Advertisement

தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு : வானிலை மையம்

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கிய நாள் முதல் தமிழகத்தில் ஆங்காங்கே சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தற்போது தென் மேற்கு பருவமழை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் நல்ல மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    எப்பிடியோ குடிநீர் வழங்கும் நீர் நிலைகள்...குளங்கள். குட்டைகள் நிரம்பி அனைத்து பகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டம் ஏறினாள் சரி...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement