Advertisement

தீ பிடித்த குப்பை லாரி

கோயம்பேடு: சாலையில் சென்று கொண்டிருந்த குப்பை லாரி, திடீரென தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை, கோயம்பேட்டிலிருந்து இருந்து சேகரமான குப்பையை, பெருங்குடிக்கு எடுத்து செல்லும் ஒப்பந்த லாரி, நேற்று மாலை, கோயம்பேடு, 100 அடி சாலை வழியாக சென்றது. அப்போது, லாரின் முன் பகுதியில் இருந்து திடீரென புகை கிளம்பியது. இதையடுத்து, லாரியை ஓட்டி வந்த, பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த முன்னகுமார், 37, வாகனத்தை சாலையோரம் நிறுத்தி கீழே இறங்கினார். திடீரென லாரி தீப்பிடித்து எரிய துவங்கியது. கோயம்பேடு தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இதனால், கோயம்பேட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement