Advertisement

கடல் உணவு பிரியர்களை கவரும் 'ஸ்மோக்கிங் பேக்டரி' உணவு விடுதி

சென்னை:கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள, 'ஸ்மோக்கிங் பேக்டரி' உணவு விடுதி, கடல் உணவு பிரியர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த உணவு விடுதி, கன்டெய்னர் வடிவில் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு, சிங்கப்பூரைச் சேர்ந்த, சமையல் கலைஞர் டேனியல் தலைமையில், புதுவிதமான கடல் உணவு வகைகள் பரிமாறப்படுகின்றன. முழு மீன், இறால், நண்டு என, அனைத்து விதமான, கடல் உணவு வகைகள், பாரம்பரிய சுவை மாறாமல் தயாரித்து வழங்கப்படுகின்றன. தந்துாரி, டிக்காஸ், ரோல் வடிவில் கடல் உணவு பரிமாறப்படுகிறது. பன்னீர் டிக்கா, மட்டன் ரோகன் ஜோஸ், கடாய், பன்னீர் சாய், ஆலு கோபி, ரொட்டி, நான் போன்ற உணவு வகைகளும் கிடைக்கின்றன. இருவர் உணவுக்கு, 800 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த ஸ்மோக்கிங் பேக்டரி உணவு விடுதி, தினமும் காலை, 11:00 முதல் இரவு, 11:00 மணி வரை இயங்குகிறது. முன்பதிவிற்கு, 94455 78641 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement