Advertisement

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 21 சதவீதம் அதிகம்

சென்னை: தென்மேற்கு பருவமழை இயல்பை விட 21 சதவீதம் அதிகம் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் அளித்த பேட்டி: தென் மேற்கு வங்க கடல் பகுதியில் வடக்கு தமிழகம், மற்றும் தெற்கு ஆந்திராவை ஒட்டியுள்ள கடல் பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் அனேக இடங்களில் மழை பதிவாகியுள்ளது. ஒரு சில இடங்களில் கன மழை பதிவாகியுள்ளது.


அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியில் 14 செ.மீ., மழையும், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், திருப்பத்தூர், திருவையாறு பகுதிகளில் தலா 10 செ.மீ., மழையும், மதுரை, திருப்புவனத்தில் தலா 9 செ.மீ மழையும், அரிமலம், கள்ளக்குறிச்சி, செஞ்சி ,செங்கம், மயிலம் பகுதிகளில் தலா 8 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது.


அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உண்டு. உள் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உண்டு. சென்னையை பொறுத்தவரை மாலை அல்லது இரவு நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உண்டு.


கடந்த 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 13ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் பதிவான தென்மேற்கு பருவமழையின் அளவு 177 மி.மீ., . இதே காலகட்டத்தில் பதிவாகும் இயல்பான மழையின் அளவு 146 மி.மீ., இந்த வருடம் இயல்பை விட 21 சதவீதம் அதிகம் பதிவாகியுள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (17)

 • பழனிசாமி சுப்பிரமணி - Chennai,இந்தியா

  காங்கேயம் வட்டம், பரஞ்சேர்வழி பகுதியில் மழையே இல்லை இதுல வழக்கத்தை விட அதிக மழைன்னு பொய் சொல்றீங்க

 • X. Rosario Rajkumar - TRICHY,இந்தியா

  தூர் வாரி இருந்தால் நிறைய நீரை சேமித்து இருக்கலாம்.

 • Rpalnivelu - Bangalorw,இந்தியா

  ஜெயாவோட மழை நீர் சேமிப்பும் போயிற்று, அமைச்சர்கள், அதிகாரிகளின் பயமும் போய் விட்டது.

 • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

  இருபது சதவீதம் இல்லை, இருநூறு சதம் பெய்தால் மட்டும் என்ன, சேமித்தா வைக்கப் போகிறோம் ? ஓட வேண்டிய ஆற்றையெல்லாம் மணலை அள்ளி மலடாக்கியாயிற்று ஏரி குளத்தையெல்லாம் எண்பது மாடி கட்டியாச்சு இதில் பெருமை என்ன வேண்டிக்கிடக்கிறது ?

 • Anbarasan Muthaiah - THENI,இந்தியா

  வறட்சி நிவாறணம் கேட்குறாங்கனனு அரசாங்கத்தால் அவிழ்த்துவிடபடும் புழுகு மூட்டை..இந்த புழுகுமூட்டைதான் அதிகம்

 • Anbarasan Muthaiah - THENI,இந்தியா

  என்ன அதிகம் ஒரு ஐயாயிரம் ஏரி நிறஞ்சு இருக்குமா? இல்ல ஐம்பது ஆத்துல தண்ணி வந்துருக்குமா ? இல்ல ரெண்டு ஊார வெள்ளம் அடிச்சிட்டு போயுடுச்சா?

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  தமிழகதறிக்கு அளவிற்கு மிக அதிகமான அளவிற்கு மழை பொழிந்து விட்டது?? எங்கு என்று யாரும் கேட்க வேண்டாமா? செய்து வந்து விட்டது அதுதான் மழை, வந்தே மாதரம்

 • K.Sugavanam - Salem,இந்தியா

  இப்பிடி சொன்னா பெய்யுற மழை கூட பேயாது..

 • Harinathan Krishnanandam - Chennai,இந்தியா

  மிக நல்ல செய்தி இதில் எந்த அளவிற்கு சேமிக்கப்பட்டது என்று மாநில அதிகாரிகள் விவரம் அளிக்க வேண்டும் குறைபாடு உள்ள மாவட்டங்களில் இனியாவது போர்க்கால அடிப்படையில் பணி செய்து மழை நீரை சேமிக்க ஆவண செய்யவேண்டும்

 • தெய்வ சிகாமணி மாரப்ப கவுண்டர் - கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா

  எங்க ஊர்ல .. ஏன் எங்க மாவட்டத்திலேயே எங்கயும் மழை நிலத்தில் பட்ட மாதிரியே தெரியலே .. இந்த லட்சணத்தில் வழக்கத்தை விட இருபது சதவிகிதம் அதிகம் னு செய்தி போடறீங்க.. இப்படி தவறாக . மிகை படுத்த பட்ட தகவல்கள் எதற்கு . உண்மையை சொல்லுங்க ..மழை எங்கப்பா பெய்யுது . கொஞ்சம் சொல்லுங்கப்பா .. நாங்க வேணா அந்தஊருக்கு போயிடறோம் ..

  • KayD - ,

   ரொம்ப correct... நானும் இந்த நியூஸ் படிச்சிட்டு friends கிட்ட உங்க ஊரில mazhai போல னு கேட்டா ஒரு மாதிரி யா paakiraanga. நம்ப எங்க poittu இருக்கோம்.. இது குற்றாலம் season angayae thanni இல்லை... Very sad

  • K.Sugavanam - Salem,இந்தியா

   காலம் ரொம்ப கெட்டு போயிடிச்சு. .மழை பெய்யற தெருவுக்கு பக்கத்துக்கு தெருவில மழை இல்லை. அப்பிடி ஆயிப்போச்சு.

 • Ashokvalan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  நாம் ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் மழை நீர் சேகரிப்பு வசதியை ஏற்படுத்தி சேகரிக்க வேண்டும் ... கிரௌண்ட் வாட்டர் ரீச்சார்ஜிங் எனப்படும் நிலத்தடி நீர் செறிவூட்டும் முறையில் மழை நீரை சேமிக்க வேண்டும் .. எல்லாவற்றுக்கும் அரசை குறை கூறுவதால் எந்த பலனும் இல்லை ....

  • KayD - ,

   Very true... Ovaru வீட்ல at least ஒருத்தர் ku இந்த responsibility வந்தால் கூட போதும்

 • vasan - doha,கத்தார்

  அப்படியே எல்லா தண்ணீரையும் கடலில் மறக்காம விட்டு விடணும் ஓகே......

  • Syed - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

   ஓகே பாஸ்

  • KayD - ,

   Sad truth

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement