Advertisement

காஷ்மீர் என்கவுன்டர்: தமிழக வீரர் உட்பட 2 பேர் வீரமரணம்

ஜம்மு: பயங்கரவாதிகளுடனான மோதலில் தமிழகத்தை சேர்ந்த வீரர் உட்பட 2 பேர் வீரமரணம் அடைந்தனர். 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.


ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் அவ்நீரா என்ற கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை சுற்றிவளைத்தனர். இதனையடுத்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். இதில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். 5 வீரர்கள காயமடைந்து ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் இளையராஜா என்பவர் உட்பட 2 பேர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (33)

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  தமிழனும் இந்தியாவில்தான் இருக்கிறான்...இந்தியன் என்றே சொல்லுங்கள்..

 • hussain - cuddlore,இந்தியா

  ராணுவம் என்றாள் நாட்டை காக்கனும் அதை விட்டுட்டு பொது மக்களை கொள்ளக் கூடாது அவர்கள் என்ன செய்வார்கள் பாவம் எல்லாம் சங்பர்வார் மத்திய மோடி அரசும் தான் காரணம்

 • hussain - cuddlore,இந்தியா

  காஷ்மீர் மக்களுக்கு செய்த துரோகம் இப்போ சாவுரான்வோ செத்து தொலையட்டும் கெடுவான் கேடு நினைப்பான்

  • ganapathy - khartoum,சூடான்

   யோவ் இவன் ஒன்னும் துரோகம் பண்ண வில்லை...இந்திய அரசாங்கம் சொல்லுது இவங்க சுடுகின்றனர்...நீ பாகிஸ்தானுக்கு ஆதரவு கொடுத்து கொண்டு இந்தியாவில் இருக்க முடியாது...பாகிஸ்தானில் ராணுவ வீரர்களின் குழந்தைகளை படிக்கும் பள்ளிக்கூடத்தில் புகுந்து கொன்ற இஸ்லாமிய தீவிரவாதிகளை நினைவு இருக்கிறதா... இந்தியர்கள் கண்ணீர் வடித்தனர்...முட்டாள் தனமா கருத்து சொல்லாதே...

 • Subramaniam - Prague,செக் குடியரசு

  வீரம் பேசும் ஹிந்தியர்கள் போய் சாகட்டும். ஏன் தமிழன் போய் உயிரை வீணாக்க வேண்டும்.

 • revathemanoj - pune,இந்தியா

  வீரமரணம் அடைந்த உங்களுக்கு என் ஆழ்ந்த அனுதபங்கள் ..

 • Dol Tappi Maa - NRI,இந்தியா

  உலக பணக்காரர்கள் டாப் 20 உள்ள மார்வாடிகள் ஆனால் எந்த மார்வாடியாவது ராணுவத்தில் இருக்கிறானா ? சாகுறது எல்லாம் தமிழ்நாடு ஆந்திரா மகாராஷ்டிரா சீக்கியர்கள் ஜாட் பிரிவை சேர்ந்தவர்கள் . எந்த மார்வாடியாவது அலகு குத்தி காவடி எடுத்து கால்நடையா கோவிலுக்கு போறானா , இல்லே வெயில்லே உக்கார்ந்து சாமிக்கு பொங்கல் வைக்கிறானா? ஆனா அவன் கிட்டே தான் இந்தியர்கள் பணம் குவிஞ்சி கிடக்கிறது .

  • தேசநேசன்  - ,

   மார்வாடிகளும் (குஜராத்தியரும்கூட).பெரும்பாலும் அஹிம்சயை வலியுறுத்தும் சமண மதத்தவர்.அவர்கள் போர்புரிந்து கொலையிலீடுபடுவதை விரும்பாதது புரிந்துகொள்ளத்தக்கதே. எனக்குத்தெரிந்து பல இஸ்லாமிய ஜமாத்துக்களில் இஸ்லாமிய இளைஞர்கள் வங்கி&  நிதி நிறுவன வேலைகளுக்குப்போக வேண்டாமென்கிறார்கள். (வட்டி வணிகமென்பதால்). பன்றிக்கறி பரிமாறும் ஓட்டல்களில் இஸ்லாமியர் வேலைக்கு சேர மறுப்பதுபோல்தான் அதுவும்.

  • Dol Tappi Maa - NRI,இந்தியா

   இந்து மதத்தில் ஏழைகளை மட்டும் துன்புறுத்துவது ஏன் ?

 • Arabi Adimai - Chennai,இந்தியா

  சகோதரனே உன் வீர மரணத்திற்கு உரிய பதிலடி கிடைக்கும் அவர்களுக்கு ..ஆழ்ந்த இரங்கல்கள் உன் ஆன்மாவுக்கு ....உன் குடும்பத்திற்கு இந்த நாடே நன்றிசெய்ய கடமைபட்டிருக்கிறது....

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  தீவிரவாதிகளை வளர்ப்பது இந்த கட்சிகள், சாவது இந்த தியாகிகள், ஆனால் ஊருக்கு பெயர் மற்றும் தெருவிற்கு பெயர் இந்த அரசியல் அநாகரிக படிப்பறிவற்ற கேவல ... அடி வயிறு எரிகிறது, வந்தே மாதரம்

 • Ramamoorthy P - Chennai,இந்தியா

  ஒவ்வொரு வீரனின் மரணத்திற்கும் பாகிஸ்தான் விரைவில் பதில் சொல்லும் காலம் வரும்.

 • SaiBaba - Chennai,இந்தியா

  நம் நாட்டைக் காக்கும் வீரர்களான EPS, OPS, TTV, VKS, MKS போன்றோரிடம் கத்தி கம்பு கேடயம் கொடுத்து எல்லைக்கு அனுப்புங்கள். அவரகள் தமிழகத்திற்கே எல்லையற்ற சேவைகள் செய்து கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் நாட்டின் எல்லைக்கும் சேவை செய்து விட்டு திரும்பட்டும்.

  • Abdul Rahman - Madurai,இந்தியா

   சுடலையை விட்டுட்டிங்களே.

 • Rafi - Riyadh,சவுதி அரேபியா

  காஸ்மீர் பிரச்சனை மக்களிடமிருந்து உண்மையை மறைக்க அரசு முயல்வதையே காட்டுகின்றது. காஸ்மீர் நமக்கு மட்டுமே சொந்தம் என்றால் அங்கு ஏன் லைன் ஆப் கண்ட்ரோல், ஏன் பாகிஸ்தானிடம் பேச உலக நாடுகள் வற்புறுத்த வேண்டும். நம் நாடு தான் என்றால் அங்கு நிரந்தரமாக சுவர் எழுப்பி அந்நியர்கள் உள்ளே நுழையாதவாறு தடுக்கலாமே? கடந்த மூன்றாண்டுகளில் எப்போதும் இல்லாதவாறு போராட்டங்கள் வலு பெற காரணமென்ன? எப்போது நம் வீரர்களுக்கும், அம்மக்களுக்கும் நிரந்தர தீர்வு கண்டு அமைதி திரும்பும்.

  • Jaya Prakash - Medan,இந்தோனேசியா

   @ RAfi ... " காஸ்மீர் நமக்கு மட்டுமே சொந்தம் என்றால் அங்கு ஏன் லைன் ஆப் கண்ட்ரோல், ஏன் பாகிஸ்தானிடம் பேச உலக நாடுகள் வற்புறுத்த வேண்டும் "... தவறாக புரிந்து இருக்கீறீர் நண்பரே.... பாக்கிஸ்தான் காஷ்மீரை தன் நிலம் என்கிறது... அது இந்தியாவுக்கு சொந்தமானது... சண்டை வரக்கூடாது என்ற ஒரே காரணத்துக்குதான் உலக நாடுகள் பேசி தீர்த்து கொள்ள வற்புதுதுது. ... அங்கே நடப்பது இந்திய ஆட்சி.... அதில் எந்த மாற்றமும் இல்லை.... என்ன அரசியல் தவறு நடந்துள்ளது (நான் எந்த கட்சீயையும் பேர் எடுக்க விரும்பவில்லை) ..... அதற்கு தனி அந்தஸ்து கொடுத்தது... கொடுப்பது இதுதான் தவறு..... இன்றைய அரசும் அந்த தவறை செய்கிறது.... மதம் என்பது கடவுள் சம்பந்தப்பட்டது.... ஆனால் அதில் ஒரு வெறி சில பேரிடம் இன்று இருக்கு அதுவும் ஒரு காரணம்.... பாக்கிஸ்தான் இன்று அதை வைத்து தான் விளையாடுது.... உலகம் முழுக்க இன்று குண்டு வெடிக்குது.... ஏன் அவர்கள் வெறியை ஒதுக்க நினைக்கும் அவர்கள் மதம் சார்ந்த ஊரிலேயே குண்டு வெடிக்குது.... அப்போ இதை செய்வது மதத்தை சார்ந்தவன் அல்ல .. மதம் பிடித்தவன்... POK என்று நாம் சொல்றோம் (அதாவது பாகிஸ்தான் occupied kashmir _) ... அது நம்ம நிலம் என்று சொல்லும் இந்தியன் என்றைக்காவது அங்கே குண்டு வச்சுருக்கானா?..... இப்போ நடப்பது மதத்தை வைத்து நடத்தும் அரசியல்.... அந்த சில பேரால் ஒரு உகந்த மதம் உலக அளவில் கெட்ட பெயர் வாங்கிகொண்டு இருக்கு..... நான் சொல்வது சரியா இல்லையா நண்பா....

  • Patriot - Chennai,இந்தியா

   பாகிஸ்தானின் தீவிரவாதத்தை ஏன் உன்னை போன்றவர்கள் தட்டிக்கேட்கவில்லை, நிறுத்த சொல்லவில்லை..காஷ்மீர் இந்தியாவை சேரும் என்று என்றோ எழுதிக்கொடுக்கப்பட்டு விட்டது ... அதில் தலையிட பாக்கிற்கு யார் உரிமை கொடுத்தது.

  • Abdul Rahman - Madurai,இந்தியா

   உண்மைதான். நல்ல கேள்வி. பாராட்டுக்கள்.

  • Rafi - Riyadh,சவுதி அரேபியா

   திரு ஜெயப்ரகாஷ் அவர்களுக்கு, கருத்திற்கு அழகாக பதில் தந்தமைக்கு நன்றி, சிறிய விளக்கம், திரு முஷாரப் அவர்கள் இந்தியா வந்தபோது அவர் தங்கியிருந்த நாட்களில் பெரும்பாலும் தொலைக்காட்சிகள் நேரடி ஓளிபரப்பு செய்த போது அதில் இந்தியா பாகிஸ்தானுக்கான அடிப்படை பிரச்சனைகளை கலந்தாலோசித்ததில் பிரிட்டிஷ் காரர்கள் இந்தியாவில் காஸ்மீர் இப்போதைக்கு இருந்தாலும் 6 மாதத்தில் அம்மக்களிடம் ஓப்புதல் பெற வாக்கெடுப்பு நடத்தி முடிவு எடுக்க வேண்டும் என்று ஒப்பந்தம் இட்டுள்ளதாகவும் கலந்தாலோசித்தார்கள், இதுவரை அப்படி ஓரு தேர்தலை அங்கு நடத்தவே இல்லை என்று பாக்கிஸ்தான் தரப்பு குற்றம் சுமத்தி வருகின்றது? அதை மையமாக வைத்து தான் உண்மை நிலையை மக்களிடம் தெரிவிக்க வேண்டும் என்று கருத்து பதிவிட்டிருந்தேன். குண்டு வெடிப்புகள் பல இடங்களில் இஸ்லாமிய நாட்டிலே அதுவும் பள்ளிவாசல்களில் கூட நடக்கிறது, அதற்கான யூக அடிப்படையில் கேள்வி கேட்டுப்பார்த்தால் வெளி ஆட்கள் விளங்காத நபர்களின் வறுமையை பயன் படுத்தி கூட நடத்துவதற்கு வாய்ப்பு இருப்பதை உணர முடியும். இஸ்லாத்தை உகந்த மதம் என்றமைக்கு நன்றி, இஸ்லாத்திற்கு எதிரான நிகழ்வு நடந்து கொண்டு தானிருக்கும் அதையும் மீறி அது வளர்ந்து கொண்டிருக்கு. முகம்மது நபிக்கு முன் வந்த ஈஷா நபி (ஜீசஸ்) அவர்களை மக்கள் உடனே ஏற்று கொண்டார்களா? பல இன்னல்களை சந்தித்து தான் கிறிஸ்தவமதமாக இன்று வளர்ந்திருக்கு, கடைசியாக வந்த இறை தூதரின் கோட்பாடுகளை எதிர்ப்பது இயல்பு தான். இஸ்லாமிய மக்கள் உலக வாழ்க்கையில் பல இன்னல்களை சந்தித்து ஆக வேண்டும். உங்களை போன்ற நடு நிலையாளர்கள் அனைத்து இறை தூதர்களின் கோட்பாடுகளை வெளியிலிருந்து ஆதரித்துள்ளதாக குரானின் வசனம் குறிப்பிடுகின்றது. இப்போது கூட பல தொலை காட்சி நிகழ்ச்சிகளிலும் அதை காண முடியும்.

  • Abdul Rahman - Madurai,இந்தியா

   திரு ரபி அவர்களே - "பிரிட்டிஷ் காரர்கள் இந்தியாவில் காஸ்மீர் இப்போதைக்கு இருந்தாலும் 6 மாதத்தில் அம்மக்களிடம் ஓப்புதல் பெற வாக்கெடுப்பு நடத்தி முடிவு எடுக்க வேண்டும் என்று ஒப்பந்தம் இட்டுள்ளதாகவும்" - இதை சொல்ல பிரிட்டிஷ்காரன் யாரு?

  • Jaya Prakash - Medan,இந்தோனேசியா

   @ Rafi ... நண்பா... என் முதுகின் கீழே ஒரு குண்டு இருக்கு ... எடுக்க வேண்டாம் என்றும் மருத்துவர் சொல்லிவிட்டனர்.. . (எடுத்தால் முதுகு தண்டு பாதிக்கலாம் ... எடுக்காமல் இருந்தால் வாழலாம் என்றார்கள் .... ஓகே... அதை தூக்கிகிட்டே தினமும் அலையிறேன்) அதை சுட்டது யாரோ எனக்கு தெரியாது... நானும் நிறைய சுட்டுருக்கேன் எவன் செத்தானோ எத்தனை பேர் செத்தானோ எனக்கு தெரியாது.... ஆனால் (அப்போ) ஒரு நேரம் கிடைக்கும்போது கடவுள்கிட்டே வேண்டுவேன்... நான் என் கடமையை செய்தேன்....தவறாக இருந்தால் மன்னிக்கவும்.... ஒரு உயிரை கொல்வது சாதாரண விஷயம் அல்ல.... ஒரு ராக்ஷனால்தான் அது முடியும்... ஆனால் ராணுவன் ராக்ஷஷன் அல்ல... அவன் நாட்டுக்காக போராடுபவன்.... தன கடமையை செய்பவன்.... இப்போ கூட நான் சில நேரத்தில் வேர்த்து விறு விரித்து இரவில் எழுந்திருப்பேன்.... ரபி யாக இருந்தாலும் சரி... ராமனாக இருந்தாலும் சரி... ஜோசப் ஆக இருந்தாலும் சரி... எல்லாம் மனிதரே.... வழி வேறாக இருந்தாலும் நாம் போய் சேரும் இடம் கடவுளிடம்... சரியா நண்பா.....

  • Rafi - Riyadh,சவுதி அரேபியா

   திரு ஜெயப்ரகாஷ் அவர்களுக்கு, நீங்கள் ராணுவ வீரர் என்பதை அறிகின்றேன், முதலில் உங்களின் பணிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள், நாடு என்று வரும்போது எதிரியிடம் அன்பு, இரக்கம் செலுத்த முடியாது இது போல் உங்களோடு பணி செய்த இஸ்லாமியர்களின் சேவையையும் கண்டிருப்பீர்கள். அனைத்து வேதங்களும் எதிரிடம் போர்செய்துள்ளதையும் படித்திருக்கின்றோம். எங்கள் நபியை மெக்காவில் வாழ இயலாமல் அவருடைய வீடு, சொத்து, சொந்தம் அனைத்தையும் இழந்து மதினா செல்லும் நிலையேற்பட்டது, மதினாவில் மக்கள் அவரை ஏற்று ஆட்சி அதிகாரத்தை கொடுத்தார்கள், எதிரிகள் பெரும் படையை திரட்டி அங்கும் சென்று போர் செய்ததையும் வரலாறு கூறுகின்றது. மக்களின் உறுதுணையுடன் வெற்றி, மற்றும் தோல்வியை சந்தித்து தான் மிகப்பெரிய சாம்ராஜ்யத்திற்கு அதிபதி ஆனார்கள். போரில் அவர் கையாண்ட முறைகள் குழந்தைகள், பெண்கள், ஆண் பெண் முதியவர்களை கொல்ல கூடாது என்றும் போரில் சரணடையும் வீரர்களை கண்ணியத்துடன் நடத்தியதையும், அவர்களுக்கான இழப்பீடுகளை பெற்று எதிரியிடம் மீண்டும் ஒப்படைத்தையும் வரலாறு கூறுகின்றது. நீங்கள் குறிப்பிட்டதுபோல் எதிரி ராணுவ வீரன் கூட ராட்சசன் இல்லை என்பதை இப்போது உலகம் உணர்ந்து சரணடைந்த வீரர்களை கைமாறி கொள்ளும் ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளார்கள். உங்களுடன் கருத்து பரிமாற்றம் நடந்தமைக்கு நன்றி, உங்களின் மனித நேயத்திற்கு என்னுடைய பாராட்டுகளை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றேன். நம் தேசத்திற்க்காக நான் சுமக்கும் அந்த குண்டு என்று இறுமாப்புடன் தலை நிமிர்ந்து நில்லுங்கள். இந்த தேச மக்கள் மதத்திற்கு அப்பால் உங்களை கௌரவத்துடன் அண்ணார்ந்து பார்த்து கொண்டிருப்போம். வாழ்த்துக்கள்.

 • Murugan - Mumbai

  ஒரு வீரர் கூட மரணமடையால் தாக்குதல் நடத்த பயிற்சி எடுக்க வேண்டும் இந்த விசயத்தில் நம் நாடு இன்னமும் முன்னேறவில்லை

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  நல்ல ஒரு தலைவனால் இந்த உயிரிழப்புகளை நிச்சயம் தடுக்க முடியும். அத்தலைவனுக்காக இந்நாட்டு காத்து நிற்கிறது .

 • Patriot - Chennai,இந்தியா

  நம்முடைய வீரர்களுக்கு இன்னும் டெக்னீக் போதவில்லை என்று தெரிகிறது. தீவிரவாதிகளுக்கு மேலே நம் வீரர்களை இழப்பது இதையே காட்டுகிறது. இது சரியானதல்ல. நம் வீரர்கள் இஸ்ரேலிடம் பயிற்சி பெற வேண்டும்.

 • Ramesh Kumar - coimbatore,இந்தியா

  வீர மரணம் தழுவியவர்களுக்கு என் அஞ்சலிகள்.....

 • ViratPrakashRagaVfc -

  தீவிரவாதிகளை வேரறுக்க வேண்டும்

 • Giridharan S - Kancheepuram,இந்தியா

  வீர மரணம் அடைந்த தமிழக வீரருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். இந்தியா நாட்டை காக்கும் வீரர்களில் தமிழகத்தை சார்ந்தவர்கள் தான் கிரேட். SALAUTES TO THE GREAT WARRIORS WHO LOST THEIR LIFE FOR INDIA

 • JAYARAMAN - PONDICHERRY,இந்தியா

  சகோதரனே உன் வீர மரணத்திற்கு உரிய பதிலடி கிடைக்கும் அவர்களுக்கு ..ஆழ்ந்த இரங்கல்கள் உன் ஆன்மாவுக்கு ....உன் குடும்பத்திற்கு இந்த நாடே நன்றிசெய்ய கடமைபற்றிருக்கிறது....அரசு இரண்டு கோடிரூபாய் கொடுக்கவேண்டும் அக்குடும்பத்திற்கு...

 • subramani,toni -

  jai hind

 • rajan - kerala,இந்தியா

  நம் மாஜி துணை ஜனாதிபதி அன்சாரி இந்தியாவில் யாருக்கு பாதுகாப்பு உள்ளது என்பதை மறுபடியும் ஊர்ஜித படுத்த வேண்டும். மதம் மனிதனை பாதுகாக்கிறது இல்லை மனிதன் மதத்தை பாதுகாக்கிறோம் எனும் மமதையில் ரத்த வெறி கொண்டு அலைகிறானோ என்பதை சிந்திக்க வேண்டும். சன்மார்க்கத்தை ஒதுக்கி வைத்துவிட்டு மதத்தின் பெயரால் ஒரு பயங்கரவாதமும் தீவிரவாதமும் உயிர் பலிகளும் தேவையா???

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement