Advertisement

'ஈரிலையை முடக்கி இன்னல் தந்த பா.ஜ.,!'

'மோடியா... இந்த லேடியா என, சவால் விட்ட இயக்கத்தை, மூன்றாக பிளந்ததும், இரட்டை இலையை முடக்கி, இன்னல்கள் தந்ததும், பா.ஜ., தான்' என, அ.தி.மு.க.,நாளிதழில் குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளது.

அ.தி.மு.க., - பன்னீர் அணி, பழனிசாமி அணி, தினகரன் அணி என, மூன்றாக பிளவுபட்டு உள்ளது. அக்கட்சியின் அதிகாரபூர்வ நாளிதழானநமது எம்.ஜி.ஆர்., சசிகலா குடும்பத்தினர் கட்டுப்பாட்டில் உள்ளது.

நேற்றைய, நமது எம்.ஜி.ஆரில், 'காவி அடி; கழகத்தை அழி' என்ற தலைப்பில், கவிதை வெளியானது.அதில், பா.ஜ., கடுமையாக சாடப்பட்டிருந்தது. அதில், 'ஆண்டுக்கு, 2.5 கோடி பேருக்கு வேலை என, ஆசை வலை வீசியவர்கள்; பெட்ரோல், டீசல் விலையை பாதியாக குறைப்போம் என்றெல்லாம், வகை வகையாய் வாயாலே வடை சுட்டவர்கள், முன்னிருந்து நடத்தியதெல்லாம் மோசடியே. 'மோடியா... இந்த லேடியா' என, சவால் விட்ட இயக்கத்தை, மூன்றாகப் பிளந்ததும், ஈரிலையை முடக்கி, இன்னல்கள் தந்ததும், பா.ஜ., தான்' என, குறிப்பிட்டு உள்ளனர்.
- நமது நிருபர் -

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (57)

 • @a_Vailankanni - Mumbai ,இந்தியா

  பார்த்து இரட்டை இலைகளை விஷம பூச்சிகள் தின்று தீர்த்து விடாமல் பாதுகாக்க யார் பொறுப்பேற்பார் என்பது தான் முக்கியம் உள்ளத்திற்கு உள்ளே ஒரு நோக்கம் வெளியே வேறொரு ஆக்கம் என்றால் இலைகளை தொண்டர்கள் எனும் நீர் ஊற்றி வளர்த்தவர் யாரையும் மன்னிக்கமாட்டார்

 • Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்

  இந்தச் சிக்கலுக்குக் காரணமே இந்தச் சசிகலாவும் அவரது குடும்பமுமே. கண்டவன் எல்லாம் கட்சிக்குள் நுழைந்து எம்ஜிஆர் உருவாக்கிய மாபெரும் இயக்கமான அதிமுகவை இந்த நிலைக்குக் கொண்டு வந்தவர்களை பேரறிஞர் அண்ணாவின் ஆன்மாவும் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் ஆன்மாவும் ஒரு போதும் மன்னிக்காது.

 • rmr - chennai,இந்தியா

  உதய சூரியன் சின்னத்தை முடக்குனா நல்லா இருக்கும் . சின்னங்கள் கொடுக்க கூடாது இந்த ஊழல் கட்சிகளுக்கு

 • Rahim - Riyadh,சவுதி அரேபியா

  உண்மையைத்தான் எழுதி இருக்கிறார்கள்......

 • karthikeyan -

  பாஜக செய்தது தவறே இல்லை. மண்ணின் மைந்தர்கள் மணலை திருட்டுத்தனமாக விற்கும் போது, டாஸ்மாக்கடைகள் இளைஞர்கள் அழிக்கும்போது திராவிடர்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது

  • Arivu Nambi - madurai

   ஏன் மோடி 2002 ல் நாயகனாக இருந்தபோது உங்களுக்கு இந்தியர்களா என்று எண்ண தோன்றவில்லையா ?

 • E-man - TVL,இந்தியா

  குறுக்கு வழியில் முன்னேறுவார்கள் அதே குறுக்கு வழியில் வேறறுக்கப்படுவார்கள் இதுவே நீதி ..தமிழ்நாட்டில் நீதி வெல்லும் பி ஜெ பி இன்னும் சீர்குலையும்

 • Sriram - Chennai,இந்தியா

  சசி முதல்வராகி தமிழன் மானம் பிளைட்டு ஏறனும்ம்னு இருந்த நேரத்துல நம் மானம் காத்தவர்கள் பிஜேபி ...அதற்க்கு நன்றிதான் நாம் சொல்ல வேண்டும் ..எப்படி நோக்கினும் ஆட்சியை கலைத்தால் அதற்கும் பிஜேபியே வசவு வாங்க வேண்டிவரும் ..இதே சுடாலின் வாய் நாரா வாயாக மாறி வேற மாறி பேசும் .நீங்களே அடித்துக்கொண்டு ஆட்ச்சியை கலைப்பீர்கள் ..அப்போது சசியை தேர்வு செய்கிறார்களா அல்லது கைப்புள்ளய தேர்வு செய்கிறார்களா ..அது மக்கள் விருப்பம் ..அதுவே மகேசனின் விருப்பம் ..

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  அந்த முன்னால் முதல்வர், அம்மா, ஜெஜெ, யார் யாரை எங்கு எங்கு வைத்து வேலை வாங்கனுமோ, அவர் அவரை அங்கு அங்கே வைத்து வேலை வாங்கினார். ஆனால் இப்போது ஜெஜெ இல்லை. இன்றைக்கு ஆள் ஆளுக்கு நாட்டாமை செய்வது செய்திகளில் வரத்தான் செய்கிறது. எனவே இன்றைக்கு ஜெஜெ உயிருடன் இருந்திருந்தால், என்ன என்ன செய்வாரோ?, அதை "தமிழக பொதுமக்கள், தக்க நேரத்தில் செய்து காட்டுவார்கள்" என்பதில் சந்தேகமில்லைதானே?.

 • Karunan - udumalpet,இந்தியா

  அதிமுகவை அழித்துவிடுவது பிஜேபிக்கு முடியாதகாரியமல்ல .. நீண்டகாலநலனை நோக்கும்போது அதிமுக இருக்கவேண்டும்.. கொள்ளை சசியையும் விரட்டி திமுகவுக்கும் அணை போடவேண்டும் .. அதிமுக காப்பாற்றப்படுவதுதான் அதட்குவழி அதைத்தான் பிஜேபி செய்கிறது

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  இதே 'தில்'லொட எதிர்த்து நின்னு தேசிய கொள்ளை கும்பலுக்கு தமிழ்நாட்டுல இடமில்லைனு நிரூபிச்சு கட்டணும். அது தான் வீரத்துக்கு அழகு

  • Sriram - Chennai,இந்தியா

   Haha nee pottatha neeye innoru vaatti padichu paaren. Unakke sirippa control panna mudiyaathu ..haha

 • Palanisamy T - Kuala Lumpur,மலேஷியா

  BJP மட்டும் உத்தமர்களா?

  • Sriram - Chennai,இந்தியா

   Yes

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  ஈரிலைகளை முடக்கி இன்னல் தந்ததா ???? அது இன்னலன்று .... கன்னல் என அதிமுக உணரும் நாள் 2021 ஆம் ஆண்டு வரும் ....

 • spr - chennai,இந்தியா

  அஇஅதிமுக அழிவுக்கு அவர்களேதான் காரணம் இதில் பாஜகவுக்கோ வேறு எவருக்குமோ இடமே இல்லை .

 • Venki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  MGR மறைவுக்கு பின் அவர் சொத்து என்ன என்பதை நாடே அறியும் ஆனால் ஜெயா அம்மையாரின் மறைவிற்கு பிறகு அவரின் சொத்துக்களின் மதிப்பு அவர் வளர்த்து விட்ட தியாக தலைவியின் கும்பலின் சொத்து மதிப்பு எவ்வளவு இதெல்லாம் எவ்வாறு சேர்க்க பட்டது அதன் விளைவாக தமிழகத்தில் விளைந்த குழப்பங்கள் என்னென்ன இவெற்றிக்கெல்லாம் அந்த அம்மையார் பொறுப்பில்லையா மக்கள் அவர் மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக அவரால் செயல் பட முடிந்ததா எல்லாவற்றிக்கும் மேலாக அவர் இறந்த பின் மீதம் உள்ளது கொள்ளை கூட்டம் மட்டுமே தற்போது மக்கள் எதிர் பார்ப்பது மறு தேர்தலே தவிர ஊடகங்களின் ஊகங்களும் மற்றும் கொள்ளை கும்பலின் கபட நாடக வசனங்கள் அல்ல

  • sankar - trichy,இந்தியா

   நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை. பிஜேபி நடவடிக்கை எடுக்கும் என்ற பயத்தில் ஆட்சிசெய்யும் அதிமுக பெட்டரா ? இல்லை நம்ம ஆட்சி தான் என்று துணித்து புகுந்து விளையாடும் திமுக பெட்டரா ???

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  பாஜக தலைப்படுவது ஏன் ???? பதவியைக் காப்பாற்றிக்கொள்ளவோ, ஊழல் வழக்குகளினின்றும் விடுவிக்கப்படவோ அல்லது இரண்டுமோதானே காரணம் ???? திராவிடச் சொத்து என்று கூறப்படும் சுயமரியாதையை ஏன் அடகு வைக்கவேண்டும் ???? தவிர, திமுக கொம்புகளுக்கு இந்த விஷயத்தில் அதிமுக -வை ஏளனம் செய்யத் தகுதியே கிடையாது ..... இந்திராவைச் சரணடைந்து வழக்குகளில் தப்பிக்கவில்லையா மாஜி முதல்வர் ????

 • unmaiyai solren - chennai,இந்தியா

  அதிமுகவிற்கு இந்த சிறிய உண்மையை கூட அறிய இத்தனை காலம் தேவைப்பட்டதோ?

 • balakrishnan - coimbatore,இந்தியா

  சந்தேகம் இல்லாமல் உண்மை தான், பெரும்பான்மை எம்.எல்.ஏ க்கள் ஈ.பி எஸ். பக்கம் இருக்கும்போது, ரெட்டை இலையை முடக்கினார்கள், ஆனால் அகிலேஷுக்கு சைக்கிள் சின்னம் கிடைத்தது, தினகரனை மடக்க ரெட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயற்சித்தார் என்று, எந்த ஆதாரமும் இல்லாமல் அந்த விசாரணை கிடப்பில் போய்விட்டது, சசிகலாவிற்கு வழிவிட்டு முதல்வர் பதவியை துறந்து தியானத்தில் ஈடுபட்ட பன்னீர் ஒரு அணியாக ராஜஉபச்சாரத்தோடு, அவருக்கு வேணும்கிற அளவிற்கு நிறைய கால அவகாசம் கொடுத்தது, இழு இழு என்று இழுத்து ஈ.பி.எஸ். க்கு பதவி வழங்கியது, எல்லாமே பி.ஜெ.பி கேவலமான அரசியல் அணுகுமுறை, நிச்சயம் பி.ஜெ.பி இப்படியெல்லாம், செய்யும் என்பது அவர்கள் குஜராத்தில் நடந்து கொண்ட முறை மூலம் தெரிய வருகிறது, அம்மையார் கம்பீரமாக சென்னையில் உட்கார்ந்து டெல்லி தலைவர்களை தனது இல்லத்திற்கு வரவழைத்து அரசியல் செய்த தைரியம், இப்போது இந்த அடிமைகள் டெல்லியில் மத்துசத்துக்கு சென்று வருவது, கேவலம், எந்த அ.தி.மு.க தொண்டனும் இதை ஏற்றுக்கொள்ள மாட்டான்

  • sankar - trichy,இந்தியா

   தினகரன் ஊழல்வாதி அவரை ஜெயா இருந்த இடம் தெரியாமல் வந்திருந்தார். சசிகலா குடும்பத்தையே ஒதுக்கி வைத்திருந்தார் . சசிகலாவையும் வெளி ஏற்றி மீண்டும் சேர்த்தார் . சசிகலாவை சேர்த்த தவறை மட்டும் செய்யாமல் இருந்திருந்தால் இன்று உயிரோடு இருந்திருப்பார் . ஜெயா ஒதுக்கிய அனைத்து நபர்களை மோடி ஒதுக்கினார் ஜெயா விரும்பிய பன்னீரை மோடி ஆதரித்தார் . சொல்ல போனால் ஜெயா இல்லாத குறைய அதிமுக தொண்டர்களின் விருப்பத்தை மோடிதான் நிறைவேற்றுகிறார் . கொல்லைப்புற வாசல் வழியாக பிஜேபி ஆட்சி செய்கிறது என்று சொல்பவர்கள் இந்த ஆட்சியில் தமிழிசையோ வானதியோ இலை கணேசனோ பொன்ராதாகிருஷ்ணனோ எதாவது பலனடைந்தார்கள் என்று சொல்லலாமே . ஏன் முடியவில்லை

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  பஸ்மாசுரன் கதை தான். பாஜக பஸ்மாசுரன் எல்லாத்தையும் அழிச்சான் (அதிமுக). தானும் அழிந்தான்னு சரித்திரம் சொல்லும். தமிழ்நாட்டில் பாஜக பஸ்மாசுரனுக்கு அழிவு.

 • udanpirappu3 - chennai ,இந்தியா

  இவர்களுக்கு இருக்கும் தன்மானம் கூட பதவியில் இருந்தவர்களுக்கு இல்லை . இதற்கு காரணம் அண்ணன் பன்னீர் செல்வம் . இவரின் சுய மரியாதைக்காக அதிமுகவையே அடகுவைத்துவிட்டார் .

 • VOICE - CHENNAI,இந்தியா

  2019 வரை தான் ஆளும் தேசிய கட்சிக்கு டைம் அதற்குள் தமிழகத்தில் அவர்கள் காலூன்ற வேண்டும். இதில் டெல்லி காங்கிரஸ் உடந்தை. அது வரை 90 % வருமானவரித்துறை சிபிஐ தேர்தல் கமிஷன் அனைத்தும் தமிழகத்தை நோக்கி நிறுத்தப்பட்டுள்ளது என்று பேசிக்கொள்கின்றனர். தமிழக அரசியல்வாதிகள் என்ன கஷ்டப்பட்டு சம்பாதித்த பணமா மக்கள் இவர்களை பார்த்து கவலைப்பட ? மக்களிடம் கொள்ளை அடித்த பணம் மற்றொருவரால் கொள்ளை அடிக்கப்படுகிறது. மக்களிடம் கொள்ளை அடிப்பவர்கள் பணம் பதவி இருக்கிறது நம்மை ஒன்றும் செய்யமுடியாது என்று நினைத்தவர்கள் எல்லாம் டெல்லி சிபிஐ வருமானவரி அலுவலகத்தில் தங்களுக்கு தகவல் தெரிவிக்க யாரேனும் ஆட்கள் இருக்கிறார்களா என்று சல்லடை போட்டு தேடும் நிலை தேவையா ?

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  நீங்கள் யாரையும் பற்றி எழுத தகுதி அறவே இல்லாதவர்கள்... உங்கள் குடும்பம் தமிழகத்திற்கு என்ன செய்தது... ???? பச்சபுடவகாரியை கையில் போட்டு கொண்டு மக்களின் மண் பொன் பொருளை அடாவடித்தனமாக ஆட்டயம் போட்டது தான்...... கோயில் சொத்து குலநாசம் என்பதை அறியாமல் செய்கிறீர்கள்...????

 • S.AJINS - CHENNAI,இந்தியா

  இவர்களுக்குள் ஒற்றுமையில்லாமல் அடித்துக் கொள்வதை பார்த்து ஊர் சிரிப்பதை கண்டு திருந்தினால் சரி.

 • Giridharan S - Kancheepuram,இந்தியா

  அன்று மோடிஜி இந்த அம்மா தலைல தடவி குடுத்து அரசியலுக்கு எல்லாம் வராதீங்கம்மா நாங்க பார்த்துப்போம்னு சொல்லாம சொல்லிட்டு போனாரு. அதை புரிஞ்சுக்காம பதவி ஆசைலே இறங்கினாங்க அதான். நீயா நானா விளையாட்டு எல்லாம் அவர்கிட்ட விளையாட முடியாதுங்க. அப்புறம் தீபா அணி அது நாலாவது அணி ஏங்க கணக்கிலே கொண்டுவரல

  • K.Sugavanam - Salem,இந்தியா

   அது மட்டும் தானா? ஹஹ்ஹாஹ்ஹா..

 • Palanisamy T - Kuala Lumpur,மலேஷியா

  இவர்களுக்குள் ஒற்றுமையில்லையென்றுச் சொல்வதைவிட, ஜெயா கட்சியை நடத்திய கலாச்சரமும் முறையும் சரியில்லை இதில் திமுக வின் அசைக்க முடியாத தலைவரான கருணாநிதியும் விதிவிலக்கல்ல. ஜெயா வெளிப் படையாக நடந்துக் கொண்டார். ஜெயாவின் முரட்டுத்தனமானப் போக்கு, சர்வாதிகார முறை, தானென்ற அகம்பாவம் இவையெல்லாம் இன்று அதிமுக வின் எதிர்க்காலத்தையே கேள்விக் குறியாக்கி விட்டது. பாதுகாப்பைக் "காரணம்" காட்டி விஸ்வரூபம் படத்தை வெளியிட முட்டுக் கட்டைப் போட்டவர் ஜெயா. படத்தை வெளியிட வேண்டுமென்றால் தன்னிடம் மன்னிப்பு, அதுவும் எப்படிக் மன்னிப்புக் கோரவேண்டுமென்று கமல் அவர்கள் சொன்னதை முழுமனதாக ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். தனக்குப் பிறகு இந்தக் கட்சியின் நலன்களைப் பற்றி அவர்க் கொஞ்சமும் சிந்திக்க வில்லை அக்கறையும் கொள்ளவில்லை. தன் கட்சித் தலைவர்களையே அடிமைப் போலத்தானே நடத்தினார். BJP மட்டும் உத்தமர்களா?

  • sankar - trichy,இந்தியா

   பிஜேபி உத்தமர்களா உத்தமர்கள் தான் அவர்களிடம் மடியில் கனமில்லை .தமிழசையோ ஏல கணேசனோ இல்லை ராதாகிருஷ்ணனோ இல்லை பொன்ராதாகிருஷ்ணனோ இந்த ஆட்சியிடம் இருந்து லஞ்சம் பெற்றார்கள் பண பயன் அடைந்தார்கள் என்று கூற முடியுமா

  • Palanisamy T - Kuala Lumpur,மலேஷியா

   இவர்கள் லஞ்சம் பெற்றார்களா, பணப் பயன்கள் அடைந்தார்களா என்பது பற்றி நாம் எதுவும் பேசவுமில்லை, தொடவுமில்லையே மேலும் பிஜேபி தமிழகத்தில் ஆட்சியில்லையே இதை பற்றி பேசுவதற்கு.

 • சிவாமாத்தூர் -

  மாடுகள ஓட்டிகிட்டு வந்த அவாளும் இவாளும் எப்பவும் ஒன்னுதான் , வந்த நாள் முதல் இந்த நாள் வரை தமிழர்கள் தலையில் சுமைதான்

 • mindum vasantham - madurai,இந்தியா

  Now it is time for enjoyment from dmk,kosi Mani has given a solid start

 • vasu - Sydney,ஆஸ்திரேலியா

  நிமிர்ந்த நன் நடையும் நேர் கொண்ட பார்வையும் இருந்திருந்தால், IT ரெய்டுக்கு பயந்து மற்றவர் காலில் விழ தேவை இருந்திருக்காது. இது இப்போது குரங்கு அப்பம் மத்தியஸ்தம் செய்த கதை. கொடுப்பட்டவர் மக்களிடம் இருந்து எடுத்தவர் ஆதலின், குரங்கின் தீர்ப்பு இப்போது வலுக்கும் தீர்ப்பு ஆகிறது.

  • sankar - trichy,இந்தியா

   நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை எந்த தமிழக அரசியல் தலைவனுக்கு இருந்தது தமிழ் நாட்டில் அறுபத்தி ஏழுக்கு அப்புறம் . ??????

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  லேடியை ஒழித்துக்கட்டியது பேராசை... அதுவும் ஊழல் செய்தாலும் முக என்ற விஞ்ஞான ஊழலை விட இது பரவாயில்லை என்று தேர்வு செய்த மக்களுக்கு இவர்கள் போட்டதோ மூன்று கோடுகள்தான்... அதுவும் அதிகாரத்துக்கு / அரசுக்கு சம்பந்தமில்லாத விஷயத்தில் கூட உள்ளே இறங்கி ஊழலை கொள்ளையாக செய்தது SINனம்மா குடும்பம்.. அதுவும் ஒரு வழக்கு தீவிரமாக நடந்துகொண்டு இருந்த பொழுது... அதிமுக நிர்வாகமும், திமுக நிர்வாகமும் மக்கள் விரோதமான காரியங்களில் தயங்காமல் ஈடுபடுவார்கள்.. புறவாசல் வழியாக கடவுள் வேண்டும்... முக வுக்கு திருநீறு பூசாத குறை ஒன்றுதான்...

  • K.Sugavanam - Salem,இந்தியா

   நடப்பு வேறு மாதிரி இருக்கே அண்ணே.. அதிமுக மாஜிகளுக்கு பிஜேபி வலைவீச்சு, எனவும் செய்தி வந்துள்ளதே.. அவ்வளவு காய்ந்த கிடக்கிறது பிஜேபி யின் திருவோடு?

  • balakrishnan - coimbatore,இந்தியா

   ஊழலை பற்றியோ, புறவாசலை பற்றியோ பேசுவதற்கு பி.ஜெ.பி க்கு எந்த யோக்கியதையும் இல்லை, உலகத்திலேயே மிகவும் மோசமான இயக்கம் ஒன்று உண்டு என்றால் அது பி.ஜெ.பி தான், திராவிட இயக்கங்களை பற்றி உங்களது நற்சான்றிதழ் தேவையில்லை,

  • sankar - trichy,இந்தியா

   திராவிட இயக்களுக்கு உங்கள் நாட்சான்று தேவை இல்லை . தூர் நாற்றம் வீசும் பொருளுக்கு விளக்கம் கொடுக்க வேண்டியதில்ல

  • sankar - trichy,இந்தியா

   தினகரனையும் சசிகலாவையும் கதற கதற விடும் பிஜேபி மோசம் சசிகலா கும்பலுடன் டாஸ்மாக் டீலிங்கில் இருக்கும் ஸ்டாலின் நல்லவர் நல்ல இருக்கு ஒங்க நியாயம் பாலகிருஷ்ணன்

  • sankar - trichy,இந்தியா

   உங்க ப்ரச்சனனை என்ன பாலகிருஷ்ணா பீஜேபியேயா இல்லை ஊழலா ஊழல் என்றால் சசி கும்பலுடன் டாஸ்மாக் டீலிங் வடித்துள்ள திமுகவை திட்டுங்க . தமிழ் நாடு ஊழல் வாதிகளிடம் இருந்து எந்த பலனும் பெறாத பீஜபேயை திட்டாதீர்கள்

  • sankar - trichy,இந்தியா

   சுகவனம் அன்னே உங்க அம்மா கட்சி மந்திரிங்க எல்லாம் ஊழல் வாதிகளை நேர்மையானவங்களா முதல்ல அதுக்கு பதில் சொல்லுங்கண்ணா

 • மணிமேகலை - paris ,பிரான்ஸ்

  ஒரு லிட்டர் பால் 20 ரூபாய்க்கு தருவோம்னு உங்க கட்சியும்தானே சொல்லிச்சு குடுத்தீங்களா .

  • K.Sugavanam - Salem,இந்தியா

   இப்போ தான் ஜெர்சி இன பசுக்களை வாங்க ஆரம்பித்துள்ளனர்.. கண்டிப்பாக பால்கோவா வோடு ஒரு லிட்டர் பாலும் 20 ரூ க்கு கொடுப்பார்கள், 2019 நெருங்க நெருங்க..

 • srisubram - Chrompet,இந்தியா

  நீங்கள் நல்லவரர்களாக இருந்திருந்தால் ஏன் இந்த நிலைமை .

 • Thiii - Chennai,இந்தியா

  தமிழக மக்கள் விரும்பியது அவர்களால் முடியாததை பிஜேபி நிறைவேற்றியது.. அதிமுகவை அழிப்பது பிஜேபி நோக்கமன்று. அதன் தலைமை கொள்ளைக்கூட்டம் சதிகலாவின் கட்டுப்பாட்டுக்கு செல்லக்கூடாது என்பதே.. அதைத்தான் தமிழக மக்களும் விரும்பினார்.. ஆனால் காங்கிரேசின் தெருநாவுக்கரசு விஜயதரணி போன்றோர் கொள்ளைக்கூட்ட கும்பலுக்கே சொம்படித்தனர்.. மக்களின் முடிவிற்கே விட்டுவிடுவோம் பிஜேபி செய்தது சரியா தவறா என்று..

  • balakrishnan - coimbatore,இந்தியா

   பி.ஜெ.பி க்கு என்ன அக்கறை ஒன்றும் இல்லை, திண்ணை காலியா இருக்கு, இடம் கிடைக்குமா என்ற ஆவல், அடுத்தவன் தொடையில கயிறு திரிப்பது பி.ஜெ.பி க்கு கைவந்த கலை, மூணு வருஷமா வோட்டு போட்ட மக்களை சித்திரவதை செய்பவர்கள், எதுக்கு தமிழத்தின் மீது திடீர் அக்கறை,

 • K.Palanivelu - Toronto,கனடா

  நினைப்பு பிழைப்பை கெடுக்கும் என்பார்கள். அதுபோல தாங்கள் செய்த தவறை சீர்தூக்கிப் பார்க்காமல் பி.ஜெ.பி யை சாடுவது சரியல்ல. இவர்களுக்குள் யார் ஒசத்தி என்று அடித்துக் கொண்டால் அதற்கு பி.ஜெ.பி எப்படி பொறுப்பாக முடியும்? இவர்களுக்குள் ஒற்றுமையில்லாமல் அடித்துக் கொள்வதை பார்த்து ஊர் சிரிப்பதை கண்டு திருந்தினால் சரி.

  • balakrishnan - coimbatore,இந்தியா

   இவர்களுக்குள் அடித்துக்கொள்ளட்டும் அதில் ஒன்றும் தவறில்லை, எதுக்கு பி.ஜெ.பி காலில் விழவேண்டும், ஆமை புகுந்த வீடும், பி.ஜெ.பி நுழைந்த மாநிலமும் உறுப்பட்டதா சரித்திரமே இல்லை

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  ஒற்றுமை மூலம் சின்னம்மா ஆட்சியைக் கொண்டுவரவா பாஜக முயற்சிக்கும்? இவர்களை கஷ்டப்பட்டு உடைக்காமலேயே தானாக உடையவிட்டதற்காக தமிழகமே நன்றி சொல்கிறது விரைவில் திமுகவிலும் துணைவியணி இணைவியணின்னு அடிச்சிக்கிட்டு சாகப்போறாங்க

 • Suresh - Nagercoil,இந்தியா

  இவர்களுக்குள் பதவி ஆசையினால் சண்டை போடுவார்களாம், முடியாத பட்ச்சத்தில் மத்தியஸ்தம் செய்வதற்கு கூப்பாடு போட்டுகொண்டு மத்திய அரசின் காலில் விழுவார்களாம், உதவிபுரிவதற்கு வருபவர்களை உதவாக்கரைகள் விமர்சித்து மக்களை திசை திருப்ப பயன்படுத்தும் யுக்தி இது.. சசி கும்பலின் ஆட்டம் அணையும் விளக்கைபோல் பிரகாசமாய் எரிந்துவிட்டு அணையும் நேரமிது..மக்களின் எதிர்பார்ப்பு மறு தேர்தல் அதை ப ஜ க செய்தால் தமிழகத்திற்கு செய்யும் பெரிய தொண்டாக மக்கள் கருதுவர்...

 • Suresh - Narita,ஜப்பான்

  நீங்க ரொம்ப நல்லவெங்கல்லோ இல்லாட்டி ரொம்ப ஒற்றுமையா ?

 • Thiii - Chennai,இந்தியா

  பிஜேபி அவ்வாறு செய்யவில்லையெனில் சின்னமாகோசம் விண்ணை பிளந்துஇருக்கும்

 • Thiii - Chennai,இந்தியா

  அதிமுக அழிக்கப்பட வேண்டிய கட்சி.. சசிகலா & கோ வெல்லாம் தலைவர்கள்.. என்ன கொடுமை.. பிஜேபி சசியின் முதலமைச்சர் கனவை சிதைத்ததன் மூலம் தமிழர்களின் மானம் காத்துள்ளது.. கவுன்சிலர் தேர்தலில் நிற்கக்கூட தகுதியற்ற கொள்ளைக்கும்பல் தலைவி தமிழக முதலமைச்சரா..?

 • N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா

  அவனுங்களுக்குள்ளாற அடிச்சிக்கிறதுக்கு பா.ஜ காரணமாம்...

 • m.viswanathan - chennai,இந்தியா

  இப்போ தான் புரியுதா ? இன்னும் என்னென்னவோ இருக்குடி ஆப்பு

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement