Advertisement

கோவில் கதவை சேதப்படுத்திய காட்டு யானை

கூடலுார் : கூடலுார், காந்திநகர் அருகே, மாரியம்மன் கோவில் இரும்பு கதவை காட்டு யானை சேதப்படுத்திய சம்பவத்தால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.கூடலுார், ஓவேலி காந்திநகர் பகுதிக்கு குட்டியுடன் காட்டு யானை நள்ளிரவில் வந்துள்ளது. விவசாய பயிர்களை சேதப்படுத்திய யானை, அதிகாலை, 5:00 மணிக்கு குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து, பூட்டியிருந்த மாரியம்மன் கோவில், இரும்பு கதவை சேதப்படுத்தியது. தொடர்ந்து, கோவில் பின் பகுதியில் இருந்த இரும்பு தடுப்பை உடைத்து, பீரோவை கீழே தள்ளியது. பொதுமக்கள் சத்தமிட்டு அதனை விரட்டினர். அதனை தொடர்ந்து குட்டியுடன் அருகேயுள்ள வனப்பகுதிக்குள் சென்றது. வனகாப்பாளர்கள் மோகன்ராஜ், சிவப்பிரகாசம், வேட்டை தடுப்பு காவலர்கள் அப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். யானையை கண்காணித்து அதனை வேறு பகுதிக்கு விரட்டும் முயற்சியில் வன ஊழியர்கள் ஈடுப்பட்டுள்ளனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement