Advertisement

சுற்றுலா நகரின் மையப்பகுதியில் சுகாதாரகேடு

ஊட்டி : ஊட்டியில், பொதுமக்கள் அதிகமாக கூடும் ஏ.டி.சி., பஸ் ஸ்டாண்ட் பகுதி, திறந்தவெளி கழிப்பிடமாக மாறி வருவதால் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.ஊட்டி நகராட்சி மையப்பகுதியான ஏ.டி.சி. பஸ் ஸ்டாண்ட் பகுதிக்கு நாள்தோறும், ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இந்த பகுதியில் ஒரே ஒரு கழிப்பிடம் மட்டுமே உள்ளதால், பெரும்பாலான மக்கள், பாம்பேகேசில் சாலை உட்பட இப்பகுதி சாலைகளை திறந்தவெளி கழிப்பிடமாக மாற்றி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு, பயணிகள் நிற்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. எனவே, இப்பகுதியை துாய்மையாக வைக்க தேவையான நடவடிக்கையை, நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement