Advertisement

பெண்ணிடம் நகை பறிப்பு

ஆவடி:பெண்ணிடம் முகவரி கேட்பது போல் நடித்த மர்ம நபர்கள், நகையை பறித்து சென்றனர். சென்னை, ஆவடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர், கவிதா, 30. அவர், நேற்று காலை, வீட்டருகே, உள்ள தொட்டியில் குப்பை கொட்ட சென்றார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், துண்டு சீட்டை காட்டி, முகவரி கேட்பது போல் நடித்து, அவரது, 10 சவரன் செயினை பறித்துச் சென்றனர். இது குறித்து, ஆவடி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement