Advertisement

குழந்தைகள் இறப்புக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமில்லை: யோகி விளக்கம்

லக்னோ : உத்திர பிரதேச மருத்துவமனையில் குழந்தைகள் இறப்புக்கு ஆக்ஸிஜன் தட்டுப்பாடு காரணமில்லை என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் விளக்கம் அளித்துள்ளார்.

உ.பி., மாநிலத்தில் ஆக்சிஜன் சப்ளை நிறுத்தப்பட்டதால் 30 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்து லக்னோவில் செய்தியாளர் சந்திப்பில் முதல்வர் ஆதித்யநாத் விளக்கமளித்தார். குழந்தைகள் இறப்பு விவகாரத்தை தலைமைச் செயலாளர் தலைமையிலான கமிட்டி விசாரிக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.

மேலும் , இவ்விவகாரம் குறித்து நீதித்துறை அளிக்கும் விசாரணை அறிக்கை அடிப்படையில் தவறிழைத்தோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆதித்யநாத் தெரிவித்தார். கடந்த 9 ஆம் தேதி கோரக்பூர் மருத்துவக் கல்லூரி முதல்வரை தான் சந்தித்து பேசியதாகவும், அப்போது ஆக்ஸிஜன் தட்டுப்பாடு குறித்து எந்தத் தகவலும் தன் கவனத்திற்கு கொண்டு வரப்படவில்லை என்றும் தெரிவித்தார். ஆக்ஸிஜன் விநியோகஸ்தருக்குரிய தொகையை கடந்த 5 ஆம் தேதியே அரசு கொடுத்துவிட்டதாக கூறிய முதல்வர், இதில் அரசின் மீது தவறா அல்லது ஆக்ஸிஜன் நிறுவனத்திற்கு உரிய நேரத்தில் தொகையை தராத கல்லூரி முதல்வர் மீது தவறா என்றும் கேள்வி எழுப்பினார்.

Advertisement
 

வாசகர் கருத்து (89)

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  என் கேள்வி ரொம்ப சிம்பிள். அப்போ இறப்புகள் ஆக்சிஜன் வந்தவுடன் எப்படி சட்டென்று நின்று விட்டன?

 • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

  வெண்டைக்காய் கூட்டுக்கு விளக்கெண்ணெய் தாளித்தது போன்ற பதில் இந்நேரம் காங்கிரஸ் ஆளும் மாநிலமாக இருந்தால் மோடிஜிக்கும், ஷாவுக்கும் வாய் காதுமட்டும் கிழிந்திருக்கும் உயிரின் அருமை தெரியாத ஜென்மங்கள்

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  என்னதான் காரணம் சொன்னாலும் உங்களுடைய ஆட்சியில் ஒரு விரிசல் விழுந்துவிட்டதே...

 • Rahim - Riyadh,சவுதி அரேபியா

  பிஆர்டி மருத்துவமனையில் சம்பவத்தை நேரில் பார்த்த கெளரவ் திரிபாதி என்பவர் கூறுகையில், மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை ஏற்பட்டது, செய்வதறியாது அனைவரும் திகைத்த போது டாக்டர் ....... சமயோசிதமாகச் செயல்பட்டார். உடனே தனது மருத்துவ நண்பர்களுக்கு போன் பண்ணினார். அவர்களிடம் ஆக்சிஜன் சிலிண்டர் கேட்டார். அதனையடுத்து தனது காரை எடுத்துக்கொண்டு விரைந்தார். இன்னும் சில மணிநேரங்கள் மட்டுமே ஆக்சிஜன் பிஆர்டி மருத்துவமனையில் இருக்கும் என்பதை புரிந்துகொண்டு, வெளியில் சென்று 3 ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கி வந்தார். அதுவும் அரைமணி நேரம்தான் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றும் என்ற நிலை ஏற்பட்டது. உடனே, மேலும் 10 சிலிண்டர்களை வெளியில் வாங்கி வந்து பச்சிளம் குழந்தைகளை காப்பாற்றினார். தனது சொந்த செலவில், இதை டாக்டர் ...... இதைச் செய்தார், இப்போது கூறட்டும் சொம்புகள் அங்கு டாக்ட்டரின் அலட்சியத்தால் தான் நடந்தது அரசிற்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று டாக்ட்டரின் பெயரை நீக்கியுள்ளேன் ஏன் என்றால் அதை வைத்தும் மத அரசியல் செய்து என்னை கொல்வார்கள் யோக்கிய சொம்புகள், ஒரு புறம் விளம்பர அரசு செயல் இழந்து நின்றபோது மறுபுறம் மனிதநேயம் பல பிஞ்சுகளின் உயிர்களை கைப்பற்றியது சற்று ஆறுதல்.

 • tamilan -

  yokiyan varan somba eduthu ulla vai

 • pazhaniappan - chennai,இந்தியா

  யோகிநாத்துக்கு பூங்காவிலிருக்கும் காதலர்களைப் பற்றி கவனத்துக்கு கொண்டு வருகிறார்கள் , மாடுகளை ஏற்றிச்செல்லும் லாரிகளைப்பற்றி கவனத்துக்கு கொண்டு வருகிறார்கள், குழந்தைகள் மருத்துவமனையில் oxygen பற்றாக்குறை என்பது கவனத்துக்கு கொண்டு வரவில்லையா ? நீர் எதைப்பற்றி கவலைப்படுகிறீரோ அதைப்பற்றித்தானே உமது அடிமைகள் உமது கவனத்துக்கு கொண்டு வருவார்கள் உமது விசாரணை கமிஷனால் இறந்த உயிர்கள் திரும்ப வந்துவிடுமா ,நீர் சொல்வதுபோல் கல்லூரி முதல்வர் தவறு செய்திருந்தால் அதில் உமக்கு பொறுப்பில்லையா .தடம் புரண்டு ரயில் கவிழ்ந்தால் ,கொசுவால் நோய் பரவுவதெற்கெல்லாம் அரசை குறைசொன்னா பிஜேபி காரர்களுக்கு இப்போ கவனக்குறைவால் .அஜாக்கிரதையால் ஏற்பட்ட உயிரிழப்புக்கு நீங்கள் காரணமில்லை ,காதலர்களும் ,காளைகளும் யோகிக்கு தெரிந்த சமாச்சாரம் ,குழந்தைகள் அவருக்கு தெரியாத சமாச்சாரம் தானே

 • Rajan. - singapore,சிங்கப்பூர்

  நாடு நன்றாக இருக்கவேண்டுமானால் அரசியல்வாதி, வக்கீல் ,போலீஸ் , நீதிபதி இவர்கள் நேர்மை முக்கியம்

 • Balan Palaniappan - Chennai,இந்தியா

  மக்களே ஜாக்கிரதை

 • SaiBaba - Chennai,இந்தியா

  திரு. யோகி அவர்களே. ஒவ்வொரு உயிரும் முக்கியம். உயிரின் முக்கியத்துவத்தை பெற்ற தாயிடம் கேளுங்கள்.

 • PRABHU - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  இப்பிடி பொய் சொல்லி சொல்லி நாட்டுமக்களை ஏமாத்துங்கோ....

 • Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  கண்டிக்க தக்கது, இறந்த குழைந்தைகள் பெற்றோருக்கு பதில் சொல்ல வேண்டும், தவறு யார் செய்திருந்தாலும் கடும் தண்டனை தேவை, //இது போல இந்தியாவில் எங்கும் நடக்க கூடாது, மருத்துவ துறை இதற்கு பொறுப்பு எடுக்க வேண்டும், முதல்வர் யோகி பதில் சொல்ல வேண்டும்,

 • Sumanchandrasekaran - Chennai,இந்தியா

  குழந்தைங்க சாவுக்கு பதில் சொல்லுங்கடான்னு சொன்னா காரணம் தேடறீங்களேடா .. இன்னும் எவ்வளவு பேரோட உயிரை பறிக்க போறீங்களோ தெரியல. இதுல இன்னும் திருந்தாத கட்சி தொண்டனுங்க அகிலேஷ் ஆட்சியாள நடந்தது மாயாவதி ஆட்சியாள நடந்ததுன்னு பேசிடுக்கனுங்க பொழப்படுத்தவனுங்க....

 • Vensuslaus Jesudason - Nagercoil,இந்தியா

  எய்யா யோகி, இரு தினங்களுக்கு முன் கோரக்பூர் அரசு மருத்துவமனையில் அறுபதுக்கும் மேலான பச்சிளம் குழந்தைகள் பிராண வாயு இன்மையால் பரிதாபமாக இறந்து போன செய்தி நாட்டு மக்களை கோபத்திலும் துயரத்திலும் ஆழ்த்தியது. அரசின் அலட்சியத்தால் இந்த மாபெரும் உயிரிழப்பு நிகழ்ந்ததால், நீங்கள் இந்த விபத்திற்கு தார்மீக பொறுப்பேற்று முதலமைச்சர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்.

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  தேச நேசா....., ஒன்னிய கொன்னு போட்டுட்டு இன்னொன்ன பெத்து போட்ருக்கலாம் ஒன் ஆயி அப்பன்...... இந்த மாதிரி comments ச நாங்க படிச்சி தொலச்சிருக்க மாட்டோம்.....

 • NKR rekha - Karur,இந்தியா

  அப்போ வேணும்னே?

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  தலையுஞ்சரியில்ல, (அதனால) இவுனும் சரியில்ல....... ஆளத்தெரியாதவனுங்கன்னு மொதோ நாள்லேந்து கூவிட்டிருக்கேன் நானு......

 • Solvathellam Unmai - Chennai,இந்தியா

  பிரதமர் தலையிட வேண்டும்

 • Ajmal Khan - Dammam,சவுதி அரேபியா

  தேச நேசன் - chennai, இந்தியா, //குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் இன்னொன்றைப் பெற்றுக் கொள்வது சகஜம்.//. ஆரோக்கியமான கருத்து அல்ல. அந்த பெற்றோர்களுக்கு தெரியும் அதன் வலி.

 • Ajmal Khan - Dammam,சவுதி அரேபியா

  //இதில் அரசின் மீது தவறா அல்லது ஆக்ஸிஜன் நிறுவனத்திற்கு உரிய நேரத்தில் தொகையை தராத கல்லூரி முதல்வர் மீது தவறா என்றும் கேள்வி எழுப்பினார்.// . ஓகே. //குழந்தைகள் இறப்புக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமில்லை//. இது என்ன?. He appointed inquiry commission and it is working then how he knows the reason?. Is he dictating commissions way of inquiry?

 • Mohammed Abdul Kadar - dammam,சவுதி அரேபியா

  ஆக்சிஜன் இல்லாமல் தான் குழந்தைகள் இறந்து போனது என்பது தான் உண்மை ,,, டிஜிட்டல் பணவர்த்தனை மூலம் பணம் பட்டுவாடா செய்ய சொல்லும் மோடி இப்போ யோகி செக் கொடுத்த விஷயத்தில் மோடி தான் அவருக்கு செக் வைக்க வேண்டும்

 • Veeran - Kanyakumari,இந்தியா

  1998 முதல் யோகி MP யாக இருக்கும் தொகுதி தான் அது சுவாமி ய பிடிச்சு CM ஆக்கியாச்சு இப்படி தான் நடக்கும் இப்போ கூட அங்க யோகி தான் MP byelection இன்னும் நடத்தல

 • தஞ்சை மன்னர் - Tanjore,இந்தியா

  டீன் ல ஆரம்பிச்சு , உன் முட்டாள் அமைச்சர் வரை சொல்லியாட்சி இப்போ வந்து சொட்டை சொல்லுற மூர்க்கனே ?

 • தஞ்சை மன்னர் - Tanjore,இந்தியா

  இந்த ஜனநாயகத்தோடு விளையாடுகிறார்கள் இவர்களுக்கு பின் இருக்கும் கூட்டம் இவர்களை ஆட்டு விக்கிறது

 • ராம.ராசு - கரூர்,இந்தியா

  இவ்வளவு வெளிப்படையாக கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களும் எழுதியுள்ள ஆக்சிஜன் பற்றாக்குறையால்தான் குழந்தைகள் இறந்தன என்று. ஆனால் மிக எளிதாகச் சொல்லிவிட்டார் "ஆக்சிஜன் பற்றாக்குறையால்" அல்ல என்று. உபியில் மட்டுமல்ல அனைத்து மாநிலங்களிலும் ஆட்சியாளர்களுக்கு கெட்டபெயர் வருமென்றால் அதை மூடி மறைக்க மழுப்பலான அறிக்கைகளை கொஞ்சமும் தயக்கம் இல்லாமல் சொல்லிவிடுகிறார்கள்.

 • அறிவுடை நம்பி - chennai,இந்தியா

  கையை உயர்த்தி பேசினால் போதாது...முதல்வர் என்றால் எப்படி இருக்கணும் என்று ஜெயலலிதாவின் சரித்திரத்தை படித்து தெரிந்து கொள்....

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  ஓஹோ...நம்பிட்டோம்....

 • Veeran - Kanyakumari,இந்தியா

  66 குழந்தைகள் உபி அரசின் நிர்வாக சீர்க் கெட்டால் இறந்து போய்ட்டு இதை கூட சில ஆட்கள் பிஜேபி அரசுக்கு ஆதரவா பேசுறாங்க அவங்க கண்களில் கண்டிப்பா ரெத்தம் ஓட்டம் இருக்காது 67 லட்சம் அரசு கெட்டமல் இராண்டு முறை நோட்டீஸ் அனுப்பியும் கெட்டாமல் இருந்து அரசு பண்ணிய கொலை குத்தம் தான் 66 குடும்பங்களின் விளக்கு அணைந்து விட்டது

 • எப்போதும் வென்றான் - chennai,இந்தியா

  ஆக்ஸிஜன் விநியோகஸ்தருக்கு எப்படி பணம் கொடுத்தீர்கள்...5 ஆம் தேதி இட்ட காசோலையா ??? ஊருக்கெல்லாம் டிஜிட்டல் ட்ரான்ஸாக்ஷன் சென்று சொல்லி விட்டு நீங்கள் எப்படி காசோலை கொடுத்தீர்கள்...online transfer தானே கொடுக்க வேண்டும்....யாரை ஏமாற்றும் வேலை இது ??/

 • DESANESAN -

  இறந்த அத்தனை குடும்பத்தாருக்கும் யோகி ஆறுதல் கூறியுள்ளார். அஜாக்கிரதையாக நடந்துகொண்ட மருத்துவமனைத் தலைவரும்   வெளியேற்றபட்டுவிட்டார்.

 • Sridhar - Jakarta,இந்தோனேசியா

  குழந்தைகள் இறப்பு இந்த ஆஸ்பத்திரியில் கடந்த 5 வருடங்களில் 3000 மாம். இவ்வளவு நாட்களாக பொது மக்களோ பத்ரிக்கைகளோ எந்த குரலும் எழுப்பவில்லையே? இங்கு கருத்து எழுதுபவர்கள் கூட இந்த விஷயம் எதோ புதிதாக நடந்ததைப்போல் UP அரசை குற்றம் சாட்டவேண்டும் என்ற நோக்கத்தோடு எழுதியதை போல இருக்கிறது. மேலும் முந்தய அரசாங்கத்தில் ஆஸ்பத்திரிக்கு oxygen சப்ளை பண்ணும் விஷயத்தில் எதோ டீல் நடந்திருப்பதை போல் இருக்கிறது. இன்றைய அரசு விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது. உண்மைகள் வெளிவரும் பொழுது யார் குற்றவாளி என தெரிந்துவிடும். குழந்தைகள் உயிரோடு அரசியல் செய்ய நினைக்கும் எவனும் கொடூரன் என்பதில் சந்தேகமில்லை.

 • Hafees Ali - No.6, Dubai Kurukkusandhu, DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

  ஆக்ஸிஜன் குறைபாடு இல்லை .... அயோக்கிய ஆட்சியின் குறைபாடு..

 • ராஜாதென்காசி -

  நீ இன்னும்மா பதவி விலகாம பீத்திக்கிட்டு அலையிற

 • Matha, Jathi Saarpattra Thesapakthan - Ariyalur,இந்தியா

  மழுப்பல்.

 • baski - Chennai,இந்தியா

  நீ ரொம்ப சீன் போட்றப்பவே நெனச்சேன் பெரிய பல்பு வாங்குவேனு...

 • Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா

  என்ன இருந்தாலும் மாண்டோர் திரும்பி வரப்போவது இல்லை நீங்கள் நடத்துங்கள் ஆறு மாதத்தில் இவ்வளவு சாதனைகள், சோதனைகள் மக்களுக்கு பாராட்டுவோம்

 • baski - Chennai,இந்தியா

  உங்க மூளை பற்றாக்குறைதான் காரணம்.....

 • Jaya Prakash - Medan,இந்தோனேசியா

  ஆக்ஸிஜன் தட்டுப்பாடு குறித்து எந்தத் தகவலும் தன் கவனத்திற்கு கொண்டு வரப்படவில்லை என்றும் தெரிவித்தார் "..... அப்போ எல்லாமே உன் கவனத்தில் வர வேண்டும் என்றால் எதற்கு அரசாங்கம்?.... எதற்கு ஒரு மந்திரிசபை .. எதற்கு அரசு ஊழியர்?.... அவர்களை கட்டி காக்க எனக்கு வக்கு இல்லை என்று சொல்ல வரியா?... எல்லாத்தையும் கலைத்துவிட்டு நான்தான் ராஜா என்று சொல்....

 • Raman - kottambatti,இந்தியா

  இதற்கு இத்தாலி சோனியா கட்சியே காரணம்...பிஜேபி எப்போவும் காரணமே இல்லை ...அப்படித்தானே?

 • Nawashkhan - Dammam,சவுதி அரேபியா

  குரங்காட்டி கிட்ட ஆட்சிய கொடுத்தா இப்படி தான் நாட்டை ஆளுவான்.

 • Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

  விளக்கம் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை..விசாரணை தேவை.. தண்டனை தேவை.. யார் மீதும் குற்றமில்லை எனில் முதல்வரும் சுகாதார துறை அமைச்சரும் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்..

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  ரிசைன் பண்ணிட்டு போங்கடா.....

 • Naam thamilar - perth,ஆஸ்திரேலியா

  சும்மா மேலும் கீழுமா நடந்தால் ஆட்சி செய்யமுடியாது. மண்டையில் சரக்கு இருந்தால் தான் ஒழுங்கா ஆட்சி செய்ய முடியும். உனக்கு அது உண்டா என்று மக்களிடமே கேட்டு தெரிந்து கொள்

 • Manithan - Chennai,இந்தியா

  குழந்தைகள் இறப்பிலும் மழுப்பல்கள். ஏன் ஒரு நல்ல தலைவர் என்றால் இதற்க்கு காரணமானவர்களை தண்டித்து அடுத்து இது போல் எந்த ஒரு நிகழ்வும் ஏற்படாமல் இருக்க கவனம் எடுக்க வேண்டும்.

 • Venki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  நாடு முழுவதும் உள்ள ஆட்சியாளர்களும் மற்றும் அரசு உயர் பதவியிலுள்ள அதிகாரிகள் முதல் கடை நிலை ஊழியர்கள் வரை மக்களின் பார்வையில் சாத்தான்களாகவே தெரிகின்றனர் இதில் குறை கூறி ஒன்றும் ஆகப்போவதில்லை

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  63 உயிர்களை பலி கொடுத்துவிட்டு இப்போது நாடகம் ஆடுகிறார்கள்... ஆக்ஸிஜன் பற்றாக்குறையினால்தான் அவர்கள் இறந்தார்கள் என்று மருத்துவ மனையின் டீன் கூறி இருக்கிறார். உங்கள் MP ஒருவரே இதை Mass Murder என்று கூறியது தெரியாதா? எல்லா ஊடகங்களும் உண்மையை உடனே வெளிக்கொண்டு வந்துவிட்டன. இனிமேல் உங்கள் பொய் எதுவும் எடுபடாது...

 • தம்பி - பொள்ளாச்சி ,இந்தியா

  உபி வெற்றியை தமிழகத்தில் கொண்டாடிய தமிழிசை போன்றோர் இதற்கு என்ன பதில் தர போகிறார்கள்

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  அத்தியாவசிய சேவைகள் தொய்வில்லாமல் இயங்குவதை அரசு உறுதி செய்யவேண்டும்... தவறு செய்த அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும்

 • அறிவுடை நம்பி - chennai,இந்தியா

  நல்ல குடுக்குறாருய்யா டீடைலு ..அப்புறம் எதற்கு oxygen சப்ளை செய்த நிறுவனத்தின் மீதி நடவடிக்கை எடுத்தீர்கள்?? அந்த நிறுவனத்தின் முதலாளி ஏன் தலைமறைவானார்..oxygen சப்ளை இல்லாததால் தான் இத்தனை இறப்புகள் என்று மருத்துவ டீன் உடனே கூறினார்.. அது தெரியாதா? 5 ஆம் தேதியிட்டு இப்போது cheque கொடுத்திருப்பீர்கள். அதுவும் அரசிடமிருந்து நேரடியாக அந்த நிறுவனத்திற்கு தான் கொடுக்க வேண்டும். நீங்கள் cheque ஐ யாருக்கு கொடுத்தீர்கள்? முழு பூசணிக்காயை மறைக்க முயலாதே...இந்த மாபெரும் பழி உங்களேயே சேரும்...

 • தம்பி - பொள்ளாச்சி ,இந்தியா

  இதிலிருந்து அரசு தப்பிக்க என்ன வேண்டுமானாலும் செய்வாங்க

 • balakrishnan - coimbatore,இந்தியா

  குழந்தைகள் எல்லாம் தானாகவே தற்கொலை பன்னிகிடிச்சிங்க ன்னு சொல்லிட்டீங்கன்னா பிரச்சனையா யாரும் பேச மாட்டாங்க

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  Fris எங்கோ உபியில் நடந்தது இருக்கட்டும். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் . அருகிலுள்ள கேரளத்தில் விபத்திலடிப்பட்ட ஏழைத்தமிழர் முருகனுக்கு அடுத்தடுத்து ஏழு மருத்துவமனைகள் சிகிச்சையளிக்க மறுத்து அதனால் பரிதாபமாக இறந்தபோது அந்த மனிதாபிமானமற்ற செயலை கண்டித்து  நம் மாநிலத்தில் ஏதாவது திமுக காங்கிரஸ் கம்யூ எனும்  ஒரு கட்சி எதிர்த்து ஆர்பாட்டமோ போராட்டமோ  நடத்தியதா? கேரள அரசின்மீது நடவடிக்கையெடுக்க குரல் கொடுத்ததா  ? குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் இன்னொன்றைப்   பெற்றுக் கொள்வது சகஜம்.  எளிது. ஆனால்  முருகன் குடும்பம் இழந்திருப்பது சோறுபோடும்   தலைவனை.. நம் மாநிலத்தலைவர்கள் வெறும் சுயநல விளம்பர ஊழல்  நாயகர்கள். தமிழினப் பெயரில் போலிப்போராட்டம்   நடத்தவே லாயக்கு. இதுவும் ஒரு பிழைப்பா?

 • Naan Avaal Illai - cuddalore,இந்தியா

  60 குழந்தைகள் இறப்பு. தார்மீக உரிமை என்பது முதல்வர் தான். பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement