டாங்க.ஆனா ஒன்னு கோனார் Notes , text book ஐ விட அதிகம் படிக்கப்பட்டது என்னவோ உண்மை..

 • vinu - frankfurt,ஜெர்மனி

  அரசியல் வாதி தோள்கள் கணம் கூடியது. இதற்கெல்லாம் மசிவார்களா என்பது சந்தேகம்.

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  நடிகர்கள் நடிகர்கள் வந்தே மாதரம்

 • Abdul Rahman - Madurai,இந்தியா

  மார்க்கெட் போன நடிகைகளுக்கு தஞ்சம் டிவி. அதேபோல, மார்க்கெட் போன நடிகர்களுக்கு தஞ்சம் அரசியலா?

  • sundaram - Kuwait,குவைத்

   நீங்கள் எண்ணி உள்ள நடிகர் மார்க்கெட் சூப்பரா இருக்கும்போதே திமுகவுலதான் இருந்தாரு இப்போவும் இருக்காரு.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement