Advertisement

கமிஷனர் அலுவலகத்தில்பெண் போலீஸ் மரணம்

சென்னை:சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நுண்ணறிவு பிரிவில் பணியாற்றி வந்த பெண் போலீஸ் ஒருவர், மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை, திருமுல்லைவாயல், ஏரிக்கரை அண்ணனுார் பகுதியைச் சேர்ந்தவர், சற்குணம். இவரது மனைவி, ஸ்ரீதேவி, 38. இவர்களுக்கு, ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். ஸ்ரீதேவி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நுண்ணறிவு பிரிவு முதல்நிலை காவலராக பணியாற்றி வந்தார். அவர், நேற்று மாலை, 3:15க்கு, அலுவலகத்தில் உள்ள சக போலீசாரிடம், 'மூச்சு அடைக்கிறது' என, கூறியுள்ளார். திடீரென, இருக்கையை விட்டு எழுந்த அவர், மூர்ச்சையற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த போலீசார், ஆம்புலன்ஸ் வரவழைத்து, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பரிசோதனையில், ஸ்ரீதேவி மாரடைப்பால் உயிரிழந்தது தெரியவந்தது. இச்சம்பவம், கமிஷனர் அலுவலகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement