Advertisement

அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களுக்கு சசி குடும்பம் நெருக்கடி தினகரன் பொதுக்கூட்டத்திற்கு வந்தே ஆக வேண்டும்!

மதுரை மாவட்டம், மேலூரில், நாளை, தினகரன் நடத்தும் பொதுக்கூட்டத்திற்கு வந்தே ஆக வேண்டும் என, அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களுக்கு, சசிகலா குடும்பத்தினர், கடும் நெருக்கடி கொடுத்து வரும் தகவல் வெளியாகி உள்ளது.
அ.தி.மு.க., அமைச்சர்கள் மற்றும் எம்.எல். ஏ.,க்களில் பெரும்பாலானோர், சசிகலா குடும் பத்தினர் உதவியுடன், 'சீட்' பெற்று வெற்றி பெற்றவர்கள். ஜெ., மறைவுக்கு பின், பன்னீர் அணி, சசிகலா அணி என, அ.தி.மு.க., பிளவு பட்ட போது, 122 பேர், சசிகலா பின்னால் அணிவகுத்தனர்.மூன்றாக பிளவுசசிகலா கூறியபடி, முதல்வராக பழனிசாமியை தேர்வு செய்தனர்.

தற்போது,சசிகலா அணியில்,பழனிசாமி அணி, தினகரன் அணி என,பிளவு ஏற்பட்டுள்ளது. சசிகலா குடும்பத்தினர் ஆதிக்கமின்றி, சுதந்திரமாக செயல் பட விரும்பும் அமைச்சர்கள் மற்றும் எம்.எல். ஏ.,க் கள், முதல்வர் பழனிசாமி அணியில் உள்ளனர்.

தினகரனுக்கு, 37 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தெரிவித் தனர். அவர் புதிதாகநியமித்த நிர்வாகிகள் பட்டிய லில், 20எம்.எல்.ஏ.,க்கள் இடம் பெற்றனர். அவர் களில், நான்கு பேர், 'தினகரன் கொடுத்த பதவி வேண்டாம்' என்றனர். பின், இருவர், 'பல்டி' அடித் தனர்.அதனால், 37 எம்.எல்.ஏ.,க்களும், தினகரனுக்கு ஆதரவாக உள்ளனரா என்பது, கேள்விக்குறியாகவே உள்ளது. பழனிசாமி அணியினர், தன்னை ஒதுக்கு வதை அறிந்த தினகரன், கட்சியை கட்டுப்பாட்டிற் குள் கொண்டு வர, சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

பெரும் தவிப்புஅவரது முதல் பொதுக்கூட்டம், நாளை, மதுரை மாவட்டம், மேலூரில் நடைபெற உள்ளது. இக்கூட் டத்திற்கு வரும்படி, அமைச்சர்கள் மற்றும் எம்.எல். ஏ.,க்களுக்கு, அழைப்பு விடுத்துள்ளார். தினகரனால், எம்.எல்.ஏ.,வாகி அமைச்சரான பலர், இரு தலைக் கொள்ளி எறும்பு போல் தவிக்கின்றனர்.

தினகரன் கூட்டத்திற்கு சென்றால், முதல்வரின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்; கூட்டத்திற்கு
செல்லாவிட்டால், தினகரன்கோபத்திற்கு ஆளாக நேரிடும். இதன் காரணமாக, முடி வெடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர். அதே போல், எம்.எல்.ஏ.,க்களும் தவித்து வரு கின்றனர். அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க் களை வரவழைத்து விட்டால், முதல்வரை மிரட்ட முடியும் என்பதால், தங்க ளால் பயன் அடைந்தவர்களை, கூட்டத்திற்கு வரும்படி, சசிகலா குடும்பத்தினர் கட்டாயப் படுத்தி வருகின்றனர்.

தினகரன் கூட்டத்தில் பங்கேற்கும் அமைச்சர் கள் மற்றும் எம்.எல்.ஏ.,க் கள் எண்ணிக்கையை பொறுத்து, தமிழக அரசியலில், அடுத்தகட்ட திருப்பம் ஏற்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
- நமது நிருபர் -

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (32)

 • Balaji - Khaithan,குவைத்

  இவர்களின் தலையீடு ஒடுக்கப்படாத வரை அதிமுகவிற்கு விமோசனம் பிறக்கப் போவதில்லை........ மாபியா குடும்பத்தை முற்றிலும் ஒதுக்கிவிட்டு எஞ்சியிருக்கும் காலத்தில் ஓரளவுக்கு மக்கள் நலன் சார்ந்து செயல்பட்டால் தான் அடுத்த தேர்தலில் இவர்களால் டெபாசிட்டே பெற முடியும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்......... மாபியாக்கள் அதிகாரத்துக்கு பயந்து அவர்களால் பின்னால் சென்றால் அதுவே இவர்களுடைய கடைசியாக வகிக்கும் பதவியாக மாறிவிடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்......... என்ன இவர்களை துரத்த மீண்டும் திமுகவையே தேர்ந்தெடுப்பார்கள் என்பது தான் சற்று நெருடலாக இருக்கிறது......... மக்கள் சற்று சிந்தித்து இவர்கள் இருவருமல்லாமல் வாக்களித்தால் தான் தமிழகம் வளர்ச்சி நோக்கி செல்லும் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை..........

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  அரசியல்வாதிகள் என்றால் பணம் ஒன்றே குறிக்கோள் அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பது அவர்கள் நிலை. அப்படி இருக்கும் போது இது எல்லாம் சகஜமில்லே-வடிவேலு ஸ்டைலில்.

 • bairava - madurai,இந்தியா

  இப்போ தெரியுதா மக்களுக்கு சேவை செய்ய உங்களை தேர்தெடுத்தால் நீங்கள் எவன் எவனுக்கோ கொடிபிடிக்க சண்டை போட்டுட்டு இருக்கீங்க வெட்கமாயில்லை

 • Sankara Narayanan - Bangalore,இந்தியா

  சிங்கப்பூர் வசந்த் தயவு செய்து உச்சரிப்பு பிழை இன்றி வார்த்தைகளை எழுதி பழகு. தேவையில்லாமல் ஜாதீயம் , மதவாதம் பேசாதே. நாகரிகமாக கருத்துக்களை எழுதுவதற்கு தெரிந்து கொள்.

 • Paran Nathan - Edmonton,கனடா

  தினகரனுக்கு வாழ்த்துக்கள் தினகரன் ஒன்றும் உத்தமர் அல்ல, ஆனால் இன்றைய தமிழக அரசியலுக்கு மிக மிக முக்கியமானவர். தமிழக மக்கள் ஏனைய மாநில மக்களை விடவும் வேறானவர்கள். ஏனைய மாநில மக்களை சாதி மற்றும் மதவெறியை தூண்டி அரசியலில் வெற்றி பெற முடியும். பிரிவினை கோரும் காஸ்மீரில் கூட பிஜேபியால் சில தொகுதிகளில் வெற்றி பெற முடியும். ஆனால் தேசிய ஒருமைப்பாட்டிற்கு இலக்கணமாக திகழும் தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட தனியாக நின்று கட்டுப்பணத்தை கூட எடுக்க முடியாது என்பதுதான் யதார்த்தம். இன்று தினகரன் தமிழகத்துக்கு மிகவும் தேவையானவர். இது காலத்தின் கட்டாயம். தினகரனின் வெற்றியை நாளைய சரித்திரம் கூறும்.

 • Giridharan S - Kancheepuram,இந்தியா

  எப்படியோ சாவுங்கடா நாங்கள் எல்லாம் ஆட்சி எப்போ கலையும்னு பார்த்துகிட்டு இருக்கோம். ஸ்டாலின் திண்ணை எப்போ காலி ஆகும்னு பார்த்துகிட்டு இருக்காரு

 • velan - california,யூ.எஸ்.ஏ

  சப்பாஸ் சரியான போட்டி . இதுதான் ஜனநாயகம் . என்ன தான் குறைகள் தவறுக்கள் இருந்தாலும் தினகரன் பேச்சு செயல்பாடு பக்குவம் எனக்கு பிடித்திருக்கிறது பதட்டத்தை ஜெ கே , ஈ பி எஸ் , ஓ பி எஸ் இவர்களிடம் தான் காண முடிகிறது அப்படின்னா மடியில் கணம் இருக்கிறதோ ? தினகரன் தைரியமாக டெல்லி சென்று செமையாக வெளி வந்து இருக்கிறார். திறமை இல்லாமல் நடக்காது நல்லவனானாலும் இந்த உலகம் ஏசும் . அதை திறம்பட செயல்பட்டால் தான் நல்லவனை கூட மதிக்கும் எனவே தினகரன் செல்லும் பாதையில் அதிமுக சென்றால் நன்றாக இருக்கும் அதே நேரத்தில் குடும்பத்தின் தலையீடுகள் குறைய வேண்டும் . டெண்டர்கள் ஓபன் முறையில் இருக்க வேண்டும்

  • Cheran Perumal - Radhapuram,இந்தியா

   தினகரன் திறமையானவர் என்பதில் சந்தேகம் இல்லை. தேர்தல் கமிஷனுக்கே கமிஷன் பேசுவதென்றால் சும்மாவா?

  • Rajamani Ksheeravarneswaran - bangalore,இந்தியா

   தேர்தல் கமிஷனில் அவரிடம் கமிஷன் கேட்டவர் பெயர் தெரியுமா ? சசிகலாவை நீங்கதான் கட்சியை காப்பாத்தணும்னு கூனி குறுகி கெஞ்சி கூத்தாடியவர்கள் யார் ? நீங்கதான் முதல்வராக வரணும் ஆட்சியையும் கட்சியையும் ஒருவர் கையில் இருப்பதுதான் அதிமுகவின் மரபு என்று பேசியவர்கள் யார் என்று உங்களுக்கு தெரியுமா ? ஆர். கே. நகர் தேர்தலில் முதல்வர் உட்பட அனைத்து அமைச்சர்கள் அதிமுக துணைப்பொது செயலாளர் தினகரனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த வீடியோ பதிவுகள் உள்ளன. நீங்க இப்பதான் தூங்கி எழுந்திருப்பீங்க போல தெரியுது. சசிகலா ,மற்றும் தினகரன் நல்லவர்களா ? கெட்டவர்களா ? என்று தெரியாது .அவர்களால் மக்களுக்கு என்ன இன்னல்கள் விளைந்தது என்று தெரியாது . அம்மாவை எதிர்த்தவர்கள் எல்லாம் இவர்களையும் எதிர்க்கிறார்கள் .இவர்களால் வாழ்வு பெற்றவர்கள் இன்று எதிர்க்கிறார்கள்..எதனால் ? இதற்கு பின்னால் இருந்து அதிமுகவில் குழப்பத்தை உருவாக்கி மாபெரும் மக்கள் இயக்கமான அதிமுகவை கபளீகரம் செய்ய நினைப்பவர்கள் யார் ? அம்மாவையும் சசிகலாவையும் பெங்களூரு சிறையில் தள்ளியது யார் ? தமிழக மக்களுக்கு விரோதமான பல திட்டங்களை செயல்படுத்த முனைந்து அம்மா என்ற காவல் தெய்வம் அதை தடுத்த காரணத்தால் அவரை விண்ணுலகம் அனுப்பிவிட்டு அவரது வழியில் நடப்பவர்களை பொய் வழக்குகள், வருமானவரித்துறை சோதனை ,தேர்தல் ஆணையம் மூலம் இரட்டை இலை சின்னம் முடக்கம், சசிகலா தினகரன் இவர்களை அதிமுகவிலிருந்து வெளியேற்ற சதி திட்டம், அதனை செய்ய மறுத்தால் அதிமுக அமைச்சர்களின் மீது வருமானவரி சோதனை மற்றும் பல வழக்குகள் ,ஆட்சி கவிழ்ப்பு என்ற அஸ்திரம் இவற்றுக்கு நடுவே , அதிமுகவிற்கும் , அடிமட்ட தொண்டர்களுக்கும் இருக்கும் இப்போதைய ஒரே நம்பிக்கை நட்சத்திரம் தினகரன் .நேற்று ஒரு பேச்சு ,இன்று மத்திய அரசுக்கு பயந்து அதை மாற்றி பேசி பிழைப்பு நடத்தும் முதுகெலும்பற்ற முதல்வர் எடப்பாடி உட்பட அமைச்சர்கள் அனைவரும் அதிமுகவை பிஜேபிக்கு விலை பேசும் முன் அந்த கட்சி காப்பாற்றப்பட வேண்டுமெனில் அதற்கு ஒரே வழி தினகரனை ஆதரிப்பது. தினகரன் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தலில் பிஜேபி வேட்பாளருக்கு ஆதரவளித்தனரே என்று சிலர் எண்ணலாம். அதிமுகவின் ஒரே எதிரி திமுக .அதனால் திமுக -காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரிப்பது அம்மாவிற்கு செய்யும் துரோகம் .ஆனால் இன்று கட்சியில் பதவிக்காக தங்களை காப்பாற்றி கொள்ள துடிக்கும் அமைச்சர்கள் அதற்காக கட்சியை பிஜேபியிடம் காவு கொடுப்பதை ஏற்கமுடியுமா ? திமுக -காங்கிரஸ் ,பிஜேபி மற்றும் கார்பொரேட் மாபியா கும்பலின் சதியினால் தமிழக முதல்வராக இருந்த அம்மா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். அப்பாவி தொண்டர்கள் அவர் பால் கொண்ட அன்பால் உயிர் துறந்தனர். ஆனால் எந்த அமைச்சர்களாவது அதற்காக தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொண்டார்களா ? அம்மா சிறையில் இருந்த நேரத்தில் திருட்டு பூனை பிஜேபி அப்போதைய தற்காலிக முதல்வர் ஓபிஎஸை பாதிவிலைக்கு வாங்கிவிட்டனர். அம்மா சிறையில் இருந்த நேரத்தில் ஓபிஎஸ் குடும்பம் சேகர் ரெட்டி மூலம் பல்லாயிரம் கோடி ஊழல் செய்து சொத்து சேர்த்தவிவரமறிந்த அம்மா அவரையும் நத்தம் விஸ்வநாதனையும் போயஸ் தோட்ட இல்லத்திற்கு அழைத்து 'தக்கபடி கவனித்து ' அதன்பின் இனியாவது துரோகம் செய்யாதீர்கள் ' என்று எச்சரித்து அனுப்பி வைத்தார். அதன்பின் அவரை ஒதுக்கித்தான் வைத்திருந்தார். சொல்லப்போனால் அப்போது எடப்பாடி பழனிச்சாமி அம்மாவின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்தார். தற்சமயம் தனது அரசு கவிழ்ந்துவிடக்கூடாது என்று சசிகலாவையும், தினகரனையும் தள்ளி வைக்க பார்க்கிறார்.

  • Masi Arumugam - Chennai,இந்தியா

   உங்கள் கருத்து உண்மை எடப்பாடி நம்பிக்கை துரோகம் செய்கிறார் இது நிலைக்காது ஒவ்வொரு தொண்டனுக்கும் தெரியும் கட்சி யாரால் காப்பாற்றப்பட்டது என்று.துரோகத்துக்கு என்ன தண்டனை ஆண்டவன் முடிவு செய்வார்.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  குற்றவாளிகளுக்கு ஆதரவு என்பதெல்லாம் பொய்...

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  இனி மன்னார்குடி குடும்பத்திற்கு மங்கு சனிதான்... ஏழரை எட்டாவது மாடியில் உக்காந்துவிட்டான்.,..

 • ravi - chennai,இந்தியா

  நீங்கள் பெறாவிட்டாலும் பரவாயில்லை - உச்சநீதி மன்றத்திற்கு செல்லுங்கள் - மக்கள் போராட்டம் வெடிக்கும் - படித்தவர்கள் வேடிக்கை பார்க்கமாட்டார்கள் - ஒரு படித்தவன் கூட இந்த ஊழல்வாதி திருடன் தினகரனை நம்பமாட்டான் - மக்களே விழித்து இருங்கள் - உண்மையான அதிமுக தொண்டர்கள் இந்த குடும்பத்தை தமிழ்நாட்டை விட்டு அடித்து விரட்டவேண்டும் - லஞ்சத்தை வாங்கிய அரசியல்வாதிகள் தான் ... அவருடன் இருக்கிறார்கள் - அவர்கள் உருப்படமாட்டார்கள்

 • ravi - chennai,இந்தியா

  ஒரு அயோக்கியன் தமிழ்நாட்டை பகிரங்கமாக அழிக்கப்பார்க்கிறான் - பொம்பளைங்க மாதிரி பயந்து ஒளியாதீர்கள் - அவர் என்ன செய்து விடுவார் - திறமையானவர்களாக இருந்திருந்தால் சசிகலாவுக்கு தினகரனுக்கு ஜெயலலிதா பதவி கொடுத்து அழகு பார்த்திருப்பார் - அவர்கள் அயோக்கியர்கள் என்று அவர் உணர்ந்திருக்கிறார் - அவரிடம் வேலை பார்த்தவர்கள் சொன்னது - குறிப்பாக இந்த அயோக்கியன் தமிழ்நாட்டை முற்றிலும் கொள்ளை அடிக்க பார்க்கிறான் - விடாதீர்கள் - ஜெய் ஹிந்த்

 • Tamilselvan - Chennai,இந்தியா

  மாபியா கும்பல் ஒழிக்க பட வேண்டும். இந்த மோசடி பேர்வழிகள் எப்படியாவது பதவியை பிடித்து,மீண்டும் கொள்ளை அடிக்க தொடர நினைக்கின்றனர். அதை கட்சி தொண்டர்களும், மக்களும் இளைஞர்களும் ஒரு நாளும் அனுமதிக்க போவது இல்லை. இந்த டுபாக்கூர் பேர்வழிகள் திருட்டுத்தனம்கள் வெட்ட வெளிச்சத்திற்கு வந்த பின் உத்தமர் போல வெளியில் வளம் வந்து கொண்டு இருக்கின்றனர். இவர்கள் கொள்ளை அடித்த சொத்துக்களை முடக்கி,உள்ளே தள்ள வேண்டும். இவர்களிடம் இருந்து மீட்கும் சொத்துக்களால் பல நல்ல திட்டம்களை நிறைவேற்றலாம்.

  • GunasekaranVenkataramen - ,

   very good

 • manasakshi - chennai,இந்தியா

  தினகரன் கேட்பதில் என்ன தவறு ?. வாங்கின கூலிக்கு மார் அடிக்க வேண்டாமா ?

 • vasanth - Jurong west,சிங்கப்பூர்

  TTV DHINAKARAN IS AN INTELLIGENT,DIPLOMATIC,ENERGETIC,COOL AND GOOD ENGLISH COMMUNICATION SKILLED PERSON. EVEN STALIN DOESN'T HAVE THIS MUCH SKILLS. TTV IS THE ONLY PERSON TO HANDLE BRAMHIM DOMINATED BJP. TTV IS DARE TO HANDLE MODI. I SUPPORT TTV. I SUPPORT TTV. I DON'T LIKE NORTH INDIAN MODI TO RULE TAMILNADU

  • பலராமன் - Cuttack-Bhubaneshwar Twin City,இந்தியா

   Idiot one of the NORTH INDIAN PM only made a south Indian as President of India.....1. Rajiv Gandhi Made - Sri. R Venkataraman and Vajpayee made APJ Abdul Kalam Sir.... TTV has another skill which is looting the government money. Dont you ashamed of supporting a looter?

  • Indira - ,

   தினகரன் மிகவும் திறமை வாய்ந்தவர் .எந்த பதவியிலும் இல்லாமலே இவ்வளவு பணம் சம்பாதித்துள்ளாரே .அவர் லஞ்சம் கொடுப்பது கூட கோடிகளில் தான் .

  • ezhumalaiyaan - Chennai,இந்தியா

   சிங்கப்பூரிலேயே குப்பைகொட்டவும்.இங்கே ஏற்கெனவே குப்பை அதிகம்.

  • Rajamani Ksheeravarneswaran - bangalore,இந்தியா

   சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் ஒரு தென்னிந்தியா பிரதமர் நரசிம்மராவ் ,மற்றும் தேவகவுடா என்ற மற்றொரு தென்னிந்தியா பிரதமரையும் இந்தியாவிற்கு தந்தவர்கள் .மூப்பனாரை கூட பிரதமராக்க தயாரான நிலையில் கருணாநிதி தடுத்துவிட்டார் .எனவே பிரதமர் மோடியிடம் நீங்கள் வேண்டி விரும்பி கேட்டுக் கொண்டால் நமது பொன்னார் , இல.கணேசன் மற்றும் தங்க தாரகை தமிழிசை இவர்களில் ஒருவரை மோடி பதவி விலகி பிரதமாக்குவார் . .

  • ravi - chennai,இந்தியா

   இந்த பைத்தியக்காரனை மன்னித்துவிடலாம் - சிறுபான்மை விஷ கிருமியாக அவர் இருக்கலாம்

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  ஒட்டு மொத்த தமிழகத்தையும் ஒரு மாபியா கும்பல் கட்டுப்படுத்த நினைப்பது வேதனை தரும் விடயம்.

  • Ashokvalan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

   மோடியதான சொல்லுறீங்க ?

 • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

  போலாமே அப்படியே ஒரேடியா சிறைக்குமே போலாமே இவன் எல்லாம் என்னய்யா தலைவன் பாத்ரூம் போகவே கூட சசியின் பெர்மிஷன் கேட்டுண்டுருக்கான் மக்கள்தான் உங்களுக்கு வோட்டு போட்டாங்க அதனாலேதான் mla ஆனீங்கய்யா நீங்கள் போனால் மீண்டும் mla ஆவ முடியாது . தேர்தல்லே நிக்கவேமுடியாது இப்போதுள்ள எல்லா சசியின் அடிமைகள் எல்லாம்

 • Baskar - Paris,பிரான்ஸ்

  புரட்சி தலைவருக்கும் புரட்சி தலைவிக்கும் மதிப்பு கொடுப்பவன் எவன் ஒருவனும் இந்த கூட்டத்திற்கு செல்லக்கூடாது.உண்மையிலேயே இவர்கள் யாரும் அம்மாவால் அறிமுக படுத்தப்பட்டவர்கள்.சசிகலா ஒரு எடுபிடியாகத்தான் இருந்தார்.அவர் ஒன்றும் அம்மா இருக்கும் போது கட்சியில் எந்த ஒரு பதவியிலும் இல்லை.0எனவே தொண்டர்களோ எம்.எல்.எ க்களோ யாரும் மாபியா க்கும்பல் மன்னார்குடியை நம்பி போக வேண்டாம்.

  • தேச நேசன் - Chennai,இந்தியா

   ஜெயா தனக்கு எடுபிடி வேலை செய்பவரை ஏன் சட்டசபை துணைசபாநாயகர் நாற்காலியில் உட்கார வைத்து அழகு பார்த்தார்? கோடிக்கணக்கான ரூபாய் நகை நட்டுகளோடு இருவரும் போட்டோவுக்கு போஸ் தந்தனர் மஹாமகக்குளத்தில் கணவன் மனைவிபோல மாலைமாற்றிக் கொண்டு ஒருவர் மீது ஒருவர் நீர் வாரி விளையாடினர்? வேலைக்காரியுடன் இப்படி யாரும் நடந்துகொள்வார்களா?

  • தேச நேசன் - Chennai,இந்தியா

   அம்மாவழி போவது தான் அதிமுகவுக்கு நல்லது அவரே நரகத்தில் இருக்கிறார் பின்தொடர வேண்டியது உண்மைத் (??) தொண்டர்களின் கடமை

 • R Sanjay - Chennai,இந்தியா

  ஜெ ஊழல்- மத்திய அரசுக்கு எதிரான போக்கு- ஜெயில்- மரணம், அடுத்து சாணிகலா ஊழல் ஊழல் ஊழல்- நாற்காலில் ஆசை- ஜெயில்- சொகுசுவாழ்க்கை, அடுத்து தினகரன் ஊழல் ஊழல் ஊழல்- நாற்காலில் ஆசை- ஜெயில்- ஜாமீன்-அதிகார ஆசை, இவன் ஜெயிலுக்கு போனாலும், மீண்டும் ஒருவன் இதே மாதிரி முளைப்பான். ருஷி கண்ட பூனை திருந்தவே திருந்தது தேவையா இது, இந்த அரசை கலைக்க துப்பில்லாத மத்திய அரசு அதற்க்கு சொம்படிக்கும் அல்லக்கைகள். நீ மக்களை வதை மத்திய அரசை மேலிருந்து ஒருவன் குடைச்சல் கொடுப்பான்

  • ezhumalaiyaan - Chennai,இந்தியா

   இவனை ஜாமீனில் விட்டவரை கேட்கவேண்டும். ஜாமீன் கண்டிஷன்கள் என்ன?ஜாமீனில் இருந்து கொண்டு LAW AND ORDER பிரச்சினைக்கு வழி வகுக்கும் இந்த பேர்வழியை மீண்டும் கைது செய்து ஜெயிலில் அடைத்தால் தமிழகத்திற்கு நல்லது.

  • Masi Arumugam - Chennai,இந்தியா

   கைது நடவடிக்கையில் அசிங்கபட்டது யாருன்னு நாட்டுக்கே தெரியும் மேலும் அவர் இரட்டை இலைக்காக கட்சிக்காக தான் என்பதால் தொண்டர் அனைவரும் அவர் மேல் பற்றாக உள்ளனர்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement