Advertisement

ராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்கா தயார் : டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன் : வட கொரியா மீது தாக்குதல் நடத்துவதற்கான இலக்கை முழு ஆயுத பலத்துடன் குறிவைத்து விட்டதாகவும், ராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

சமீப காலமாக வடகொரியா 5 முறை ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் கண்டம்விட்டு கண்டம் பாயும் இரு ஏவுகணைகளை இந்நாடு பரிசோதித்துள்ளது. இதற்காக அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது . மேலும், பசிபிக் கடலில் உள்ள தனக்கு சொந்தமான குயாம் தீவு பகுதியில் அமெரிக்கா ராணுவ பயிற்சி மேற்கொண்டுள்ளது.

இதனால் கடும் எரிச்சல் அடைந்த வடகொரியா ராணுவம், தற்போது அமெரிக்கா ராணுவ பயிற்சி மேற்கொள்ளும் குயாம் தீவு மீது நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணையை வீச திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, தனது ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ராணுவ நடவடிக்கைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு முழு ஆயுத பலத்துடன் தயார் நிலையில் இருக்கிறோம். வடகொரியா அறிவீனமாக நடந்து கொள்ள முயற்சித்தால் அதற்கான மாற்றுப் பாதையை வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் சந்திக்க நேரிடும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் குவாம் ஆளுநர் குவாம் எட்டி பசா கால்வோவை தொலைபேசியில் அழைத்து ஆலோசனை நடத்தினார் . அமெரிக்கா 1000 சதவிதம் குவாம் மக்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளை எடுத்து வருவதாக டிரம்ப் குறிப்பிட்டார். மக்களை தைரியமாக இருக்க சொல்லுங்கள் என்று குவாம் ஆளுநர் எட்டியிடம் டிரம்ப் கேட்டுக் கொண்டார். இதனால், வட கொரியா - அமெரிக்கா இடையிலான மோதல் மேலும் வலுவடைந்து வருவதாகவும், விரைவில் இருநாடுகளும் தங்களது ஆயுத பலத்தை பரிசோதிக்க முயலக்கூடும் என்றும் சர்வதேச அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

Advertisement
 

வாசகர் கருத்து (19)

 • Bala Subramanian - Bangalore,இந்தியா

  என்னக்கு என்னமோ அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் போர் வராது என்று தான் நான் நினைக்கறேன் ஏன் என்றால் இன்றய நிலைமைக்கு போர் வந்தால் அது மூன்றாம் உலக போர் ஆக மாறிவிடும் அது மாத்திரம் இல்லாமல் அமெரிக்காவுக்கு சப்போர்ட் பண்ண வட அட்லாண்டிக் நாடுகள் வரும் அதே மாதிரி வடகொரியாவுக்கு சப்போர்ட் பண ரஷ்யா மற்றும் சீனாவும் போரில் இறங்கும் இப்போ இருக்கிற சூழ்நிலையில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா கிட்ட மோர் தான் 7000 அணு ஆயுதங்கள் இருக்கு இவங்க இரண்டு பெரும் சண்டை போட்டாலே உலகம் அழிஞ்ச மாதிரிதான்

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன் என்பதை நிரூபிக்க நீங்கள் இருக்க எங்களுக்கு என்ன கவலை, வந்தே மாதரம்

 • Raja (Thravida Veriyan) - Chennai,இந்தியா

  வட கொரிய அதிபர் போருக்கு முன்பு - கிம் ஜாங் உன் போருக்கு பிறகு - ஜிங் ஜல் ஜக்

 • arabuthamilan - Manama,பஹ்ரைன்

  இந்த தடவை வடகொரியா அப்பளமாகிப் போவதென்னவோ உண்மை. லிபியா, இராக், சிரியா எல்லாம் வாங்கின அடியை விட அடிகள் கடினமாகத்தான் இருக்கும். காத்திருந்து உற்று நோக்குவோம். அமெரிக்காவை சீண்டும் எந்த நாடும் போருக்குப் பின் பிச்சை எடுக்கும் நிலமைக்குத்தான் போகும்.

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  மக்கள் என்ன பாவம் செய்தார்கள். வெள்ளை மாளிகைமீது வீசுவதுதான் வீரத்தின் அடையாளம்.

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  அதற்கு முன்பாக இவரை எங்காவது கொண்டு ஒளித்துவைத்து விடுவார்களாமே? அவர்களின் வழக்கம். போர் என்று பிரகடனம் செய்தாலோ அல்லது அமெரிக்க விமானங்கள் குண்டு பொழிந்தால் அதிபரை ஒளித்து வைத்து விடுவார்களாம்.

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும், என்ன ஒரு பெரிய, வாய்க்கா வரப்பு தகராறு இருக்கு?. எல்லாம் வடகொரியாவின் அண்ணன்மார் உதவியும் ஊக்கமும் செய்வதால்தான் எனலாம். இதுவும் அமெரிக்காவுக்கு தெரியாமல் இருக்குமா என்ன?.

 • Balaguru - sivagiri,இந்தியா

  போர் வேண்டாம் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கான்பது நல்லது

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  அடுத்த உலகப்போர்தான் உலகின் இறுதிப்போராக இருக்கும் என்று விஞ்ஞானி ஐன்ஸ்டீன் சொன்னது பலிக்கும் நாள் நெருங்குகிறது .....

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  சீனாவின் ஆயுதங்களை பரிசோதிக்கும் தளமாக வடகொரியா இருக்கிறதாமே? சீனர்களுக்கு ஒரு பெரிய செக் வைக்க அமெரிக்கா தயாராகி விட்டதாக தெரிகிறதாம்? அமெரிக்கர்களுக்கு யுத்தம் என்பது ஒரு பொழுது போக்கு

 • Jaya Prakash - Medan,இந்தோனேசியா

  வட கொரியாவுக்கு நேரம் சரி இல்லை... பிரச்சனை வந்தால் குயாம் தீவு கொஞ்சம் அடி வாங்கலாம்... ஆனால் அமெரிக்காவுக்கு எத்தனை ஏவுகணையை அனுப்பினாலும் அது வழியிலேயே அழிக்கப்படும்.. இன்றைய நிலையில் உண்மைதான். அவன்தான் பிக் ப்ரொதேர்... இருக்கலாம் வியட்நாமில் மற்றும் சில இடங்களில் அவன் அடி வாங்கியிருக்கலாம்... ஆனால் அவனை குறைத்து எடை போடும் தவறை செய்தால்... அடி பலமா இருக்கும்...

 • HARISHBABU.K - Kallakurichi,இந்தியா

  உன் வேலைய மட்டும் பாருடா . எவன் எப்படி போன உனக்கென்ன, நீ யாரு அத தட்டி கேக்கறதுக்கு. உன்வேலையை மட்டும் பாரு

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  அமெரிக்காவுடன் போர் வந்தால் சீனாவின் துணை கிட்டும் என்ற பேராசையை வடகொரியா விட்டுவிட்டால் வடகொரியாவுக்கு நல்லது .... கலைஞர் கூறுவது போல சூதானமாக நடந்து கொள்ளவேண்டும் ....

 • chails ahamad - doha,கத்தார்

  போரற்ற உலகே மக்களனைவரும் விரும்புவதாகும் என்பதை இரு நாட்டு தலைவர்களும் உணர வேண்டி எல்லாம் வல்ல இறைவனிடமே பிரார்த்திப்போம். இன்றைய நிலையில் வடகொரியா சற்று அணு ஆயுத பலத்துடன் இருப்பதுடன் இருப்பது உண்மையாகும் என்பதுடன், தவறான போக்கை அமெரிக்கா மேற் கொண்டால் அழிமானங்கள் இருநாட்டுக்கும் ஏற்படுவதுடன், மக்களின் நிம்மதிகள் தொலைந்து விடும் என்பதை உலக தலைவர்கள் கவனத்தில் கொள்வது அவசியமாகும், இன்று உலகில் நடைபெறும் குழப்பங்களுக்கு முதன்மையான காரண கர்த்தாவாக அறியப்படுவது அமெரிக்காவின் பெரிய அண்ணன் மனப்போக்கே என்பதே உண்மையாகும், வடகொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் மட்டும் யுத்தம் நடைபெற போவதில்லை, இருநாட்டின் ஆதரவாளர்கள் நாடுகளுக்கும் முரண்பாடுகள் தொடங்கி உலக யுத்தமாக மாறுவதற்கு உரிய வாய்ப்பை ஏற்படுத்தி விடும் என்பதை உலக நடப்பு அறிந்தவர்கள் அறிந்தே உள்ளார்கள், அமெரிக்கா அதிபர் நட்புறவு நடவடிக்கைகளின் மூலமே வடகொரியாவின் சில தவறான செயல்பாடுகளை நேர் செய்திட வேண்டியது அவசியமாகும்.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  வடகொரியா வாங்கப்போகும் அடிக்கு சீனா பயப்படவேண்டும்...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement