Advertisement

ரூ.10 கோடி மதிப்புள்ள போதை பொருள் கடத்தியவன் கைது

அம்பத்துார்:பத்து கோடி ரூபாய் மதிப்புள்ள, 'கொக்கைன்' போதை பொருளை கடத்திய, வட மாநில வாலிபன் கைதானான்.சென்னையிலிருந்து புதுடில்லிக்கு, ரயில் மூலம் போதை பொருள் கடத்தப்படுவதாக, சென்னை மண்டல போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு, சென்னை மண்டல இயக்குனர் புரூனோ தலைமையிலான, போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கண்காணித்தனர்.
இரவு, 10:00 மணியளவில், டில்லிக்கு புறப்பட இருந்த, தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த, மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த விஷால், 27, என்பவன் பையில், 10 கோடி ரூபாய் மதிப்பிலான, 3 கிலோ, 'கொக்கைன்' போதை பொருள் இருந்தது.விஷாலை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement