Advertisement

பிரம்மகுமாரிகளின் ரக்ஷாபந்தன் நிகழ்ச்சி

பந்தலுார் : பந்தலுாரில் பிரம்மகுமாரிகள் ஈஸ்வர்ய வித்யாலய வளாகத்தில், ரக்ஷா பந்தன் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கூடலுார், பந்தலுார் பகுதி பொறுப்பாளர் ரேணுகா தலைமை வகித்து பேசுகையில், ''மனிதன் கெட்ட எண்ணங்களை விட்டொழிக்கவும், பேராசைகளை விடவும் முன்வரவேண்டும். தினமும் ஏதாவது ஒரு தேவையற்ற விஷயங்களை நம் எண்ணத்திலிருந்து விடுவிக்க முன்வரவேண்டும். மகிழ்ச்சி, மனநிறைவு, பிறர்க்கு உதவும் எண்ணம் ஆகியவற்றை வளர்த்துக்கொள்ளவும் வேண்டும். மனித சமுதாயம் மனதை அமைதிபடுத்தி, நல்ல எண்ணங்களை மனதில் விதைத்தால் மனித சமுதாயம் ஆரோக்கியமானதாகவும், எதிர்கால வாழ்வு வளமுள்ளதாகவும் மாற்றம் பெறும்,'' என்றார்.தொடர்ந்து, நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு சகோதரதுவத்துக்கான ராக்கி கயிறு கட்டப்பட்டு, அறிவுரைகள் அடங்கிய கையேடு, இனிப்புகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் டாக்டர் பாலகிருஷ்ணன், ஓய்வுபெற்ற பேரூராட்சி செயல் அலுவலர் கவுசல்யா மற்றும் அமைப்பின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement