Advertisement

தனியார் பேருந்து தீப்பிடித்து சாம்பல்:42 பயணியர் உயிர் தப்பினர்

தாம்பரம்:சாலையில் சென்ற தனியார் பேருந்து, திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது; இதில், 42 பயணியர், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பெங்களூரிருந்து சென்னைக்கு, 42 பயணியருடன் தனியார் சொகுசு பேருந்து, பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை வந்து கொண்டிருந்தது. பேருந்தை, ஓட்டுனர் ஸ்ரீதர், 44, ஓட்டி வந்தார். ராமச்சந்திரன், 56, என்பவர் நடத்துனராக இருந்தார். நேற்று காலை, 8:00 மணிக்கு, திருமழிசை கூட்டுச்சாலை சந்திப்பு, நசரத்பேட்டை அருகே வந்த போது, பேருந்தின் பின்புறத்தில் திடீரென தீப்பிடித்து புகை வெளியேறியது. பேருந்தின் மற்ற பகுதிகளுக்கும் தீ வேகமாக பரவியதால், பயணியர் அனைவரும் இறக்கிவிடப்பட்டனர். பூந்தமல்லி, மதுரவாயல், அம்பத்துார் பகுதிகளிலிருந்து, மூன்று வாகனங்களில் வந்த தீயணைப்பு படையினர், தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், பேருந்து முழுவதும் எரிந்து சாம்பலானது. இதனால், நேற்று காலை, இரண்டு மணி நேரம் பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (2)

  • என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா

    எந்த கம்பெனி பேருந்து இது?

    • என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா

      இந்த பேருந்தோட பெயிண்ட் பார்க்கும் போது இது KSRTC மாதிரி தெரிகிறது

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement