Advertisement

தனியார், 'செட் - டாப் பாக்ஸ்' வாங்காதீங்க: அதிகாரிகள் கெஞ்சல்!

'தனியார் நிறுவனங்களின், 'செட் - டாப் பாக்ஸ்'களை வாங்காதீர்கள்' என, பொதுமக்களுக்கு, அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

நாடு முழுவதும், 'டிஜிட்டல்' தொழில்நுட்பத்தில், கேபிள், 'டிவி' சேவையை தர வேண்டும் என, மத்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான, 'டிராய்' உத்தரவிட்டு உள்ளது.அதனால், தமிழகத்தில், அரசு கேபிள், 'டிவி' நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு தருவதற்காக, செட் - டாப் பாக்ஸ்களை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனால், தனியார் நிறுவனங்கள், செட் - டாப் பாக்ஸ் விலையை, 1,500 ரூபாயில் இருந்து, 500 ரூபாயாக குறைத்துள்ளன. மக்கள் அவற்றை வாங்க துவங்கி உள்ளனர். இதனால், அரசு கேபிள், 'டிவி'க்கு பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

அதனால், கேபிள் ஆப்பரேட்டர்களுக்கு, 'வாட்ஸ் ஆப்' மூலமாக, 'அரசு செட் - டாப் பாக்ஸ், விரைவில் வரும்' என, அரசு கேபிள், 'டிவி' நிறுவனத்தினர், 10ம் தேதி தகவல் அனுப்பி உள்ளனர்; மாவட்ட கலெக்டர்களும், இப்பணியில் களமிறக்கப்பட்டு உள்ளனர்.

சில மாவட்ட கலெக்டர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'பொதுமக்களுக்கு, உயர் தொழில்நுட்ப, செட் - டாப் பாக்ஸ்கள் விரைவில் வழங்கப்பட உள்ளன. சில தனியார் ஆப்பரேட்டர்கள், அரசு கேபிள் இணைப்பை துண்டித்து, தனியார் நிறுவனத்துடன் கைகோர்த்து, செட் - டாப் பாக்ஸ் வினியோகிப்பதாக புகார்கள் வந்துள்ளன.

'அந்த ஆப்பரேட்டர்களின் உரிமம் ரத்து செய்யப்படும். ஆப்பரேட்டர்கள் வலியுறுத்தினாலும், தனியார் நிறுவன, செட் - டாப் பாக்ஸ்களை வாங்குவதை தவிர்க்க வும்' என, கூறப்பட்டு உள்ளது.

- நமது நிருபர் -

Advertisement
 

வாசகர் கருத்து (13)

 • CHANDRAMOHAN. S.P - தூத்துக்குடி,இந்தியா

  என்ன கொடுமசார் இது?

 • ramesh - chennai,இந்தியா

  முதலில் இந்த கேபிள் டிவி அதிகாரிகள் தங்கள் வீட்டில் எந்த டிஷ் antana வைத்திருக்கிறார்கள் என்பதை பார்த்து விட்டு மக்களை அரசு கேபிளை வாங்க வலியுறுத்த வேண்டும்.

 • spr - chennai,இந்தியா

  " 'டிஜிட்டல்' தொழில்நுட்பத்தில், கேபிள், 'டிவி' சேவையை தர வேண்டும் என, மத்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான, 'டிராய்' உத்தரவிட்டு உள்ளது." இதற்கு காரணம் என்ன? இப்பொழுது இருக்கும் தொலைக்காட்சி முறையில் என்ன குறை? எதற்காக அதிக விலை கொடுத்து "செட் ஆப் பாக்ஸ் " மற்றும் அதிக விலையில் இணைப்புக்களை புதுப்பிக்க வேண்டும் யாரேனும் விளக்குவார்களா? இப்பொழுது நங்கள் மாதம் ரூ 120 கொடுத்து தொலைக்காட்சிகளை நன்றாகவே பார்க்கிறோம் பின் புதிய முறையில் செட் ஆப் பாக்ஸ் வாங்க ரூ 1000 மாத வாடகை ரூ 200 /300 தர வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுவது ஏன்? தேவைப்படுபவர்கள் வாங்கிக் கொள்ளட்டுமே அரசு இப்பொழுதெல்லாம் அனைத்துச் செயல்பாடுகளையும் மக்கள் மேல் வலுக்கட்டாயமாகத் திணிக்கிறது

 • rmr - chennai,இந்தியா

  SCV இருக்கும் வரை யாராலும் வளர முடியாது

 • Munish - Bangalore ,இந்தியா

  அரசு கல்வி, மருத்துவம் போன்ற துறைகளில் நவீனமாக்குவதை விட்டு படங்காட்ட பாடுபடுறாங்க

 • பாண்டியன் -

  சந்தை பொருளாதாரத்தில் விலையும், சேவையின் தரமும் தான் விற்பனையை முடிவு செய்யும். அரசு நடத்தும் எந்த நிறுவனங்களும் இதில் வெற்றிபெறாது இன்றே தனியார் இணைப்பை பெற்று மகிழ்வீர்!

 • K.Sugavanam - Salem,இந்தியா

  தனியார்கேபிள் நிறுவனங்களுக்கு இப்படி செட் ஆப் பாக்ஸ் "ஆடி சேல்" போட தடை விதிக்க வேண்டும்..ஏற்கனவே அவர்கள் அதிக விலைக்கு விற்றவற்றை கணக்கிட்டு அதிகம் வசூல் செய்ததை வாடிக்கையாளர்களுக்கு வட்டியுடன் திரும்ப செலுத்த உத்தரவிடவேண்டும். 500 ரூ கருவியை சில ஆயிரங்களை பல வருடங்களாக விற்று இருக்கின்றனர்..

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  எது மலிவோ அதைதான் மக்கள் நாடுவார்கள்...

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  தனியார் கேபிள் நிறுவனங்கள் ஆப்பரேட்டர்களுக்கு அதிக கமிஷன் கொடுப்பதால் வரும் வினையிது எனவே அரசு கேபிள் பத்திரிக்கைகளில் விளமபரம் செய்வது நல்லது

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement