Advertisement

முதல்வருக்கு இதுகூட தெரியவில்லை! ஸ்டாலின் கிண்டல்

சென்னை, ''இந்த அரசு மீது, நாங்கள் இதுவரை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வில்லை. கவர்னர் உத்தரவின்படி, சட்டசபை யில் நம்பிக்கை ஓட்டெடுப்பு தான் நடந்தது. இதை கூட, முதல்வர் தெரிந்து கொள்ள வில்லை என்பது, வெட்கபட வேண்டிய ஒன்று,'' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறினார்.

அவர் அளித்த பேட்டி:அ.தி.மு.க., அணிகளுக்கு இடையில் நடக்கும் சண்டைக்குள், நாங்கள் நுழைய விரும்ப வில்லை.இன்னொரு வீட்டில் நடக்கும் தகராறு களை வேடிக்கை பார்க்கவோ, அவற்றில் தலை யிடவோ, நாங்கள் விரும்பவில்லை. அ.தி. மு.க., பிளவுக்கு, பா.ஜ., காரணமா, இல்லையா
என்பது குறித்து, விமர்சனம் செய்யவும் விரும்ப வில்லை. ஆனால், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள, 'நீட்' நுழைவுத் தேர்வு பிரச்னை, ஹிந்தி திணிப்பு போன்றவற்றில், அ.தி.மு.க., அடிபணிந்து போவதற்கு, பா.ஜ., தான் காரணம்.தமிழகத்தில், ஒரு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தேவைப்பட் டால், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம் என, தெரிவித்தேன்.

இதற்கு, முதல்வர் பழனிசாமி, 'ஏற்கனவே கொண்டு வந்த, நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெற்றி பெற்றுள்ளோம்' என, கூறியுள்ளார்.இதற்கு முன், அரசு மீது,நாங்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவில்லை. சபாநாயகர் மீது தான், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தோம். குதிரை பேர அரசு மீது, கவர்னர் உத்தரவின்படி, நம்பிக்கை ஓட்டெடுப்பு தான் நடந்தது. இதை கூட, முதல்வர் தெரிந்து கொள்ளவில்லை என்பது, வெட்கப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது.
நம்பிக்கையில்லா தீர்மானம் என்று வருகிற போது, அந்த நேரத்தில் இருக்கக்கூடிய சூழலை பொறுத்து, தி.மு.க., முடிவு எடுக்கும்.இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

செப்.,5-ல் பவள விழா:சென்னை, 'மழையால் ஒத்தி வைக்கப்பட்ட, முர சொலி பவள விழா பொதுக்கூட்டம், செப்., 5ல் நடை பெறும்' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.கட்சியினருக்கு எழுதிய கடிதத்தில், அவர் கூறியுள்ளதாவது:

முரசொலி பவள விழா, எதிர்பார்த்தபடி வெற்றி பெற் றுள்ளது. விழா மலரை, தி.மு.க., தலைவர் கருணா நிதி பார்த்ததும், அதை விட அழகான மலராக, அவரது முகம் மலர்ந்தது. அவரது வார்த்தைகளுக்கு,ஒலி இல்லா விட்டா லும், அவரின் உதடுகள் உச்சரிப்பில் இருந்த, உவகையை கண்ட போது, சிலிர்த்து போனேன்.

முரசொலி பவள விழாவையொட்டி, காட்சி அரங்கம் திறக்கப்பட்டு உள்ளது. இந்த காட்சி அரங்கத்தை, பொதுமக்கள் இரு மாதங்களுக்கு காண, ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்ற, முர சொலி பவள விழா பொதுக்கூட்டம், மழை காரணமாக, முழுமையாக தொடர முடியாமல் போனது. பவள விழா, இரு நாட்களில் முடிவ டையக் கூடாது; மேலும் தொடர வேண்டும் என்ற இயற்கையின் விருப்பத்திற்கேற்ப, பொதுக்கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

ஒத்தி வைக்கப்பட்ட பொதுக்கூட்டம், செப்., 5ல், பல்வேறு கட்சிகளின் பங்கேற்புடன், சென்னை, கொட்டிவாக்கம், ராஜிவ் காந்தி சாலை, ஒய்.எம்.சி.ஏ., திடலில் நடைபெறும்.இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (18)

 • தாமரை - பழநி,இந்தியா

  நம்பிக்கை ஓட்டெடுப்பு என்பது மெஜாரிட்டி உறுப்பினர்களின் ஆதரவை இருப்பதைக் காட்டுவது. நம்பிக்கை இல்லா தீர்மானம் என்பது மெஜாரிட்டி உறுப்பினர்களின் ஆதரவை பெற முடியுமா என்பதைக் காட்டும்படி எதிர்க்கட்சிகள் கோரும் தீர்மானம். பெயர்தான் வேறே தவிர இரண்டின் நோக்கமும் ஒன்றுதான்.நம்பிக்கைத் தீர்மானம் கொண்டுவந்து வென்றாலும் நம்பிக்கை இல்லாத தீர்மானத்தை தோற்கடித்தாலும் அடுத்த 6 மாதங்களுக்கு சட்டசபையில் இந்த மாதிரி தீர்மானங்கள் கொண்டுவர முடியாது.இது ஸ்டாலின் அவர்களுக்குத் தெரியாதா? இல்லை தெரியாத மாதிரி நடிக்கிறாரா?

 • Manian - Chennai,இந்தியா

  எங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்பது நன்றாகவே தெரியும். ஆகவே, அவர்கள் மீது எங்களுக்கு (கட்டிங் சொன்னபடி தரமாட்டர்கள்) என்று நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர முடியுமா? தாயாதி சண்டையிலே, மும்பு நைனா கை ஓங்கி இருந்தப்போ, இந்தப் பயலுகளுக்கு எந்த கட்டிங்கும் கொடுக்கலைங்கறதை மறந்து பூடாதேன்னு நைனா அடிக்கடி சொல்லுவாரு. அதை மறந்தா டெல்லி பயலுக வருமான வரி துறை பூதத்தை அனுப்பினா, வம்பில்லே அதான் அரிக்கற மாதிரி அறிக்கை வுடுறோம். மாமோய், ஒரு பத்து இருபது பேருதானே திரும்ப திரும்ப, இங்கிட்டு கருத்து சொல்லுதாங்க. 7.25 கோடிலே, வேறே யாருமே சரியா எழுத படிக்க தெரிந்தவங்க இல்லையா? போடா மக்கு, மத்தவங்க ஓட்டு என்னா வெலை போகும், எங்கே ஓசி கிடைக்கும், எப்படி எல்லாம் விஞ்ஞான மொறையிலே லஞ்சம் வாங்கலாம்-கொடுக்காம்னு எத்தினியோ களப்பணிக்கு போறானுக. இட ஒதுக்கீடு, கள்ள ஜாதி பத்திரம் காட்டி வேலை வாங்குன பயலுகளுக்கு, தொண்டன்னு சொல்லி கொ்ளை அடிக்கற லோக்கல் திருடங்களுக்கு நேரம் ஏதுடா? அப்பாலே, ஒலகத்திலே மூணவது எடத்திலே இருக்கற, நாம சுறுசுறுப்பானா, கல்தோன்றி மண் தோன்றா கால தமிழர் நாகரீகம் என்னாகும்?அப்போ,சுதந்திரம் வாங்க செத்தவனுக முட்டாள்களா மாமோய்?? ஸ்.......

 • Soosaa - CHENNAI,இந்தியா

  Inga ellorum Stalin patriyre karuthu solli irukkirargal. Vishayam EPs patri solgiren. Avar cm madhiriye pesuvadhillai yaro bench kadaiyile tea saptu pesuvadhu pol than pesugirar.

 • rmr - chennai,இந்தியா

  தமிழனும் தமிழ் நாடும் அழிந்து வருகின்றது என்பதே உண்மை இந்த ஊழல் கழகங்களால்

 • SaiBaba - Chennai,இந்தியா

  இந்தப்பகுதியில் கருத்துகள் எல்லாமே அருமை.

 • SaiBaba - Chennai,இந்தியா

  ஸ்டாலின் ஏதோ தூக்கத்தில் பிதற்றுவது போல் தெரிகிறது. இவரிடமும் தமிழகத்தை கொடுத்து ஒரு trial பார்க்க விரும்புகிறீர்களா மக்களே?

 • பத்மராஜன் -

  எங்களுக்கு தமிழகத்தை சுற்றி பார்க்கவே பொருளாதார வசதி இல்லை. ஆனால் அடிக்கடி லண்டன் கொள்ளை புறத்தில் இருப்பது போல் போய் வருகிறீர்கள். கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்து வைத்துள்ளீர்களா? கட்டு மரம் தமிழகத்தையே சூறையாடி குவித்த கோடிகளில் நீங்கள் உலகம் சுற்றுகிறீர்கள். .. உங்களுக்கு எல்லாம் Income tax raid கிடையாதா?

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  புதுசு தான்.... இன்னும் பக்குவமில்லை... இல்லை என்றால் பலவித தொழிலாளர்கள் பிரச்சினை இருக்கும் பொழுது சட்டசபை உறுப்பினர்களுக்கு மட்டும் ஊதிய உயர்வை அறிவிப்பாரா,?

 • Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ

  அவரது வார்த்தைகளுக்கு ஒலி இல்லாவிட்டாலும் ..........-சுடலை ..... தலைவருக்கு பேச்சு இல்லை போலிருக்கிறது ..மூச்சு தான் இயங்கி கொண்டிருக்கிறது என்று தெரிகிறது ...தன்னுடைய கவர்ச்சி பேச்சால் தமிழகத்தையே தன பக்கம் ஈர்த்தவர் இன்று பேச திறனற்று .....

 • Gopalakrishnan - Kuzhumani,இந்தியா

  தலைக்கு சாயம் பூசுவதாலும் சட்டையை கழட்டி பனியனுடன் முஷ்ட்டியை காட்டுவதாலும் ஒன்றும் நடக்க போவதில்லை ... முதுகில் இருக்கும் அசிங்கமான படு அழுக்கை கழுவி கலைவதால் பல நன்மைகள் நடக்கும் என்று காளகஸ்தி அய்யர் காலம் தவறாமல் கனகட்சிதமாக சொன்னதால் விடிவு பிறந்தது கோவில் குளங்களுக்கு என்று பறந்து வந்த பட்சி சொல்லுகிறது ...காசு பணத்துக்கு கவலையில்லை ... ஆகாயம் , பூமி , நிலம், நீர் என்று நீவீர் திருடியது நிச்சயம் "கை" கொடுக்கும் ... ஆரம்பியுங்கள் வேலையை ....பழுது படாமல் பறந்து பறந்து செய்வீர் ... தமிழ் வாழ்க மற்ற மொழிகள் எல்லாம் ஒழிக என்ற உன்னத தத்துவத்தை வலது கையில் பிடித்து ... இடது கையில் தார்சட்டிக் கொண்டு வளர்ப்போம் தமிழை .... என்ன உன்னதமான சேவை உங்களது ஐய்யா (மன்னிக்கவும் உங்கள் கொய்யாவுக்கு கோவம் வந்துவிடும்,, தம்பி )

 • பலராமன் - Cuttack-Bhubaneshwar Twin City,இந்தியா

  இந்த நேரத்தில் கருணாநிதி நலமாக இருந்திருந்தாலோ அல்லது அழகிரி கட்சியில் இருந்திருந்தாலோ ஆட்சி மாறி இருக்கும்.... .ஸ்டாலின் ஒரு உதவா கரை...... .நாகரிக அரசியல் பண்ணி கொண்டு இருக்கிறாராம்?

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  திமுக MLA க்களை இவர் எதற்கும் பெங்களூருவில் வைத்து இருப்பது நல்லது... இல்லை என்றால் எதிரணிக்கு வாக்களிக்க அதிக சந்தர்ப்பம் இருக்கிறது...

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  இன்னொரு முறை சட்டையைக் கிழித்துக் கொண்டு கேவலமாக அலைவதை பார்க்க எங்களுக்கு விருப்பமில்லை அடுத்த கூட்டத்துக்கு வேட்டி வேண்டாம் லண்டனில் வாங்கும் பேண்டுடன் போகவும் சட்டசபையில் பாவப்பட்ட பெண் எம் எல் ஏக்களும் உள்ளனர் நினைவிருக்கட்டும் இப்போது நீங்கள் மைனரல்ல

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  எல்லா கான்டிராக்டிலும் கச்சிதமாக திமுகவுக்கு கட்டிங் கொடுத்து வரும்வரை நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து ஜனாதிபதி ஆட்சியை வரவழைக்கவே மாட்டார்கள்

 • Kumar -

  நீங்கள் ஆட்சியை பிடிப்பது மிகவும் கடினம்

 • R Sanjay - Chennai,இந்தியா

  நீங்க காமெடி பண்ணிட்டே இருங்க ரொம்ப நல்ல இருக்கும். பாவம் உங்களுக்கும் பொழு போகவேணாமா?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement