Advertisement

கனமழையால் அழுகிய பருத்தி செடிகள்பாதிப்பு:பலத்த நஷ்டத்தால் விவசாயிகள் ...

ராமநாதபுரம்;ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் கன மழை காரணமாக பருத்தி காய்கள் வெடிக்கும் நேரத்தில் மழை நீர் தேங்கி பருத்தி செடிகள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளன. கடும் வறட்சியிலும், சிரமப்பட்டு வளர்த்த பருத்தி செடி, பலன் கொடுக்கும் நேரத்தில் மழை அழித்துள்ளதால் , விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த இரு ஆண்டுகளாக மழை பொழிவு இல்லாமல் பாதிப்பு ஏற்பட்டது. தற்போது ஒரு வாரகாலமாக மழை பெய்து வருகிறது. நேற்று முன் தினம் இரவு ஒரே நாளில் ஆர்.எஸ்.மங்கலத்தில் 55 மி.மீ., மழை பெய்தது. இதனால் வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.
பருத்தி
வண்டல் ஊராட்சிப்பகுதிகளில் மானாவாரியாக நுாற்றுக்கணக்கான ஏக்கரில் பருத்தி பயிரிட்டிருந்தனர். 120 நாட்களில் பலன் தரும் பருத்தி ஆடி மாதம் விளைச்சலுக்கு வந்துள்ளது. பருத்தி காய்களிலிருந்து பஞ்சு வெடிக்கும் நிலையில் இருந்தது. தற்போது மழை காரணமாக பருத்தி பயிரிட்டுள்ள நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.
அழுகும் நிலை
பருத்தி விளைச்சல் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக குறைவாக இருந்தாலும், தற்போது பலன் கொடுக்கும் நிலையில் மழை பெய்து பருத்தி பயிரிட்டுள்ள நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால், பருத்தி செடிகள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. மழை காரணமாக வெடிக்க கூடிய பருத்தி காய்கள் குளிர்ச்சி காரணமாக வெடிக்காத நிலை ஏற்பட்டுள்ளது . விவசாயிகள் வேதனை
கடந்த இரு ஆண்டுகளாக மழை இல்லாமல் விவசாயத்தை கெடுத்து வந்தது. ஆங்காங்கே கொஞ்சம் பருத்தி பயிரிட்டு இருந்த நிலையில், பலன் கொடுக்கும் நேரத்தில் கன மழை பெய்து அதனையும் கெடுத்து விட்டது . தற்போது சாத்தனுார், தெற்கு விசவனுார், சூரியன்கோட்டை ஆகிய பகுதிகளில் பலர் பருத்தி செடிகளை கால்நடைகளுக்கு தீவனத்திற்காக பிடுங்கி வருகின்றனர். இதனால் விவசாயிகள் பெருத்த நஷ்டத்திற்குள்ளாகியுள்ளனர்., என்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement