Advertisement

சுகாதாரத்தை வலியுறுத்தி மாணவர்கள் பேரணி

பந்தலுார் : சேரங்கோடு ஊராட்சி சார்பில், துாய்மை பாரத இயக்க விழிப்புணர்வு பேரணி எருமாடு பகுதியில் நடந்தது.அதில்,மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சலீம் தலைமை வகித்து பேசியதாவது,''துாய்மை பாரத திட்டத்தின் கீழ், கழிப்பிடம் இல்லாத பகுதிகளை உருவாக்கிட அனைத்து மக்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். திறந்த வெளியில் குப்பைகளை கொட்டாமல், அதற்கென வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகளில் குப்பைகளை கொட்டி, சுற்றுச்சூழல் பாதிக்காமல் இருக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மாணவர்கள் இதற்கான விழிப்புணர்வை அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் ஏற்படுத்த வேண்டும்,'' என்றார். எருமாடு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சாம்சன் முன்னிலை வகித்தார். ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர் சஜீத் தலைமையிலான சுகாதார பணியாளர்கள் செய்திருந்தனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement