Advertisement

'அமுதம்' அங்காடிகள் விரைவில் நவீனமயம்

'அமுதம்' அங்காடிகளில், வாடிக்கையாளர்கள் வருகை குறைவதால், தனியாருக்கு இணையாக, அவற்றை நவீனமாக்க, நுகர்பொருள் வாணிபக் கழகம் முடிவு செய்துள்ளது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், 'அமுதம்' என்ற பெயரில், சென்னையில், 19; கடலுாரில், மூன்று பல்பொருள் அங்காடிகளை நடத்தி வருகிறது. வெளிச்சந்தையில், மளிகை பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தவே, அந்த அங்காடிகள் துவக்கப்பட்டன. ஆனால், அவற்றில் விற்கப்படும் பொருட்களின் விலை அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், கடைக்கு வருவோர் எண்ணிக்கை குறைந்து, விற்பனையும் பாதித்து வருகிறது.

இது குறித்து, வாணிபக் கழக அதிகாரி ஒருவர் கூறிய தாவது:தனியார் அங்காடிகளில், மளிகை பொருட்கள், மக்களை கவரும் வகையில் சுத்தமாக அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன; 'ஏசி' வசதி செய்யப்பட்டு உள்ளன. பொருட்களின் விலை, தள்ளுபடி விலை, தயாரிப்பு தேதி என, அனைத்து விபரங்களும் தெளிவாக உள்ளன. அதிக ஊழியர்கள், வேலைக்கு இருப்பதால், மக்கள் கேட்கும் பொருட்கள், உடனே எடுத்து தரப்படுகின்றன.

ஆனால், அமுதம் கடைகளில், இட நெருக்கடிஇருப்பதுடன், குறைந்த ஊழியர்களே உள்ளனர். இதனால், பொருட்களை ஒழுங்காக அடுக்கி வைப்பதில்லை.பொருட்களும் தரமற்று இருப்பதால், மக்கள் வாங்குவதில்லை. இதையடுத்து, தனியாருக்கு இணையாக, அமுதம் அங்காடிகள் நவீனமயமாக்கப்பட உள்ளன. இதற்கான பணிகள், விரைவில் துவங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (3)

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    இருக்கும் இடத்தில் கடமை உணர்வோடு வேலை செய்தாலே விற்பனை அமோகமாக நடக்கும். தூங்கி வாழ்ந்தாலும்... நேரத்தை கடைபிடிக்கவில்லை என்றால் எப்பிடி வியாபாரம் நடக்கும்

  • சேதுசேது -

    பில் போடும் சமயம் தில்லு முல்லு செய்து கூட்டம்.. ஆ....ஊ...என்று எப்படியோ ஏமாற்றி அந்த வகையில் phd (ஏமாற்றுவதில்)செய்து சேவை செய்தா யார் அலருவாங்க அதிசயமான நேர்மையானவர் ஓரிரு வர் தவிர.

  • சேதுசேது -

    பில் போடும் சமயம் தில்லு முல்லு செய்து கூட்டம்.. ஆ....ஊ...என்று எப்படியோ ஏமாற்றி அந்த வகையில் phd (ஏமாற்றுவதில்)செய்து சேவை செய்தா யார் லருவாங்க அதிசயமான நேர்மையானவர் ஓரிரு வர் தவிர.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement