Advertisement

பாலியல் பலாத்காரம் செய்தவன் கைது

ஆதம்பாக்கம்:துாங்கி கொண்டிருந்த பெண்ணை, கத்தியை காட்டி மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்தவனை, போலீசார் கைது செய்தனர்.மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஐரின், 38; சென்னை, பம்மல் பகுதியில் உள்ள, 'பியூட்டி பார்லரில்' பணிபுரியும் இவர், ஆதம்பாக்கம், பெரியார் நகர், 9வது தெருவில், வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
கடந்த, 5ம் தேதி அதிகாலை, 3 மணிக்கு, வீட்டில் துாங்கி கொண்டிருந்த ஐரினை, மர்மநபர் ஒருவன், கத்தியை காட்டி மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்து தப்பினான்.ஆதம்பாக்கம் போலீசார் விசாரணையில், உத்தர பிரதேசம், ராம்பூர் பகுதியைச் சேர்ந்த மன்சூர் அலி, 31, என்பவனை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.இது குறித்து போலீசார் கூறுகையில், 'ஐரின், ஓராண்டுக்கு முன், நெசப்பாக்கத்தில் உள்ள பியூட்டி பார்லரில் பணிபுரிந்தார். அங்கு, உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த சமீர், 30, என்பவனுடன் பழகி உள்ளார். ஐரின் வீட்டுக்கு, சமீர் அடிக்கடி வந்து சென்றுள்ளான். சமீர், ஆறு மாதத்திற்கு முன், நெசப்பாக்கம் பியூட்டி பார்லரில் வேலைக்கு சேர்ந்த, மன்சூர் அலியிடம் இதை கூறியுள்ளான். இதைத் தொடர்ந்து, மன்சூர் அலி, கத்தியை காட்டி மிரட்டி, ஐரினை பலாத்காரம் செய்துவிட்டு தப்பியுள்ளான்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement