Advertisement

நீட் தேர்வு விவகாரம்: முதல்வர் ராஜினாமா செய்ய ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு மாணவர்களுக்கு துரோகம் இழைத்து விட்டது. இதற்காக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: நீட் விவகாரத்தில் கபட நாடகம் நடத்தி மாணவர்களுக்கு துரோகம் இழைத்த முதல்வர், அமைச்சர்கள்,எம்.பி.,க்கள் அனைவரும் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். தீர்வு காண்போம் என மத்திய, மாநில அரசுகள் கூறி வந்தது ஏமாற்று நாடகம். நீட் விவகாரம் முடிந்து போன ஒன்று என தம்பிதுரை கூறியது அதிர்ச்சியளிக்கிறது. எம்.பி.,க்கள் தங்களது தோல்வியை ஒப்புக் கொண்டு தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். முதல்வர் தன் பதவியை ராஜினாமா செய்ய அவரே முன்வர வேண்டும்.அனைத்து மாநிலங்கள் மீதும் நீட் தேர்வை வலிந்து வம்படியாக திணித்து சமூக நீதியை மத்திய அரசு சாகடித்துள்ளது. நீட்வழக்கு விசாரணையில் இருக்கும் போது மத்திய அரசு அவசர அவசரமாக நீட் தேர்வை திணித்துள்ளது. தமிழக அரசின் இரு மசோதாக்களும் ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பவில்லை. சட்டசபை நிறைவேற்றிய அந்த 2 மசோதாக்களுக்கும் ஜனாதிபதி ஒப்புதல் பெறப்பட வேண்டும். பா.ஜ., அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை விவரங்களை மாநில அரசு உடனடியாக வெளியிட வேண்டும். கூட்டாட்சி என பேசிக்கொண்டு உதட்டில் ஒன்று உள்ளத்தில் ஒன்று என மத்திய அரசு இரட்டை வேடம் போடுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (51)

  • Krishna - Dindigul,இந்தியா

    இந்த ஆளுக்கு தூக்கத்துல கூட ஆட்சி ஆட்சி நீட் நீட் னே கனா கண்டுட்டே ஒளறிட்டே இருப்பான்னு நெனைக்கிறேன்.... கருமாந்திரம்...

  • Swami - Abuhalifha,குவைத்

    Stupid actions and cheat students to keep distance from AIIMS, JIPMER, JEE AND OTHER COMPETITION.STUPID POLITICIANS DON'T KNOW TO PASS NEET REQUIRED FOR ABROAD MEDICAL COURSES AS PER MCI.

  • RENU - Redmond,யூ.எஸ்.ஏ

    கழக கண்மணிகள் நீட் ஆக தானே தண்ணியடிக்க விரும்புவார்கள்

  • Swami - Abuhalifha,குவைத்

    School ped, failed students become politicians and confusing people. People try to think and through the dirty politicians.

  • ganesha - tamilnadu,இந்தியா

    நீட் தேர்வு கூடாதுன்னு சொல்லிட்டு இங்க தரம் குறைந்த மார்க் வாங்குபவர்களை பின் தங்கிய மக்களும் மருத்துவரக்கவேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் சொல்கிறீர்கள். . இவ்வளவு நாள் பணம் வாங்கிக்கொண்டு அது தான் செய்தீர்கள். அப்புறம் ஏன் நீங்கள் மட்டும் லண்டன் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்கிறீர்கள். இங்கயே பின் தங்கிய மக்களுக்கு உங்கள் ஆட்சியில் மருத்துவ சீட் கொடுத்தீர்கள் இல்லையா. அவர்களிடத்தில் சென்று முதலில் சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள். அப்புறம் பேசுங்க.

    • SaiBaba - Chennai,இந்தியா

      Well said கணேஷா. திரு ஸ்டாலின் அவர்களே, உங்கள் உயிர் மாத்திரம் வெல்லக்கட்டி மத்தவங்களுக்கெல்லாம் என்ன கல்லா?

  • DharmarajC -

    நீட் தேர்வு விலக்கு கேட்டு தமிழனை கேவலபடுத்த வேண்டாம்

  • Karuthukirukkan - Chennai,இந்தியா

    As usual halfwits commenting here as if NEET is the only qualifier which can judge a students ability. And also linking TN doctors quality with NEET exam. Quality of a doctor is not with his education until 12th standard. It is built because of his MBBS education for 4.5 years and practice for a year. 12th standard is just a base. So are you people saying MBBS education is not upto standard? Or you people think passing out of medical college is easier than NEET exam? TN has the medical infrastructure and most number of government medical colleges in whole India. This has been purely done by Dravidian parties. Just for supporting whatever a your party does don't degrade our state without any facts. Here after people with money who can s their kids to CBSE schools and guess what it's not enough. People who can sp more lakhs sing their kids to coaching institutes can only study medicine. Even a single CBSE student can get a medical seat just with his school education, all are sent to coaching class. This has been the case with IIT entrance for last 70 years.CBSE students start coaching for IIT From 6th standard. And you call this a higher standard of education? A students mind can be loaded with whatever he can grasp. Loading with more syllabus does not mean higher quality. Already TN medical seats are given based on merit of attaining high marks in 12th standard. Is 12th standard not a qualification? People are speaking as if in TN medical seats where given to useless People all these years. Chennai is the capital of medical tourism in India kids. Most are TN educated doctors. If center is going to conduct even entrance exams then why do we even have state governments in place?

  • Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா

    எண்பத்தைந்து சதம் மாணவர்கள் எந்தவழியில் வந்தாலும் தமிழக மாணவர்கள்தான் . இதில் தகுதியானவர்கள் வந்துவிட்து போகட்டுமே. நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் சிறப்பாக செயல்பட்டால் பிற மாநில சீட்களையும் பிடிக்கமுடியுமே. ஏன் தமிழக மாணவர்களின் திறமையை குறைக்கும் வழியில் இந்த அரசியல்வாதிகள் செயல்பட வேண்டும். கல்வித்தரத்தை உயர்த்துவதுதான் நமது குறிக்கோளாக இருக்க வேண்டும்

  • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

    This DMK party came to power in 1967 by taking the powerful TooL of Hindi agitation by making the then young students fools and now they again can not make the present generation fools as they are very clever and they can't give support for Hindi agitation again in present days.So Mr.Staline is trying again to make the present students fools by taking the another weapon of NEET examination in order to get the cooperation,support and sympathy from the students by way of objecting the examination in our state with out any meaning.He is asking the CM to resign which have to meaning at all.This man is only interested in power and not interested to guide the ruling party by his constructive role of responsible opposition leader of our state.If he continue his role in such a shabby way in next assembly election his party won't win any seats in the election instead his party loose it's deposites in all constitutions without fail.

  • Venkat - Chennai,இந்தியா

    இப்போது நீர் எதற்காக லண்டன் போகிறீர் என்று சொல்ல முடியுமா ???

  • Sekar KR - Chennai,இந்தியா

    நீட்டிலிருந்து ஒரு ஆண்டு விலக்கு அளிப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்லிட்டாரே இப்ப என்ன செய்வீங்க?

  • srisubram - Chrompet,இந்தியா

    லண்டன் போகாமல் , எதாவது ஒரு மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் , ஒரு தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த , அல்லது கிராமபுரத்தை சேர்ந்த ஒரு மருத்துவரிடம் காட்டுங்க உங்க உடம்பை .. பின்னர் இவர்களை ராஜினாமா செய்யலாம் . அரசு ஆஸ்பத்திரியில் தான் அரசு அதிகாரிகள் , அரசு பணியாளர்கள் தங்கள் உடம்பை கட்டிக்கொள்ளவேண்டும் என்று சட்டம் இயற்றுங்கள் ..

  • Tamilselvan - Chennai,இந்தியா

    நீட் கொண்டு வந்ததே திமுகவும் காங்கிரஸும் தான்.இப்போது கபட நாடகம் ஆடுவது ஸ்பெக்ட்ரம் கும்பல் தான். குட்டிக்கரணம் போட்டாவது,பதவிக்கு வர துடிக்கிறார்கள். சுடலை இதற்கு நீ சரிப்பட்டு வரமாட்டே. சர்காரியாவில் இருந்து,ஸ்பெக்ட்ரம் ,டெலிபோன் ,தோலை பிஷை இணைப்பு ஊழல்,ஏர் செல் ஊழல் என இந்த கும்பல் கொள்ளை அடிக்கும் கும்பல்களை இனி இளைஞர்கள் இந்திய அரசியல் களத்தில் இருந்து விரட்டி அடிப்பார்கள்.

    • SANKAR - calgary,கனடா

      இதுதான் முழு பூசணிக்காயை சோற்றில்மறைக்கிறது என்பது... திமுக தமிழ்நாட்டில் 2011 வரை ஆண்டது... அப்போது நீட் வந்தபோது அதை வராமல் தனது சாதுரியத்தால் தடுத்தது... பிறகு 2011 -இல் அதிமுக ஆட்சிக்கு வந்தது. அவர்கள் தமிழக சிலபஸை நீட் தேர்வுக்கு தக்கவாறு மாற்றவும் இல்லை ... நீட் ஐ தடுக்கவும் முயற்சியெடுக்காமல் தூங்கிவிட்டார்கள்... பொறுப்பில் இருந்தவர்கள் தூங்கியதற்கு 2011 -2016 -இல் ஆளுங்கட்சியாகவோ ஏன் அதிகாரப்பூர்வ சட்டமன்ற எதிர்கட்சியாகவோ கூட இல்லாத திமுக வை குறை கூறுவது எந்தவிதத்தில் நியாயம்.. நண்பர்கள் மனசாட்சியுடன் கருத்துஎழுதவேண்டும்...

    • Kadaparai Mani - chennai,இந்தியா

      மெட்ரிகுலேஷன் syllabus மூட சதி செய்தது யார் ஆட்சி இல்

    • Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா

      மெட்ரிகுலேஷன் சிலபஸ், ஆங்கிலோ இந்தியன் சிலபஸ் தமிழக சிலபஸ் இவற்றுக்குள் சமசீர் செய்ததால் தமிழ்நாட்டு மாணவர்கள் அவர்கள் பெற்றோர்கள் தமிழ்நாட்டுக்குள் இடமாற்றம் ஆகும் பொழுது அட்மிஷன் பிரச்சினை சின்ன வகுப்புகளில் பாடத்திட்ட வித்தியாசத்தை களைய கொண்டு வரப்பட்டது...மெட்ரிகுலேஷன் cbse திட்டங்கள் வேறு வேறு..

  • hariharank -

    நீட் பற்றி எல்லா கட்சிகளும் வேஷம் கட்டுகிறார்கள். மாணவர்கள் மேல் எந்த அரசியல்வாதிக்கும் அக்கறை இல்லை. ஒரே மாநிலத்தில் படிக்கும் மாணவர்களை இவர்கள் எப்படி பிரித்து வித்தியாசப் படுத்தலாம். இன்று நிர்மலா ஜி சொன்னதுதான் சரி. இந்த வருடம் மட்டும் விலக்கு அளிக்கலாம். இதை உணர்ந்தால் சரி.

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    மாணவர்களை கெடுப்பதே இவர்கள்தாம்... அவர்களை உசுப்பி விட்டு இருந்தால் நல்ல ரேங்க் வாங்கி இருப்பார்கள்... இந்த மனிதர் அதை அரசியல் ஆகி அதில் குளிர் காய்கிறார்... இவருடைய வாரிசுகளுக்கு ஏகப்பட்ட சொத்துக்கள் உள்ளது...ஏழைபட்டவர்கள் வாரிசுகள் தேர்வு எழுதி தான் வாழ்க்கையில் முன்னேற முடியும்...

  • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

    இந்த நூற்றாண்டின் சிறந்த காமெடியன் .....

  • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

    சட்டை கிழிச்சிக்கிட்டு பனியன் கம்பெனிக்கு போஸ் கொடுக்கும் சுடலை......

  • Giridharan S - Kancheepuram,இந்தியா

    இவங்க ஆட்சிலே இருந்திருந்தாங்கன்னா கிழிச்சிருப்பாங்க. தேச நேசன் சொல்வது உண்மை தான். காங்கிரஸ் கட்சி வாயே திறக்கலியே

  • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

    விடுங்க அவரை பிளீஸ்.... இவர் ராஜினாமா பண்ணி என்ன ஆகப்போகுது... தானும் அரசியலில் இருக்கிறோம் என்ற அளவில் தான் ஸ்டாலினின் பேச்சு உள்ளது.... எடப்பாடியே ஒரு அதிகாரமற்ற முதல்வராக உள்ளார்...பாஜக தான் தமிழகத்தில் ஆட்சி நடத்துகிறது... இந்த நிலையில் எடப்பாடி ராஜினாமா பண்ணாமல் இருப்பது தான் 2019 வரை ஸ்டாலினுக்கு நல்லது ... பாஜக, மத்தியில் ஆளும்வரை மாநிலக்கட்சிகள், நிம்மதியாக ஆட்சி நடத்தமுடியாது... ஆக, ஸ்டாலின் 2019 வரை பொறுத்திருப்பது நலம்... இல்லை, தினகரன் கவிழ்க்கட்டும் என்றுவிட்டு விடுவது நலம்...

  • bal - chennai,இந்தியா

    எப்படியாவது பதவியில் இருந்து தூக்க வேண்டும்... அதுதான் சுடலையின் விருப்பம்

  • Lion Drsekar - Chennai ,இந்தியா

    இவ்வளவு பேசும் இவர்கள், இவர்கள் குடும்பத்திற்கு இதுபோன்ற சலுகைகளில் பட்டம் பெற்ற மருத்துவர்களிடம் மட்டுமே மருத்துவ பரிசோதனை பெறவேண்டும் எதற்க்காக வெளிநாடு செய்கிறார்கள்? அப்படி என்றால் எங்கு மருத்துவம் பட்டப்படிப்பில் பட்டம் பெற்றவர்கள் தகுதி அற்றவர்களா ? அரசு அலுவலர்கள் மற்றும் உங்களுக்கு நீங்களே கொடுத்துக்கொண்டு மகிழும் மாண்புமிகு அனைவர்களும் இவர்களிடம் மட்டுமே மருத்துவம் பெறவேண்டும் சட்ட்டம் இயற்ற தாயாரா ? வந்தே மாதரம்

  • Dol Tappi Maa - NRI,இந்தியா

    ஆந்திராவில் இருந்து பிழைக்க வந்து மிக பெரிய ஊழல் செய்து தமிழர்களுக்கே அவமானம் தேடி தந்தனர் . முரசொலி விழாவில் ஏன் திராவிட கொள்கையை பிடிக்காத எல்லா ஜாதி கார்களும் குவிந்தனர் என்றால் எங்கே மறுபடியும் மக்களை நேசிக்கும் தமிழன் வரக்கூடாது என்று தான் . இது தான் ஆதிக்க சக்திகளின் திட்டம் ,

  • Pandiyan - Chennai,இந்தியா

    நீட் மசோதா பாராளுமன்றத்தில் முதலில் யார் கொண்டு வந்தது தளபதியாரே

  • Lion Drsekar - Chennai ,இந்தியா

    வாழ்வில் சாவு என்பது ஒருமுறை மட்டுமே. வரட்டும், யாராவது ஒருவராவது உண்மையை கூறவேண்டும்?

  • Lion Drsekar - Chennai ,இந்தியா

    1957 முதல் இவர்கள் கால கட்டத்தில் பட்டம் பெற்ற அனைத்து ஆவணங்களையும் ஆராய்ந்தால் அனைத்து உண்மையும் வெளிவரும், என்ன செய்வது அனைவரும் பல பல லட்சம் கோடி பணம் சேர்த்து பல தலைமுறைக்கு சேர்த்து விட்டனர், வாழ்க ஜனநாயகம், வந்தே மாதரம்

  • Abdul Rahman - Madurai,இந்தியா

    ஐ ஆசையை பாரு. இப்படியே சொல்லி சொல்லி நீங்க வர்றதுக்கு பாக்குறீங்களா? நீங்க வந்தா, நீட் எக்ஸாம்ல என்ன பண்ண முடியும்?

  • Lion Drsekar - Chennai ,இந்தியா

    இந்த புகைப்படத்தை பார்க்கும்போது அடி வயிறு பற்றி எரிகிறது, அவனவன் பல லட்சம் கோடி என்று பணம் போட்டு வியாபாரம் செய்கிறான், அவனவன் ஊரு முழுவதும் கடன் வாங்கி வீடு காட்டுகிறான், ஒரு வேளை சோற்றுக்கு வழி இல்லாமல் அடுத்த வேலைக்கு என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி தினம் தினம் சாகிறான், பத்து காசு முதல போடாமல் மக்களின் வரிப்பணத்தில் நாட்டை கொள்ளை அடிக்கவே பிறந்த இந்த முடியாட்சி மன்னர்களை, அடி வயிறு எரிகிறது, இவர்கள் வியர்வை சிந்தி இந்த நாட்டிற்காக உழைத்தார்களா? மஞ்சள் பையையுடன் வந்த தந்தை,வேண்டாம் தயவு செய்து ஒன்று மட்டும் கூற விரும்புகிறேன் நான் எந்த ஜாதியையும் அல்லது மதத்தையும் சார்ந்தவனும் அல்ல, இந்தியன், வந்தே மாதரம்

  • Dol Tappi Maa - NRI,இந்தியா

    உங்க ஆந்திராவில் நீட் ஏத்துக்கொண்டார்கள் . நீங்க தமிழ் நாட்டிலே கொண்டுவந்த சமசீர் தானே இதனை பிரச்சனை ? அப்போதே cbse போல மாற்றம் கொண்டுவந்து இருக்கலாமே ? உங்கள் குடும்பம் நடத்தும் எல்லா பள்ளிகள் மட்டும் cbse தானே .

    • SANKAR - calgary,கனடா

      அன்று ஏதய்யா ஆந்திரா... எல்லாமே சோழர் ஆட்சியில் இருந்த பகுதிதான்... சோழமண்டலம் இன்றைய தெற்கு அந்திரஉள்ளடங்கிய பகுதி...சரித்திரம் தெரியாது உளறாதீர்...பின்னர் கலிங்கர், சாளுக்கியர் சாலிவாகனர் போன்றவர்கள் அந்தப்பகுதியை தங்கள் ஆட்சிக்குள் கொண்டுவந்தால் தமிழ் திரிந்து திருவேங்கடம் முதல் தென்குமரி வரை இருந்த தமிழ்கூறும் நல்லுலகம் குறுகியது...

    • Kadaparai Mani - chennai,இந்தியா

      ஸ்டாலின் மகள் நடத்தும் பணக்கார பள்ளிக்கூடத்தில் இன்டர்நேஷனல் syllabus .மற்றும் தமிழில் பேசினால் அபாராதமாம்.

  • தேச நேசன் - Chennai,இந்தியா

    நீட் என்ற ஒன்றை முதன்முதலில் உருவாக்கி கட்டாயப்படுத்தியதே உங்க UPA  கூட்டணிதான்.அதுக்காக நீ மன்னிப்புக் கேட்டாலும் நாங்கள் மதிக்கப் போவதில்லை. சமசசீர் எனும் மட சாம்பிராணி பாடத்திட்டம் மூலம் போட்டித் தேர்வுகளுக்கே லாயக்கற்ற ஒரு மாணவ தலைமுறையை உருவாக்கி சீரழித்த உங்களை எதிர்கால சந்ததியினர் அசிங்கமாக தூற்றுவர்

    • kandhan. - chennai,இந்தியா

      உங்களை போன்று பார்ப்பன கூட்டத்தோடு போட்டி போட முடியாத தமிழக கிராமப்புறத்து மாணவர்களும் படிப்பில் நல்ல மதிப்பெண் பெறவேண்டும் என்ற நோக்கத்தோடு தான் இந்த சமச்சீர் கல்வியை (செய்முறையுடன் கூடிய கல்வி திட்டம் )கலைஞர் கொண்டு வந்தார், அப்போதைய ஆட்சியில் இருந்த அம்மையார் அவர்கள் எதிர்த்தார் பிறகு நீதிமன்றமே சமச்சீர் கல்வியை ஏற்றுக்கொண்டபோது நீங்கள் எங்கே போய் இருந்தீர்கள் அம்மாவின் கையாலாகலாத காரணத்தால் கல்வி தரத்தை சி பி எஸ் இ தரத்திற்கு மாற்றி அமைக்காதது யார் பொறுப்பு?? ஆளும் அ தி மு க என்ன செய்தது தி மு க மீது பழி சொல்லி இந்த 6 வருடத்தை ஒட்டிவிட்டு தமிழ மாணவர்களின் எதிர்காலத்தை வீணடிக்கும் இந்த கோமாளி ஆட்சி பற்றி கருத்து சொல்ல துணிவில்லையா தேச நேசனே??? நீயும் கோமாளிதான் என்று நினைக்க தோன்றுகிறது காரணம் குடிமியாக நீ இருப்பாய் என்று நினைக்கிறேன் அந்த காலம் முதல் இந்த காலம் வரை அவாள் தான் தங்களை தனியே அடையாளம் காட்டி கல்வியில் இவர்கள் தான் சுப்பீரியர் என்று காட்டிக் கொண்டு நம் மக்களை அடிமையாக வைத்திருப்பது உங்களைப் போன்ற அறிவிலிக்கு எங்கே புரிய போகுது இனியாவது திருந்த பாருங்கள் உண்மையை உணருங்கள் பிற்படுத்தபட்ட மக்களுக்கு கல்வியில் வாய்ப்பை பெறுவதற்கு வழி செய்பவர்களை குறை சொல்லாதீர்கள் கந்தன் சென்னை

    • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

      அப்பா பிற்படுத்தப்பட்டவர்.. பையன் அதை வைத்து படித்து முன்னேறியவன்... பிறகு எப்படி திரும்பவும் பிற்படுத்தப்பட்டவன் வருவான்? பரம்பரை உரிமையா? மற்றவர்களையும் சற்று முன்னேற விடுங்கள்...

    • Abdul Rahman - Madurai,இந்தியா

      மிக சரி. அருமை.

  • Vanavaasam - Dallas,Fort Worth,யூ.எஸ்.ஏ

    NEET தேர்வில் வெற்றி பெற்ற மருத்துவர்களையும் நம்பாமல் , கிராமப்புற மருத்துவர்களையும் நம்பாமல் வெள்ளைக்கார மருத்துவரை நம்பி லண்டன் பிழைக்க ஓடும் சுடாலின் சொன்னா சரியாதான் இருக்கும் ..

  • Pats - Coimbatore,இந்தியா

    எல்லோரையும் பதவி விலக சொல்லுங்க. அப்படியே கட்டுமரத்தை ஜனாதிபதி ஆக்குங்க, ராஜாத்தியை உபஜனாதிபதி ஆக்குங்க, கனிய பிரதமர் ஆக்குங்க, ராசாவை மத்திய கல்வி அமைச்சர் ஆக்குங்க, நீங்க முதலமைச்சர் ஆயிடுங்க... நாடு விளங்கிடும்.

    • rajangam ganesan - lalgudi,இந்தியா

      கனி தன் ராஜினாமா கடிதத்தை அப்பாவிடம் கொடுத்தது போல

  • SaiBaba - Chennai,இந்தியா

    அவருக்கு ராஜினாமா கடிதம் எழுதத்தெரியாதாம். நீங்கள் எழுதிக்கொடுத்து அவரை கையெழுத்து போடச்சொல்லுங்கள்.

  • NRK Theesan - chennai,இந்தியா

    ஒரு மாற்றத்துக்கு நீயும் உன்னப்பனும் ராஜினாமா செய்து இருக்கலாமே ? பதவி ஆசையில் சட்ட திருத்தம் கேட்டுப்பெற்ற நீ இதைப்பேச அருகதை அற்றவன்

  • Lion Drsekar - Chennai ,இந்தியா

    இந்த நாட்டிற்கு முதல் போட்டவர்கள் இவர்கள், இரத்தத்தை சிந்தி அரசு அதிகாரிகளின் அராஜகங்களை சந்தித்தவர்கள் இவர்கள், முறையாக அனைத்தையும் பின்பற்றியவர்கள் இவர்கள் , இவர்கள் மட்டுமே இந்த நாட்டின் இறையாண்மையை காக்கப்பிறந்தவர்கள் , மற்றவர்கள் சமூக விரோதிகள், .., வந்தே மாதரம்

  • Pats - Coimbatore,இந்தியா

    ராஜினாமா செஞ்சா சரி ஆயிடுமா? இவரு முதல் அமைச்சரானா அப்படியே பாலும் தேனும் ஓடும்.

  • Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்

    நீட் தேர்வு மசோதா உங்க கூட்டணி ஆட்சியில் தான் கொண்டு வர பட்டது, இப்பொது ஒன்றும் தெரியாது போல ஸ்டாலின் பேசுகிறார், மக்கள் இன்னுமா உங்கள நம்பறாங்க????

  • Lion Drsekar - Chennai ,இந்தியா

    ஜாதி மதம் இனம் இவற்றை தவிர வேறு எதுவுமே தெரியாத இரு இனம் , இதுதான் இன்றய ஜனநாயகம், வந்தே மாதரம்

  • தேசநேசன்  -

    ஆனால் உங்க கூட்டணித்தலைவி சோனியாவும் இளைய தொல்லைப்பதி ராகுலும் இதைப் பத்தி பேசவே மாட்டேங்கறாங்களே. அவங்க ஆளுகின்ற மாநிலங்களும் NEETடை ஏற்றுக்கொண்டுவிட்டார்களே  

    • SANKAR - calgary

      அங்கு சிலபஸ் மாற்றியதால் மாணவர்களுக்கு பாதிப்பு இல்லை...இங்குதான் தூங்கி விட்டார்கள்...

  • vbs manian - hyderabad,இந்தியா

    The Dravidian parties especially DMK are responsible for the pitiable condition of TN students vis a vis Neet.They played politics in the field of education neglected the real interest of students.You cannot go against something that the whole country has accepted on the advice of educational experts.Both these parties should tender a public apology to the students of TN.

  • Devanand Louis - Bangalore,இந்தியா

    போதும் போதும் ஸ்டாலின் நீயும் உனது அப்பனும் தமிழகத்தின் மாணவர்களின் அறிவுத்திறனை கெடுத்தது போதும், பேசாமல் வாயை மூடிக்கொண்டு சும்மாஇருமையா ஸ்டாலின்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement