Advertisement

நிழற்குடைக்குள் தேங்கும் தண்ணீர்

பந்தலுார் : பந்தலுார் அருகே, கீழ்கையுன்னி பகுதியில், தாழ்வாக உள்ள நிழற்குடைக்குள், தண்ணீர் நிற்பதால், பயணிகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.பந்தலுார் அருகே, சேரம்பாடி-சுல்தான்பத்தேரி சாலையில் கீழ்கையுன்னி பகுதி அமைந்துள்ளது. இங்கு சேரங்கோடு ஊராட்சி மூலம் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டு, கடந்த பல ஆண்டுகளாக மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது.இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், நிழற்குடையை ஒட்டிய சதுப்பு நிலப்பகுதியில், தனியார் கட்டடம் கட்டுவதற்காக, மண்ணை கொட்டி, மேட்டுப்பாங்கான பகுதியாக மாற்றினர். இதனால் நிழற்குடை, அமைந்துள்ள பகுதி பள்ளமாக மாறியது. இதனால் மழை காலங்களில், நிழற்குடைக்குள் தண்ணீர் புகுந்து, சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது.இதனால், பயணிகளால் பயன்படுத்த முடியாத நிலையில், மழையில் நனைந்தபடி, சாலையோரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.மக்கள் கூறுகையில்,'பயணிகள் பலரும் பயன்படுத்தும் நிழற்குடையை இந்த நிலைக்கு மாற்றிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement