Advertisement

'வாளி' தண்ணீரில் மூழ்கிபெண் குழந்தை பலி

அம்பத்துார்:வாளி தண்ணீரில் விழுந்த, 10 மாத பெண் குழந்தை பலியானது. சென்னை, அம்பத்துார் அடுத்த முகப்பேர் கிழக்கு, 10வது பிளாக்கைச் சேர்ந்தவர், முருகேசன். அவரது மனைவி முத்துமணி. அவர்களது, 10 மாத பெண் குழந்தை தியாசினி. முத்துமணி, நேற்று காலை, 11:00 மணியளவில், வீட்டு தேவைக்காக வாளியில் தண்ணீர் நிரப்பி வைத்திருந்தார். அப்போது, வாளியை பிடித்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை, வாளிக்குள் விழுந்து மூச்சு திணறலுக்கு ஆளானது. இதில், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே குழந்தை இறந்தது. இது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement