Advertisement

கலந்தாய்வில் பட்டதாரி ஆசிரியர்கள் கொதிப்பு: காலிப்பணியிடங்களை மறைத்ததால்

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்ட இடமாறுதல் கலந்தாய்வில் காலிப்பணியிடங்களை மறைத்ததால் பட்டதாரி ஆசிரியர்கள் கொதிப்படைந்தனர்.தமிழகம் முழுவதும் கடந்த மாதம் 100 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு, அவற்றுக்கு தலா 9 பட்டதாரி ஆசிரியர்கள் வீதம் வீதம் 900 ஆசிரியர்கள் நியமிக்க அரசு உத்தரவிட்டது. தரம் உயர்த்திய பள்ளிகளில் நிரப்பஉள்ள காலிப்பணியிடங்களை பெற ஆசிரியர்களிடையே கடும் போட்டி நிலவியது.
திண்டுக்கல் மாவட்டத்தில் அழகாபுரி, செக்காபட்டி உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இங்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியல், உயிரியல், வரலாறு, பொருளியல், வணிகவியல் என 9 பணியிடங்களுக்கு கலந்தாய்வு நடத்த வேண்டும். ஆனால் கலந்தாய்வுக்கு முன்பே அழகாபுரி பள்ளியில் ஆங்கிலம், வணிகவியல் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். கணிதம், உயிரியல் பணியிடங்களை வெளிப்படுத்தவில்லை.
திண்டுக்கல் முதன்மை கல்வி அலுவலகத்தில் நடந்த கலந்தாய்விற்கு காலை 10:00 மணிக்கு ஆசிரியர்கள் வந்து காத்திருந்தனர். மதியம் 1:00 மணிவரை காலிப் பணியிடம் வெளியிடப்படப்பட வில்லை. இதனால் கொதித்த ஆசிரியர்கள் அலுவலகத்தில் பிரச்னை செய்தனர். உடனே பட்டியல் வெளியானது. அதில் பல பணியிடங்கள் மறைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் புகார் கூறினர். பணிமூப்பு பட்டியலில் பல பெண் ஆசிரியைகள் காத்திருக்கையில் பணியிடத்தை மறைத்து வேறு மாவட்ட ஆசிரியர்களுக்கு ஒதுக்கப்பட்டதாக குமுறினர்.
கலந்தாய்வில் முறைகேடு:பட்டதாரி ஆசிரியர் கழக மாநில துணைத்தலைவர் ராமஅய்யாக்கண்ணு, மாவட்ட தலைவர் கிருஷ்ணதாஸ், பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில துணைத்தலைவர் ராஜா கூறியதாவது: கடந்த மேயில் நடந்த கலந்தாய்வு வெளிப்படையாக நடந்தது. ஆனால் நேற்றைய கலந்தாய்வில் பணியிடங்களை மறைத்துவிட்டனர். வெளிமாவட்ட ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னுரிமை பட்டியலில் உள்ள ஆசிரியைகள் பல ஆண்டுகளாக மாறுதல் கிடைக்காமல் தவிக்கின்றனர், என்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement