Advertisement

குழந்தைகளுக்கு 'டெங்கு': அமைச்சர் ஒப்புதல்

சென்னை: ''சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நான்கு குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது,'' என, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

காய்ச்சல் காரணமாக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விபரங்களை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று ஆய்வு செய்தார். பின், அவர் கூறுகையில் ''தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு இரு தினங்களில் வெளியிடப்படும். எழும்பூர் மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக 90 குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளனர்; அவர்களில் நான்கு குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (5)

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    சத்திரத்து சோத்துக்கு அப்பன அய்யங்கார் என்ன சாட்சி...????

  • Giridharan S - Kancheepuram,இந்தியா

    அப்போ நீட் விவகாரத்தில் தமிழகத்திற்கு தோல்விதானா

  • Giridharan S - Kancheepuram,இந்தியா

    அமைச்சர் அவர்களே அறிக்கை கொடுப்பதை விட இந்த டெங்குவை ஒழிப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு பாருங்க

  • Giridharan S - Kancheepuram,இந்தியா

    அய்யயோ ஸ்டாலின் மட்டும் இருந்திருந்தார்னா இதையே காரணம் காட்டி அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யச்சொல்லி அறிக்கை விட்டிருப்பார். நல்ல வேளை தப்பிச்சாரு.

  • Suresh - Nagercoil,இந்தியா

    இன்னுமா இவர் அமைச்சர் பதவியில் நீடிக்கிறார், இவரால் மத்த அமைச்சர்களுக்கு கேவலமாக உள்ளதாக புலம்பி தள்ளுகிறார்கள்...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement