Advertisement

கூட்டுறவு வங்கி ரூ.255 கோடி கடன் வழங்கி சாதனை

ஊட்டி: 'மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் கடந்த ஐந்து ஆண்டு காலத்தில், 255 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.ஊட்டியில் உள்ள, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கீழ், ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, குந்தா, கூடலுார், பந்தலுார் தாலுகா பகுதிகளில், 22 மத்திய கூட்டுறவு வங்கி கிளை, 78 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்படுகின்றன.கடன் வழங்கி சாதனைஇந்த வங்கியின் மூலம், விவசாயிகளுக்கு வட்டியில்லா விவசாய கடன், நகையீட்டு கடன், வீட்டு வசதி, வீட்டு அடமான கடன்,தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தாட்கோ கடன், சிறுபான்மை மக்களுக்கான கடன், சிறுவணிக, வியாபார கடன், மகளிர் தொழில் முனைவோர் கடன், அரசு ஊழியர்களுக்கு சம்பள கடன், வீட்டு கழிவறை உள்ளிட்ட கடன்கள் வழங்கப்படுகிறது.தவிர, பழங்குடியினருக்காக, 3 கூட்டுறவு கடன் சங்கம் அமைத்து அதன் மூலம் அவர்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.மகளிர் சுய உதவிக்குழுவினர் பயனடையும் வகையில், 28 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.மேலும், மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கூட்டுறவு வங்கியில், விவசாயிகளின் நலன் கருதி, குறைந்த வட்டிக்கு அதிகபட்ச கடன் உதவிகள் வழங்கப்படுகிறது. இதனை வாங்கும் விவசாயிகள், வங்கி செயல்பாட்டை முறையாக பயன்படுத்தி, அதனை திரும்ப செலுத்தினால், தொடர்ந்து பயனடைய முடியும் என்பதே வங்கி நிர்வாகத்தின் அறிவுறுத்தலாக உள்ளது.மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் பார்த்தீபன் கூறுகையில், ''விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்கள் பயன் பெறும் வகையில் பல்வேறு வகையான கடன் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும், 225 கோடி ரூபாய் வரை கடனுதவிகள் வழங்கப்படுள்ளன. வங்கியில் பெறும் கடனை முறையாக செலுத்தி சேவையினை பயன்படுத்தி கொள்ள வேண்டும்,'' என்றார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement