Advertisement

தற்கொலை முயற்சி உண்மையா? ஓவியாவுக்கு போலீஸ் 'சம்மன்!'

சென்னை: 'நடிகை ஓவியா, 'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்காக தங்கி இருந்த போது, தற்கொலைக்கு முயன்றாரா என்பது குறித்து, அவர் விளக்கம் அளிக்க வேண்டும்' என, போலீசார் உத்தரவிட்டு உள்ளனர்.

தனியார், 'டிவி'யில், 'பிக் பாஸ்' என்ற நிகழ்ச்சி, ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சிக்காக, சென்னை, நசரத்பேட்டை பகுதியில், வீடு போன்ற பிரமாண்ட, 'செட்' போடப்பட்டு உள்ளது. அதில், பாடலாசிரியர் சிநேகன், நடிகையர் ஓவியா, காயத்ரி ரகுராம், நடிகர்கள், வையாபுரி, கணேஷ் வெங்கட்ராம், மாடலிங் வாலிபர் ஆரவ் உள்ளிட்டோர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

சில தினங்களுக்கு முன், ஓவியாவை மையமாக வைத்தே, 'பிக் பாஸ்' நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின. இவர், ஆரவ் மீது, தன் காதலை வெளிப்படுத்தினார். ஆனால், அவர், 'ஓவியாவின் மீது இருப்பது நட்பே; காதல் அல்ல' என, தெரிவித்து விட்டார். இதனால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக, ஓவியா, 'பிக் பாஸ்' வீட்டில் தற்கொலைக்கு முயன்றதாக, தகவல் வெளியானது.

பின், 'ஓவியா, 'பிக் பாஸ்' வீட்டில் இருந்து வெளியேறி விட்டார்; தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்' எனவும் கூறப்பட்டது. இதை உறுதிப்படுத்தும் வகையில், ஓவியா, 'பிக் பாஸ்' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும், நடிகர் கமல்ஹாசனை சந்தித்தார். இருவரும், நிகழ்ச்சி குறித்தும், ஓவியா - ஆரவ் காதல் குறித்தும் பேசினர். இந்த காட்சிகளும் ஒளிபரப்பு செய்யப்பட்டன.

இந்நிலையில், வழக்கறிஞர், எஸ்.எஸ்.பாலாஜி என்பவர், ஓவியா மீதும், 'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த புகார், நசரத்பேட்டை காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டு, விசாரணை நடக்கிறது. அதன் தொடர்ச்சியாக, 'பிக் பாஸ் வீட்டில் இருந்த போது, தற்கொலைக்கு முயன்றது உண்மையா' என்பது குறித்து, நேரில் விளக்கம் அளிக்கும்படி, ஓவியாவுக்கு, போலீசார் உத்தரவிட்டு உள்ளனர்.

இது குறித்து, போலீசார் கூறுகையில், 'ஓவியா, நேரில் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு உள்ளோம். அவர் வெளிநாட்டில் இருப்பதால், சென்னை திரும்பியதும், காவல் நிலையத்திற்கு அழைத்து வருவதாக, அவரது சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது' என்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (17)

  • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

    வீடியோவில் ஹேர் ஸ்டைல் நன்றாக இல்லை. என்னுடைய சித்தி சொல்வார்கள் அந்த காலத்தில் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளிகளின் கம்மல், பட்டு சேலை அவர்கள் அணிந்திருக்கும் நகைகள் பார்ப்பதற்காகவே செய்திகளை பார்ப்போர் உண்டாம். சோபனா ரவி பாத்திமா போன்றோர் அதனாலேயே அதற்க்கு தனி முக்கியத்துவம் தருவார்களாம். பியூட்டி பார்லர் சென்று பிரத்யேகமாக அலங்கரித்து வருவார்களாம். நானும் டீ. வி யின் எந்த நிகழ்ச்சி என்றாலும் அவர்கள் காஸ்ட்யூமை பார்ப்பேன். நமக்கு எந்த காஸ்ட்யூம் சரிப்பட்டு வரும் என்பது டீ, வி பார்த்து தேர்ந்து கொள்ளலாம். டீ. வி நிகழ்ச்சியை பார்ப்போர் எல்லோரும் அதன் கருத்துக்களையோ செய்தியை மட்டுமோ பார்ப்பது இல்லை என்பதை தயாரிப்பாளர்கள் புரிந்திருப்பார்களா. பிக் பாஸ் புரிந்து கொள்ள வேண்டும். கமலுக்கு உண்மையிலேயே வயசு ஆகிவிட்டது தான்.

  • VOICE - CHENNAI,இந்தியா

    bigboss நிகழ்ச்சியில் நல்லவரை காப்பாற்ற வேண்டும் என்று பார்த்து பார்த்து வோட் போட்ட மக்கள் நாம தெருவில் நிற்கும் கவுன்சிலர் நல்லவரா, நாம தொகுதிக்கு நிற்கும் MLA MP நல்லவரா என்று பார்த்து ஓட்டு அளித்தால் அவர்கள் என்றோ காப்பாற்ற பட்டிருப்பார்கள். 500 1000 லஞ்சம் வாங்கி வோட்டை அளித்த பலர் மற்றும் வோட்டை போடாமல் வீடுகளில் இருந்து கொண்டு அரசு சரி இல்லை என்று விமர்சனம் செய்பவர்கள் பலர். . முக்கியமாக அரசியல் கட்சிகளில் வேட்பாளராக நிற்பவர்களை தவிர்த்து நல்லவர்கள் பலர் சுயேட்சையாக போட்டி இடுவதை காணமுடிகிறது அது போன்ற நல்லவர்களை தேர்ந்து எடுத்தாலே தமிழகத்திற்கு வெற்றி கிடைக்கும்.

  • balakrishnan - coimbatore,இந்தியா

    நாட்ல லட்சம் பிரச்சனை இருக்கு, ஆனா நம்ம ஆளுங்களுக்கு எந்த பிரச்சனையில் ஆர்வம்,பாருங்க,

  • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

    முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்று பழமொழி உண்டு. தொடர் முயற்சியே வெற்றிக்கு அடிப்படை. விக்கிரமாதித்தன் போல முயற்சி செய்ய வேண்டும். சரிதானே? நான் முயற்சி என்பதை பற்றி படித்து ஒரு சிறு கட்டுரை எழுதி வீட்டுப்பாடமாக thamilaasiriyaridam கடந்த வாரம் தான் கொடுத்தேன். அதையே இங்கு எழுதினேன். வேறென்றுமில்லை.

  • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

    கீழ்த்தரமான விளம்பரம் மூலம் நிகழ்ச்சிகளை பிரபல படுத்தி டி ஆர் பி யை உயர்த்தி நோக்கத்தை குறிக்கோளை அடைய நினைக்கிறார்களா? நாட்டு பிரச்சினைகளை மக்களுக்கு சமுதாயத்துக்கு வேண்டிய நல்ல கருத்துக்களை சிறப்பாக தந்தால் நிகழ்ச்சி வெற்றி பெறும் அதற்கு அறிவும் அனுபவமும் மிக்க எழுத்தாளர்கள் இயக்குனர்கள் நடிகர்கள் வேண்டும். அது வறட்சியாக இருக்கிறது அவர்களிடத்தில் என்று தெரிகிறது. கேவலமான முறையில் நிகழ்ச்சியை கொண்டு சென்று சீரழிக்கிறார்கள். பெரிய பாஸ் என்றால் மோசமானவன் என்று தான் பொருள். அவன் என்ன சொன்னாலும் கண்மூடி செய்ய வேண்டும் என்று டிக்டட் இருக்கிறது. காய்கனிகளுடன் பலன்களும் இலவசம் என்பது போல காதல் தோல்வியுடன் நடப்பு இலவசம் என்று கூறுகிறார் அந்த லூசுத்தனமான நாயகன் என்று பேச ஆரம்பித்து இருக்கிறார்களாம் கிராமத்து பெரியவர்கள். அவர்கள் சொன்னால் அச்சர லட்சம் உண்மையாகத்தான் இருக்கும் என்று நம்பவேண்டும்.

  • கிள்ளி வளவன் - chennai,இந்தியா

    போலீஸ் சூப்பர் இல்ல?? ..எல்லா வேலையையும் ஒதுக்கி வைத்துவிட்டு அவருக்கு சம்மன் அனுப்பி இருக்காங்க பாருங்க.. அவர்கள் கடமை உணர்ச்சி பிரமிப்பாக இருக்கிறது....

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    கமலின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்த இது போன்ற கேவலமான நிகழ்ச்சியை உருவாக்கி பல அரைகுறைகளுக்கு நடிக்க சொல்லிக் கொடுத்து வருகிறார்கள்... 200 % வீணாய்ப்போன நிகழ்ச்சி...

  • SINGAM - chennai,இந்தியா

    கமல் வாழ்க, அவர் கொள்கை வாழ்க, அவர் மனைவிகள் வாழ்க, அவர் புரியாத தமிழ் வாழ்க, சென்னை வெள்ளத்தில் அவர் புரிந்த உதவி வாழ்க

  • suresh kumar - Salmiyah,குவைத்

    வில்லாதி வில்லன் படத்தில் ரோடு ரோலரை வைத்து மோதி ஒருவரை கொலை செய்துவிட்டார்கள் என்று குற்றம் சாட்டியது போல, இவர் தோள் அளவு நீரில் (அதுவும் நீச்சல் தெரிந்தவர்) மூழ்கி தற்கொலை செய்துகொள்வார்

  • suresh kumar - Salmiyah,குவைத்

    நீச்சல் தெரிந்த ஒருவர், தோள் அளவு தண்ணீர்த் தொட்டியில் மூழ்கி தற்கொலை செய்து கொள்ள முடியும் என்று ஒட்டுமொத்த தமிழர்களும் நம்புவார்கள் அதுவும் ஓவியா செய்தால் ஆனால், ஏதோ ஒரு காரணத்திற்க்காக, வயிற்றில் வலி என்று வேறு ஒருவர் கூறினால், அவர் பத்து ரூபாய் கொடுத்தால் பத்து லட்ச ரூபாய் அளவு நடிக்கிறவர் என்று சொல்லும் தமிழ் மக்கள் நல்ல மக்கள்

  • Senthil -

    very important news for tamilnadu. oviya will be the next cm?

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    மருத்துவ முத்தம் தான் எல்லாவற்றுக்கும் காரணமாக இருக்கலாம்... முப்பாத்தாறு கேமரா இருந்து என்ன பயன்... பிக்பாஸ் வீடு பிராத்தல் வீடாக வரக்கூடாது...

  • Giridharan S - Kancheepuram,இந்தியா

    இந்த மாதிரி செய்திகளை போட்றதுனாலே தான் நம்ம பசங்க கெட்டுப்போறாங்க

  • Giridharan S - Kancheepuram,இந்தியா

    எப்படி எல்லாம் புகழ் தேடிக்கறாங்க பாருங்க.

  • manoj -

    Vera velaya parungada advocates..case eh kidaikalaya?

  • சேகர்,மறைமலைநகர் -

    எது எப்படியோ நினைத்தது நடந்து விட்டது. (வேறென்ன பப்ளிசிட்டிதான்) நிகழ்ச்சிக்கு TRP கூட்ட நடத்திய நாடகம் நன்றாகவே ஒர்க்கவுட் ஆனது. ஸ்கிரிப்ட் மற்றும் இயக்கம் கலைஞானி அல்லவா.

  • Suresh - Nagercoil,இந்தியா

    மலையாளியாணும் அங்கன ஒன்னும் செய்யுல்லா....

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement