Advertisement

பூட்டை உடைத்து 60 சவரன் கொள்ளை

நீலாங்கரை:வீட்டின் பூட்டை உடைத்து, 60 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சென்னை, ஈஞ்சம்பாக்கம், பெத்தேல் நகர், 18வது தெருவைச் சேர்ந்தவர், சுமதி, 42; பெண்கள் விடுதி நடத்தி வருகிறார். இவர், நேற்று முன்தினம், திருவான்மியூரில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றுவிட்டு, இரவு வீடு திரும்பிய போது விட்டின் பூட்டு உடைக்கப்படிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்ததில், பீரோ உடைத்து, 60 சவரன் நகையை, மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.இதுகுறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement