Advertisement

கண்மாய்களில் அதிகரிக்கிறது ஆக்கிரமிப்பு:அவசியமாகுது அதிகாரிகளின் கண்காணிப்பு

ராஜபாளையம்:விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கண்மாய்கள் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி உள்ளது. இது பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் விடுவதால் ஆக்கிரமிப்புகள் தொடர்கின்றன.தற்போதைய நிலையில் விவசாயிகளின் தண்ணீர் தேவையை போக்க நிலத்தடி நீருக்கு ஒரே ஆதாரம் கண்மாய், குட்டை, குளங்கள் மற்றும் நீர் தேங்கும் தாழ்வான பகுதிகள் மட்டுமே. அரசின் முந்தைய அறிவிப்பான வீடுகளுக்கு கட்டாய மழை நீர் சேகரிப்பு திட்டம் தொடங்கிய வேகத்தில் நல்ல பலனை தந்தாலும், நாளடைவில் செயல்படுத்துவதில் எழுந்த சுணக்கத்தினால் காட்சிப்பொருளாக உள்ளது.
தற்போதும் கட்டாய சட்டம் இருப்பினும் பெயரளவிற்கே அவை கண்காணிக்கப்படுகிறது. இதனால் பெரும்பாலான ஆழ்துளை குழாய்களில் வெறும் காற்று மட்டுமே வருகிறது. இந்நிலையில் அடிப்படை ஆதாரமான கண்மாய்களை காப்பதை விடுத்து, அவற்றை ஒன்றும் இல்லாமல் ஆக்கும் பணியில் ஆக்கிரமிப்பாளர்களின் செயல்பாடுகள் உள்ளது. இவர்களின் வேகத்தால் நீர் நிறைந்து காணப்படும் கண்மாய்கள் நல்ல மழை பெய்தாலும் தண்ணீர் தேங்க வழியின்றி மறுகால் பாய்ந்து வீணாகிறது.ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்ட் எதிர்புறம் உள்ள புதியாதிகுளம் கண்மாய் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி சீரழிந்து வருகிறது. ராஜபாளையம் நகராட்சிக்குட்பட்ட திருவனந்தபுரம் தெரு மற்றும் புது பஸ் ஸ்டாண்ட் பகுதியை எல்லையாக கொண்டு பெரியாதி குளம் கண்மாய் அமைந்துள்ளது. சஞ்சீவி மலையில் வழியும் மழைநீர், அம்பலபுளி பஜார், எம்.ஆர்.நகர், ராஜபாயைம் நகரின் கிழக்குப்பகுதியை சுற்றிய பகுதி நீர் வந்து சேரும் பகுதியாக இக்கண்மாய் அமைந்துள்ளதுடன், இப்பகுதியை சுற்றி விவசாய நிலங்களுக்கும், சுற்றுப்பகுதிகளுக்கு நிலத்தடி நீர் ஆதாரமாய் விளங்கி வருகிறது.உடைப்பெடுப்புதற்போது இக்கண்மாய் கடந்த 10 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி வருகிறது. தனியார் சிலரின் பேராசயைால் சிறிய அளவில் மேற்கொண்டு வரும் ஆக்கிரமிப்பு, பட்டா போலி ஆவணங்களுடன் கண்மாய் நீர் பிடிப்பு பகுதிகளில் கழிவு மண்ணை கொண்டு நிரப்பி வருகின்றனர்.நடவடிக்கை எடுக்க வேண்டிய துறையினரின் மெத்தனத்தால் ஆக்கிரமிப்பாளர்களின் செயல்பாடுகள் அதிகரிக்கிறது. ஒருபுறம் நீர்பிடிப்பு பகுதிகள் குறைந்து வருவதுடன் கண்மாய் நீர் நிறைந்து வெளியேறும் மதகு பகுதிகளிலும், அருகில் உள்ளோர் மண்ணை கொட்டி மேடாக்கியதால் நீர் வெளியேற வழியின்றி வேறு பகுதிகளில் உடைப்பெடுக்கும் சம்பவம் கடந்த ஆண்டு நடந்துள்ளது.கண்மாயில் நீர் வரத்து அதிகரித்தால் மாறுகால் வழியாக வெளியேறி கருங்குளத்திற்கு செல்லும் இருபுறமும் ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் இட விற்பனையில் ஈடுபடுவோர் தவறான செய்கைகளால் 7 மீட்டர் அகலமுள்ள நீர் வழிப்பாதை முடக்கப்பட்டு சிறிய வாறுகாலை விட மோசமாகி விட்டது. இவற்றையெல்லாம் கண்காணிக்க வேண்டிய துறையினர் இப்பகுதி ஸ்ரீவில்லிபுத்துார்ஒன்றியத்துக்கு உட்பட்டு வருவதால் எதிர்தரப்பினரை கைகாட்டி செல்கின்றனர். இச்செயல்களில் ஈடுபடுவோரை தட்டிகேட்கும் சமூக ஆர்வலர்களின் போராட்டமும் கேளிக்குறியாகின்றனதவறான முன்உதாரணம்இப்பகுதி அரசு கண்மாய் மற்றும் சாலை சாலைப்பாதுகாப்பு சங்க தலைவர் வேலாயுதராஜா,'' சில ஆண்டுகளுக்கு முன் 25 அடியாக இருந்த இப்பகுதி நிலத்தடி நீர் தற்போது 300 அடிக்கு மேல் சென்றுள்ளது. ஆழ்துளை குழாயில் புகை மட்டும் வறுகிறது. இதற்கு பிரதான காரணம் கண்மாய் நீர் பிடிப்பு பகுதிகளை பாதுகாக்க தவறியதுதான். நாங்களும் பலமுறை முறையிட்டு விட்டோம். அதிகாரிகள் மாறிவிடுவதை காரணமாக கொண்டு ஆக்கிரமிப்புகள் அதே நிலையில் இருந்து வருகிறது. இதை காணும் அடுத்த பகுதியினரும் பேராசை கொண்டு ஆக்கிரமித்து விடுகின்றனர். பூமித்தாயை துளை போட்டு உறிஞ்ச தெரிந்த நமக்கு, இயற்கை தரும் மழை நீரை முறையாக பூமிக்கு தேக்க வழி தெரிந்தும் உதாசீனப்படுத்தி, அடுத்த சந்ததியினருக்கு தவறான முன் உதாரணத்தை விட்டு செல்கிறோம்,''என்றார்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement