Advertisement

வீடுகளில், 'ஸ்மார்ட் மீட்டரிங்' திட்டம் தொடர் அலட்சியத்தில் மின் வாரியம்

வீடுகளில், 'ஸ்மார்ட் மீட்டரிங்' எனப்படும், ஆளில்லாமல் மின் பயன்பாட்டை கணக்கு எடுக்கும் திட்டத்தை செயல்படுத்துவதில், மின் வாரியம் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகிறது.

மானியம்வீடுகளில் மின் பயன்பாட்டை கணக்கிட, தமிழ்நாடு மின் வாரியம், மீட்டர் பொருத்தி உள்ளது. அதில், பதிவாகியுள்ள மின் பயன்பாட்டு அளவை, மின் ஊழியர்கள் குறிப்பெடுத்துச் சென்று, கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்வர்.
வீடுகளில், 500 யூனிட்டுக்குள் மின்சாரம் பயன்படுத்தினால், தமிழக அரசு மானியம் வழங்குகிறது. அதற்கு மேல் எனில், முழு கட்டணம் செலுத்த வேண்டும்.
இதை தவிர்க்க சிலர், கணக்கெடுக்கும் ஊழியர்களுடன், 'ஒப்பந்தம்' வைத்து, மின் பயன்பாட்டைக் குறைத்துக் காட்டி, வாரியத்துக்கு நஷ்டம் ஏற்படுத்துகின்றனர்.
இதை தவிர்க்க, 'ஸ்மார்ட் மீட்டரிங்' திட்டம் உள்ளது. வீடுகளில் உள்ள மீட்டரில், 'சிம் கார்டு' பொருத்தி, அலுவலக, 'சர்வருடன்' இணைப்பது தான், ஸ்மார்ட் மீட்டரிங்.மின் கட்டணம் செலுத்த வேண்டிய தேதி வந்தவுடன், மின் பயன்பாடு, கட்டண விபரங்களை, நுகர்வோருக்கு, எஸ்.எம்.எஸ்., செய்தியாக, ஸ்மார்ட் மீட்டரிங் முறை, கொடுத்து விடும்.
இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், கோபி உள்ளிட்ட, 10 நகரங்களில், 2013ல், நவீன மீட்டர் திட்டம் ஆய்வு செய்யப்பட்டது.
அதன்படி, அங்குள்ள சில தெருக்களில் உள்ள மீட்டர்களில், 'சிப்' பொருத்தப்பட்டது. மின் ஊழியர், கையில் நவீன கருவியுடன், அந்த தெருவுக்கு சென்றால், மீட்டரில் உள்ள, மின் பயன்பாட்டு விபரங்கள், தானாகவே அதில் பதிவாகின.
பின், 2015ல், சென்னை, புதுப்பேட்டையில் உள்ள சில வீடுகளில், 'அட்வான்ஸ் மீட்டரிங்' திட்டம் சோதிக்கப்பட்டது. சிம் கார்டு அல்லது 'ரேடியோ பிரீக்வன்சி' என்ற தொலைதொடர்பு வசதியால், வீடுகளில் உள்ள மீட்டர்கள், அலுவலக கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டன; மிகவும் வசதியான, சுலபமான இத்திட்டம் தான், தற்போது, ஸ்மார்ட் மீட்டரிங் என்ற புதுப் பெயருடன் வந்துள்ளது.
வலியுறுத்தல்இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்துமாறு, மத்திய மின் துறை அமைச்சர், பியுஷ் கோயல் வலியுறுத்தி வருகிறார். தற்போது, வீடுகளில் பொருத்தியுள்ள, 'ஸ்டேடிக்' மீட்டரில், தானாகவே மின் பயன்பாட்டை கணக்கு எடுக்கும் வசதி உள்ளது.
இதையும் விட நவீனமான, ஸ்மார்ட் மீட்டரைப் பொருத்தினால், முறைகேடுகள் செய்ய முடியாது; 'வசூல்' குறையும் என்ற நோக்கில், மின் பகிர்மான கழக பொறியாளர்கள், இத்திட்டத்தைச் செயல்படுத்த, அலட்சியம் காட்டி வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

Advertisement
 

வாசகர் கருத்து (11)

 • adalarasan - chennai,இந்தியா

  இது போன்ற எந்த ஒரு திட்டத்தையும் தமிழ்நாட்டில் செயல்படுத்த அரசுநிறுவனங்களும் அதன் தலைமை , அரசியல்வாதிகளும் விரும்புவதில்லை? ஏனென்றால் தில்லுமுல்லு செய்யமுடியாது ரேஷன் ஸ்மார்ட் கார்டும், செயலற்றப்படாமல் காலா தாமத மாகிரபிஉ மின்சார நிறுவனங்கள் பல மத்திய திட்டங்களை வேண்டு மேரே புறக்கணிக்கிறது? குறைந்த விலையில் LED, BULBS, FANS, TUBES விநியோகம் , மற்றொரு உதாரணம் . மத்திய அரசு கொடுக்கும் மானியத்தை முழுதாக பயன்படுத்தாமல் , நிறுத்தப்பட்டுவிட்டது >1967 ல் பிறகு ஊழல்,, திரு பக்தவத்சலம் அவர்கள் கூறியதுபோல், ஒரு, வைரஸ் போல பரவி விட்டது? வெளியில் வருவது மிகவும் சிரமம்

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  இது போன்ற ப்ராஜெக்டுகளில் வெவ்வேறு தனியார் கம்பெனிகள் மூலம் நல்ல பிசினஸ் கிடைப்பதால் கான்டராக்டிங் நிறுவனங்கள் அரசு கொடுக்கும் கொட்டேஷனுக்கு பணி செய்ய மறுக்கிறார்கள் ..... தவிர அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு லஞ்சமும் கொடுக்க வேண்டும் .... ஆகவேதான் திட்டத்தில் தடை .... மின்துறைக்கு நஷ்டமென்றால் அது அல்ட்டிமேட்- ஆக மக்களுக்குத்தானே நஷ்டம் .... அரசு ஊழியர்களுக்கோ, மந்திரிகளுக்கோ சம்பளம், கிம்பளம் வந்து விடுமே .... பிறகு ஏன் கவலை ????

 • Harinathan Krishnanandam - Chennai,இந்தியா

  சென்னை மாநகரில் ஆயிரக்கணக்கான அடுக்கு மாடி குடியிருப்புகள் உள்ளன அங்கெல்லாம் இந்த மின்சார கணக்கீடு முறையை அமல் படுத்தினால் ஆட்கள் தேவை குறையும் மேலும் இந்த இருமாத பிரச்னையும் முடிவிற்கு வரும் லண்டன் மாநகரில் நம் மொபைல் சார்ஜ் செய்வது போல கடையில் சார்ஜ் செய்து அந்த சீப்பை மீற்றரில் பொருத்தினால் கட்டிய பணம் இருக்கும் வரை மின்சாரம் கிடைக்கும் மீட்டர் அளவு என்னும் பிரச்சினையே இருக்காது இந்த முறையையும் மின் வாரியம் பயனுக்கு கொண்டுவரலாம்

 • HARISHBABU.K - Kallakurichi,இந்தியா

  எதுனா மாமூல் குடுத்தாக்கா அந்த திட்டம் அமுலுக்கு கொண்டு வருவாங்க, சும்மா வெறுங்கைல முழம் போட்டா இப்டிதான். நாங்கல்லாம் யாரு...

 • Ramesh Sundram - Muscat,ஓமன்

  45 % கட்டிங் கொடுத்து விடுங்கள் எல்லாம் சரி ஆகி விடும்

 • ravi - chennai,இந்தியா

  ஊழலில் வாழும் மின்துறைக்கு முன்னேற்றம் பிடிக்காது

 • Nakkal Nadhamuni - Chennai,இந்தியா

  இந்த கன்றாவி ஆட்சிக்கு எஃகு கோட்டை என்று விடுதலை போராட்டத்திற்காக சிறைக்கு போன ஒரு அம்மாவின் சவால் வேறு... தமிழ்நாடு எவ்வளவு கேவலமா இருக்குன்னு இத வெச்சே தெரிஞ்சிக்கலாம்... ஒழிக்கப்படவேண்டிய கும்பல் அனைவரும்... மக்கள் இந்தமாதிரி ஆட்கள் அனைவர் மேலும் காரி துப்பணும்...

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  ஏற்க்கனவே இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை ஆள் சென்று ரீடிங் எடுக்கும் பொழுதே நாணயமற்ற நுகர்வோர்கள் மின் திருட்டில் ஈடுபட்டு வருகிறார்கள்... இன்னும் போகவே இல்லை... என்றால் சொல்லவே வேண்டாம் கணினி மூலம் எடுக்கிறோம் ... ரிமோட் ரீடிங் . ஸ்மார்ட் கார்டு ரீடிங் என்றால்... மின் திருட்டில் வல்லுநர்கள் எப்பிடியும் திருடதான் போகிறார்கள்...எலக்ட்ரானிக் சாதனங்கள் எல்லாமே ஏதாவது ஒரு வழியில் செயலிழக்க வைக்கலாம்...அந்த வழியை மின் திருட்டு தடுப்பு குழு அந்த திருடனிடம் இருந்துதான் கற்று கொள்ளவேண்டும்...

 • Natarajan Ramanathan - chennai,இந்தியா

  இதை விடுங்கள். சென்னையில் எனது வீட்டிற்கு டிஜிட்டல் மீட்டர் பொறுத்த வந்தவர் 150 ரூபாய் லஞ்சம் கேட்டார். கொடுக்க மறுத்ததால், பொருத்திய டிஜிட்டல் மீட்டரை அகற்றி விட்டு மீண்டும் பழைய மீட்டரையே மாட்டிவிட்டு சென்றார். எங்கள் தெருவிலேயே எனது வீட்டில் மட்டும்தான் இன்னும் பழைய மீட்டர் உள்ளது. அது முக்கி முனகி ஓடுவதால் எனக்கு 500 யூனிட் தாண்டுவதே இல்லை. யாருக்கு லாபம்?

 • sudharshana - chennai,இந்தியா

  அவரே சொல்லிட்டார் , அப்புறம் என்ன ? எப்போ அவர்களுக்கு விஷயம் தெரியுமோ அப்போவே அவர்களேதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவுகளும் எடுக்க மாட்டாங்க. மத்தவுக எடுக்க விட மாட்டாங்க அதிகாரிகளை. சஹாயத்திற்கு என்ன ஆச்சு?

 • vadivelu - chennai,இந்தியா

  கணக்கு குறிப்பவன் கவனிக்கப்பட்டால் மீட்டர் அளவு கோரிக்கை படுகிறது என்றால் ஊழலை எப்படி வளர்த்து இருக்கிறார்கள் இந்த இரண்டு கட்சிகளும்.அத்தனை பேரும் பச்சை தமிழர்கள்தானே.வெட்கம்.இதை கேள்வி கேட்காத அரசியல் தலைவர்கள் இருப்பது இன்னும் அவமானம் அசிங்கம் .

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement